பெரும்பாலானோர் வீட்டை அழகு படுத்த பல வகையான செடிகளை வளர்ப்பார்கள், சிலர் அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள். அழகு மற்றும் அதிர்ஷ்டத்தை தர வல்லதாக இந்த மயில் மாணிக்கம் கருதப்படுகிறது. எனவே தான் பலரது வீட்டில் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
விதையை வைத்து தான் இந்த செடியானது வளர்ப்பது செய்யப்படுகிறது. மயில் மாணிக்கம் என பெயர் வரக்காரணம் என்னவென்றால், இதன் செடியில் பூக்கும் பூக்களின் நிறமானது அடர் சிவப்பு நிறமாக மாணிக்கம் போன்றும், அதன் வடிவம் மயில் தோகை போல விரிவாக இருப்பதாலும் தான் இதற்கு மயில் மாணிக்கம் என்று பெயர் வந்தது. ஆனால், இதன் இலைகள் மயிர் கணுக்கள் போல உள்ளதால் மயிர் மாணிக்கம் என்ற பெயர் கொண்டதாகவும், நாளடைவில் அதுவே மருவி தான் மயில் மாணிக்கம் என ஆனதாக கூறுகிறார்கள்.
மகத்துவம் பல நிறைந்த இந்த மயில் மாணிக்கம் செடி வளர்ப்பது எப்படி, வீட்டுத்தோட்டம் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு மற்றும் மயில் மாணிக்க செடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
மயில் மாணிக்கம் விதைப்பு செய்தல்
மயில் மாணிக்கம் ஒரு கொடி வகை தாவரம் ஆகும். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கலந்து மண்கலவை தயார் செய்துக்கொள்ள வேண்டும். நெகிழி பை அல்லது பூந்தொட்டியில் அந்த மண்கலவையை போட்டு நிரப்பவும். பிறகு தேர்ந்தெடுத்த நேர்த்தியான மயில் மாணிக்கம் விதைகளை அந்த மண்கலவையில் சிறிது பள்ளம் தோண்டி விதையை உள்ளே வைத்து மூடி கொஞ்சமாக தண்ணீர் தெளிக்கவும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
செடியின் வளர்ச்சி
விதையை விதைத்தப்பிறகு சரியாக 16 நாட்களுக்குள் மயில் மாணிக்க கொடியானது முளைத்து வெளியில் வந்துவிடும். இந்த மயில் மாணிக்க கொடியானது ஆரம்ப நிலையில் சிறிது சிறிதாகத்தான் வளரும். ஓரளவு கொடி வளர்வதற்கு அதிகபட்சமாக 50 நாட்களுக்கு மேலாக ஆகும். கொடி வளர எதுவாக பந்தல் அமைப்பது சிறந்தது. மயிர் மாணிக்க பூக்கள் கண்களை கவரும் நிறம் உடையதாக இருக்கும்.
பராமரிப்பு
மயில் மாணிக்க கொடிகளுக்கு நீர் எந்தளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு வெயிலும் தேவை. மயில் மாணிக்க செடியை அதிகமான வெப்பத்திலும் வளர்க்க முடியும். இந்த செடிக்கு காலை நேரத்து வெயில் மிகவும் அவசியமாகும், சாதாரணமாக ஒரு செடிக்கு எட்டு மணி நேரம் வெயிலானது தேவைப்படும். ஆகவே அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் இடத்தை தேர்வு செய்து பராமரித்துக்கொள்ளவும்.
உரமேலாண்மை
மயில் மாணிக்கத்திற்கு தனியாக எந்த விதமான உரமும் அவசியமே இல்லை, அதுவாகவே நன்கு வளரும், குறிப்பாக இந்த செடி நடவு செய்து 65 நாட்களில் மொட்டுக்கள் வைக்கத்தொடங்கிவிடும். ஆனால் பூக்கள் பூக்குவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். கொடி உயர வளர துவங்கியதும் மேற்புறம் நோக்கி நூல்களைகொண்டு கட்டிவிட்டால் கொடி அதுவாகவே மேலே ஏறிவிடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டைஉங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
மயில் மாணிக்க செடி பயன்கள்
- பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது கருமுட்டைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் ஆகும். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய மயில் மாணிக்க சாறை குறைந்தது ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும், எனவே தான் இதை அழகுச்செடி மயில் மாணிக்கம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள்.
- மயில் மாணிக்கத்தின் இலைகளை அரைத்து பூசிவந்தால் கை, கால்களில் உள்ள கட்டிகள் விரைவில் குணமாகும்.
- பொதுவாக அனைவருக்கும் பொடுகு பிரச்சனை தீராத தொல்லையாக இருக்கும், அதை சரி செய்ய மயில் மாணிக்கத்தை அரைத்து தலையில் பூசிவந்தால் பொடுகு பிரச்சனை குறைந்து, தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
- மயிர் மாணிக்க மூலிகை சிறுநீரக கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
இந்த மயில் மாணிக்கத்தை வீட்டில் வளர்த்து வீட்டின் அழகையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வாழ்த்துகிறோம்.