இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த புங்கன் மரம் வளர்ப்பு பரவலாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புங்கை மரம் காணப்படுகின்றது. நாட்டு வகையை சேர்ந்த புங்கை மரம், வாய்க்கால், வரப்பு, சாலையோரங்களிலும், பொது நிலங்கள் என புங்கை மரம் வளர்ந்து இருப்பதை காண முடியும்.
காற்றில் இருக்கும் நைட்ரஜனை மண்ணிலே நிலை பெற செய்யும் வகையிலான வேர் முடிச்சுகளை உடைய ஒரு சில மரங்களில் இந்த புங்கை மரமும் ஒன்று. கோடை காலத்தில் சிறிதளவே மட்டுமே இலையுதிரும், பசுமை மாறா தன்மை கொண்டது இந்த புங்கைமரம்.
இந்த புங்கன் மரம் வளர்ப்பது எப்படி, புங்க மரம் பொதுப்பண்புகள், புங்கன் மரம் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
புங்கன் நாற்று தயார் செய்தல்
நேர்த்தியான புங்கன் விதைகளை தேர்வு செய்யவும், சேகரித்து வைத்துள்ள புங்கன் விதைகளை நெகிழி பை அல்லது சிறிய தொட்டியில் மண் மற்றும் நன்கு மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சரிபங்கு கலந்து அந்த பையில் நிரப்பி அதில் விதைக்கவும். பத்து முதல் பதினைந்து நாளில் புங்கன் விதைகள் முளைத்து வந்துவிடும்.
மண் வகை மற்றும் நடவு செய்தல்
பல விதமான மண் வகைகளில் வளரக்கூடியது இந்த புங்கன் மரம், கரடு முரடான மணல் முதல் களிமண், செம்மண் வரையிலும் வளரக்கூடியது. உவர் மண்ணை கூட தாங்கி வளரும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் உடைய நாற்றுகளை போதிய இடைவெளியில் நடவு செய்யவும். நடுவு செய்யும் பொழுது தொழு உரத்தை குழியில் இட்டு நடுவது புங்கன் மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்! |
மகசூல்
காய்களுக்காகவே பெரும்பாலும் புங்கன் மரம் வளர்க்கப்படுகிறது. இதில் இருபது முதல் இருபத்தைந்து சதவிகிதம் வரை எண்ணெய் இருக்கும். நன்கு வளர்ந்த மரத்தில் பத்து கிலோ வரை புங்கன் காய்கள் கிடைக்கும்.
புங்கன் மரம் தன்னுடைய வளர்ச்சி முறையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழ்நிலைகளில் பசுமை மாறாது, நேர்மாறான சூழ்நிலைகளில் இலைகள் பெருபாலும் உதிர்ந்தாலும் புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக மரத்தில் தோன்றிவிடும். ஏப்ரல் மாதம் முதல் ஜீலை மாதம் வரையில் புங்கன் மரத்தில் பூக்கள் தோன்றும். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் காய்கள் காய்க்கும். நான்கு ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கிவிடும்.
நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் முறை
புங்கன் மரத்தில் முடிச்சு நோய்கள் பெரும்பாலும் காணப்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுகிறது, இந்த செயலினால் ஒளிச்சேர்க்கை மந்தமாகிறது, புங்கன் மரம் வளர்ப்பு பாதிக்க படுகிறது. பூச்சிகளினால் இந்த நோய் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது. இந்த இலை முடிச்சு நோயை சரிசெய்ய வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து இலைகள் மீது தெளிக்கவும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
புங்கன் மரத்தின் பயன்கள்
- புங்கமரமானது வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள், வேளாண்மை கருவிகள் ஆகியவற்றை செய்வதற்கு பயன்படுகிறது.
- புங்கன் இலைகளில் புரதம் நிறைந்துள்ளது, எனவே இவை கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகின்றது.
- புங்க மர விதையிலிருந்து பயோடீசல் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் விளைவிக்காத பசுமை எரிப்பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
- புங்கை மரத்தின் முக்கியமான பயன், மழையை ஈர்க்கும் திறனை அதிகம் கொண்டது.
- புங்கமர இலைக்கு அல்சர் என்றழைக்கபடும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை உண்டு. இந்த இலையை அரைத்து சிறிதளவு அதன் சாற்றை தினமும் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வயிற்று வலி குணமாகிவிடும்.
- புங்கன் இலையை காயவைத்து தூளாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும் புங்கன் தைலம் தனை தடவினால் காயம் குணமாகும்.
- இதன் வித்துகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வாத வியாதி, மூட்டு வலி ஆகியவற்றை சரி செய்யும் மருத்துவ முறைகளில் பயன்படுத்த படுகிறது.
மகத்துவமிக்க இந்த புங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா என்று பலரும் ஐயம் கொண்டுள்ளனர், தாராளமாக இந்த மரத்தை வீட்டின் முன்பு வளர்த்து அதிக அளவு தூய பிராணவாயுவை பெறலாம். இயற்கையின் பரிசான இந்த புங்கன் மரத்தை வளர்த்து புகழோடு வாழ வாழ்த்துகிறோம்.