Tag

சப்போட்டா பழம் பயன்கள்

Browsing

சப்போட்டா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில் தான் அதிகமாக காணப்படுகிறது, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவை தன் தாயகமாகக் கொண்டது. கடல்வழியே நம் இந்திய நாட்டிற்கு வருகை தந்த போர்த்துக்கீசியர்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சப்போட்டா பழம். இப்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா வளர்ப்பு அதிக அளவில் செய்யப்படுகின்றது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளான இலங்கை மற்றும் மலேசியா நாட்டிலும் சப்போட்டா அதிக அளவில் பயிரிட படுகிறது.
சப்போட்டா
விதையிலிருந்து சப்போட்டா வளர்ப்பது எப்படி, சப்போட்டா சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள், சப்போட்டா பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சப்போட்டா பயிரிட ஏற்ற மண்

ஏற்ற-மண்
சப்போட்டா பயிர் எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடிய பயிர் ஆகும். சிறந்த வடிகால் வசதியுள்ள மண்ணில் கூடுதல் வளர்ச்சியை காணலாம், மேலும் சப்போட்டா பழ மரம் ஓரளவு உப்புத் தன்மை கொண்ட நிலத்திலும் கூட உப்புத் தன்மை நீரையும் ஏற்று வளரும் திறன் கொண்டது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தையும் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சப்போட்டா நடவு முறை

சப்போட்டா-வளர்ப்பு
நன்கு கனிந்த சப்போட்டா பழத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பின்பு அதிலிருந்து விதைகளை தேர்வு செய்யவும், அடுத்து நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் அந்த விதைகளை விதைக்க வேண்டும். சப்போட்டா பழ விதையின் ஓடுகள் மிக கடினமாக இருக்கும், எனவே அது முளைத்து வர 90 முதல் 100 நாட்கள் ஆகலாம்.

ஒட்டு கட்டிய செடிகளை கூட வாங்கி பயிரிடலாம், ஆனால் விதையிலிருந்து ஒரு மரத்தை வளர்த்தால் மட்டுமே ஆணி வேறானது தோன்றும், ஆகையால் விதையை கொண்டு பயிரிடுவதே சிறந்தது. சப்போட்டா மரம் வளர்ப்பு செய்ய ஏற்ற மாதம் ஜூலை – அக்டோபர் ஆகும்.

பராமரிப்பு

பராமரிப்பு
சப்போட்டா செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதோடு அதன் பராமரிப்பு முறைகளையும் தெரிந்து கொள்வோம். சப்போட்டா செடியை தரை மட்டத்தில் இருந்து இரண்டு அடி உயரம் வரையிலும் கிளைகள் எந்தப்பக்கமும் பிரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சப்போட்டாவிற்கு கவாத்து செய்தல் அவசியமில்லை. நீண்டு வளரும் சில தண்டுகளை மட்டும் அகற்றினால் போதுமானது, மேலும் அடர்த்திமிக்க மற்றும் நிழல் விழுகின்ற கிளைகளையும் அகற்றிவிடவேண்டும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சப்போட்டா பழம் அறுவடை

சப்போட்டா-பயன்கள்
அறுவடை பருவத்தை அடைந்த சப்போட்டா பழத்தின் நிலையை அறிவது சற்று கடினமாகும். மற்ற பழங்களைப் போல் சப்போட்டாவில் நிறமாற்றம் ஏதும் ஏற்படுவது கிடையாது. இருப்பினும் சப்போட்டா பழத்தின் தோலின் மீதுள்ள சின்ன சின்ன கருநிறத்துகள் மறைந்து, மேலும் பழமானது சிறிது பளபளவென இருக்கும். சப்போட்டாவை நகத்தை கொண்டு கீறிப்பார்த்தால், பழத்தின் உள்ளே மிதமான மஞ்சள் நிறம் தென்படவேண்டும், பாலானது வடியக் கூடாது. சப்போட்டா தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகி இருக்கும். இப்படி காணப்பட்டால் சப்போட்டா பழத்தை அறுவடை செய்யலாம்.

சப்போட்டா பழ இரகங்கள்

சப்போட்டா-பழ-இரகங்கள்
கிரிக்கெட் பால், துவாரப்புடி, பாராமசி, தகரப்புடி, காளிப்பட்டி, ஓவல், கீர்த்தபர்த்தி, பாலா, கோ 1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம் 3, பெரிய குளம் 4, பெரிய குளம் 5.

சப்போட்டா பயன்கள்

பழம்-அறுவடை

  • சப்போட்டா பழத்தை நன்கு அரைத்து அதனுடைய சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வலிகள் எல்லாம் குணமாகிவிடும்.
  • சப்போட்டா பழத்தை தினசரி சாப்பிட்டால், சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
  • சப்போட்டா பழம் ஜூஸ் உடன், எலுமிச்ச பழச்சாறையும் கலந்து உட்கொண்டால் சளி சரியாகிவிடும்.
  • சப்போட்டா பழத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புண்ணை சரிசெய்யும்.
  • இந்த பழத்தில் வைட்டமின் A உள்ளதால், கண்பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.


வறட்சியைத் தாங்கி வளரும் பழமான சப்போட்டா பழம் பயிரிடும் முறைகள் பற்றி கண்டோம். அதிக மருத்துவ பயன்கள் கொண்ட சப்போட்டா பழமரத்தை வளர்த்து, அதன் அளப்பரிய பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

Pin It