Tag

திராட்சை செடி

Browsing

திராட்சை வளர்ப்பு என்பது இன்று சாதாரணமாக வீட்டிலும் ,மொட்டை மாடியிலும் செய்யப்படுகிறது. இது மத்தியத் தரைப்பகுதி, மத்திய ஐரோப்பா, ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. திராட்சை அனைத்து இடங்களிலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

திராட்சை வளர்ப்பு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராட்சை அனைத்து இடங்களிலும் பரவலாக பயிரிடப்படுகிறது. திராட்சையின் பயன்கள், வகைகள், திராட்சை செடி வளர்ப்பு முறை, வீட்டில் திராட்சை செடி வளர்ப்பது எப்படி, மாடிதோட்டத்தில் திராட்சை வளர்ப்பு மற்றும் பாராமரிப்பு போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆரம்ப நிலையில் திராட்சை வளர்ப்பு

ஜூன் – ஜூலை மாதங்களில் திராட்சை செடி நடுவதற்கு ஏற்ற பருவம் ஆகும். திராட்சையை பொறுத்தவரை குளிர் காலங்களிலோ அல்லது மழை காலங்களிலோ நடக்கூடாது.

நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமி திராட்சை சாகுபடிக்கு ஏற்ற மண் ஆகும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். மண்ணில் உப்பின் நிலை 1க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now


தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமன்படுத்த வேண்டும். பன்னீர் திராட்சை தவிர மற்ற ரகங்களுக்கு 1x1x1 மீட்டர் அளவுள்ள குழிகள் தோண்ட வேண்டும்.

வேர் வந்த முற்றிய குச்சிகள் நடவுக்கு ஏற்றவை, தயார் செய்து வைத்துள்ள குழிகளின் நடுவில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நட வேண்டும், மற்ற ரகங்களை 4×3 இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

செடிகளை நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும், பின்பு 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை செய்ய இரண்டு வாரத்திற்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும்.

செடிகள் வளரும்வரை களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடியை ஒரே தண்டாக பந்தல் உயரம் வரை கொண்டு வந்து பின் நுனியை கிள்ளி விட வேண்டும். பிறகு வளரும் பக்கக் கிளைகளை எதிரெதிர் திசையில் வளரவிட்டு மேலும் நுனிகளைக் கிள்ளி செடியை பந்தல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

மாதம் ஒரு முறை ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுஉரம் வைத்து தண்ணீர்ப் பாய்ச்சி பராமரிப்பதன் மூலம் நல்ல விளைச்சல் பெறலாம்.

வகைகள்

திராட்சை வகைகள்

பன்னீர் திராட்சை, தாம்சன் (விதையில்லாதது), அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சனா, அர்கா ஹான்ஸ், சரத் (விதையில்லாதது), அனாஃப்-சாஹி, மாணிக்சமான், சோனாகா.

திராட்சை உண்பதால் தடுக்கப்படும் நோய்கள்

திராட்சையில் க்ளுகோஸ் உள்ளது, இந்த க்ளுகோஸ் உயர்ந்த தரம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் திராட்சையை உண்ணும்பொழுது இது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்வு தருகிறது.

பெண்கள் திராட்சை பழம் உண்ணும்பொழுது அவர்களுக்கு கர்ப்பப்பைக் கோளாறு மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

திராட்சை உடலில் உள்ள கெட்ட நீர், வாயு, சளி, உப்புகள், குடல் கழிவுகள் ஆகியவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. திராட்சை புற்று நோய் செல்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.

திராட்சை இதயத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு திராட்சை ஒரு சிறந்த பழம் ஆகும்.

உலர்ந்த திராட்சையும் உடலுக்கு நன்மையை தரக்கூடியது. எனவே எந்த காலத்திலும் திராட்சையை அனைவரும் உண்ணலாம். திராட்சை செடி இலையும் சில மருத்துவ குணங்களை கொண்டது ஆகும்.

