Tag

வீட்டில் ஸ்ட்ராபெரி தோட்டம்

Browsing

ஸ்ட்ராபெர்ரி வளர்ப்பு மற்றும் சாகுபடி தற்பொழுது நம் நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஸ்ட்ராபெர்ரியின் தாயகம் ஐரோப்பா ஆகும். ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. விதையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்பது எப்படி, வீட்டுத்தோட்டத்தில் மற்றும் மாடி தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி வளர்ப்பு செய்வது எப்படி, ஸ்ட்ராபெர்ரி நன்மைகள் போன்றவற்றைப்ப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஸ்ட்ராபெர்ரி

விதையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்பு

விதை
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள விதைகள் மூலமாகவும் ஸ்ட்ராபெர்ரி செடி வளர்க்கலாம். பொதுவாகவே பழங்களில் உள்ள விதைகள் பழத்தின் உள்ளே இருக்கும், ஆனால் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மட்டும் விதைகள் வெளியே இருக்கும்.

விதை நடவுமுறை-1

நன்கு முதிர்ந்த பழங்களில் உள்ள விதைகளே செடியாக வளரும், எனவே முதிர்ந்த பழங்களில் கருப்பு நிறத்தில் உள்ள விதைகளை எடுத்து கொள்ள வேண்டும். பழத்தைத் தண்ணீரில் அலசி விதைகளை சுலபமாக தனியே பிரித்து எடுத்துக் கொள்ளலாம், தனியாக எடுத்த விதைகளை மெல்லிழைக் காகிதத்தில் வைத்து மடித்து பின்பு அதை ஒரு நெகிழி பையில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் முளைப்பு விடத்தொடங்கும். பின் அதை மண் மற்றும் கோகோ பீட் கலந்த மண்கலவைக்கு மாற்ற நன்கு வளரத்தொடங்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை நடவுமுறை-2

தயார்செய்து வைத்த மண்கலவையில் ஸ்ட்ராபெர்ரி விதைகளை நேரடியாக தூவி விட வேண்டும் அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மண்கலவையில் வைத்துக் கொள்ளலாம். இதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து விட வேண்டும். மண் ஈரப்பதத்தில் இருக்க வேண்டும் என்பதால் கட்டாயம் ஒரு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து விட வேண்டும். விதைகள் சிறியதாக இருப்பதால் தண்ணீரை ஊற்றாமல் தெளிப்பது நல்லது.

15 லிருந்து 30 நாளுக்குள் செடி முளைத்து வர தொடங்கி விடும். மண் மற்றும் விதையின் தன்மையைப் பொறுத்து செடி வளரும் காலம் மாறும். இதன் இலைகள் வட்ட வடிவில் காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி சாகுபடி

ஸ்ட்ராபெர்ரி நடவு
10 சென்ட் இடத்தில் இரண்டடி அகலத்துக்கு மண்ணை வரப்பு போல் வெட்டி கொள்ள வேண்டும். நர்சரி பாய் அல்லது மல்சிங் ஷீட்டை வரப்பின் மேல் போட்டு மூடி விட வேண்டும். 10 சென்டில் 42 வரப்பு வரை வெட்டலாம். ஒரு வரப்பில் 40 முதல் 44 துளைகள் வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு துளையிலும் ஒரு நாற்று நட்டு வைக்க வேண்டும். இதற்கு உரம், ரசாயன மருந்து என்று எதுவும் தெளிக்க கூடாது. வரப்பிலுள்ள துளைகளில் சிறிதளவு சாணம் இட்டால் போதுமானது. தவறாமல் அவ்வப்பொழுது களைகளை அகற்றி விட வேண்டும்.

இவை குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய செடி வகை என்பதால் தண்ணீர்த்தேவை மிகக்குறைவு, எனவே மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

மாடி தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்பது எப்படி?

