Tag

முலாம்பழம் விதைகள்

Browsing

முலாம்பழம் வளர்ப்பு அல்லது கிர்ணி பழம் செடி வளர்ப்பு பருவ நிலைக்கேற்ப சாகுபடி செய்யப்படுவதாகும். இது முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் என்று அழைக்கப்படுகிறது. இப்பழம் கோடைகாலத்தில் அதிக அளவில பயன்படுத்தப்படுகிறது.
முலாம்பழம் வளர்ப்பு
முலாம்பழத்தில் வெள்ளரிவிதை போன்ற விதைகள் இருக்கும். விதைகளை நீக்கிவிட்டு வெள்ளரிப்பழம் போன்று சர்க்கரை போட்டு அப்படியே உண்ணலாம் அல்லது குளிர்பானமாக அருந்தலாம்.

இது முதன்முதலில் இந்தியாவில் பயிரிடப்பட்டாலும் இந்தியாவைவிட சீனாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. முலாம்பழம் வளர்ப்பு மற்றும் பயன்பாடு என்பது இந்தியாவில் குறைவே. சிலவகைகள் நாட்டு முலாம்பழம் என்றும் அழைப்படுகிறது.

விளைச்சல் பருவம்

மானாவாரிப்பயிராக ஜூன் மாதத்திலும், மற்றும் டிசம்பர் முதல் ஜனவரியில் கோடைகால பயிராக பயிரிடலாம்.

கோடை காலங்களில் அதிக விளைச்சலை கொடுக்க கூடிய பயிராகும். முலாம்பழம் கொடி போல படர்ந்து வளர்க்கூடியதாகும்.

முலாம்பழத்தின் ரகங்கள்

விதைகள்

இப்பழத்தை பொறுத்தவரை நிறைய ரகங்கள் உள்ளது. எனினும் பஞ்சாப் ரசில்ஹெரி, அர்கா ஜூட், பூசா மதுரக்குஸ் போன்ற ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

அர்கா ராஜ்கான்ஸ், பூசா சர்பதி, பஞ்சாப் சன், துர்காபூர் மாது ஆகிய ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவையே.

முலாம்பழம் சாகுபடிக்கேற்ற மண் வகைகள்

முலாம்பழம் செடி வளர்ப்புக்கு செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மணல் சாரியான அனைத்து மண் வகைகளும் ஏற்றவையே. ஆனால் மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

முலாம்பழம் பயிரிடுவதற்கான நிலம் தயாரித்தல்

நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது சாகுபடிக்கேற்றவாறு தயார் செய்ய வேண்டும். அதன் பின் 2 அடி அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். வாய்க்கால்களுக்கு பக்கவாட்டில் 45x45x45 செ.மீ அளவுக்கு குழிகளை 1 மீட்டர் இடைவெளியில் தோண்டி மண் புழு அல்லது கலப்பு உரங்களை போட்டு மண்ணுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

பயிரிடுவதற்கான விதையளவு

நாற்று

பொதுவாக முலாம்பழம் விதைகள் மூலம் பயிர் செய்யப்படுகிறது, ஒரு எக்டருக்கு 3 கிலோ வரை விதைக்கலாம்.

விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்

விதையை 4.0 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ் அல்லது கார்பன்டிசம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவை 1 எக்டருக்கான அளவு ஆகும்.

விதை நேர்த்தி செய்த விதைகளை குழிகளுக்கு நடுவில் 3 அல்லது 4 வீதம் 0.6 மீ இடைவெளி விட்டு ஊன்றவேண்டும்.

முலாம்பழம் வளர்ப்பு – நீர் மேலாண்மை

நீர் மேலாண்மையை பொறுத்தவரை விதை விதைப்பதற்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். 3 ஆம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது ஆகும்.

உரங்கள், ஜீவாமிர்தம், பூச்சி விரட்டி

உரங்களை அடியுரமாக 55 கிலோ மணிச்சத்து மற்றும் 55 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.

