Tag

பப்பாளி சாகுபடி முறைகள்

Browsing

பப்பாளி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு முறைகள் பற்றி இன்று பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.பப்பாளி வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், வகைகள், பராமரிப்பு, பப்பாளி செடி வளர்ப்பது எப்படி ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பப்பாளி வளர்ப்பு

பப்பாளி விலை மலிவானது ஆகும், அனைத்து காலத்திலும் விளையக்கூடியது என்பதால் பப்பாளி ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.

பப்பாளி வளர்ப்பு மற்றும் சாகுபடி முறைகள்

பப்பாளி களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய ஒரு மரம் ஆகும். ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம், எனினும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பப்பாளி பயிர் செய்ய ஏற்ற காலம் ஆகும். நடவு சமயத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் படுத்த வேண்டும். அதன் பின்னர் 1.8 மீ இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டும். பின்னர் குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் நடுவில் நட வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

விதைகள்மூலம் பப்பாளி வளர்ப்பு

பப்பாளி வளர்ப்பிற்கு ஒரு எக்டருக்கு 500 கிராம் விதைகள் வரை விதைக்கலாம். விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலீதீன் பைகளில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

ஒரு பாலிதீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும். பின்னர் பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் விட வேண்டும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now


60 நாட்களில் நாற்றுகள் நடவுக்கு தயாராகி விடும். வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. ஆனால் செடிகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி மரத்தின் வகைகள்

பப்பாளி மரத்தின் வகைகள்

பப்பாளியில் ஆண் பப்பாளி மரம், பெண் பப்பாளி மரம் என இரண்டு வகை உண்டு. ஆண் மரத்தில் சரம் சரமாக பூக்கும் ஆனால் காய்க்காது, பெண் பப்பாளி மரத்தில் ஒற்றை பூவாகத்தான் பூத்து காய்கள் காய்க்கும்.

பப்பாளி நோய்கள் என்று பார்க்கும்பொழுது நூற்புழு தாக்குதல், வேர் அழுகல் நோய் போன்றவையே பெருமளவு தாக்கும் நோய்கள் ஆகும். பப்பாளி வளர்ப்புக்கு முடிந்தவரை இயற்கை உரங்களை பயன்படுத்துவது சிறந்தது.

பப்பாளி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு

செடி ஒன்றுக்கு 50 கிராம் தழை,மணி மற்றும் சாம்பல்ச் சத்துக்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இட வேண்டும். மகசூல் அதிகரிக்க 4 வது மற்றும் 8 வது மாதத்தில் சில இயற்கை உரங்களை தெளிக்க வேண்டும்.

செடிகள் பூக்கத் தொடங்கும்பொழுது 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விட வேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு மற்ற ஆண்,பெண் செடிகளை நீக்கி விட வேண்டும். இந்த முறை ஒவ்வொரு ரகங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

செடியின் அடி பாகத்தைச் சுற்றித் தண்ணீர் தேங்கி நின்றால் தண்டு அழுகல் நோய் ஏற்படும், இந்நோய் தாக்கிய செடிகள் அழுகி வாடி இறந்து விடும். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பயன்கள்

பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

  • பப்பாளி விதைகள் ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது.
  • வயிற்றில் பூச்சிகள், புழுக்கள் ஏற்படாது.
  • கான்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
  • கை, கால், மூட்டு வலி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து வலியைப் போக்குகிறது.
  • பப்பாளி சிறுநீரக செயல்பாட்டினைத் தூண்டக்கூடியது.
  • டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.

பப்பாளி நாற்று

பப்பாளி பயிர் செய்ய நினைப்பவர்கள் பப்பாளி நாற்று எங்கு கிடைக்கும் என்று அலைய வேண்டியதில்லை. நல்ல தரமான விதைகள் நர்சரிகளில் கிடைக்கும், மற்றும் பப்பாளி பழத்தில் உள்ள விதைகளில் இருந்தும் பயிர் செய்யலாம்.

பப்பாளி காயாக இருக்கும்போது பச்சையாகவும், பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். நன்கு பழுத்த பழம் மிக சுவையாக இருக்கும். இதன் விதை கசப்பானதாக இருக்கும், பார்ப்பதற்கு குறுமிளகு போல இருக்கும். ரெட் லேடி பப்பாளி என்பதும் ஒரு வகை பப்பாளி ஆகும், இந்த பழம் சற்றே சிவந்த நிறத்தில் இருக்கும் விதைகள் இருக்காது.

மேலும் பப்பாளி காய்களில் பால் எடுத்து பின்னர் டூட்டி ப்ரூட்டி தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பப்பாளி நாற்று

பப்பாளி மரங்களின் வயது என்று பார்த்தால் 24 முதல் 30 மாதங்கள் வரை. அனைத்து ரகங்களிலும் குறைந்தது ஒரு எக்டருக்கு 100 டன்களுக்கு குறையாமல் மகசூல் பெற முடியும்.

நாட்டு பப்பாளி மரம் வளர்ப்பு எளிதானதே. நாட்டு பப்பாளி விதைகளும் நர்சரிகளில் கிடைக்கும்.

இயற்கை முறையில் பப்பாளி வளர்ப்பு என்பது இன்று அரிதாகி விட்டது. ஆனால் இயற்கை முறையில் பயிர் செய்வதே சிறந்தது.

பப்பாளி மரம் வீட்டில் வளர்க்கலாமா என்று நிறைய பேர் யோசிக்கின்றனர், ஆனால் பப்பாளி மரம் தாராளமாக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கலாம். பப்பாளியைப் பொறுத்தவரை காய், பழம், இலைகள், பப்பாளி மரப்பால் என அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகும்.

Pin It