தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாகி விட்டது. தென்னை வளர்ப்பு முறை, வீட்டில் தென்னைமரம் வளர்ப்பு, மாடித்தோட்டத்தில் தென்னை வளர்ப்பு, தென்னங்கன்று உற்பத்தி செய்வது எப்படி, தென்னை மரத்தின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்
தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். குழி 3x3x3 அடிக்கு இருக்க வேண்டும். இரண்டு மரங்களுக்கு இடையே 20 முதல் 21 அடி இடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழி தோண்டிய பின் 2 முதல் 6 இன்ச் அளவிற்கு மணல் இட வேண்டும். பிறகு 5 இன்ச் அளவிற்கு இலைச்சருகுகளை நிரப்பி ஒரு அடி உயரத்திற்கு பசுந்தழை உரம் இட வேண்டும். குழி நிறையும்வரை நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.
பின்னர் ஒரு மாதத்திற்கு தண்ணீர் விட்டு வந்தால் குழியின் அளவில் 1 ½ அடி முதல் 2 அடி வரை தொழு உரங்கள் மக்கி நடவுக்கான குழி தயாராகிவிடும்.
குழியை தயார் செய்த பின் குழியின் நடுவில் 3 இன்ச் அளவிற்கு மணல் இட்டு குழியின் நடுவில் நாற்றை வைத்து சுற்றிலும் மணலும்,தொழுஉரமும் கலந்த கலவையை தென்னை நெற்றில் உள்ள தேங்காய் மறையும் அளவிற்கு இட வேண்டும். தென்னையில் வேர் பூச்சிகள் தாக்காமல் இருக்க ஒவ்வொரு குழிக்கும் ½ கிலோ வீதம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவிஉங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்! |
தென்னை மரம் பராமரிப்பு
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டிஉங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
தென்னை சாகுபடி
தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் ஒற்றை வரிசை தென்னை வளர்ப்பில் வருடம் சுமார் 300 தேங்காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.
ஒரு ஏக்கர் ஒற்றை பாத்தி தென்னை 20 முதல் 30 மரங்களில் வருடம் சுமார் 20,௦௦0 ரூபாய் முதல் 30,௦௦௦ ரூபாய் வரை உபரியாக வருமானம் கிடைக்கும்.
தென்னை மரம் வளர்ப்பைப் பொறுத்தவரை ஊடுபயிர் செய்யலாம். நஞ்சை, புஞ்சை என்று எந்த நிலமாக இருந்தாலும் வாழை, இஞ்சி, மஞ்சள், கொள்ளு, நெல், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு வரிசை தென்னைமரம் வளர்ப்பு அதிகப்படியாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சேலம், நெல்லை, தருமபுரி, கம்பம், தேனி, தஞ்சை போன்ற ஊர்களில் ஒற்றை தென்னை வளர்ப்பு முறை பரவலாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் சீதோஷ்ணநிலை மற்றும் மண்வளமும் தென்னை வளர்ப்புக்கு ஏற்றதாக இருப்பதால் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
தென்னை மரத்தின் பயன்கள்
தென்னை மரங்களை நம் நாட்டில் குழந்தைகளை வளர்ப்பதற்கு நிகராக கருதுகின்றனர். அதனால்தான் தென்னங்கன்றை தென்னம்பிள்ளை என்று கூறுகின்றனர். எனவே தென்னை மரம் வளர்க்கும் பொழுது மிகவும் கவனமாக சரியான சமயத்தில் பராமரிப்பு முறைகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
அனைத்து இடங்களிலும் தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் பெரும்பாலும் ஒரே முறையில் தான் செய்யப்படுகிறது. மேலும் தென்னை மரங்கள் நடவு செய்யும் போது இடையில் ஊடு பயிர்கள் விளைவிப்பதால் அதிலும் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நீங்களும் தென்னையை வளர்த்து செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.