ஒரு எக்டருக்கு தழை,மணி மற்றும் சாம்பலச்சத்துக்களை முறையே 200:100:100 என்ற விகிதத்தில் பயிர்க்காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

பயிர்களில் பூச்சி தாக்குதலை 8 ஆம் நாளில் இருந்து காண முடியும், அப்போது ஒரு டேங்க் தண்ணீருக்கு அதாவது 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மூலிகை பூச்சி விரட்டி, 100 மில்லி மீன் அமிலம் கலந்து எக்டருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும்.

15 முதல் 20 நாட்களுக்குள் தலா ஒரு கிலோ இஞ்சி, ஒரு கிலோ பச்சை மிளகாய், ஒரு கிலோ பூண்டு ஆகியவற்றை இடித்து 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தில் 12 மணி நேரம் ஊற வைத்து ஒரு டேங்க் தண்ணீரில் ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சி விரட்டியாக செயல்பட்டு, பூச்சி தாக்குதலை கட்டுபடுத்துகிறது.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

களையெடுத்தல்

முலாம்பழம் செடி

விதை விதைத்த பின் 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும். விதை விதைத்து 15 நாட்கள் கழித்து குழியில் 2 நாற்றுகளை மட்டும் விட்டு விட்டு மீதியை நீக்கி விட வேண்டும்.

முலாம்பழம் பயிர்களுக்கு நோய்கள் உண்டாக்கக்கூடிய பூச்சிகள் மற்றும் அவற்றை அழிக்கும் முறைகள்.

இலை வண்டுகள்

1 லிட்டர் தண்ணீரில் 3ஜி கரைசல் 5 மில்லி கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை ஈக்கள்

5 கிராம் வேப்பங்கொட்டையை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பதன் மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

காய்ப்புழுக்கள்

காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தப் பாதிக்கபட்டக் காய்களை பறித்து அழித்து விடுவது நல்லது. நிலத்தினை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் படுமாறு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.

அறுவடைக்கான காலம்

காய்களின் மேற்பரப்பில் உள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாக மாறுவது அறுவடைக்கான பருவம் ஆகும். அந்த சமயம் அறுவடை செய்வது சிறந்தது.

மகசூல்

ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும். அதிக மகசூல் கிடைப்பதால் முலாம்பழம் வளர்ப்பு மூலம் அதிக வருமானம் ஈட்டமுடியும்

பயன்கள்

aan pen mulampalam pookal

  • தேகத்திற்கு உறுதியையும், சருமத்திற்கு பொலிவையும் தரக்கூடிய புரதமும், கொழுப்புச்சத்தும் இதில் அதிக அளவில் உள்ளது.
  • உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய வைட்டமின் ஏ,பி,சி, போன்ற தாது பொருட்களும், மேலும் கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மையும் முலாம்பழத்திற்கு உண்டு.
  • முலாம்பழம் உண்பதால் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. மேலும், இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • முலாம்பழம் தேகத்திற்கு மட்டுமல்லாமல் முக அழகுக்கும் பயன்படுகிறது. அடிக்கடி வியர்ப்பவர்களுக்கு முகம் களையிழந்து காணப்படும். அவர்களுக்கு முலாம்பழம் நல்ல மருந்தாக செயல்படுகிறது. முலாம்பழ துண்டை கைகளால் மசித்து முகத்திற்கு பூசி வர முகம் பளிச்சென்று பொலிவு பெறும்.
  • இந்த பழத்துடன் தேன் கலந்து உண்டு வர வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் திறனும் இப்பழத்திற்கும் உண்டு.
  • சரியான உணவு பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்து கொள்வதால் ஏற்படும் அல்சர் நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். அதற்க்கு இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வர வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பூரண குணமாகும்.

  • மேற்கண்ட முறையில் முலாம்பழம் வளர்த்து அதன் பயன்கள் எல்லாம் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It