Tag

மரம் வளர்ப்பு

Browsing

மாம்பழம் நம் அனைவருடைய வாழ்க்கையோடு கலந்த ஒரு இனிமையான பழம் ஆகும். பெரும்பாலான விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிராக இந்த மா மரம் உள்ளது, எனவேதான் அதிகளவு மா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. முக்கனிகளில் முதன்மைக்கனி இந்த மாம்பழம்.
மா மரம் வளர்ப்பு
மாமரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி , மாமரம் கற்றாழை மூலம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மா மரம் வளர்ப்பு செய்வது எப்படி, மாம்பழம் பறிக்கும் முறை, மாம்பழம் பழுக்க வைக்கும் முறை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மா மர வளர்ச்சிக்கு ஏற்ற மண்

மா மரம் வளர்ப்பு
மா மரங்கள் பல்வேறு வகையான மண்ணையும் ஏற்று வளரும் தன்மை கொண்டது, ஆனால் லேசான மற்றும் வடிகால் வசதி உடைய மணல், களிமண் மரத்திற்கு சிறந்தது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

மாங்கன்று வளர்ப்பு

மா மரம் வளர்ப்பு
மாம்பழத்தை வாங்கி உண்டபிறகு, அதன் கொட்டையை மண்ணில் புதைத்து வைத்தால் போதும். மற்றோரு முறையும் உள்ளது, மாங்கொட்டையை கீறி அதன் உள்ளே இருக்கும் பருப்பை தனியே எடுத்து அதை மண்ணில் புதைத்தோ அல்லது டிஷ்யு பேப்பர் கொண்டு சுற்றி நீரில் நனைத்து வைக்கலாம். பொதுவாக இந்த முறையில் மா விதையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.

விதைகளில் இருந்து மா மரம் வளர்த்தல் காய் பிடிக்க 6 – 8 வருடங்கள் ஆகும், ஆனால் ஓட்டுக்கட்டிய செடிகள் மூலம் வளர்த்தால் 2 – 3 வருடங்களில் காய்பிடிக்க தொடங்கிவிடும், இருப்பினும் விதைகளில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடிக்கும், இது மரத்தின் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு அவசியமாகும். மாடி தோட்டத்தில் மாமரம் வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டை ரக மாங்கன்றுகளை வாங்கி பெரிய அளவு தொட்டிகளில் மாடியில் வளர்க்கலாம்.

மாமரம் ஒட்டுக்கட்டுதல்

ஒட்டுக்கட்டுவதற்கு நேர்த்தியான குச்சிகளை தேர்ந்தெடுத்து வெட்டி கொள்ளவும், ஒன்றோடு ஒன்று வைத்து ஒட்டு கட்டுவதற்கு முன் கற்றாழை சாற்றை வைத்து ஒட்டுக்கட்டினால் சீக்கிரமாக துளிர்த்து வரும், விண்பதியம் முறையில் கற்றாழை சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

நீர்மேலாண்மை

மா மரங்கள் கோடை வறட்சியைத் தாங்கும் திறன் உடையவை, இருந்தாலும் வறட்சியானது மாம்பழ உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடுவது அவசியம், அதே சமயம் மரத்தின் அடியில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிகமாக நீர் தேங்கினால் மா மரம் வளர்ப்பு சிறக்காது.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

மாம்பழம் அறுவடை

மாம்பழம் அறுவடை
மாங்காய் மரம் தனில் பூக்கள் பூத்த பிறகு காய் காய்க்க 3 முதல் 5 மாதங்கள் ஆகிறது. மாம்பழத்தின் ரகத்தை பொறுத்து அதன் நிறம் மாறுபடும். பெரும்பாலும் மாம்பழம் கைகளினால் அறுவடை செய்யப்படுகிறது, மாம்பழத்தின் தோல் சேதப்படாமல் கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.

மாம்பழம் பறித்தல் மற்றும் பழுக்க வைக்கும் முறை

நன்கு பதமான மாங்காய்களை அடி ஏதும்படாமல் முடிந்தவரை கைகளால் பறித்துக்கொள்ளவும். பறித்த மாங்காய்களை வைக்கோலில் வைத்து மூடிவைத்தால் இரண்டு அல்லது மூன்று நாளில் இயற்கையான முறையில் மாங்காய் பழுத்துவிடும்.

