பேரீச்சை மரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் பற்றி முன்பு நம் நாட்டில் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இப்பொழுது நம் நாட்டிலும் பேரீச்சை வளர்ப்பு அதிகளவில் செய்யப்படுகிறது. பேரீச்சை மரம் வளர்ப்பது எப்படி, பேரிச்சம்பழம் வகைகள், பேரிச்சம்பழம் சாகுபடி செய்வது எப்படி, பேரீச்சை காய் நன்மைகள் போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
பொதுவாகவே பேரீச்சை பழம் வளர்ப்பு, சாகுபடி போன்றவை பாலைவன பிரதேசங்களிலேயே நடைபெறும். ஏனென்றால் அதற்கான தட்ப வெட்ப நிலை பாலைவன நிலங்களில் உள்ளது. இதனாலேயே பேரீச்சை ‘பாலைவனப் பயிர்’ என்று அழைக்கப்படுகிறது.
பேரீச்சைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்
பேரீச்சை மரம் வளர்வதற்கு 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதுமானது. ஆனால் விதை மூலம் நடவு செய்யும் பொது ஆண் மரமா? பெண்ண மரமா? என்று தெரிவதற்கே இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். எனவே பேரீச்சை கன்று வாங்கி நடுவது சிறந்தது.
ஒரு ஏக்கரில் 70 கன்றுகள் வரை நடலாம். ஒவ்வொரு கன்றுக்கும் இடையில் சுமார் 8 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். வெப்பநிலையை பொறுத்தவரை 30 லிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். வெப்பம் தாங்கக்கூடியதாக இருந்தாலும் தண்ணீர் அதிகம் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மரத்துக்கு தினசரி 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரம் நன்கு வளர்ந்த பின்னர் ஒரு மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் வரை விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பேரீச்சையை பொறுத்தவரை பெண் மரம் மட்டுமே நடவு செய்ய முடியும். எனினும் மகரந்த சேர்க்கைக்கு ஆண் மரம் தேவை என்பதால் அதுவும் நடுவது சிறந்தது. இருந்தாலும் மகரந்த சேர்க்கை இயற்கையாக நடைபெறாது என்பதால் செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.
சாதாரணமாக ஜனவரி மாதத்தில் ஆண் மரம் பாளை விட்டு மகரந்த சேர்க்கைக்கு தயாராக இருக்கும். ஆனால் பெண் மரம் மார்ச் மாதம் தான் சேர்க்கைக்கு தயாராகும். ஆண் மரத்தின் பாளைகளை பொடி செய்து மார்ச் மாதம் பெண் மரம் பூ பூக்கும் போது அதன் மீது பொடி செய்த மகரந்தத்தைத் தூவி செயற்கையான சேர்க்கை செய்ய வேண்டும்.
பேரீச்சை மரத்தில் வண்டுகள் வரக்கூடும். ஒன்றிரண்டு வண்டுகள் வந்ததும் அவற்றைக் கொன்று விட வேண்டும். இல்லாவிட்டால் வண்டுகள் அதிகரித்து விடும். பர்றி ரக பேரீச்சை பழங்கள் அப்படியே மரத்திலுருந்து பழங்களை பறித்து சாப்பிடலாம் என்பதால் கண்டிப்பாக மருந்து தெளிக்க கூடாது. இயற்கை உரங்கள் சிறந்தது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
பழங்கள் பழுத்ததும் வவ்வால், பறவைகள் போன்றவை பழங்களை சாப்பிட வரும் என்பதால் குலைகளைச் சுற்றி பாலிதீன் கவர்களைக் கொண்டு மூட வேண்டும்.
பேரீச்சை மகசூல்
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கும். பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்கத் தொடங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பேரீச்சை சீசன் ஆகும். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை காய்க்கும். ஒரு குலையில் 10 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ பழங்கள் கிடைத்தாலும் ஒரு ஏக்கருக்கு 4200 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
நான்கு மாதங்களில் பழங்களை அறுவடை செய்து விடலாம். விளைச்சல் காணத் தொடங்கி ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க பழத்தின் எடையும் அதிகரிக்கும்.
பேரீச்சம்பழம் வகைகள்
மெட்ஜூல், பையோரம், டேக்லட் நூர், மசாபாதி, பர்ஹி, ரப்பி, தூரி, சயீர், டயரி, ஹலவ்ய், சபாவி என்று பல ரகங்கள் உண்டு. ஒவ்வொரு ரகங்களும் ஒவ்வொரு நாட்டில் விளைபவை. இந்தியாவை பொறுத்தவரை பர்ஹி ரக பழங்களே அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பேரீச்சையை பொறுத்தவரை நிறைய வகைகள் உண்டு. சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்ற நிறங்களில் காணப்படும் பேரீச்சைபழங்கள் ஒவ்வொரு வகைக்கு ஏற்றவாறு சுவையும் மாறுபடுகிறது.
இந்தியாவில் விளையும் பர்ஹி ரக பேரீச்சை
இதன் தாயகம் ஈராக் ஆகும். பர்ஹி ரக பழங்கள் பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3 ஆம் நிலையாகும்.
இந்த நிலை கலால் என்று அழைக்கப்படுகிறது. ஜோர்டான் நாட்டில் இந்த நிலை ரக பேரீச்சை கோல்டன் டேட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழங்களை அறுவடை செய்து 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். பர்ஹி ரக பேரீச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேலும் இந்த மஞ்சள் பேரிச்சம்பழம் மரத்தில் இருந்து பறித்து அப்படியே உண்ணலாம்.
பேரீச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- பேரீச்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
- இதயம் வலுப்பெறும்.
- எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகும்.
- நினைவாற்றல் அதிகரிக்கும்.
- உடல் எடை அதிகரிக்கும்.
- மாலைக்கண் நோய் குணமாகும்.
- வயிற்றுப் புற்றுநோய் குணமாகும்.
கருப்பு பேரிச்சம்பழம் நன்மைகள்
- ஜீரணதிற்கு உதவுகிறது.
- உடல் ஆற்றல் அதிகரிக்கிறது.
- உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
- இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
- முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
இயல்பாகவே பேரீச்சை பழத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்பதால் தினமும் கூட பேரீச்சம்பழம் சாப்பிடலாம். மேலும் வருமானமும் அதிகம் என்பதால் இப்போது நம் நாட்டில் அதிகளவில் பேரீச்சைமரம் வளர்ப்பு செய்யத் தொடங்கி உள்ளனர். இத்தைகைய பழத்தை உண்டு நலமோடு வாழ்வோம்.