முள்சீத்தா மரம் வளர்ப்பு சுலபமான முறையில் செய்யலாம், ஏனென்றால் இது நன்கு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழ பயிர் ஆகும். முள் சீதாவின் பிறப்பிடம் அமேசான் காடுகள் ஆகும், தற்பொழுது வெகுவாக பல வெப்பமண்டல நாடுகளில் பரவலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. நம் இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் இயற்கையாகவே விளைகின்றது.
வீட்டில் வளர்க்க கூடாத மரம் என்று முள் சீத்தா மரத்தை கூறுவதுண்டு, இயற்கையின் படைப்பில் வளர்க்க கூடாத மரமென்று ஏதுமில்லை. தாராளமாக இதை வீட்டில் வளர்க்கலாம். முள் சீதா மரம் வளர்ப்பது எப்படி, விதை வழி மரம் வளர்ப்பு, காய்க்காத மரம் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும், முள் சீத்தா பயன்கள், முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
வளர்ச்சிக்கு ஏற்ற மண்
முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்ய நீர் தேங்காத எந்தவகை மண்ணையும் தேர்ந்தெடுக்கலாம். விதை மூலமாகவும் பயிர் செய்யலாம், மேலும் மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் முள் சீதாவை பயிர் செய்யலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை. |
முள்சீத்தா மரம் வளர்ப்பு மற்றும் மகசூல்
முள்சீத்தா மே மாதம் பூக்கள் பூத்து ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பழங்களை கொடுக்கும். ஒரு செடிக்கு ஏறக்குறைய நூறு பழங்கள் வரை கிடைக்கும், பழங்கள் அனைத்தையும் கனிவதற்கு முன்பாக பறித்து விற்பனை செய்துவிட வேண்டும்.
முள் சீத்தா பெரும்பாலும் இருபது அடி வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது. பசுமை மாறாத குணம் கொண்ட இம்மரம் மினுமினுப்பான இலையுடனும், பழங்களின் வெளிபுறப்பகுதியில் வளைந்த மிருதுவான முற்களோடு காணப்படும்.
முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை
சீதா பழம் மரம் வளர்ப்பு முறை தனில் அடுத்து அதன் சாகுபடி முறைகளை காணப்போகிறோம். இதன் பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் இரண்டும் கலந்திருக்கும். முள் சீதா பழமானது இதய வடிவத்திலோ அல்லது நீள் முட்டை வடிவத்திலோ காணப்படும். முள் சீதா பழங்கள் தோற்றத்தில் பெரிதாக காணப்படும். ஒவ்வொரு முள் சீதா பழமும் 3 கிலோ முதல் 5 கிலோ வரையும் கூட எடை இருக்கும். முழுமையாக வளர்ந்த பழத்தின் நீளம் சுமார் 1 அடியும், அகலம் அரை அடியும் இருக்கும்.
முதலில் அடர்பச்சை நிறத்தில் காய்கள் இருக்கும், பின்பு பழுத்ததும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறிவிடும். சதைப்பகுதியானது நாட்டு சீத்தா பழத்தை போல வெண்மை நிறமாகவும், அதே சுவையும் கொண்டதாக இருக்கும், ஆனால் முள் சீத்தா நறுமணம், எலுமிச்சை, அண்ணாச்சி, முலாம்பழம், ஸ்டிராபெரி பழங்களின் நறுமணத்தை கலந்த ஒரு வித்தியாசமான வாசனையை பெற்றிருக்கும்.
பராமரிப்பு
முள் சீத்தாவிற்கு அதிகளவு தண்ணீர் தேவை இருக்காது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினாலே போதும். வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் தனி தனியே கலப்பு எரு வேர்ப்பகுதியில் இட்டால் போதுமானது. முள் சீத்தாவில் பூச்சி தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதற்கென்று பாதுகாப்பு முறையென்று ஏதுமில்லை. வேர் அழுகல் நோய் தோன்றினால் மட்டும் சிறிது வேப்பம்புண்ணாக்கை வேர் பகுதியில் வைத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும். இவ்வாறு செய்தால் முள்சீத்தா மரம் வளர்ப்பு சிறக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவிஉங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்! |
முள் சீத்தா அறுவடை
தீவு பகுதிகளில் ஒரு வருடத்திற்கு மூன்று பருவங்களில் முள் சீத்தா பூ பூப்பதால், 3 முறை அறுவடை செய்யலாம். பிற பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தா மரமானது பூக்கிறது. ஜுன்-ஜுலை மாதங்களில் இதன் பழங்களை அறுவடை செய்யலாம்.
முள் சீத்தாப்பழம் நன்மைகள்
- முள் சீத்தாபழத்தில் நீர்சத்து மிகுந்துள்ளது , மேலும் மாவுசத்து, புரத சத்து, அத்தியாவசியமான தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து போன்ற பல சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ பன்னிரண்டு வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் காரணிகளை முள் சீத்தாப்பழம் பெற்றிருக்கிறது.
- புற்றுநோய் பாதிப்பால் உருவாகும் கட்டிகளை கரைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
- இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நம் செரிமான அமைப்பிற்கு நல்ல நன்மை தரக்கூடியது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
- முள் சீத்தாப்பழம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தித்தனை அதிகரித்து உடலில் உள்ள நாற்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்குதலிருந்து பாதுகாக்கிறது.
- இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், போன்ற பல்வேறுவகையான நோய்களை தீர்க்கவல்ல உன்னத மருந்தாகவும் முள்சீத்தாப்பழம் விளங்குகிறது.
இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை இந்த முள் சீதாப்பழ மரம். இதை நல்ல முறையில் வளர்த்து, அதன் பயன்களை பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.