திராட்சை இலை

பயன்கள்

  • உடலில் உள்ள பித்தத்தை நீக்கும்.
  • ரத்தசோகையை சரி செய்யக்கூடியது.
  • பசியைத் தூண்டக்கூடியது.
  • ரத்தத்தைத் தூய்மை செய்யக்கூடியது.
  • தேவையற்ற கொழுப்புகளை நீக்கக்கூடியது.
  • வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்கிறது.

திராட்சை செடி உரம்

திராட்சை வளர்ப்புக்கு இயற்கை உரங்களே சிறந்தது. திராட்சை சாகுபடிக்கு கடலை பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரங்கள் ஆகியவற்றை அடி உரங்களாக இடவேண்டும். இந்த உரங்களை ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து கொடியின் வேர் பகுதியில் இடவேண்டும்.

பூச்சித் தாக்குதல்களை சரி செய்ய வேப்பம் பிண்ணாக்கு அல்லது இஞ்சி பூண்டு விழுது அரைத்து தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now


பயிர்களை பாதுகாக்க மூன்று மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவை தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளித்து விட வேண்டும்.

திராட்சை விதை

கடைகளில் விற்கப்படும் திராட்சை பழத்தில் இருக்கும் விதைகளின் மூலமாகும் நாற்றுகள் உற்பத்தி செய்து செடி வளர்க்கலாம் அல்லது நர்சரிகளிலும் விதைகள் கிடைக்கும் அவற்றின்மூலம் செடிகளை வளர்க்கலாம்.

பன்னீர் திராட்சை வளர்ப்பு

பன்னீர் ரக திராட்சை செடிக்கு ௦.6 மீ அகலம், ௦.6 மீ ஆழம் மற்றும் 3 மீ இடைவெளிவிட்டு தோண்ட வேண்டும். பன்னீர் திராட்சையை 3×2 மீ இடைவெளியில் குச்சிகளை நட வேண்டும். இந்த பன்னீர் ரகங்களுக்கு நான்கு மொட்டு நிலையில் கவாத்து செய்ய வேண்டும். இதில் ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரில் 3௦ டன் வரை மகசூல் பெறமுடியும்.

மற்ற ரகங்கள்

பச்சை திராட்சை செடி வளர்ப்பு என்று பார்க்கும்போது இதுவும் பன்னீர் திராட்சையை போல நான்கு மொட்டு நிலையில் கவாத்து செய்ய வேண்டும். பெரும்பாலும் பன்னீர் ரக திராட்சையைப் போலவே இதற்கும் செய்ய வேண்டும்.

கருப்பு திராட்சை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பெருமளவு பயிர் செய்யப்படும் வகை ஆகும். மற்ற திராட்சை வகைகளுக்கு செய்வதைப் போன்ற நடவு முறையையே இதற்கும் பின்பற்ற வேண்டும்.

வீட்டில் திராட்சை வளர்ப்பு

வீட்டில் திராட்சை வளர்ப்பு

வீட்டில் திராட்சை செடி வைக்க பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கொடி போல் படர்ந்து வளரும், ஆனால் நடவு முறைகள் மற்றும் அனைத்து செயல்முறைகளும் ஒன்றே. வீட்டில் திராட்சை வளர்ப்பு என்பது இப்போது மிக எளிமையானதாகிவிட்டது.மாடித் தோட்டத்தில் பந்தல் போட்டு திராட்சை கொடி வைக்கலாம். நான்கு சாக்கில் மணல் நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒரு மூங்கில் காம்பை ஆழமாக ஊன்றி மூளைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலையில் வைக்க வேண்டும்.

அடியில் சிறு கற்களை போட்டு மேடை போல் அமைத்து அதன் மீது சாக்குப் பைகளை வைக்க வேண்டும். பிறகு இதில் கயிறு அல்லது கம்பியை குறுக்கும் நெடுக்குமாக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விடலாம். பெரும்பாலும் திராட்சை வளர்ப்பு மற்றும் நடவு முறைகள் என்பது அனைத்து ரக திராட்சைகளுக்கும் ஒரே மாதிரியான நடவுமுறைகளே ஆகும். இவ்வாறு வீட்டில் எளிய முறையில் திராட்சை செடி வளர்க்கலாம்.

Pin It