புடலை வளர்ப்பு மாடித்தோட்டங்களிலே மிக எளிதாக செய்யலாம். நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் நிறைய அற்புதமான காய்கறி, பழ வகைகள் பல இருந்தாலும் நவ நாகரிக வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக அவை பெருன்பான்மை மக்களால் உணவுக்கு பயன்படுத்தப்படாமல் ஒதுக்கப்படுகின்றன, அப்படி அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் அருமை பல நிறைந்த புடலங்காய் வளர்ப்பு முறை, புடலங்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மாடித்தோட்டத்தில் புடலங்காய் வளர்ப்பது எப்படி?
மாடித்தோட்டம் புடலங்காய் செடி வளர்ப்பு முறைக்கு பின்வரும் பொருட்கள் தேவை :
புடலை விதையை விதைப்பதற்கு முன்பு சாக்கு பை அல்லது மண்சட்டியில் 2 பங்கு அளவு தேங்காயின் நார், நன்கு மக்கிய மாட்டு எரு 1 பங்கு ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து சாக்கு பை அல்லது தொட்டியில் இட்டு, ஒரு 11 நாட்களுக்கு நன்கு மட்கி போக விட வேண்டும். இதன் பிறகு ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்த புடலை விதைகளை இந்த கலவையில் விதைக்கலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவைமாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!! |
புடலங்காய் உயரமாக வளரக்கூடிய கொடிவகையைச் சார்ந்த பயிர், அதிகபட்சமாக ஒரு தொட்டியில் 4 முதல் 5 புடலங்காய் விதைகளை விதைப்பு செய்யலாம். புடலங்காய் விதைகளை விதைத்த பின் தண்ணீர் தெளிப்பான் கொண்டு தண்ணீர் விட வேண்டும். அதன் பின் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பந்தல் அமைத்து புடலை வளர்ப்பு
புடலங்காய் நன்கு வளர பந்தல் அமைப்பது மிகவும் முக்கியம், உங்கள் வீட்டு மாடியில் நான்கு புறங்களில் நான்கு மண் தொட்டிகளில் மணல் மற்றும் மண் இரண்டையும் நன்றாக கலந்து நிரப்பி, அதில் தடிமன் கொண்ட ஒரே உயரமுடைய நான்கு மூங்கில் குச்சிகளை நட்டு வைக்கவும். இதன்பிறகு கயிறு அல்லது இரும்பு கம்பியை கொண்டு அந்த நான்கு புறமும் இருக்கும் குச்சிகளை இணைத்து, பிறகு குறுக்கும் நெடுக்குமாக பந்தல் போட ஏதுவாக கட்டிவிட வேண்டும்.
இதன் பின் நாம் புடலை விதையை போட்டு வளர்ந்துள்ள இளம் புடலை பயிர்கள் இருக்கின்ற தொட்டி அல்லது பைகளை அந்த நான்கு புறங்களிலும் தரையில் இருந்து உயரமாக இருக்கும் வகையில் சிறிய கற்களை வைத்து, அதன் மீது புடலை தொட்டி அல்லது சாக்கு பைகளை வைத்து, அந்த மூங்கில் குச்சிகளில் புடலங்காய் கொடி படர்ந்து போகுமாறு செய்து வைக்கவேண்டும்.
பூச்சி தாக்குதல்
புடலங்காய் செடி வளருகின்ற பருவத்தில் நிறைய பூச்சிகள் அந்த கொடியினை தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது, இதனால் புடலை வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. இந்தவகை பூச்சி தாக்குதல்களை சமாளிக்க இயற்கையான பூச்சி விரட்டி மருந்தான வேப்பெண்ணெய் கரைசலை மாதம் ஒரு முறை புடலை செடியின் மீது சிறிது அளவு தெளித்து வரவேண்டும், வேப்ப இலைகளை பறித்து நன்கு காயவைத்து அவற்றை பொடியாக்கி புடலை செடியின் வேர் பகுதிகளில் போட்டால், அவை அந்த கொடிகளுக்கு இயற்கை உரமாகவும், பூச்சிகளின் தாக்குதலை தடுக்கும் அரணாக செயல்படுகிறது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
புடலங்காய் கொடி வளர்ப்பது எப்படி?
புடலங்காய் வளரும் காலத்தில் அந்த கொடியின் நுனிக்கிளைகளை அவ்வப்போது வெட்டுவதால் அதிகளவு புடலை கொடிகள் பரவுவதற்கு சூழ்நிலையை உண்டாக்குகிறது, மேலும் 2 வாரத்திற்கு ஒருமுறை புடலங்காய் செடி இருக்கும் மண்தொட்டியின் உள்ள மண்ணை நன்கு கிளறி விடுவதன் மூலம் அந்த மண் ஊட்டம் பெறுவதுமட்டுமின்றி, புடலங்காய் செடி விரைவில் வளர உதவிபுரியும். மேலும் பஞ்சகவ்யா திரவத்தை 1 லிட்டர் நீரில் 50 மில்லி அளவு சேர்த்து புடலை செடியின் வேர் பகுதிகளில் ஊற்றினால் புடலை செடியில் அதிகமாக பூக்கள் பூக்கும்.
மாடியில் புடலை செடியை வளர்க்கும் போது அந்த புடலை செடி அதிகபட்சம் 3 மாதங்கள் வரை மட்டுமே பலனை தரும், அதன் பின் அந்த செடியில் காய்ந்து போன கிளைகள் மற்றும் இலையை வெட்டி, அது வளரும் தொட்டியின் வேர்ப்பகுதியில் இயற்கை உரமாயிட்டு பயன்படுத்தலாம். புடலங்காய்கள் நன்கு வளர்கின்றன தருணத்தில், காய்களை முற்ற விடாமல் சரியான
காலத்தில் காய்களை அறுவடை செய்து பயன்படுத்தவும்.
புடலை வகைகள்
புடலங்காயில் வகைகள் பல இருக்கிறது. கொத்துப்புடலை, பன்றி புடலை, நாய்ப்புடலை, பாம்பு புடலை, குட்டை புடலை, பேய்ப்புடலை என நிறைய வகைகள் இருக்கிறது, ஆனால் பலரும் சமையலில் புடலையை அடிக்கடி சேர்த்துகொள்வதில்லை, ஏனெனில் தற்போது நவீன உணவுகள் வந்த பிறகு புடலங்காயை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
புடலங்காய் பயன்கள்
புடலை விதைப்பது முதல் அறுவடை வரை இக்கட்டுரையில் கண்டோம். இத்தகைய ஆரோக்கியம் தரும் புடலை வளர்த்து பயன் பல பெறுவோம்.