Tag

சங்கு பூ வளர்ப்பு

Browsing

சங்குப்பூ எனப்படும் காக்கட்டான் பூ கொடி வகையைச் சேர்ந்தது. இதன் கொடி எல்லா இடங்களிலும், வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் நீல நிறம் மற்றும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது கூட்டிலைகளை கொண்ட ஏறு கொடியாகும். அழகு செடிகளாக வீட்டின் முன்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது, தட்டையான காய்களை உடையது.
சங்குப்பூ கொடி வளர்ப்பு
பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிற சங்குப்பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப்படுகிறது, இது மிகச்சிறந்த மருத்துவ பயன்களை உடையது. மேலும் சிவபெருமானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. இதனுடைய பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போன்று இருப்பதால் சங்குப்பூ என பெயர் வந்தது.

சங்குப்பூ விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சங்குப்பூ கொடி வளர்ப்பு, சங்குப்பூ மருத்துவகுணம் மற்றும் சங்கு பூ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

சங்குப்பூ விதை

சங்குப்பூ விதைகள் அடர் காவி நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு அவரை விதைபோல இருக்கும் சங்குப்பூ விதையானது வெந்தயத்தைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்த விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு நீரில் ஊற வைக்கவேண்டும், அது நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முளைப்பதற்கு தயாராகிருக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சங்குப்பூ விதை நடவு செய்தல்

சங்குப்பூ
சங்குப்பூ கொடி வளர்ப்பு அனைத்து வகை மண்கலவையிலும் சிறப்பாக இருக்கும். நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் மண்ணைப்போட்டு நிரப்பிக்கொள்ளவும், பிறகு ஏற்கனவே நாம் தேர்ந்தெடுத்து வைத்துள்ள நல்ல தரமான விதைகளை எடுத்து அந்த நெகிழிப்பையில் உள்ள மண்ணை சிறிது தோண்டி அதில் அந்த விதைகளை போட்டு மூடவும். மேற்பரப்பில் நீர் தேங்காதவாறு பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

சங்குப்பூ செடி வளர்ச்சி

வெள்ளைச்சங்குப்பூ
சங்குப்பூ விதைப்பு செய்த 10 நாட்களில் முளைத்து வரத்தொடங்கிவிடும். 15 நாட்களுக்கு பிறகு கொடி படர ஆரம்பிக்கும், கொடி பற்றி ஏற உதவும் விதமாக பந்தல் அமைத்தல் வேண்டும் அப்போது தான் சங்குப்பூ கொடி வளர்ப்பு சிறக்கும். 30 நாட்களில் சங்குப்பூ கொடி செழித்து வளர்ந்திருப்பதை காணலாம். சுமார் 40 நாட்களில் கண்ணைக்கவரும் வண்ணத்தில் பூக்கள் பூத்திருக்கும். இந்த வளர்ச்சிக்காலம் நீல நிற சங்குப்பூ மற்றும் வெள்ளைச்சங்குப்பூ இரண்டிற்கும் பொருந்தும்.

சங்கு பூ பயன்கள்

சங்குப்பூ தேநீர்

  • இரு தேக்கரண்டி சங்குப்பூ சாற்றுடன், சம பங்கு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு அதோடு தேவையான அளவு தேன் சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகினால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கிவிடும், மேலும் தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயுடன் சேர்த்து வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.
  • இந்த பூக்கள் மனசோர்வு மற்றும் மனக்கவலை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் அதிகம் ஆண்டி ஆக்சிடன்ட் உள்ளதால் இது நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் சேதப்படுவதை பெருமளவு தடுத்து நம்மை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கச்செய்வதுடன் நம்முடைய சருமம் என்றும் இளமையாக இருக்கவும் பயன்படுகிறது.
  • Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • மூச்சுத் திணறல மற்றும் இருதய தொடர்பான நோய்களுக்கு இந்த சங்குப்பூ மருந்தாகப் பயன்படுகின்றது. உலர்ந்த சங்குப்பூக்கள், புளூ டீ எனும் சங்குப்பூ தேநீர் தயாரிக்கவே பிரத்யேகமாக விலை தந்து பல நாடுகளில் வாங்கப்படுகின்றன.
  • சங்குப்பூவினுடைய சாறு, கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. கரும்புள்ளி மற்றும் தேமலைக் குணமாக்கும். சங்குப்பூ செடியின் வேர், சிறுநீர்ப்பை நோய்களை கட்டுப்படுத்தும்.
  • சங்குப்பூவின் விதை புளிப்பு சுவைகொண்டதாக இருக்கும் மேலும் மணமிக்கதாக இருக்கும், இது உடலுக்கு வலிமை தருகின்ற சர்பத் மற்றும் பான வகைகளில் சேர்க்கப்படுகின்றது.


வீட்டிற்கு அழகு மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சங்குப்பூ கொடி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் சங்குப்பூ வளர்ப்பு செய்து அதன் வண்ணம் போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.

Pin It