சிட்ரஸ் ரக பழங்கள் என அறியப்படும் சாத்துக்குடி பழம், ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் பற்றி அதிகம் நாம் அறிந்திருப்போம், இதே சிட்ரஸ் ரகத்தை சேர்ந்தது தான் பப்ளிமாஸ் பழங்கள். தோட்டமாக பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்து சாகுபடி செய்பவர்கள் மிக குறைவு, வீட்டுத்தோட்டத்திலும், பண்ணைகளிலும் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பு செய்பவர்களே அதிகம். உடலுக்கு தேவையான பல நன்மைகளை தர வல்லது பப்ளிமாஸ், இதை அதிக அளவில் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
இத்தகைய அரிதாகி வரும் பப்ளிமாஸ் பழத்தின் வளர்ப்பு முறை, பம்பளிமாஸ் பழம் சாகுபடி, பப்ளிமாஸ் பழத்தின் நன்மைகள், பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
அரிய பழம் பப்ளிமாஸ்
வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களில் சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுக்கு அடுத்து பப்ளிமாஸ் பழங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே, பப்ளிமாஸ் அதிக புளிப்பு மற்றும் சிறிது கசப்புத்தன்மை சுவை கொண்டுள்ள காரணத்தால் இந்தியாவில் முன்பு பிரபலமாகவில்லை, இதன் தாயகமான மலேசியாவிலும் இதன் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.
அதை அனைவரும் உண்ணும் விதத்தில் ரகங்களை உருவாக்க எண்ணி 2020-ம் ஆண்டில் இனிப்புச் சுவையுள்ள இரண்டு பப்ளிமாஸ் ரகங்கள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரை எலுமிச்சை சாகுபடி மட்டுமே அதிகம் செய்யப்படுகிறது, ஆனால் இந்த பப்ளிமாஸ் பழ ரகங்களை எலுமிச்சை சாகுபடி நடைபெறும் அனைத்து இடம்தனிலும் சாகுபடி செய்யலாம்.
நடவு செய்தல்
பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்ய நல்ல கன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பப்ளிமாஸை ஒரு முறை நடவு செய்தோமேயானால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழத்தை அறுவடை செய்யலாம். குட்டையான மர வகைதனை சேர்ந்த இந்த ரகத்தை 15-க்கு 15 அடி வீதம் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
நல்ல முறையில் இயற்கை உரங்களை அளித்து வளர்த்தால் மூன்று ஆண்டில் வளர்ந்துவிடும், 4 – வது ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கத்தொடங்கும். ஒரு மரத்திலிருந்து சுமார் 35 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை. |
ரகங்கள்
அர்கா சந்திரா ரகத்தில் சதைப்பகுதியானது வெண்மை நிறத்தில் இருக்கும். அறுவடைசெய்யும் நான்காவது ஆண்டிலிருந்து ஒரு மரங்களில் இருந்து 35 – 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை எடை இருக்கக்கூடும்.
அர்கா ஆனந்தா ரகத்தில் பழத்தின் உள்ளே சதைப்பகுதியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். நான்காம் ஆண்டுதனில் இருந்து ஒரு மரத்திலிருந்து 45 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒன்னேகால் கிலோ வரை எடை இருக்கக்கூடும்.
பப்ளிமாஸ் பழம் விற்பனை
பப்ளிமாஸ் பழம் விற்பனை சிறப்பாக இருக்குமிடங்கள் உத்தரப் பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் இப்பழத்தை உண்ண பயன்படுத்திகிறார்கள். மெகா சைஸில் பப்ளிமாஸ் பழங்கள் இங்கு அதிக அளவில் விரும்பப்படுகிறது. மேலும் பப்ளிமாஸ் பழத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.
பப்ளிமாஸ் பழத்தின் தேவை அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து அங்கே விற்பனை செய்தோமேயானால் நல்ல வருமானம் ஈட்டலாம். இதற்கென பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது, அறுவடை செய்யும் முறையும் எளிது. பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு தனில் பூச்சித்தாக்குதலும் பெருமளவில் இருக்காது.
பம்பளிமாஸ் பழம் பயன்கள்
- கோடைகாலத்தில் வெயிலில் அலைபவர்கள், அதிக சூடான பகுதி தனில் வேலை செய்பவர்களின் உடல் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும், இவர்கள் எல்லாம் பம்பளிமாஸ் பழத்தின் சாறை குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும்.
- பம்பளிமாஸ் பழத்தின் சாறை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
- வைட்டமின் எ சத்து உள்ளதால் மாலைக்கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிற கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
- பப்ளிமாஸ் பழம் ஜூஸ் குடிப்பதால் இரத்த சோகையை அடியோடு போக்கலாம்.
- காமாலை நோயின் தாக்கத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது இந்த அரிய பழம் பப்ளிமாஸ்.
பப்ளிமாஸ் மரம் வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், அழிவின் விளிம்பில் பப்ளிமாஸ் பழம் உள்ளது, நேர்த்தியான முறையில் வளர்த்து பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் அனைத்தையும் பெற்று நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம்.