Tag

கொத்தமல்லி கீரை சாகுபடி

Browsing

கொத்தமல்லி கீரை வளர்ப்பு செய்வதற்கான வழிமுறைதனை தெரிந்துகொண்டால், கொத்தமல்லி கீரை வளர்ப்பை போல ஒரு எளிய மாடித்தோட்ட செயல்பாட்டு முறை இல்லை. அந்த சுலபமான முறையை இங்கு காணலாம், மேலும் கொத்தமல்லி பயிரிடும் முறை, கொத்தமல்லி கீரை சாகுபடி, கொத்தமல்லி கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்தக்கட்டுரையில் காணலாம்.
கொத்தமல்லி-கீரை-வளர்ப்பு

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி-கீரை-வளர்ப்பு-2
கொத்தமல்லி கீரை விதைக்கு, அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லியை உபயோகப்படுத்தலாம். கொத்தமல்லி விதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்றையும் இரண்டாக உடைத்து எடுத்து கொள்ளவும். காட்டன் துணி ஒன்றை எடுத்து, அதில் மண்புழு உரத்தைப் பரப்பிக்கொண்டு, அந்த துணியில் கொத்தமல்லி விதைகளைத் தூவி விடவும், பின்பு உரத்தையும், கொத்தமல்லி விதைகளையும் கலந்து அந்த துணியை கட்டவும், மிக இறுக்கிக் கட்டக்கூடாது.

பிறகு இந்தத் துணியை, நீரில் நனைத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் அந்த விதை கொண்ட துணி முடிச்சை ஈரம் காயாமல் நிழலில் வைக்கவேண்டும். மூன்று தினங்களுக்கு பின்பு அந்த துணியை பிரித்துப் பார்க்கவும். கட்டிவைத்த விதைகளில் முளைப்புத் திறன் இருக்குமேயானால், கொத்தமல்லி முளைப்புவிட்டிருக்கும். அப்படி முளைத்துள்ள விதைகள் தரமானதாகும், அந்த விதைகளை கொண்டு நாம் கொத்தமல்லி கீரை நடவு செய்யலாம்.

கொத்தமல்லி கீரை நடவு முறை

விதை
கொத்தமல்லி செடி வளர்ப்பு செய்வதற்கு தொட்டி அல்லது நெகிழிப்பை எடுத்துக் கொள்ளவும், அதில் நாற்பது சதவிகிதம் செம்மண், முப்பது சதவிகிதம் தேங்காய் நார்க்கழிவு, முப்பது சதவிகிதம் நன்கு மக்கிய கோழி எரு ஆகியவற்றை நன்றாக கலந்து மண்கலவையை தயார்செய்து அதில் நிரப்பி கொள்ளவும். பிறகு அதன்மீது கொத்தமல்லி விதைதனை தூவிவிடவும். பிறகு மீண்டும் சிறிது மண்கலவை இட்டு, விதை வெளியே தென்படாதபடி மூடவும், ஆனால் அதிகமாக மண்கலவை போட்டுவிடக் கூடாது, அப்படி அதிகமாக மண்கலவை விதை மீது இட்டால் கொத்தமல்லி கீரை வளர்வதற்கு கால தாமதம் ஆகலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


அடுத்து தண்ணீர், தண்ணீரை கைகளால் தெளித்துவிட வேண்டும். தண்ணீர் தெளித்து தயார் நிலையில் உள்ள தொட்டியை அப்படியே வெயிலில் வைக்க கூடாது, நிழலில் வைத்து ஈரம் காயாமல் தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஏழு நாட்களுக்குள் கொத்தமல்லி முளைக்க ஆரம்பித்துவிடும். அதன்பின்பு வெயில் படும்படி வைக்கலாம். சுமார் 20 நாட்களுக்குள் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துவிடும்.

கொத்தமல்லிக்கீரையில் பூச்சி தாக்குதல்

கொத்தமல்லி கீரை வளர்ப்பு
கொத்தமல்லிக்கீரையில் பூச்சி தாக்குதல் இலைபேன்கள், அசுவினி பூச்சிகள், மாவுபூச்சிகள், பச்சைபுழுக்கள் ஆகியவைகளே கொத்தமல்லியை தாக்கும் பூச்சிகள் ஆகும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம், அல்லது வேப்பம் எண்ணெயை இரண்டு மில்லியை ஒரு லிட்டர் அளவுள்ள நீரில் கலந்து ஒட்டு திரவம் சேர்த்து தெளிக்கலாம்.

கொத்தமல்லி கீரைகளுக்கு வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கும் போது அதிகமாக இல்லாமல், குறைவாக தெளிப்பது மிக அவசியமாகும். ஏனென்றால் கொத்தமல்லிக்கீரைகள் மிகவும் மிருதுவான தாவரம் ஆகும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொத்தமல்லி கீரையின் மருத்துவ பயன்கள்

மருத்துவ-பயன்கள்

  • கொத்தமல்லி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்கிறது. வைட்டமின் சி தோல் சம்பந்தப்பட்ட சொறி, சிரங்கு, அரிப்பு முதலிய நோய்களை சரிசெய்யவல்லது.
  • கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறையும். கொத்தமல்லி விதைகளை ஒரு நாள் ஊற வைத்து அடுத்தநாள் ஊறவைத்த நீரை குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
  • கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் அவசியமற்ற கொழுப்புகளை கரைக்க வழிவகை செய்கிறது.
  • கொத்தமல்லி கீரை குளிர்ச்சி மற்றும் உஷ்ணம் ஆகிய இரண்டு தன்மையை தனக்குள் கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், பனிக்காலத்தில் உடலுக்கு வெப்பத்தையும் தரவல்லது.
  • கொத்தமல்லி கீரைக்கு பசியினை தூண்டும் குணம் உள்ளது, பசியெடுக்காத பிரச்சினை இருக்குமேயானால் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கொத்தமல்லி கீரை சூப் சாப்பிட்டு வர பசி நன்றாக எடுக்கும்.


கொத்தமல்லி தழை சுலபமாக வளர்ப்பது எப்படி மேலும் இயற்கை முறையில் கொத்தமல்லி சாகுபடி செய்தல் எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கொத்தமல்லி வளர்ப்பு செய்து அதன் முழு பயனையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It