கவாத்து செய்தல்

மா மரம் வளர்ப்பு
மாமரம் வளர்ப்பு தனில் பராமரிப்பு மிக அவசியமாகும். பழங்கள் காய்த்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்தல் வேண்டும். பலவீனமான மற்றும் வளர்ச்சி குன்றிய கிளைகளை நீக்கிவிட்டு, அனைத்து கிளைகளிலும் சூரிய ஒளி நன்கு படும்படி கவாத்து செய்யவேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்காகவே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண்கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

மாம்பழத்தின் நன்மைகள்

மா மரம் வளர்ப்பு

  • மாம்பழம் தனில் நார் சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்வதோடு, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
  • மாம்பழம், பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும் திறன் கொண்டது, மாம்பழத்தை சிறு துண்டாக நறுக்கி வாயின் உள்ளே போட்டு ஈறுகள் மீது படும்படி வைத்திருந்து 10 நிமிடங்களுக்கு பிறகு துப்பிவிட்டால் பற்கள் பூரண நலம் பெரும்.
  • சிறுநீர் பையில் உருவாகும் உப்பு கற்களைப் மெல்ல மெல்ல கரைக்கும் திறன் மாம்பழத்திற்கு இருக்கிறது, மேலும் இரவில் தூங்கப்போகும் முன்பு மாம்பழம் உண்டுவிட்டு உறங்கினால் அடுத்த தினம் மலச்சிக்கல் இருக்காது.
  • கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச்சத்து பெருமளவில் தேவைப்படுகிறது, அவர்களுக்கு இந்த மாம்பழம் வரப்பிரசாதம், இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பதில் மாம்பழ சாற்றை தினமும் குடித்தால் போதும் தேவையான அளவிற்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
  • மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த மிகவும் அவசியமான வைட்டமின் பி6 மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது. குழந்தைகள் இதை அடிக்கடி சாப்பிடும் பொழுது அவர்களின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.


நீங்களும் மேற்கண்ட முறையில் மா மரம் வளர்ப்பு செய்து, அதன் முழு பயன்களையும் பெற்று, மாம்பழத்தின் இனிமை போல உங்கள் வாழ்க்கை இனிக்க வாழ்த்துகிறோம்.

சரக்கொன்றை மரம் நம் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. சரக்கொன்றை பூவைப் சிவனின் பூஜைக்கு ஏற்றதாக கருதுகின்றனர், பழம்பெரும் இலக்கியங்கள் சிவபெருமானைக் கொன்றை மலரை முடியில் சூடியவராக வர்ணிக்கிறது. சிவபெருமான் சூடிய மலர் என்பதால் தான் இன்றளவும் சிவபெருமான் ஆலயங்களில் சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது.
சரக்கொன்றை மரம் வளர்ப்பு
தமிழர்களின் பாரம்பரியம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக, பொன்னிறமனா சரக்கொன்றை பூக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகிறார்கள். மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடைபெறும் பூஜையில் சரக்கொன்றை பூக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த பூவுக்கு சுவர்ண புஷ்பம் மற்றும் சித்திரைப் பூ எனும் சிறப்பு பெயர்களும் உண்டு.

வெப்ப மண்டலப்பகுதி மற்றும் குறைந்த வெப்ப மண்டலப்பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது இந்த சரக்கொன்றை. மேலும் கோடை வறட்சியையும் கூட தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் மற்றும் சரக்கொன்றை மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தயார் செய்தல்

விதை
சரக்கொன்றை மரத்திலிருந்து காய்ந்த காய்களை எடுத்துக்கொள்ளவும். காய்கள் உறுதியாக இருக்கும், அதை உடைத்து அதனுள்ள இருக்கும் விதைகளை சேகரித்துக்கொள்ளவும், விதைகளும் மிக உறுதியாக இருக்கும். நீரை கொதிக்கவைத்து, சேகரித்த விதைகளை அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிக்கவேண்டும். சூடான நீரில் விதைகளை போட்டால் விதைகள் வீணாகிவிடும் என்று பயப்படவேண்டாம், விதையின் தோலை இலகுவாக்கவே இந்த செயல் சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

அப்படி ஊற வைக்கும் பொழுது அடுத்த நாள் ஒரு சில விதைகள் சற்று பெரிதாகி இருக்கும். அந்த விதைகளே நடவுக்கு ஏற்ற விதைகள் ஆகும். ஊறவைத்தும் பெரிதாகாமல் இருக்கும் விதைகளை தவிர்த்து விடவும், அது முளைத்து வர வாய்ப்புகள் குறைவு.

