Tag

கோதுமை புல் பொடி

Browsing

உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த முதன்மையான பயிர் இந்த கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தான் முதன் முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகின்றது, ஆனால் தற்பொழுது உலகவில் பெரும்பாலான நாடுகளில் கோதுமை வளர்ப்பு செய்யப்படுகிறது.
கோதுமை
பெரும்பாலான விவசாயிகளால் அரிசி மற்றும் மக்காசோளத்துக்கு அடுத்ததாக அதிக அளவில் விளைவிக்கப்படும் தானியம் இந்த கோதுமை ஆகும். கோதுமை விதையில் இருந்து வளர்ப்பது எப்படி, கோதுமை புல் வளர்ப்பது எப்படி, கோதுமை சாகுபடி செய்யும் முறை மற்றும் கோதுமை நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வீட்டுத்தோட்டத்தில் பயிரிடும் முறை

கோதுமை புல்
மண்ணை பொறுத்தவரை, நல்ல வடிகால் வசதியுள்ள கொண்ட மண் உகந்தது, நன்கு பொலபொலவென்று மண் இருக்கவேண்டியது அவசியம் ஆகும். ஒவ்வொரு கோதுமை மணி விதைப்பதற்கு குறைந்தது 24 cm இடைவெளி இருக்கவேண்டும். 3 cm ஆழம் மண்ணை கீறி கோதுமை மணிகளை உள்ளே போட்டு மூடி நீர் பாய்ச்ச வேண்டும்.

பராமரிப்பு

கோதுமை
கோதுமை விதைகளை விதைத்தபிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும். அவ்வப்போது தேவையற்ற களைகளை நீக்கிவிட வேண்டும். கோதுமை பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் போது தழைசத்துக்களை இட்டு தண்ணீர் பாய்ச்சினால் கோதுமை வளர்ப்பு சிறக்கும்.

பயிர் பாதுகாப்பு

கோதுமை வளர்ப்பு செய்யும் பொழுது அவ்வளவாக பூச்சிகள் பயிர்களை தாக்குவதில்லை, இருப்பினும் பூக்கும் தருணத்தில் அசுவினி பூச்சி தாக்குதல் தென்பட்டால் வேப்பெண்ணை கரைசலை தெளிக்கலாம், அப்படி தெளிக்கும் பொழுது ஒரு சில வாரத்தில் அஸ்வினி பூச்சி தாக்குதல் முழுமையாக நீங்கிவிடும்.

கோதுமை அறுவடை

கோதுமைகள்
கோதுமை விதைத்த எழுபது நாட்கள் முதல் தொண்ணுறு நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். கோதுமை நன்கு காய்ந்த நிலைக்கு வந்த பிறகு அதன் தாள்களை சாகுபடி செய்து அதை காயவைத்து கோதுமை மணிகளை தனித்தனியே பிரித்து எடுக்கவேண்டும். கோதுமை பிரித்தெடுக்கும் முறையை கைகளிலும் செய்யலாம், இயந்திரங்களிலும் செய்யலாம்.

கோதுமை நன்மைகள்

மணிகள்

  • கோதுமை மாவு நம் உடலில் உள்ள இரத்தத்தினை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது, மேலும் இதிலுள்ள அதிக அளவு நார்ச் சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
  • வயிற்றில் புளிப்புத்தன்மை பிரச்சனை கொண்டவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வரும் தொந்தரவு கொண்டவர்கள், கோதுமையை ரவை போல அரைத்து அதில் கஞ்சி செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோதுமையில் உள்ள செலினியம் என்ற மூலப் பொருள் அதிகமாக நிறைந்துள்ளது, இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது, இது நம் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து இளமையான தோற்றத்தை வழங்குகிறது.
  • கோதுமையில் உள்ள அரிதான சத்துக்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துகிறது, இது அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • கோதுமை தவிடு அதிகப்படியான நார்சத்துக்களை கொண்டதாகும். இது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்க பயன்படுகிறது, வயிற்று பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் பண்பு இந்த கோதுமை தவிட்டில் உள்ளது.

  • இன்றியமையாத உணவுப் பயிர் கோதுமை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கோதுமை வளர்த்து அதன் அனைத்து பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It