Category

காய்கறிகள்

Category

அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் தம்பட்டை அவரை அல்லது கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது வெகுவாக மக்களிடையே குறைந்து வருகிறது. நம் முன்னோர்களை மிக திடகாத்திரமாக வைத்திருக்க உதவியதில் இந்த கொடி தம்பட்டை அவரை காய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதில் செடி தம்பட்டை மற்றும் கொடி தம்பட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இந்த செடிகளில் பெரிதாக பூச்சி தாக்குதல்கள் இருக்காது. இது வாள் அவரை என்றும் அழைக்கப்படுகிறது.
கொடி தம்பட்டை
தற்காலத்தில் வீட்டுத்தோட்ட மற்றும் மாடித்தோட்ட ஆர்வலர்களால் அழிவிலிருந்து மீண்டு வரும் அரிய காய்கறிவகைகளில் இந்த கொடி தம்பட்டையும் இருக்கிறது. கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடித்தோட்டத்தில் கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு, தம்பட்டை அவரை அறுவடை மற்றும் தம்பட்டை அவரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை தயார் செய்தல்

தம்பட்டை அவரை ஒரு அடி நீளம் வரை வளரக்கூடிய காயாகும், எனவே அதன் தொடக்க மண்கலவையை சரியாக தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி

தம்பட்டை அவரை விதை
விதைகள் விதைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் 7 முதல் 15 நாட்களில் தம்பட்டை அவரை முளைக்க தொடங்கும். தம்பட்டை அவரை விதை அளவில் பெரியதாக இருப்பதினால் முளைப்பதற்கு சிறிது நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. கொடிகள் நன்கு வளர்ந்து சுமார் 60 நாட்களில் பூக்கள் பூக்கத்தொடங்கும். இந்த வளர்ச்சி அந்தந்த மண்கலவையை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. இதன் பூக்கள் வெண்மை நிறம் கலந்த ஊதா நிறத்தில் இருக்கக்கூடும்.

தம்பட்டை அவரை அறுவடை

அவரை
பூக்கள் பூக்க தொடங்கிய சில நாட்களில் பிஞ்சுகள் பிடிக்கத்தொடங்கும். 75 நாளில் இளம்பிஞ்சுகள் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் அப்போதே அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். பிறகு 85 நாட்கள் முதல் 90 நாட்களில் கொடி தம்பட்டை அவரை அதன் முழு வளர்ச்சியை அடைத்திருக்கும், இப்போது கொடி தம்பட்டையை அறுவடை செய்து கொள்ளலாம். தம்பட்டை அவரை காய்கள் ஒரு அடியில் வாள் போன்ற தோற்றத்தில் வளர்ந்திருக்கும் எனவே தான் இது வாள் அவரை என பெயர் பெற்றது.

தம்பட்டை அவரை பயன்கள்

தம்பட்டை அவரை

  • கொடி தம்பட்டை அவரையில் நம் உடலுக்கு தேவையான Folate எனும் விட்டமின் சத்து 44 % இருக்கிறது. இந்த முக்கிய சத்து தான் நம்முடைய மரபணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
  • சிலருக்கு நாள்பட்ட சரும தொந்தரவு இருக்கும், அவர்களெல்லாம் இந்த கொடி தம்பட்டையை அடிக்கடி உண்டுவந்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைத்து, இனி ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • கொடி தம்பட்டை அவரை காயில் நார்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது, இதனால் மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பூரண குணமாகிறது.
  • 5 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • இரவில் உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம், உறங்குவதற்கு மருந்துகள் ஏதும் பயன்படுத்தாமல், உறங்க செல்லும் முன் உணவுடன் இந்த தம்பட்டையை உண்டால் ஆரோக்கியமான உறக்கம் பெறலாம்.
  • வெளிநாடுகளில் ஆரோக்கியபானங்கள், தேநீர் தயாரிப்பிலும், மேலும் பற்பசை, சோப்பு தயாரிப்பிலும் கூட கொடி தம்பட்டை அவரையை பயன்படுத்துகின்றனர்.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் தம்பட்டை அவரை வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.

கேரட் செழிப்பான ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடியது, நீளமான கூம்பு வடிவத்திலும், கிழங்கை போல வேரில் திரண்டு வளரக்கூடிய ஒரு வேர்க்காய் வகையை சேர்ந்ததாகும். முதன் முதலில் ஆப்கானிஸ்த்தான் பகுதியில் தான் கேரட் செடி வளர்ப்பு செய்ய பயிரிடப்பட்டது, பின்பு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது. குளிர் பிரதேசபகுதிகளில் வெப்பநிலை 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கின்ற பொழுது கேரட் அடர் ஆரஞ்ச் நிறத்துடன் விளையும்.
கேரட்
நம் தமிழகத்தில் கேரட் செடி வளர்ப்பு செய்வதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் மிகவும் ஏற்றது என்றாலும் வீட்டிலும் அதை வளர்க்க முடியும். கேரட் செடி வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் கேரட் வளர்ப்பது எப்படி, கேரட் சாகுபடி மற்றும் கேரட் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

மண்கலவை தயார் செய்தல்

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறையில் முக்கிய பங்கு வகிப்பது அதற்கான மண்கலவை தயார் செய்வது. கோகோபீட் 40 சதவிகிதம், செம்மண் 30 சதவிகிதம் மற்றும் மக்கிய தொழு உரம் 30 சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்துகொள்ளவும். இந்த விகிதத்தில் மண்கலவை இருந்தால் கேரட் செடி வளர்ப்பு சிறக்கும்.

gardening kit icon

CHRYZTAL Stainless Steel Heavy Duty Gardening Tool Set

Garden Tool Set, Stainless Steel Heavy Duty Gardening Tool Set, with Non-Slip Rubber Grip, Storage Tote Bag, Outdoor Hand Tools, Ideal Garden Tool Kit Gifts for Women and Men

 Buy Now

கேரட் விதை விதைத்தல்

கேரட் விதை
கேரட் விதைகள் ஜீரகத்தை போன்ற வடிவத்தில் இருக்கும், தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். சிறிது பள்ளம் தோண்டி அதில் கேரட் விதைகளை போட்டு மூடவும், சிறிய விதை என்பதால் நீர் கொஞ்சம் அதிகமானால் கூட விதை மேலே வந்து விடும் எனவே மிகவும் கவனமாக பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

கேரட் செடி பராமரிப்பு முறை

கேரட் செடி வளர்ப்பு
கேரட் வளர தொடங்கியதுமே வேர்ப்பகுதியில் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் அதன் வேரை மணலை கொட்டி மூடவேண்டும், இல்லையெனில் அதன் வேர்கள் வெளியே வந்து வளர்ச்சி பாதிக்கும் மேலும் சூரிய ஒளி நேரடியாக கேரட் மீது பட்டால் அதன் மேற்பகுதி பச்சை நிறமாக மாற வாய்ப்பு உள்ளது.