மண்கலவை மற்றும் நடவுசெய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். நேர்த்தியான, தேர்ந்தெடுத்த விதைகளை மண்கலவையில் 2 இன்ச் ஆழம் தோண்டி அதில் போட்டு மூடிவிடவும். பிறகு தினமும் பூவாளிக்கொண்டு நீர் தெளித்து வரவும், 15 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள்

சரக்கொன்றை மரம்

  • சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறப்பாக அமையும் பட்சத்தில் 40 அடி வரை உயரம் வளரக்கூடியது.
  • மிக அகன்ற கிளைகளை கொண்ட இலையுதிர் மரமாகும் இந்த சரக்கொன்றை மரம்.
  • சரக்கொன்றை மரம் இளமையில் பச்சை நிறத்தை உடையதாகவும், முதிர்ந்தப் பின்பு சாம்பல் நிறமாகவும் மாறுதல் அடைகிறது.
  • இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தைக்கொண்டிருக்கும். முதிர்ந்த சரக்கொன்றை காய்களானது 30-60 செ.மீ நீளமும் 40-100 விதைகளை உடையதாக இருக்கும்.
  • அதிக வெப்ப நிலையை தாங்கி நன்கு வளரக்கூடியது.

சரக்கொன்றை பயன்கள்

 சரக்கொன்றை மரம் வளர்ப்பு

  • சரக்கொன்றை மலரின் மகிமைகள் பல உண்டு, சரக்கொன்றை மரம்தனில் முருங்கைக்காய் போல இரண்டு அடி நீளத்துக்குக் காய்கள் காய்க்கும். அதனுள்ளே பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே இருக்கும், இதை சரக்கொன்றை புளி என்று கூறுவார்கள். இந்த சரக்கொன்றை புளியை சாதாரணப் புளியுடன் சேர்த்து உண்டு வர பித்தக்கோளாறுகள் நீங்கும்.
  • சரகொன்றைப்பூவை கொதிக்கும் நீரில் வேக வைத்து, பின்பு அதனுடைய சாறைப்பிழிந்து எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து கால் லிட்டர் அளவு குடித்து வர வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.
  • சரகொன்றைப்பூவை நன்கு மையாக அரைத்து பத்து கிராம் எடுத்துப் பசுவெண்ணெயோடு குழைத்து உண்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வெட்டை நோய்கள் போன்ற மேக நோய்கள் சரியாகும்.
  • சரக்கொன்றை புளியை நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு திரிபலா சூரணம் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வந்தால் வயிறு சுத்தமாகும்.
  • காதுவலியால் அவதிப்படுகிறவர்கள், சரக்கொன்றை மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 சொட்டுகள் காதின் உள்ளே விட்டுவர காது வலி குணமாகும்.


வாழ்வை வளப்படுத்தும் தெய்வ விருட்சங்களில் ஒன்று இந்த சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்வது எப்படி என்பதை பார்த்தோம், நீங்களும் அதே முறையில் வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்வும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

சிட்ரஸ் ரக பழங்கள் என அறியப்படும் சாத்துக்குடி பழம், ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் பற்றி அதிகம் நாம் அறிந்திருப்போம், இதே சிட்ரஸ் ரகத்தை சேர்ந்தது தான் பப்ளிமாஸ் பழங்கள். தோட்டமாக பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்து சாகுபடி செய்பவர்கள் மிக குறைவு, வீட்டுத்தோட்டத்திலும், பண்ணைகளிலும் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பு செய்பவர்களே அதிகம். உடலுக்கு தேவையான பல நன்மைகளை தர வல்லது பப்ளிமாஸ், இதை அதிக அளவில் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
பப்ளிமாஸ்
இத்தகைய அரிதாகி வரும் பப்ளிமாஸ் பழத்தின் வளர்ப்பு முறை, பம்பளிமாஸ் பழம் சாகுபடி, பப்ளிமாஸ் பழத்தின் நன்மைகள், பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அரிய பழம் பப்ளிமாஸ்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு
வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களில் சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுக்கு அடுத்து பப்ளிமாஸ் பழங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே, பப்ளிமாஸ் அதிக புளிப்பு மற்றும் சிறிது கசப்புத்தன்மை சுவை கொண்டுள்ள காரணத்தால் இந்தியாவில் முன்பு பிரபலமாகவில்லை, இதன் தாயகமான மலேசியாவிலும் இதன் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.

