மாம்பழம் நம் அனைவருடைய வாழ்க்கையோடு கலந்த ஒரு இனிமையான பழம் ஆகும். பெரும்பாலான விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிராக இந்த மா மரம் உள்ளது, எனவேதான் அதிகளவு மா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. முக்கனிகளில் முதன்மைக்கனி இந்த மாம்பழம்.
மாமரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி , மாமரம் கற்றாழை மூலம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மா மரம் வளர்ப்பு செய்வது எப்படி, மாம்பழம் பறிக்கும் முறை, மாம்பழம் பழுக்க வைக்கும் முறை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
மா மர வளர்ச்சிக்கு ஏற்ற மண்
மா மரங்கள் பல்வேறு வகையான மண்ணையும் ஏற்று வளரும் தன்மை கொண்டது, ஆனால் லேசான மற்றும் வடிகால் வசதி உடைய மணல், களிமண் மரத்திற்கு சிறந்தது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.
மாங்கன்று வளர்ப்பு
மாம்பழத்தை வாங்கி உண்டபிறகு, அதன் கொட்டையை மண்ணில் புதைத்து வைத்தால் போதும். மற்றோரு முறையும் உள்ளது, மாங்கொட்டையை கீறி அதன் உள்ளே இருக்கும் பருப்பை தனியே எடுத்து அதை மண்ணில் புதைத்தோ அல்லது டிஷ்யு பேப்பர் கொண்டு சுற்றி நீரில் நனைத்து வைக்கலாம். பொதுவாக இந்த முறையில் மா விதையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.
விதைகளில் இருந்து மா மரம் வளர்த்தல் காய் பிடிக்க 6 – 8 வருடங்கள் ஆகும், ஆனால் ஓட்டுக்கட்டிய செடிகள் மூலம் வளர்த்தால் 2 – 3 வருடங்களில் காய்பிடிக்க தொடங்கிவிடும், இருப்பினும் விதைகளில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடிக்கும், இது மரத்தின் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு அவசியமாகும். மாடி தோட்டத்தில் மாமரம் வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டை ரக மாங்கன்றுகளை வாங்கி பெரிய அளவு தொட்டிகளில் மாடியில் வளர்க்கலாம்.
மாமரம் ஒட்டுக்கட்டுதல்
ஒட்டுக்கட்டுவதற்கு நேர்த்தியான குச்சிகளை தேர்ந்தெடுத்து வெட்டி கொள்ளவும், ஒன்றோடு ஒன்று வைத்து ஒட்டு கட்டுவதற்கு முன் கற்றாழை சாற்றை வைத்து ஒட்டுக்கட்டினால் சீக்கிரமாக துளிர்த்து வரும், விண்பதியம் முறையில் கற்றாழை சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
நீர்மேலாண்மை
மா மரங்கள் கோடை வறட்சியைத் தாங்கும் திறன் உடையவை, இருந்தாலும் வறட்சியானது மாம்பழ உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடுவது அவசியம், அதே சமயம் மரத்தின் அடியில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிகமாக நீர் தேங்கினால் மா மரம் வளர்ப்பு சிறக்காது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவிஉங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்! |
மாம்பழம் அறுவடை
மாங்காய் மரம் தனில் பூக்கள் பூத்த பிறகு காய் காய்க்க 3 முதல் 5 மாதங்கள் ஆகிறது. மாம்பழத்தின் ரகத்தை பொறுத்து அதன் நிறம் மாறுபடும். பெரும்பாலும் மாம்பழம் கைகளினால் அறுவடை செய்யப்படுகிறது, மாம்பழத்தின் தோல் சேதப்படாமல் கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.
மாம்பழம் பறித்தல் மற்றும் பழுக்க வைக்கும் முறை
நன்கு பதமான மாங்காய்களை அடி ஏதும்படாமல் முடிந்தவரை கைகளால் பறித்துக்கொள்ளவும். பறித்த மாங்காய்களை வைக்கோலில் வைத்து மூடிவைத்தால் இரண்டு அல்லது மூன்று நாளில் இயற்கையான முறையில் மாங்காய் பழுத்துவிடும்.
கவாத்து செய்தல்
மாமரம் வளர்ப்பு தனில் பராமரிப்பு மிக அவசியமாகும். பழங்கள் காய்த்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்தல் வேண்டும். பலவீனமான மற்றும் வளர்ச்சி குன்றிய கிளைகளை நீக்கிவிட்டு, அனைத்து கிளைகளிலும் சூரிய ஒளி நன்கு படும்படி கவாத்து செய்யவேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவைமாடித்தோட்டத்திற்காகவே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண்கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!! |
மாம்பழத்தின் நன்மைகள்
- மாம்பழம் தனில் நார் சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்வதோடு, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
- மாம்பழம், பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும் திறன் கொண்டது, மாம்பழத்தை சிறு துண்டாக நறுக்கி வாயின் உள்ளே போட்டு ஈறுகள் மீது படும்படி வைத்திருந்து 10 நிமிடங்களுக்கு பிறகு துப்பிவிட்டால் பற்கள் பூரண நலம் பெரும்.
- சிறுநீர் பையில் உருவாகும் உப்பு கற்களைப் மெல்ல மெல்ல கரைக்கும் திறன் மாம்பழத்திற்கு இருக்கிறது, மேலும் இரவில் தூங்கப்போகும் முன்பு மாம்பழம் உண்டுவிட்டு உறங்கினால் அடுத்த தினம் மலச்சிக்கல் இருக்காது.
- கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச்சத்து பெருமளவில் தேவைப்படுகிறது, அவர்களுக்கு இந்த மாம்பழம் வரப்பிரசாதம், இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பதில் மாம்பழ சாற்றை தினமும் குடித்தால் போதும் தேவையான அளவிற்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
- மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த மிகவும் அவசியமான வைட்டமின் பி6 மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது. குழந்தைகள் இதை அடிக்கடி சாப்பிடும் பொழுது அவர்களின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
நீங்களும் மேற்கண்ட முறையில் மா மரம் வளர்ப்பு செய்து, அதன் முழு பயன்களையும் பெற்று, மாம்பழத்தின் இனிமை போல உங்கள் வாழ்க்கை இனிக்க வாழ்த்துகிறோம்.