கேரட் சாகுபடி

கேரட் வளர்ப்பு
கேரட் விதைத்த நாளில் இருந்து முறையாக கவனித்து வர வேண்டும், அதிகம் நீரை தேங்க விடாமல், பூச்சி தாக்குதல் ஏதும் ஏற்படாமல் நன்கு பராமரித்து வந்தால் 60 முதல் 70 நாளில் ஆரோக்கியமான கேரட்டை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் தருணத்தில் மண் ஈரமாக இருந்தால் கேரட்டை எளிதாக பிடிங்கிவிடலாம்.

கேரட் பயன்கள்

கேரட் பயன்கள்

  • கேரட்டில் உள்ள இனிப்புச்சுவை சர்க்கரை நோய் உடையவர்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இது உதவும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து நன்மை தரக்கூடிய கிருமிகளை உற்பத்தி செய்கிறது.
  • இதயப்பிரச்சனைகள் ஏற்பட மிக முக்கிய காரணம் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பாகும். கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும்.
  • கண்பார்வை குறைபாட்டால் பலரும் பாதிக்க பட்டு அவதிப்படுவார்கள், அவர்கள் எல்லாம் தினசரி கேரட்டை உண்டு வந்தால் கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையை சீராக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • 2 Litter sprayer

    Garden Pressure Pump Sprayer

    ITISLL Manual Garden Sprayer Hand Lawn Pressure Pump Sprayer Safety Valve Adjustable Brass Nozzle 0.5 Gal 2L

     Buy Now

  • உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மேனி அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவுகிறது, தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் மேனியின் மினுமினுப்பு கூடும்.
  • பால் பிடிக்காத சிறு குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து பருக கொடுக்கலாம். இதில் கால்சியம் அதிகளவு இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.


மாடித்தோட்டத்தில் கேரட் விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி செய்வதென்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கேரட்டை விளைத்து உங்கள் ஆரோக்கியத்தை பெருக்க வாழ்த்துகிறோம்.

சித்தமருத்துவத்திற்காகவே நம் நாட்டில் பெரும்பாலும் பூனைக்காலி வளர்ப்பு செய்யப்படுகிறது. வெப்பமண்டல பகுதிகளில் பூனைக்காலி விதை நன்கு செழித்து வளரும். பூனைக்காலி விதை வெள்ளை மற்றும் கருப்பு நிறம் என இரண்டு வகைகளாக காணப்படுகிறது. இதன் விதையின் பூவானது காய்த்த பிறகு ஒவ்வொரு காயிலும் ஏழு விதைகள் வரை இருக்கும்.
பூனைக்காலி வளர்ப்பு
பூனைக்காலி காய்களின் மேற்புறத்தில் மென்மையான சுனை போல் இருக்கும், அதனால் தான் இதனை வெல்வெட் பீன் என பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இது மென்மையாக இருப்பினும் உடல் மீது பட்டால் ஒரு வித நமைச்சலை ஏற்படுத்துகிறது. பூனைக்காலி வளர்ப்பது எப்படி, பூனைக்காலி விதை எப்படி சாப்பிடுவது, பூனைக்காலி வகைகள், பூனைக்காலி சாகுபடி மற்றும் பூனைக்காலி விதை பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விதை நேர்த்தி

பூனைக்காலி வளர்ப்பு
நல்ல நிலையில் உள்ள பூனைக்காலி விதைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் நீரில் போட்டு ஊறவைக்கவும், அடுத்த நாள் அந்த விதைகள் நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு சற்று பெரிதாகி இருக்கும், இது விதைகள் வளர்ப்பு திறனோடு இருப்பதை குறிக்கும், வளர்ப்புத்திறன் குன்றிய விதைகளை இந்த நிலையிலே கண்டறிந்து அவற்றை நீக்கிவிடலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மண்கலவை தயாரித்தல்

மண்கலவை தயாரித்தல்
பூனைக்காலி வளர்ப்பு செய்வதற்கு செம்மண் சிறந்த மண் ஆகும். செம்மண் கிடைக்காதபட்சத்தில் மற்ற தோட்டமண்ணை கூட பயன்படுத்தலாம். எந்தமண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். 60 சதவிகிதம் மண்ணும், 40 சதவிகிதம் மக்கிய தொழு உரமும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்துக்கொள்ளவேண்டும்.

நடவு மற்றும் வளர்ச்சி

பயன்கள்
தேர்ந்தெடுத்த விதைகளை, தயார் நிலையில் உள்ள மண்கலவையில் விதைக்கவும், விதைத்த பிறகு நீர் தெளிக்கவேண்டும், நீரானது தேங்கி நிற்கக்கூடாது. விதை விதைத்த 7 முதல் 10 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும், சுமார் 20 நாட்களில் கொடியானது படரத்தொடங்கும். கொடி படர உதவியாக பந்தல் அமைப்பது மிகமுக்கியமாகும்.

விதை விதைத்த 55 நாட்களில் பூவானது பூக்கத்தொடங்கும், பூக்கள் கொத்துக்கொத்தாக பசுமையாக பூக்கும். 75 நாட்களில் பூனைக்காலி பிஞ்சுகள் பிடிக்கத்தொடங்கும்.

பூனைக்காலி சாகுபடி

பூனைக்காலி
என்பது நாட்களில் பூனைக்காலி பிஞ்சுகள் சமையலுக்கு ஏற்ற பருவ நிலையை அடைந்திருக்கும், அந்த சமயத்தில் அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். சுமார் 130 நாட்களில் பூனைக்காலி விதைகள் நன்கு காய்ந்திருக்கும் அப்போது அதை அறுவடை செய்துக்கொள்ளலாம். கருப்பு பூனைக்காலி வளர்ப்பு அல்லது வெள்ளை பூனைக்காலி வளர்ப்பு எதை வளர்ப்பு செய்தாலும் நான்கு முதல் ஐந்து மாதங்களில் அறுவடை செய்துக்கொள்ளலாம்.

