Tag

செடி பராமரிப்பு

Browsing

வீட்டில் தோட்டம் அல்லது மாடித்தோட்டம் செய்வது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், சில சமயம் நாம் எதிர்பாராத பிரச்சனைகளும் வரும். இந்த கட்டுரையில், கார்டூன் படங்களின் மூலம் வீட்டுத் தோட்டத்தில் வரும் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான எளிய தீர்வுகளை சற்று சிரிப்புடன் பார்க்கலாம். இந்த 10 பிரச்சனைகள்ல, கடைசில வர்றது தான் உங்களை அதிர்ச்சிப்படுத்தும்.

வீட்டுத் தோட்டத்தில் வரும் 10 பொதுவான பிரச்சனைகள்

10. அதீத வெயில்

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

 
நாங்க மரத்தையெல்லாம் வெட்டி வச்சியிருக்கறது என்னவோ உண்மைதான், ஆனாலும் இந்த அடி உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியலையா தலைவா?

வீட்டுத் தோட்டத்தில் அதீத வெயில் பிரச்சனை

காலைல தண்ணி ஊத்திட்டு நல்லபடியா பாத்துட்டுவந்த செடி சாய்ந்தரம் பாத்தா காஞ்சிப்போய் கருவாடா நிக்குது, இந்த சூரியனுக்கு நம்பமேல அப்படி என்னதான் காண்டுனு தெரியல சும்மா வறுத்து எடுக்கறாப்ல.

ஓடிப்போய் ஒளிஞ்சிக்க முடிஞ்ச நமக்கே இந்த நிலைமைன்னா, நகரவே முடியாத செடிகளோட நிலைமையை நினைச்ச கண்ணு வேர்க்குது.

தீர்வு:

  • பகல் வெயிலில் நிழல் வலை அமைக்கவும்.
  • காலை அல்லது மாலை நேரத்தில் நீர் ஊற்றவும்.

9. அதீத குளிர்

வீட்டுத் தோட்டத்தில் அதீத குளிரால் வரும் பிரச்சனை

நாம்ப இருக்கறது என்னமோ சேலம், தருமபுரி, கோவை, சென்னை இப்படிப்பட்ட ஊருதான் அனா இந்த குளிர்காலத்துல மட்டும் ஏதோ காஷ்மீர்ல இருக்கறமாதிரி குளிருதே என்ன காரணமா இருக்கும்? துடைச்சிக்க துண்டு வெச்சியிருக்கற நம்மாலேயே குளிக்க முடியல அனால் இந்த செடிங்களாம் எப்படித்தான் தாங்கிட்டு உசுரோட இருக்கோ தெரியல.

தீர்வு:

  • பிளாஸ்டிக் கவர் அல்லது துணியால் மூடுங்கள்.
  • குளிர் நேரத்தில் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.

8. எறும்புகள்

வீட்டுத் தோட்ட செடிகளில் எறும்புகள் தாக்குதல்

முதலில் இந்த படத்தில் இருப்பதுபோல் செடிக்கு அடியில் வீட்டை காட்டுவானுங்க அதுக்கு அப்பறம்தான் வேலைய ஆரம்பிப்பானுங்க. ஊருல இருக்கற மொத்த இலைப்பேன், அஷ்வினி பூச்சி மற்றும் மாவுப்பூச்சி எல்லாத்தையும் கூட்டிட்டு வந்துடுவானுங்க அதோட மட்டும் இல்லை நாம் அவற்றை தள்ளிவிட்டல் இவனுங்க மறுபடி மறுபடி தூக்கிடுவந்து வச்சிடுவானுங்க. அதுமட்டும் இல்லாமல் தளிர், மொட்டு, பூ, பிஞ்சுனு ஒன்னுவிடாம கடிச்சி போட்டுடுவானுங்க.

தீர்வு:

  • மண்ணில் மஞ்சள் தூள் அல்லது சுண்ணாம்பு தூவலாம்.
  • நீரில் கரைத்த சோப்பு நீரை தெளிக்கலாம்.