அதை அனைவரும் உண்ணும் விதத்தில் ரகங்களை உருவாக்க எண்ணி 2020-ம் ஆண்டில் இனிப்புச் சுவையுள்ள இரண்டு பப்ளிமாஸ் ரகங்கள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரை எலுமிச்சை சாகுபடி மட்டுமே அதிகம் செய்யப்படுகிறது, ஆனால் இந்த பப்ளிமாஸ் பழ ரகங்களை எலுமிச்சை சாகுபடி நடைபெறும் அனைத்து இடம்தனிலும் சாகுபடி செய்யலாம்.

நடவு செய்தல்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு
பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்ய நல்ல கன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பப்ளிமாஸை ஒரு முறை நடவு செய்தோமேயானால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழத்தை அறுவடை செய்யலாம். குட்டையான மர வகைதனை சேர்ந்த இந்த ரகத்தை 15-க்கு 15 அடி வீதம் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

நல்ல முறையில் இயற்கை உரங்களை அளித்து வளர்த்தால் மூன்று ஆண்டில் வளர்ந்துவிடும், 4 – வது ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கத்தொடங்கும். ஒரு மரத்திலிருந்து சுமார் 35 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

ரகங்கள்

பம்பளிமாஸ்
அர்கா சந்திரா ரகத்தில் சதைப்பகுதியானது வெண்மை நிறத்தில் இருக்கும். அறுவடைசெய்யும் நான்காவது ஆண்டிலிருந்து ஒரு மரங்களில் இருந்து 35 – 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை எடை இருக்கக்கூடும்.
அரிய-பழம்
அர்கா ஆனந்தா ரகத்தில் பழத்தின் உள்ளே சதைப்பகுதியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். நான்காம் ஆண்டுதனில் இருந்து ஒரு மரத்திலிருந்து 45 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒன்னேகால் கிலோ வரை எடை இருக்கக்கூடும்.

பப்ளிமாஸ் பழம் விற்பனை

pomelo
பப்ளிமாஸ் பழம் விற்பனை சிறப்பாக இருக்குமிடங்கள் உத்தரப் பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் இப்பழத்தை உண்ண பயன்படுத்திகிறார்கள். மெகா சைஸில் பப்ளிமாஸ் பழங்கள் இங்கு அதிக அளவில் விரும்பப்படுகிறது. மேலும் பப்ளிமாஸ் பழத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.

பப்ளிமாஸ் பழத்தின் தேவை அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து அங்கே விற்பனை செய்தோமேயானால் நல்ல வருமானம் ஈட்டலாம். இதற்கென பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது, அறுவடை செய்யும் முறையும் எளிது. பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு தனில் பூச்சித்தாக்குதலும் பெருமளவில் இருக்காது.

பம்பளிமாஸ் பழம் பயன்கள்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு

  • கோடைகாலத்தில் வெயிலில் அலைபவர்கள், அதிக சூடான பகுதி தனில் வேலை செய்பவர்களின் உடல் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும், இவர்கள் எல்லாம் பம்பளிமாஸ் பழத்தின் சாறை குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும்.
  • பம்பளிமாஸ் பழத்தின் சாறை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
  • வைட்டமின் எ சத்து உள்ளதால் மாலைக்கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிற கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
  • பப்ளிமாஸ் பழம் ஜூஸ் குடிப்பதால் இரத்த சோகையை அடியோடு போக்கலாம்.
  • காமாலை நோயின் தாக்கத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது இந்த அரிய பழம் பப்ளிமாஸ்.


பப்ளிமாஸ் மரம் வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், அழிவின் விளிம்பில் பப்ளிமாஸ் பழம் உள்ளது, நேர்த்தியான முறையில் வளர்த்து பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் அனைத்தையும் பெற்று நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It