Tag

சேனைக்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி

Browsing

சேனைக்கிழங்கு வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் பார்க்கமுடிவதில்லை, விவசாயிகள் பணப்பயிர்களை அதிகம் பயிரிட ஆரம்பித்துவிட்டதால் சேனை கிழங்கு சாகுபடி கணிசமான அளவு குறைந்துவிட்டது. அதிக சத்து கொண்ட கிழங்குகளில் முதன்மையானது சேனைக்கிழங்கு.

சேனைக்கிழங்கு தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றியதாக அறியப்படுகிறது. சேனைக்கிழங்கை பெரிய கரணை என்றும் அழைப்பர், ஏனென்றால் இதன் செடியும், இலைகளும் கருணைக்கிழங்கு செடியைப் போலவே காணப்படுவதால் இப்பெயர்க் கொண்டு அழைக்கப்படுகிறது.

மண்ணில் விளையக்கூடிய கிழங்குகளில் அளவில் பெரியது சேனைக்கிழங்கு. அதன் வளர்ப்பு முறை, உற்பத்தியை பெருக்கும் வழிமுறை மற்றும் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாடித்தோட்டத்தில் சேனைக்கிழங்கு வளர்ப்பு

வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடுவதற்கு தேவையான பொருள்கள், வளர்ப்பு பை அல்லது தொட்டி , அடியுரமாகயிட மணல், விதைக்கிழங்குகள், தென்னை நார்க்கழிவுகள், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, செம்மண், பூவாளி தெளிப்பான்.

சேனைக்கிழங்கு செடி வளர்ப்புக்கு தயார்செய்யும் உரக்கலவையானது பொல பொலப்பு தன்மையுடன் இருக்க வேண்டும். அடியுரமாக தென்னை நார்க்கழிவு, மண், இயற்கை உரம் ஆகியவற்றை சமபங்காக கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும். கிழங்கு எளிதாக வளர, மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்க தென்னை நார்க்கழிவுகளை அடி உரமாக சேர்க்க வேண்டும்.

கிழங்குகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். முளைப்புடன் கூடிய கிழங்குகளை கூட பயன்படுத்தலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைத்தவுடன் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவும், அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறுவதற்கு தொட்டியின் அடியில் இரண்டு அல்லது மூன்று துளைகள் இட வேண்டும்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சேனை கிழங்கு சாகுபடி

செடி
சேனைக்கிழங்கை ஆடி பட்டத்தில் பயிரிடுவது சிறப்பு. சேனை பத்து மாத பயிர். எட்டாம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். சேனை விதைத்து 8 வது மாதத்தில் தண்டுகள் பழுத்துத் தானாக மடங்கினால் கிழங்கு அறுவடைக்குத் தயார், தேவையைப் பொறுத்து அறுவடை செய்து கொள்ளலாம். கிழங்குகள் முதிர்ந்து அறுவடை செய்தவுடன் சுத்தப்படுத்தி காற்றோட்டமுள்ள அறைகளில் வைக்க வேண்டும். இதன் மூலம் கிழங்குகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

சேனைக்கிழங்கு வகைகள்

சாகுபடி
சேனைக்கிழங்கில் இரண்டு வகை உண்டு. மிருதுவான மற்றும் கெட்டியான கிழங்கு. இதில் மிருதுவான கிழங்கு மிகுந்த காரம் உடையது. உண்ணும் போது வாய், தொண்டை ஆகியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும், ஆனால் இந்த வகை அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. இந்த வகை கிழங்குகள் சற்று பழைய கிழங்காக மாறிய பிறகு சமைத்து உண்பதால் இந்த அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கெட்டியான கிழங்கு, இதில் காரத் தன்மை இருக்காது. கிழங்கு வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கும்.

சேனைக்கிழங்கு நன்மைகள்

சேனைக்-கிழங்கு

  • கீழ் வாதம், நீரிழிவு, தொழு நோய், உடல் வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை குணப்படுத்துகிறது.
  • உணவு செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டுகிறது.
  • இதில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் பலம் பெற உதவுகிறது.
  • பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
  • இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் நிறைய விட்டமின்களும் உள்ளது.
  • 100 கிராம் கிழங்கில் 330 கலோரிச் சத்துக்கள் உள்ளது.
  • இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது. உடல் வலுப்பெற உதவுகிறது.


இந்த கட்டுரையில் சேனைக்கிழங்கு பயிரிடும் முறை, சேனை கிழங்கு வளர்ப்பு மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் இயற்கை முறையில் சேனைக்கிழங்கு சாகுபடிசெய்து, அதன் முழு பயன்களையும் பெற்று குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

Pin It