பூச்சித்தாக்குதல்

பூனைக்காலி கொடி வளர்ப்பு செய்வதில் பெரும் சிக்கலாக இருப்பது மாவு பூச்சி தாக்குதல். இது பூனைக்காலி செடி வளர்ப்புதனை பாதித்து பூக்களை பிஞ்சு வைக்க விடாது. இதனை தடுக்க எளியவழி உள்ளது, நமது வீட்டில் அரிசி களையும் நீரை எடுத்துக்கொள்ளவும், அது நன்கு புளித்து போகும் வரை வைத்திருந்து பின்பு அதை மாவு பூச்சிகள் மீது தெளித்து வரவேண்டும், இது பூச்சிவிரட்டியாக செயல்பட்டு மாவு பூச்சிகளை முழுவதுமாக நீக்கிவிடும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

பூனைக்காலி விதை பயன்கள்

பூனைக்காலி பூ

  • வயதாகும் காலத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்றாகும் இந்த கை கால் நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை. பூனைக்காலி விதையிலிருந்து தயார் செய்யப்படும் பொடியை அரை கிராம் அளவு பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்ற அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகும்.
  • பூனைக்காலி விதை ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முதலிடம் வகிக்கிறது. பூனைக்காலி விதையை ஜாதிபத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு மற்றும் சூடம் போன்ற பொருள்களை சமபங்கு சேர்த்து பொடியாக்கி அதை தினமும் காலை, மாலை என இரு வேலையும் ஒரு கிராம் பாலுடன் கலந்து குடிப்பதன் மூலமாக ஆண்மையை அதிகரிக்கலாம்.
  • யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பூனைக்காலி வேரினை நன்றாக அரைத்து அதைக்கொண்டு நோய்பாதிப்பு ஏற்பட்ட இடத்தில பற்றுப்போட்டு வந்தால் யானைக்கால் நோய்க்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
  • பூனைக்காலி விதையானது தேள் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, மேலும் சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது நிறைய லேகியங்களிலும் மற்றும் சூரணங்களிலும் சேர்க்கப்படுகிறது.


அற்புத மருத்துவகுணம் பல கொண்ட பூனைக்காலி வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் பூனைக்காலி விதை எப்படி சாப்பிடுவது என்பதை பற்றி பார்த்தோம். நீங்களும் இந்த முறையில் பூனைக்காலி வளர்த்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

சௌ சௌ ஒரு கொடிவகை தாவரம் ஆகும். சீமை கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் இந்த செள செளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா ஆகும், ஐரோப்பியர்கள் மூலமாக தான் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதிக வெப்பநிலை உள்ள பகுதிகள் மற்றும் குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் சௌ சௌ வளர்ப்பு செய்யப்படுகிறது. இந்த சௌ சௌ கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உயரத்தில் வளரக்கூடியது.
சௌ சௌ
செள செள என்கிற சீமை கத்திரிக்காயின் ருசி புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு என்று எந்த சுவையையும் சேராது, ஆனால் பல சத்துக்கள் நிறைந்தது. மேலும் இது பூசணியின் குடும்பத்தை சேர்ந்ததாகும் மற்றும் இது மிகுதியான ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரம்பியுள்ளது.

செள செள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். சௌ சௌ வளர்ப்பு செய்வது எப்படி, சௌ சௌ மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி, சௌசௌ சாகுபடி மற்றும் சௌ சௌ மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

சௌ சௌ விதைப்பு செய்ய சிறந்த மண்கலவை தயார் செய்வது அவசியமாகும். மக்கிய தொழு உரம் நாற்பது சதவிகிதம், செம்மண் நாற்பது சதவிகிதம் மற்றும் மணல் இருபது சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மக்கிய தொழு உரத்திற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தை கூட பயன்படுத்தலாம்.

சௌ சௌ விதைப்பு

சௌ சௌ வளர்ப்பு
சௌ சௌ விதைப்பு செய்ய அதற்கென விதைகள் சேகரிக்க தேவையில்லை, நன்கு முற்றி சௌ சௌ காய்களை கொண்டே சௌ சௌ செடி வளர்ப்பு செய்யலாம், முற்றிய சௌ சௌ காயிலிருந்து சிறிது முளைப்பு விட்டு சௌ சௌ வளர்ந்திருக்கும் அந்த நிலையில் அதை அப்படியே மண்கலவையில் விதைப்பு செய்யலாம். சௌ சௌ செடிகளுக்கென தனியே பந்தலை மாடி தோட்டத்தில் அமைத்திடவேண்டும்.

சௌ சௌ வளர்ச்சி மற்றும் சாகுபடி

சௌ சௌ வளர்ப்பு
சீமை கத்திரிக்காயை விதைப்பு செய்தது முதல் அதன் மீது தனி கவனம் தேவை, பூச்சிகள் ஏதும் தாக்காமல், வேர் பகுதிகளில் நீர் ஏதும் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்கு பராமரித்தால் சௌ சௌ விதைத்த ஐந்து மாதம் முதல் ஆறு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் காய்களை சாதாரணமான வெப்பநிலையில் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையில் கெடாமல் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

சௌ சௌ மருத்துவ பயன்கள்

சௌசௌ

  • தைராய்டு கோளாரால் பாதிக்கப்பட்டவர்கள் சௌசௌவை சாப்பிட்டால் நல்ல பயன் பெறலாம். சௌ சௌவில் உள்ள மாங்கனீசு மற்றும் காப்பர் தைராய்டு பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாக செயல் படுகிறது. இதை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.
  • ஆரோக்கியமற்ற கொழுப்புகளை குறைக்கவும் சௌசௌ பயன்படுகிறது. இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் உள்ள அதிகபடியான தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சௌசௌ காயை சூப் செய்து குடித்துவந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
  • உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இது நரம்பு தளர்ச்சியை குணமாக்கி நரம்பு மண்டலங்களை சீராக்கும் வல்லமை கொண்டது.
  • சௌ சௌவில் கால்சியம் சத்துகள் மிகுதியாக காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற உதவுகிறது, எனவே வளரும் சிறு குழந்தைகளுக்கு சௌ சௌ காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பெருங்குடல் மற்றும் சிறுகுடல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து குடல் மூலம் உருவாகக்கூடிய கோளாறுகளை சரிசெய்கிறது.


ஆரோக்கியம் பல நல்க கூடிய சௌ சௌ விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி செய்வது என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சௌ சௌ வளர்ப்பு செய்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

சுமார் 4000 ஆண்டுக்கு முன்னதாக இந்த காராமணி ஆப்பிரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிமு 200 முதல் கிமு 300 ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவிலும் இது அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது, தற்போது தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் அதிகளவு காராமணி செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
காராமணி கொடி
இந்த காராமணி தட்டைப்பயறு என்றும் அழைக்கப்படுகிறது. இது வறண்ட நிலங்களில் கூட செழித்து வளரும் தன்மை கொண்டது, எனவே இது ஏழை மக்களின் பசியைப் போக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது, மேலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்றும் அழைக்கப்படுகிறது.