பழங்கள்
சரியான அளவுடைய ஒரு ஸ்ட்ராபெர்ரி செடியைத் தேர்ந்தெடுக்கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரிகள் ஆழமற்ற வேர் அமைப்புப்பை கொண்டுள்ளது, எனவே ஸ்ட்ராபெர்ரி செழிக்க ஆழமான தொட்டிகள் அவசியமில்லை, இருபது செ.மீ ஆழம் கொண்ட ஒரு தொட்டி போதுமானது.

ஸ்ட்ராபெர்ரிகளுக்கு எவ்வளவு அகலமுடைய தொட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இன்னொரு தேர்வாகும், நீங்கள் எத்தனை ஸ்ட்ராபெரி செடிகளை சேர்ந்தாற்போல் நடவு செய்ய விரும்புகிறீர்களோ அதற்கேற்றாற்போல் அகலமான தொட்டிகளை பயன்படுத்தவும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

முப்பது செ.மீ விட்டம் கொண்ட ஒரு தொட்டியில், மூன்று முதல் நான்கு ஸ்ட்ராபெர்ரி செடிகளை எளிதில் நடவு செய்ய முடியும், நிறைய ஸ்ட்ராபெர்ரி செடிகளை நடவு செய்ய விரும்பினால், நீங்கள் தொட்டியின் அளவை அதிகரிக்க வேண்டும்.

மகசூல்

ஸ்ட்ராபெர்ரி செடி நடவு செய்து 60 நாளில் பூ வைத்துவிடும். 90 நாளில் பழங்களை அறுவடை செய்து விட முடியும். 10 சென்ட்டில் தினமும் 50 கிலோ பழம் வரை எடுக்க முடியும். ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை பழங்களை அறுவடை செய்ய முடியும்.

ஸ்ட்ராபெர்ரியை பொறுத்தவரை 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன, ஆனால் இந்தியாவில் 15 ரகங்கள் தான் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றன. ஸ்டராபெர்ரி குளிர்ப் பிரதேசங்களில்தான் நன்றாக வளரும் என்பதால் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் பயிர் செய்ய முடியும்.

ஸ்ட்ராபெர்ரி நன்மைகள்

பயன்கள்

  • உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது.
  • தோலின் வறட்சியைப் போக்குகிறது.
  • சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
  • பற்களில் உள்ள கறைகளை நீக்குகிறது.
  • தலைமுடி கொட்டுதல்,இளநரை,பொடுகுத் தொல்லை போன்றவற்றைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள சத்துக்கள்

ஸ்ட்ராபெர்ரியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, ஐயோடின், பொஸ்போருஸ் போன்ற சத்துக்களும், உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளது.

ஸ்ட்ராபெர்ரியின் வகைகள்

இலை
பிலமென்க்கோ, பிளாரென்ஸ், ஸ்நொவ் வைட், எலெகான்ஸ், மால்வினா, வைப்ரன்ட், ஸ்வீட் ஹார்ட் போன்றவையாகும்.

மேலும் பச்சை நிற ஸ்ட்ராபெர்ரி, வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரி, கருப்பு நிற ஸ்ட்ராபெர்ரி, ஜெயண்ட் ஸ்ட்ராபெர்ரி, பொன்சாய் ரெட் ஸ்ட்ராபெர்ரி, ஆப்ரிக்கன் ப்ளூ ஸ்ட்ராபெர்ரி என்று நிறங்கள் கொண்டும் வேறுபடுகிறது. வகைகளுக்கு ஏற்றவாறு சுவையும் ஸ்டராபெர்ரியின் தோற்றமும் வேறுபடுகிறது.

மேலும் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் ஸ்வீட் சார்லி, ஹேம்ரோஸ், வின்டெர்டோன் போன்ற ரகங்கள் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது.

மேற்கண்ட முறையில் ஸ்ட்ராபெர்ரி நடவுசெய்து, இயற்கை முறையில் விளைந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு அதன் முழு பயன்களையும் பெற்றுமகிழ வாழ்த்துகிறோம்.

Pin It