தர்பூசணி வளர்ப்பு என்பது மிகவும் சுலபமான அதேசமயம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். இந்த பதிவில் நாம் நஞ்சு கலக்காத ஆரோக்கியமான தர்பூசணி பழத்தை எப்படி நமது வீட்டிலேயே வளர்ப்பது என்று பார்க்கலாம்.
கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை போக்கி நீர்ச்சத்தை தருவது முதல் பங்கு தர்பூசணி அல்லது கோசாப்பழத்திற்கு உண்டு.
தர்பூசணி ரகங்கள்
இந்த தர்பூசணி பழத்தில் பல வகைகள் உண்டு அவற்றில் சிலவை இங்கே டிராகன் கிங், அர்காமானிக், அர்கா ஜோதி,சுகர்பேபி, அர்கா ஐஸ்வர்யா, பூசா பொடானா, அம்ருத் அபூர்வா, மைதிலா (மஞ்சள்), புக்கிசா, தேவயானி (ஆரஞ்சு).
மேற்கண்ட ரகங்கள் பெரும்பாலும் ரசாயன முறையில் விவசாயம் செய்ய உகந்தவை ஆனாலும் இவற்றை சிறிய அளவில் வளர்ப்பவர்கள் தாராளமாக இயற்கை முறையில் வளர்க்கலாம்.
தர்பூசணி பழத்தின் பயன்கள்
தர்பூசணி பழத்தில் 90 சதவிகிதம் நீர்சத்து இருப்பதால் சாப்பிட்டவுடனே நமது உடலுக்கு தேவையான நீர்த்தேவையை பூர்த்திசெய்கிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகிறது.
இந்த தர்பூசணி பழத்தில் வைட்டமின் A , வைட்டமின் C மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது.
கர்பமாக இருக்கும் பெண்கள் அதிகமாக தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவந்தால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்தஅழுத்தத்தை தவிர்க்கலாம்.
சாகுபடி முறைகள்
தர்பூசணிக்கொடிகள் பொதுவாக விதைகள் மூலமாகவே நாற்று உற்பத்திசெய்து வளர்க்கப்படுகின்றன. விவசாயம் செய்யும் நண்பர்கள் பெரும்பாலும் தர்பூசணி வளர்ப்பில் பெரும் நிலப்பரப்பில் நடத்தவே ஆசைப்படுகிறார்கள் அதுவும் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் செய்யும்பொழுது நமக்கு செலவுகளும் குறைகிறது.
சரியான பட்டம்
எந்த ஒரு பயிராக இருந்தாலும் அதை சரியான பட்டம் அதாவது காலம் பார்த்து நடவுசெய்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் பொதுவாக தர்பூசணி ஒரு 3 மாதத்தில் பலன்தரக்கூடிய செடியாகும் மேலும் அதற்கான அதிக தேவை இருப்பது வெய்யில் காலத்தில், ஆகவே கோடைக்கு 3 மாதங்கள் முன்பாக தைமாதத்தில் பயிரிட்டால் சரியாக சித்திரையில் அறுவடை செய்யலாம்.
என்ன உரம் தரலாம்
நாம் இங்கே பார்க்கப்போவது முற்றிலும் இயற்கை உரங்கள் மட்டுமே ஆகவே அடியுரமாக நன்கு மக்கிய தொழுஉரம் மற்றும் கடலைப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
நாற்றுகள் நடவு செய்து ஒரு மதத்திற்கு பிறகு பயிர் வளரும் காலத்தில் மாதம் ஒருமுறை பஞ்சகாவியா மற்றும் மீன் அமிலம் போன்ற பயிர் ஊக்கிகள் தரலாம்.
ஆண் மற்றும் பெண் பூக்கள்
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
பொதுவாக தர்பூசணியில் மட்டும் இல்லாமல் அணைத்து கொடிவகைகளிலும் ஆன் மற்றும் பெண் பூக்கள் என்று இருந்து இருக்கும். ஆன் பூவில் இருக்கும் மகரந்தம் பெண் பூவில் இருக்கும் சூலகத்தை அடைந்தால்தான் மகரந்தசேர்க்கை நடைபெற்று காய்கள் உருவாகும். தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் இதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
பூச்சி விரட்டிகள்
தர்பூசணி வளர்ப்பில் ஏற்படும் பூச்சி தாக்குதல்களை பெரும்பாலும் அக்னி அஸ்திரம் மற்றும் வேப்பெண்ணை கரைசல் போன்றவற்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் பழ ஈக்களை இனக்கவர்ச்சி பொறிகள் மற்றும் மஞ்சள் அட்டைகள் வைத்து கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவில் நாம் தர்பூசணி வளர்ப்பு பற்றி பார்த்தோம், மீண்டும் அடுத்த பதிவில் வேறு ஒரு நல்ல படைப்புடன் சந்திப்போம்.