காராமணி செடி வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் காராமணி செடி வளர்க்கும் முறை, விதையிலிருந்து காராமணி செடி வளர்ப்பது எப்படி, காராமணி வகைகள் மற்றும் காராமணி பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

காராமணியின் அமைப்பு மற்றும் வளரும்தன்மை

காராமணி
காராமணி செடியானது சுமார் மூன்று அடி வரை உயரம் வளரக்கூடியது. இந்த காராமணி செடி வறண்ட சூழலிலும் மற்றும் களர் மண்ணிலும் செழித்து வளர்கின்ற இயல்பினை கொண்டது. இத்தாவரத்தின் வேர்முடிச்சுதனில் வாழ்கின்ற பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை நன்கு வளமாக்குகிறது.

காராமணி செடியின் பூக்கள் மணி வடிவத்திலும், வெள்ளை, இளம் மஞ்சள், இளம் சிவப்பு, ஊதா மற்றும் கருஊதா போன்ற நிறங்களில் காணப்படுகிறது, இந்த பூக்களிலிருந்து உருளைவடிவக் காய்கள் நீண்டு தோன்றுகின்றன. ஒவ்வொரு காயும் 6 முதல் 15 வரை விதைகளை தன்னுள் கொண்டிருக்கும்.

காராமணி விதையானது சிறிது வளைந்து சிறுநீரக வடிவத்தில் 6-12 மிமீ நீளம் கொண்டதாகவும், கருப்பு, பச்சை, பழுப்பு, நிறங்களிலும் காணப்படுகிறது. இந்த விதைகள் 5 ஆண்டுகள் வரையிலும் முளைக்கும் திறனை கொண்டிருக்கும். காராமணியின் காய்கள் மற்றும் விதைகள் என முழுதாவரமும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

காராமணி விதைகள் நடவு செய்தல்

காராமணி செடி
விதையை நடவு செய்வதற்கு முன்பு நேர்த்தியான மண்கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும், நல்ல வடிகால் வசதியுள்ள மண் 40 சதவிகிதம், செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்தொட்டி அல்லது நெகிழிப்பையில் போட்டு நிரப்பிக்கொள்ளவும்.

20kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நெகிழிப்பையின் அளவைப்பொறுத்து காராமணி செடி விதைகளை நடவு செய்யவேண்டும். சிறிதாக தோண்டி அதில் காராமணி விதைகளை போட்டு மூடி அதன் மீது பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும்.

காராமணி செடி வளர்ச்சி மற்றும் அறுவடை

விதை நடவு செய்ததிலிருந்து பராமரிப்பு அவசியம். குறிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 7 நாட்களிலே விதையானது முளைத்து வருவதை கண்கூடாக பார்க்கலாம், சுமார் 40 நாட்களில் செடியானது பூக்கள் விட ஆரம்பிக்கும், 60 நாட்களுக்கு பிறகு காய்கள் கணிசமான அளவில் வளர்ந்திருக்கும் அப்போது அறுவடை செய்துகொள்ளலாம்.

பூச்சி தாக்குதல்

காராமணி செடி வளர்ப்பு தனை பெரிதும் பாதிப்பது அஸ்வினி பூச்சி தாக்குதலாகும், இந்த பூச்சிகள் செடியின் வளர்ச்சியை தடுப்பதோடு, காய்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதற்கு வேப்பெண்ணை கரைசல் நல்ல தீர்வாக அமையும். தொடர்ந்து ஒரு வாரம் வேப்பெண்ணெய் கரைசலை தெளித்து வருவதன் மூலம் அஸ்வினி பூச்சி தாக்குதல் கட்டுக்குள் வரும். இவ்வாறு செய்யும் பொழுது காராமணி வளர்ப்பு சிறக்கும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

காராமணி பயன்கள்

காராமணி செடி வளர்ப்பு

  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொடி காராமணியை உண்ணும் பொழுது பெரும் நன்மைகளை அளிக்கிறது, இது இன்சுலின் சுரப்பதை சீராக்குகிறது, மேலும் இது உடல் சோர்வுதனை நீக்கி நல்ல உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
  • காராமணியில் இருக்கும் புரதம், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை மேனி மேம்பாட்டிற்கு உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதை தடைசெய்கிறது.
  • இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டாலே அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படும் பாதிப்பு. காராமணியில் காணப்படும் இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து அனீமியை நீக்குகிறது.
  • காராமணியானது அதிகப்படியான நார்ச்சத்தினை தன்னுள் கொண்டுள்ளது. எனவே இது செரிமானத் தன்மையை சீராக்குவதுடன் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை சரிசெய்கிறது.
  • காராமணியில் காணப்படுகின்ற வைட்டமின் பி1(தயாமின்) இதயநலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த வைட்டமின் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளை தடைசெய்கிறது.


குறைந்த பராமரிப்பில் அதிகப்பலன்களை தரவல்ல இந்த காராமணி செடி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் நாட்டு காராமணி செடி வளர்ப்பு செய்து அதன் முழு பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

கொத்தவரங்காய் செடியானது ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்றாகும். இதனுடைய காய்களானது செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கின்ற இயல்பை கொண்டது. கொத்தவரங்காய், ஆப்பிரிக்க காட்டு ரக செடியிலிருந்து தனித்து விளங்கும் ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடியதாக இனம் கண்டு சமையலுக்கு பயன்படுத்திய நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகளவில் கொத்தவரங்காய் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
கொத்தவரங்காய்-செடி-வளர்ப்பு-1
கொத்தவரங்காய் சமையலுக்காகப் பயன்படுவதை விட , அதன் விதையிலிருந்து பிரித்து தயாரிக்கப்படும் கார் பிசின் ஆனது உணவுத்தயாரிப்பு தொழிலில் மிக முக்கிய சேர்க்கைப் பொருளாக மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பணப்பயிராக கொத்தவரங்காய் விளங்குகிறது.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now


கொத்தவரங்காய் செடி வளர்ப்பு, மாடியில் கொத்தவரங்காய் வளர்ப்பது எப்படி, கொத்தவரங்காய் சாகுபடி செய்வது எப்படி மற்றும் பிரமிக்க வைக்கும் கொத்தவரங்காய் மருத்துவ பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விதை தேர்ந்தெடுத்தல்

கொத்தவரங்காய்-செடி-வளர்ப்பு
நன்கு முற்றிய காய்களில் இருந்து எடுத்த விதைகள் அல்லது கடைகளில் விற்கும் விதைகளை வாங்கிக்கொள்ளவும். தேர்ந்தெடுக்கும் விதையானது நேர்த்தியானதாக இருத்தல் அவசியம், அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கவேண்டும். அடுத்த நாள் விதைகள் எல்லாம் ஈரப்பதத்தை உறிஞ்சி சற்று பெரிதாகி இருக்கும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை-தயார்-செய்தல்
நடவு செய்வதற்கு ஏற்ற மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும். 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மணல், 20 சதவிகிதம் மக்கிய தொழு உரம் ஆகிய இந்த மூன்றையும் நன்கு கலந்து தயாரிக்க வேண்டும். மண்கலவை தயார் செய்ததும் உடனே விதைப்பு செய்யக்கூடாது. ஏழு முதல் பத்து நாட்களில் மண்கலவை நன்கு காய்ந்து, நுண்ணுயிரிகள் எல்லாம் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு தான் கொத்தவராங்காயை விதைப்பு செய்யலாம்.