அனால் போவானுங்களாங்கறது சந்தேகம்தான், போயிருந்த நான் ஏன் பதிவு போடப்போறேன்.

7. நத்தைகள்

வீட்டுத் தோட்ட இலைகளை சேதப்படுத்தும் நத்தைகள்

இவனுங்களுக்கு நான் பத்திரிக்கை வைக்கல, போன் பண்ணி கூப்பிடல இவளோ எனக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்பல ஆனா குடும்பத்தோட வந்து கூத்தடிச்சிட்டு இருக்கானுங்க, எனக்கு தெரிஞ்சி கண்டிப்பா என்னோட தோட்டத்துல இவனுங்களோட பால்வாடி பள்ளிக்கூடம் ஒன்னு நடந்துட்டு இருக்குனு நினைக்கறேன்! உங்க தோட்டத்துல நிலைமை எப்படி?

தீர்வு:

  • உப்பு அல்லது சுண்ணாம்பு பாதையில் தூவலாம்.
  • மாலை நேரத்தில் கையால் அகற்றவும்.

6. வெட்டுக்கிளி

வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்கிளி தாக்குதல்

இவனுங்கள பாக்க சாதாரணமா தோட்டத்துல குதிச்சிகிட்டும் தாவிக்கிட்டும் திரியற மாதிரிதான் தெரியும் அனால் சத்தமே போடாம மொத்த செடியையும் சாப்பிட்டுடுவானுங்க. ராத்திரியில ஒரு பாட்டு ஒன்னு பாடுவானுங்க பாருங்க, ஒரு பொட்டு தூக்கம்கூட வராதமாதிரி பாத்துக்குவானுங்க. அப்பறம் அங்கேயே குடும்பம் நடத்தி, குட்டி போட்டு அவனுங்க தோட்டமாக மாத்திப்பானுங்க.

தீர்வு:

  • வேப்பெண்ணெய் கரைசல் அல்லது பூண்டு கரைசல் தெளிக்கவும்.
  • காலை நேரங்களில் கையால் அகற்றவும்.

5. புழுக்கள்

செடிகளை சேதப்படுத்தும் தோட்டப் புழுக்கள்

இவனுங்கள்ல ரெண்டுவகை இருக்கானுங்க, முதல் ராகம் ராப்பிச்சைக்காரன் மாதிரி ராப்புழு, பகல் முழுவதும் எங்கயாவது ஒளிஞ்சிட்டு இருப்பானுங்க இரவு நாம தூங்கின அப்பறம் வெளியேவந்து இருக்கற செடி பூரா கடிச்சி தின்னுடுவானுங்க, காலைல வந்து பாத்தா எல்லா இலைலயும் ஓட்டை இருக்கும் ரெண்டுநாள்ல செடியே இருக்காது.

ரெண்டாவது ரகம், பகல் குடிகாரன் மாதிரி பகல்நேரப்புழு, ஆள் பாக்க பச்சை நிறத்துல பாவமா இருப்பானுங்க ஆனா ஒரே நாள்ல ஒரு செடி முழுசா தின்னு தீத்துடுவானுங்க. நெல் அறைக்கற இயந்திரம்போல 24 மணிநேரமும் தின்னு தின்னு ரெண்டே நாள்ல நம்ப விறல் அளவு வளந்துடுவானுங்க.

தீர்வு:

  • 1 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்பெண்ணெய், சிறிதளவு சோப்புக்கட்டி கலந்து தெளிக்கலாம்.
  • கையால் புழுக்களை அகற்றவும்.

4. பூனை

வீட்டுத் தோட்டத்தில் பூனைகளால் வரும் பிரச்சனை

சொந்த செலவில் நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம்தான் இந்த வளர்ப்பு பூனைங்க, தோட்டத்துல இருக்கற எலிய புடிக்க இவனுங்கள வளத்தா, எலி இவனுங்க மேல ஏறி நடனம் ஆடினாலும் அசையாம தூங்குறானுங்க. இதுல இவனுங்க தூங்க விளைஞ்ச செடிங்க இருக்கற பையோ இல்லை விதை போட்டுஇருக்கற பையோதான் வேணுமாம்.

