Tag

ரம்புட்டான் பழம் விவசாயம்

Browsing

ரம்புட்டான் பழம் சுவை மிகுந்த மற்றும் சத்தான பழம் ஆகும். இது மருத்துவ ரீதியாகவும் பெருமளவில் பயன்படுகிறது. குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகளவில் ரம்புட்டன் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழத்தின் சுவை அதிகளவில் இனிப்பும், சிறிதளவு புளிப்பும் ஆகிய இரண்டு சுவைகளின் கலவையாக இருக்கும். இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக இருக்கும், இதனுள்ளே சதைப்பகுதி வெண்மை நிறத்திலும், அதனுள்ளே விதையும் இருக்கும்.
ரம்புட்டான் செடி வளர்ப்பு
ரம்புட்டான் பழத்தின் விதைகளில் இருந்து தயார்செய்யப்படும் நாற்றுகள் நல்ல வலிமை கொண்டதாக இருக்கும், மேலும் இந்த ரம்புட்டான் மரங்கள் பலனை கொடுக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை தேவைப்படும். மருத்துவ பலன்கள் பல கொண்ட இந்த ரம்புட்டான் செடி வளர்ப்பு இப்போது பொதுவான சமவெளிபரப்பிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

வீட்டில் விதையிலிருந்து ரம்புட்டான் செடி வளர்ப்பது எப்படி, ரம்புட்டான் பழம் அறுவடை மற்றும் ரம்பூட்டான் பழ ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை சேகரித்தல்

விதை-சேகரித்தல்
நல்ல ரம்பூட்டான் பழத்தை வாங்கிக்கொள்ளவும், அதன் சதை பகுதிகளை முழுவதும் நீக்கிவிட்டு விதையை தயார் செய்யவேண்டும், சதைப்பகுதி ஏதேனும் விதையில் சிறிது இருந்தால் கூட விதை முளைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக சதைப்பகுதி முழுவதும் நீக்கி நீரில் அலசி எடுத்துக்கொள்ளவும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை தயார் செய்தல்
மண்கலவைக்காக சிலர் கோகோபீட் கலவையை பயன்படுத்துகிறார்கள். அதுவும் பயன்படுத்தலாம், இல்லையெனில் செம்மண் மற்றும் மக்கிய தொழுஉரம் ஆகிய இரண்டும் சரிபாதி கலந்து பயன்படுத்தி கொள்ளலாம். தொழுஉரம் கிடைக்கவில்லை எனில் மண்புழு உரம் கூட பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை காணலாம்.

நடவு மற்றும் வளர்ச்சி

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

தயார் செய்த மண்கலவையில் நல்ல நேர்த்தியான விதைகளாக பார்த்து நடவு செய்யவேண்டும். ஒரு நெகிழிப்பையில் மண்கலவையை போட்டு நிரப்பி, சிறிது பள்ளம் தோண்டி விதையை அதில் போட்டு மூடி பூவாளி கொண்டு நீர் தெளிக்கவேண்டும். நீர் தேங்கி நிற்கக்கூடாது, சூரிய ஒளி அவசியமாகும். நடவு செய்த 20 நாட்களில் விதை முளைத்து வரத்தொடங்கிவிடும்.

கவாத்து செய்தல்

கவாத்து செய்தல்
ரம்புட்டான் செடி வளர்ப்பு தனில் கவாத்து மிக முக்கியமானதாகும். வீரியம் குறைந்த மற்றும் நலிந்த கிளைகளை வெட்டிவிடவேண்டும். குடைவடிவில் ரம்புட்டான் மரத்தை கவாத்து செய்தல் அதிக விளைச்சலை பெறலாம், சூரிய ஒளி உள்ளே படும்படி கவாத்து செய்தல் வேண்டும்.

ரம்புட்டான் பழம் அறுவடை

ரம்புட்டான் செடி வளர்ப்பு
ஒரு ரம்புட்டான் மரம் நடப்பட்ட 5 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்துவிடும். ரம்புட்டான் பழம் முழுமையாக பழுக்க 90 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். ரம்புட்டான் பழம் பிஞ்சாக இருக்கின்ற பொழுது பச்சை நிறமாக இருக்கும், பழுத்த பிறகு மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறிவிடும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு ரம்பூட்டான் மரமானது ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 கிலோ வரையிலான கனிகளை தரவல்லது.

ரம்புட்டான் பழ ஆரோக்கிய நன்மைகள்

ரம்புட்டான்

  • ரம்புட்டான் பழம் கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேரவிடாமல் தடுக்கிறது, இந்த செயலினால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.
  • ரம்புட்டான் பழத்தை தினமும் இரண்டு சாப்பிடுவதின் மூலமாக தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்திசெய்யும், வைட்டமின் சி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • ரம்புட்டான் பழத்தின் மேலே உள்ள முள் போன்ற தோல் பகுதியானது சீதபேதி பிரச்சனையை சரிசெய்யும். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நாக்கு வறண்டு போதலை தடுக்கிறது.
  • ரம்புட்டான் பழம் தனில் புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து இரண்டும் உள்ளது, இந்த இரண்டும் தேவைக்கேற்ப உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
  • பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் இந்த ரம்புட்டான் பழத்தை சாப்பிடும் போது, சிறுநீரகத்தில் உள்ள அவசியமற்ற கழிவுகள் வெளியேற உதவுகிறது.


அதிக மருத்துவ குணம் கொண்ட ரம்புட்டான் பழங்களை வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் ரம்புட்டான் செடி வளர்ப்பு செய்து அதன் பலன்கள் அனைத்தும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It