நடவு மற்றும் வளர்ச்சி

நடவு-மற்றும்-வளர்ச்சி
கொத்தவரங்காய் விதையின் அளவைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் விதைகளை போட்டு பிறகு மண்ணால் மூடி அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் முளைத்து வர தொடங்கிவிடும். 40 நாட்களுக்கு பிறகு மொட்டுகள் வைக்க ஆரம்பிக்கும், 60 நாட்களில் கொத்தவரங்காய் சாகுபடி செய்யலாம்.

உரமேலாண்மை

கொத்தவரங்காய்-செடி-வளர்ப்பு
வேப்ப இலைகளை பறித்து நன்கு காய வைத்து, அதை தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும். அந்த தூளை கொத்தவரங்கா செடியின் வேர் பகுதியில் படும்படி போட்டு சிறிது கொத்திவிட வேண்டும், இது கொத்தவரங்கா செடிக்கு அடி உரமாக செயல்படும். செடிகளை பாதுகாக்க கூடிய இயற்கை பூச்சி விரட்டியான வேப்ப எண்ணை கரைசலை மாதத்திற்கு ஒரு முறை தெளித்துவிட வேண்டும். இவ்வாறு கொத்தவரங்காய் பராமரிப்பு செய்ய வேண்டும்

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொத்தவரங்காய் பயன்கள்

கொத்தவரங்காய்-பயன்கள்

  • கொத்தவரங்காவின் கலோரி அளவு குறைவாக இருப்பினும், உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கும் உணவாக கொத்தவரங்கா இருக்கிறது. எனவே உடல் எடையை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் இந்த காயை உணவில் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை கண்கூட பார்க்கலாம்.
  • நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் மேலும் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கும் உடலின் ரத்த ஓட்டமானது முறையாக இருப்பது அவசியம். ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் குறைபாட்டாலே தன் இரத்தச் சோகை ஏற்படுகின்றது. இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொத்தவரங்காயை சாப்பிட்டுவந்தால் ரத்த சோகை சரியாகி உடலானது மீதும் ஆரோக்கிய நிலைக்கு திரும்பும்.
  • அன்றாடம் உண்ணும் உணவில் மற்ற சத்துக்களோடு நார்ச்சத்தும் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். நார்ச்சத்து நமது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காயில் மிகுந்த புரதச்சத்துகள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளதால் நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றது.
  • தினசரி வெளியில் செல்லும் போது நாம் பல்வகையான நோய் கிருமிகளால் தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்கிறது. இத்தகைய நோய் தாக்குதலில் இருந்து காப்பது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும். கொத்தவரங்காயை அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்து வந்தோமேயானால், அது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி நோய்களில் இருந்து நம்மை காக்கும்.
  • பற்கள் மற்றும் எலும்புகளின் வலுவிற்கு கால்சியம் அவசியமானதாகும் . கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளதால், வாரத்திற்கு மூன்று முறை உணவில் கொத்தவரங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் எலும்புகள் நன்கு வலுப்பெறும்.
  • இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் சிலருக்கு எதற்கெடுத்தாலும் பதற்றம், மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படுவார்கள், அவர்களெல்லாம் கொத்தவரங்காயை சாப்பிட்டுவந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெற்று உடல் நலம் மற்றும் மன நலம் சிறக்கும்.


இக்கட்டுரையில் கொத்தவரங்காய் செடி வளர்ப்பு மற்றும் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் பார்த்தோம். இயற்கையின் அருட்கொடையான இந்த கொத்தவரங்காவை வீடுதோறும் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.

கோழி அவரை எனப்படும் கொடி அவரை அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஓன்றாகும்.இது கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். செழிப்பாக வளர்ந்து, படர்ந்து வளர கூடியது இந்த கோழி அவரை செடி. கொடி வகை தாவரங்களில் அவரை தான் மிக அடர்த்தியாக வளரும் மேலும் அதிகப்படியான காய்களை கொடுக்கும், வெகு நாட்களுக்கு அறுவடை செய்யலாம்.
கோழி-அவரை-செடி-வளர்ப்பு
கோழி அவரை செடி வளர்ப்பு முதல் அறுவடை வரை, மாடித்தோட்டத்தில் கோழி அவரை செடி வளர்ப்பது எப்படி, அவரை வகைகள் மற்றும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கோழி அவரை பயன்கள் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

மண்கலவை-1
கோழி அவரைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, அதற்கு தகுந்தாற்போல மண்கலவை தயார் செய்வது சிறந்தது. செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்யலாம். மண்புழு உரம் கிடைத்தால் மூன்றையும் கலந்து பயன் படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கோழி அவரை நடவு

கோழி அவரை செடி வளர்ப்பு
நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும், ஒரு நெகிழிப்பையில் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை போட்டு நிரப்பவும். ஒரு பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். சிறிய அளவில் பள்ளம் தோண்டி விதையை வைத்து சிறிது மண்கலவையை அதன் மேலே போட்டு மூடி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்தால் போதுமானது. கொடி வளர ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சாகுபடி

கோழி-அவரை-செடி-வளர்ப்பு-1
கோழி அவரை விதைத்த 3 நாட்களுக்குள் முளைப்பு வீற்றிருக்கும். 20 நாட்களில் கொடியின் வளர்ச்சியை காணமுடியும், 35 நாட்களில் கோழி அவரை கொடி பந்தலை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கும். நட்டத்திலிருந்து 100 ஆம் நாள் பூ வைக்கத்தொடங்கும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம், அதிக காய்கள் காய்க்க கோழி அவரையை ஆடி பட்டத்தில் நடவு செய்ய வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் கோழி அவரை செடி பராமரிப்பு