தீர்வு:

  • இவனுங்கள வளர்க்காமல் இருக்கறதுதான் ஒரே வழி, ஒருவேளை பக்கத்துவீட்டு பூனை வந்தா?
  • முள்ளுள்ள கிளைகள் அல்லது கூர்மையான கற்களைச் சுற்றி வைக்கலாம்.

3. வளர்ப்பு நாய்

வீட்டுத் தோட்டத்தில் நாய்களால் வரும் பிரச்சனை

இவனுங்கள வெளிய வாக்கிங் கூட்டிட்டுப்போனா நிறைய பிரச்சனைகள் வருதுன்னு மாடிக்கு கூட்டிட்டு போனா, இருக்கற எல்லாச்செடியையும் புடுங்கிப்போட்டு, பைகள் முதற்கொண்டு கிழிச்சுவெச்சிடறானுங்க, இதுக்கு பேசாம பருத்திமூட்டை குடோன்லயே இருக்கலாம்.

தீர்வு:

  • வேலியிடவும் அல்லது நெட்வலைப் பயன்படுத்தவும்.
  • நாய்க்கு தனியாக விளையாட்டு இடம் அமைக்கவும்.

2. அணில்கள்

வீட்டுத் தோட்டத்தில் அணில்களால் வரும் பிரச்சனை

இவனுங்க பாவம்தான் மக்களே நாம மனுசங்க பூரா வீட்டை கட்டியபிறகு, வாழ இடம் இல்லாமல், சாப்பிட உணவு இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிப்பது உண்மைதான், ஆனா தோட்டத்துக்குள்ள வந்தா இருக்கற பழங்கள், காய்கள் என்ன வேணுமோ திண்ணுட்டுப்போனா பரவால்ல, ஆனா இவனுங்க அங்கேயும் இங்கயும் தாவி ஓட்றதுலயே பாதி பிஞ்சி கொட்டிடும், மீதியையும் இவனுங்களே கடிச்சி போட்டுடுவானுங்க.

தீர்வு:

  • பழங்களை நெட்வலைக் கொண்டு மூடுங்கள்.
  • 5ஆவது மாடில தோட்டம் வச்சாலும் ஏறி வந்துடறானுங்க, வேற என்னதப்பண்ண முடிஞ்சா நாம செவ்வா கிரகத்துக்கு தோட்டத்தை மாத்திட வேண்டியதுதான்.

1. எலிகள்

வீட்டுத் தோட்டத்தில் எலிகளால் வரும் பிரச்சனை

தோட்டமும் இவனுங்களுக்கு நகமும் சதையும் மாதிரி, பிரிக்க முடியாது உறவா இருக்கானுங்க. மருதமலை படத்துல வர வடிவேலு மாதிரி ஒரு செடி, விதை, நாத்து இவனுங்கள நம்பி வைக்க முடியல, திரும்பிட்டு திரும்பறதுக்குள்ள தூக்கிட்டு ஓடிடுறானுங்க. மனுஷனுங்களுக்கு இருக்கற அறிவவிட இவனுங்களுக்கு கண்டிப்பா அதிகமா இருக்கு. இவனுங்கள புடிக்க புதுசு புதுசா வழி கண்டுபுடிச்சாலும் தினுசு தினுசா யோசிச்சி தப்பிச்சிடுறானுங்க.

தீர்வு:

  • எலி வலை அல்லது இயற்கை விரட்டிகள் பயன்படுத்தவும்.
  • நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வலை அமைக்கவும்.

இவ்வளவு நேரம் பொறுமையாக இந்த பதிவை படித்ததற்கு மிக்க நன்றி. இன்றளவில் படிக்கும் பழக்கம் பெரும்பாலும் மறைந்து வருகிறது, உங்களுக்கு இந்த பதிவு பிடித்துஇருந்தால் உங்களைப்போலவே வாசிப்பிலும், தோட்டத்திலும் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இதை பகிரவும். நன்றி.

 

Pin It