பூச்சி-தாக்குதல்
காய்கறிகளில் அதிகமான பூச்சித் தாக்குதல் இந்த கொடி அவரையில் தான் வருகிறது. இது பொதுவாக வரும் பிரச்சனை தான், அசுவினி பூச்சி போல சாறு உறுஞ்சும் பூச்சிகள் கூட்டமாக கோழி அவரை செடியின் தளிர்கள் மற்றும் பூக்களில் இருந்து சாற்றை தனியே உறிஞ்சி எடுத்து அதை வாடிப்போக செய்து விடும். மேலும் காய் துளைப்பான் பூச்சி தொல்லையும் ஏற்படுகிறது, இது அவரையில் துளை இட்டு அதன் விதையை சாப்பிடும், இதனால் அவரையை சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போக நேரிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

இந்த பூச்சி தாக்குதலை சமாளிக்க, இரண்டு நாள் ஆன அடுப்பு சாம்பலை செடியின் மீது பரவலாக தூவுவதின் மூலம் அந்த பூச்சிகளை விரட்டலாம். இரண்டு நாள் ஆனா சாம்பலில் மீதமான சூடு இருக்கும், இதுவே அந்த பூச்சிகளை விரட்டும் காரணியாக அமையும். முக்கியமானதாக, அதிக சாம்பலை பயன்படுத்தினால் செடியின் வளர்ச்சி பாதிக்க வாய்ப்பு உண்டு, எனவே தேவையான அளவு பயன்படுத்தவும். இம்முறையை பயன்படுத்தினால் கோழி அவரை செடி வளர்ப்பு சிறக்கும்.

அவரை வகைகள்

கோழி அவரை, செடி அவரை, சப்பத்தவரை, சீனி அவரை, வெள்ளை அவரை, வாழவரை, காட்டவரை, பெயவரை, பூனைக்கால் அவரை, ஆட்டுக்கொம்பு அவரை.

கோழி அவரை பயன்கள்

வளர்ச்சி-மற்றும்-சாகுபடி

  • கோழி அவரை சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு குறையும், மேலும் இதயநோய் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோழி அவரைப் பிஞ்சில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அவரை பிஞ்சை உணவில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை குணமாகும்.
  • அவரைக்காய் சத்துக்கள் உடலுக்கு மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும்.
  • இரவில் சரிவர தூங்க முடியாதவர்கள், இரவு உணவில் கோழி அவரையை எடுத்துக் கொண்டால் ஆழமான உறக்கம் பெறலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் இந்த கோழி அவரையை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த அருமருந்தான கோழி அவரையை மேற்கண்ட வழிமுறைபடி வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.

பீன்ஸ் பொதுவாக கொடிகளில் வளர்வதை பார்த்திருப்போம், அதே போல செடிகளிலும் நன்கு செழித்து வளரும். கொடிவகையாக வளர்க்கும் பொழுது அதிகமான இடவசதி தேவைப்படும், போதிய இடவசதி இல்லாதவர்கள் இந்த செடி பீன்ஸ் வளர்ப்பு செய்தால் சிறிய இடத்திலும் கூட நல்ல விளைச்சலை காண முடியும்.
செடி-பீன்ஸ்-வளர்ப்பு
செடி பீன்ஸ் விதைப்பு முதல் அறுவடை வரை , மாடியில் செடி பீன்ஸ் வளர்ப்பது எப்படி, செடி பீன்ஸ் பயன்கள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

விதை நேர்த்தி

விதை-நேர்த்தி
தேவைக்கு ஏற்ப விதைகளை எடுத்து கொண்டு அதை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வைக்கவேண்டும். அடுத்த நாள் ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சிக்கொண்டு விதைகள் சற்று பெரிதாகி இருக்கும், இந்த ஈரப்பதமானது செடி நன்கு வளர உதவும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை
செடி பீன்ஸ் வளர்ப்பு தனில் மண்கலவை முக்கிய வகிக்கிறது. நல்ல வளர்ச்சியை பெற செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபங்கு கலந்து பயன்படுத்தலாம். மண்புழு உரம் இருக்குமேயானால், செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மண்புழு உரம் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் கலந்து மண்கலவையை தயார் செய்யலாம்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

நடவு மற்றும் வளர்ச்சி

செடி-பீன்ஸ்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையில், ஊறவைத்து எடுத்து வைத்துள்ள விதைகளை நடவுசெய்ய வேண்டும். இது ஒரு அடி வரை மட்டுமே உயரம் வளரும் என்பதால், ஒரு நெகிழி பையில் 4 முதல் 6 செடிகள் வரை நடவு செய்யலாம்.

நடவு செய்த 7 முதல் 10 நாட்களில் செடி பீன்ஸின் வளர்ச்சியை கண்கூடாக காண முடியும், மேலும் 30 நாட்களில் செடி பீன்ஸ் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கும்.

செடி பீன்ஸ் சாகுபடி

பீன்ஸ்-சாகுபடி
செடி பீன்ஸ் 45 நாட்களில் பூ வைக்க தொடங்கிவிடும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும், ஒவ்வொன்றும் தனி தனியே காணப்படும், அதேபோல காய்களும் தனித்தனியே தன் காய்க்கும். 55 நாட்களுக்கு மேல் அறுவடை நிலையை அடைந்து விடும், அப்போது தாராளமாக அறுவடை செய்யலாம். ஒரு வேலை செடி பீன்ஸின் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் உன்ன நினைத்தால், 90 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்தால் உள்ளே இருக்கும் விதை நன்கு முற்றி, அதிக சுவை கொடுக்க கூடியதாகி இருக்கும்.

பூச்சி தாக்குதல்

செடி பீன்ஸை அஸ்வினி பூச்சிகள் அதிக அளவில் தாக்கக்கூடும், செடியின் ஆரம்ப கால வளர்ச்சியை இது பெரிதும் பாதிக்கும். இந்த அஸ்வினி பூச்சி தொல்லையில் இருந்து செடி பீன்ஸை பாதுகாக்க விட்டால் செடி முழுவதுமாக வீணாகிவிடும். வேப்பெண்ணெய் கரைசலை தெளிப்பதன் மூலமாக இந்த அஸ்வினி பூச்சியை முற்றிலுமாக அகற்றலாம்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

செடி பீன்ஸ் பயன்கள்

செடி-பீன்ஸ்-பயன்கள்

  • செடி பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால், அதிலிருக்கும் ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சி தனை தடுத்து நிறுத்தி, புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைகிறது.
  • பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்தத்தை உறையாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த செடி பீன்ஸை தினசரி உணவில் சேர்த்து கொண்டார்களேயானால் அந்த நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
  • செடி பீன்ஸில் நார்ச்சத்து, மாங்கனீஷ் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து அதை ஊட்ட சத்தாக மாற்றுகிறது.
  • இரும்புச்சத்தைக் கிரகித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது இந்த செடி பீன்ஸ், மேலும் செரிமான சக்தியை அதிகரித்து, வாயுத் தொல்லையயையும் நீக்குகிறது.
  • இரைப்பையில் ஏற்படும் பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவதுண்டு, அவர்காலம் இந்த செடி பீன்ஸை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.


பீன்ஸ் வகைகள் பல உண்டு அதில் செடி பீன்ஸ் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் செடி பீன்ஸ் வளர்த்து, அந்த பச்சை பீன்ஸ் போல உங்கள் வாழ்க்கையும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். பரங்கிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்கா ஆகும். பூசணி தமிழர்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றாகும் இந்த பரங்கிக்காய். பரங்கிக்காய் வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு, பரங்கிக்காய் சாகுபடி, வீட்டில் பரங்கிக்காய் வளர்ப்பது எப்படி, பரங்கிக்காய் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பரங்கிக்காய்

விதையை தேர்ந்தெடுத்தல்

பரங்கிக்காய்-விதை-1
நன்கு நேர்த்தியான பரங்கிக்காய் விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். நீரில் போட்டவுடன் விதைகள் மிதந்து கொண்டிருக்கும், அடுத்த நாள் பார்க்கும்பொழுது நீரின் அடியில் காணப்படும், இந்த நிலை விதைகள் விதைக்க தயாரானதை குறிக்கும்.

மண்கலவை தயார் செய்தல் மற்றும் விதைத்தல்

மஞ்சள் பரங்கிக்காயை நடவு செய்ய ஏற்ற மாதம் ஜீன் – ஜீலை மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் ஆகும், இந்த மாதத்தில் நடவுசெய்தல் நல்ல சாகுபடி செய்யலாம்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now


பரங்கிக்காய்க்கு மண்கலவை தயார் செய்யும் போது, களிமண் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இம்மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்ய வேண்டும். பிறகு தயார் நிலையில் இருக்கும் விதைகளை விதைப்பு செய்யலாம்.

பரங்கிக்காய் வளர்ச்சி

பரங்கிக்காய்-கொடி
மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் விதைத்த ஏழாம் நாளில் இருந்து ஒன்பது நாற்களுக்குள் விதையானது முளைத்து, இலைகள் துளிர் விட தொடங்கி விடும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்தே தண்ணீர் விட வேண்டும். கோடைகாலங்களில் வாரத்திற்கு இருமுறையும், மற்ற நேரங்களில் வாரம் ஒரு முறையும் நீரை விட வேண்டும். இந்த நீர் மேலாண்மையே பரங்கிக்காய் செடி வளர்ப்பு முறை தனை மேம்படுத்தும்.

பரங்கிக்காய் வளர்ப்பு மற்றும் சாகுபடி

நல்ல-சாகுபடி
பரங்கிக்காய் செடி விதைத்த 45 நாளில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும்.

முதலில் ஆண் மொட்டுகள் அதிகம் வைக்கும், பின்பு பெண் மொட்டுக்கள் வரத்தொடங்கும். 60 நாட்களுக்கு பிறகு அடர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். பூக்கள் பூத்த உடனே தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளின் வரவு அதிகரிக்கும், மகரந்த சேர்க்கையும் துரிதமாக நடைபெறும். 70 நாட்களுக்கு பிறகு காய்கள் தோன்றும். 110 முதல் 115 நாளில் காய் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்கும், அப்போது அதை அறுவடை செய்து கொள்ளலாம்.
male and female flowers

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

பரங்கிக்காய் நன்மைகள்

பரங்கிக்காய்-நன்மைகள்

  • பரங்கிக்காய் உடலுக்கு அதிக அளவில் குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது, மேலும் சிறுநீர் நன்கு பிரிவதற்கு உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.
  • திடீரென்று தோன்றும் வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்யும் வல்லமை கொண்டுள்ளது.
  • பரங்கிக்காய் சாப்பிடுவதால் மழைக்கால் ஏற்படும் சளி மற்றும் தொடர் இருமலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது. பரங்கிக்காயில் உள்ள ஜீயாக்சாண்டின், வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் ஆகியவை நோய்த்தொற்றை எதிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்திதனை அதிகரிக்க மற்றும் விரைவில் குணமடையவும் வழிவகை செய்கிறது.
  • இதயம் பலகீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்த சோகை நோய் உள்ளவர்கள் இந்த பரங்கிக்காயை தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்து கொண்டால் சிறந்த பலன் வாய்க்கும்.
  • பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது, இது நம் கண்களுக்கு பெருமளவில் பயனுள்ளதாக விளங்குகிறது, மேலும் ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளதால், அவை நம் கண்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
  • தசை மண்டல பகுதிகளின் தளர்ச்சியை போக்கி, அதற்கு உறுதியை சேர்க்க வல்லது.


நாட்டு பரங்கிக்காய் விதைப்பு முதல் அறுவடை எப்படி செய்வது என்பதை பற்றி பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பரங்கிக்காய் வளர்ப்பு செய்து பலன்கள் அனைத்தையும் பெற்று, அதன் பூ போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.

புடலை வளர்ப்பு மாடித்தோட்டங்களிலே மிக எளிதாக செய்யலாம். நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் நிறைய அற்புதமான காய்கறி, பழ வகைகள் பல இருந்தாலும் நவ நாகரிக வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக அவை பெருன்பான்மை மக்களால் உணவுக்கு பயன்படுத்தப்படாமல் ஒதுக்கப்படுகின்றன, அப்படி அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் அருமை பல நிறைந்த புடலங்காய் வளர்ப்பு முறை, புடலங்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
காய்

மாடித்தோட்டத்தில் புடலங்காய் வளர்ப்பது எப்படி?

மாடித்தோட்டம் புடலங்காய் செடி வளர்ப்பு முறைக்கு பின்வரும் பொருட்கள் தேவை :
மாடித்தோட்டம்

  • நாட்டு ரக புடலங்காய் விதைகள் 25 – 30 வரை.
  • பழைய நெகிழி சாக்கு பைகள் அல்லது 4 அடி உயரத்திற்கும் மேலாக உள்ள மண் தொட்டிகள்.
  • சிறிது அளவு ஆற்றுமணல், செம்மண், தென்னைநார்க்கழிவு சிறிது, மண்புழு உரம் மற்றும் பஞ்சகாவ்யா.
  • நீர் தெளிக்க உதவுகின்ற பூவாளி தெளிப்பான்கள் மற்றும் புடலங்காய் பந்தல் அமைப்பதற்கான உபகரணங்கள்.
  • புடலை விதையை விதைப்பதற்கு முன்பு சாக்கு பை அல்லது மண்சட்டியில் 2 பங்கு அளவு தேங்காயின் நார், நன்கு மக்கிய மாட்டு எரு 1 பங்கு ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து சாக்கு பை அல்லது தொட்டியில் இட்டு, ஒரு 11 நாட்களுக்கு நன்கு மட்கி போக விட வேண்டும். இதன் பிறகு ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்த புடலை விதைகளை இந்த கலவையில் விதைக்கலாம்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now


    புடலங்காய் உயரமாக வளரக்கூடிய கொடிவகையைச் சார்ந்த பயிர், அதிகபட்சமாக ஒரு தொட்டியில் 4 முதல் 5 புடலங்காய் விதைகளை விதைப்பு செய்யலாம். புடலங்காய் விதைகளை விதைத்த பின் தண்ணீர் தெளிப்பான் கொண்டு தண்ணீர் விட வேண்டும். அதன் பின் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

    பந்தல் அமைத்து புடலை வளர்ப்பு

    புடலை-வளர்ப்பு
    புடலங்காய் நன்கு வளர பந்தல் அமைப்பது மிகவும் முக்கியம், உங்கள் வீட்டு மாடியில் நான்கு புறங்களில் நான்கு மண் தொட்டிகளில் மணல் மற்றும் மண் இரண்டையும் நன்றாக கலந்து நிரப்பி, அதில் தடிமன் கொண்ட ஒரே உயரமுடைய நான்கு மூங்கில் குச்சிகளை நட்டு வைக்கவும். இதன்பிறகு கயிறு அல்லது இரும்பு கம்பியை கொண்டு அந்த நான்கு புறமும் இருக்கும் குச்சிகளை இணைத்து, பிறகு குறுக்கும் நெடுக்குமாக பந்தல் போட ஏதுவாக கட்டிவிட வேண்டும்.

    இதன் பின் நாம் புடலை விதையை போட்டு வளர்ந்துள்ள இளம் புடலை பயிர்கள் இருக்கின்ற தொட்டி அல்லது பைகளை அந்த நான்கு புறங்களிலும் தரையில் இருந்து உயரமாக இருக்கும் வகையில் சிறிய கற்களை வைத்து, அதன் மீது புடலை தொட்டி அல்லது சாக்கு பைகளை வைத்து, அந்த மூங்கில் குச்சிகளில் புடலங்காய் கொடி படர்ந்து போகுமாறு செய்து வைக்கவேண்டும்.

    பூச்சி தாக்குதல்

    புடலங்காய் செடி வளருகின்ற பருவத்தில் நிறைய பூச்சிகள் அந்த கொடியினை தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது, இதனால் புடலை வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. இந்தவகை பூச்சி தாக்குதல்களை சமாளிக்க இயற்கையான பூச்சி விரட்டி மருந்தான வேப்பெண்ணெய் கரைசலை மாதம் ஒரு முறை புடலை செடியின் மீது சிறிது அளவு தெளித்து வரவேண்டும், வேப்ப இலைகளை பறித்து நன்கு காயவைத்து அவற்றை பொடியாக்கி புடலை செடியின் வேர் பகுதிகளில் போட்டால், அவை அந்த கொடிகளுக்கு இயற்கை உரமாகவும், பூச்சிகளின் தாக்குதலை தடுக்கும் அரணாக செயல்படுகிறது.

    neem oil icon

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    புடலங்காய் கொடி வளர்ப்பது எப்படி?

    புடலங்காய்-செடி
    புடலங்காய் வளரும் காலத்தில் அந்த கொடியின் நுனிக்கிளைகளை அவ்வப்போது வெட்டுவதால் அதிகளவு புடலை கொடிகள் பரவுவதற்கு சூழ்நிலையை உண்டாக்குகிறது, மேலும் 2 வாரத்திற்கு ஒருமுறை புடலங்காய் செடி இருக்கும் மண்தொட்டியின் உள்ள மண்ணை நன்கு கிளறி விடுவதன் மூலம் அந்த மண் ஊட்டம் பெறுவதுமட்டுமின்றி, புடலங்காய் செடி விரைவில் வளர உதவிபுரியும். மேலும் பஞ்சகவ்யா திரவத்தை 1 லிட்டர் நீரில் 50 மில்லி அளவு சேர்த்து புடலை செடியின் வேர் பகுதிகளில் ஊற்றினால் புடலை செடியில் அதிகமாக பூக்கள் பூக்கும்.

    மாடியில் புடலை செடியை வளர்க்கும் போது அந்த புடலை செடி அதிகபட்சம் 3 மாதங்கள் வரை மட்டுமே பலனை தரும், அதன் பின் அந்த செடியில் காய்ந்து போன கிளைகள் மற்றும் இலையை வெட்டி, அது வளரும் தொட்டியின் வேர்ப்பகுதியில் இயற்கை உரமாயிட்டு பயன்படுத்தலாம். புடலங்காய்கள் நன்கு வளர்கின்றன தருணத்தில், காய்களை முற்ற விடாமல் சரியான
    காலத்தில் காய்களை அறுவடை செய்து பயன்படுத்தவும்.

    புடலை வகைகள்

    கொடிகள்
    புடலங்காயில் வகைகள் பல இருக்கிறது. கொத்துப்புடலை, பன்றி புடலை, நாய்ப்புடலை, பாம்பு புடலை, குட்டை புடலை, பேய்ப்புடலை என நிறைய வகைகள் இருக்கிறது, ஆனால் பலரும் சமையலில் புடலையை அடிக்கடி சேர்த்துகொள்வதில்லை, ஏனெனில் தற்போது நவீன உணவுகள் வந்த பிறகு புடலங்காயை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    புடலங்காய் பயன்கள்

    புடலை-வளர்ப்பு-1

  • வயிற்றுப்புண் மற்றும் தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வர அதன் பாதிப்புகள் குறையும்.
  • புடலையில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், மலச்சிக்கலை சரிசெய்யும்.
  • நரம்புகளுக்கு புத்துயிர் கொடுத்து ஞாபக திறனை அதிகரிக்கும்.
  • சருமத்திற்கு அதிக பளபளப்பு தன்மையை கொடுக்கும்.
  • காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுத்தால் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகும்.
  • உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
  • புடலை விதைப்பது முதல் அறுவடை வரை இக்கட்டுரையில் கண்டோம். இத்தகைய ஆரோக்கியம் தரும் புடலை வளர்த்து பயன் பல பெறுவோம்.

    Pin It