Tag

கீரை வளர்ப்பு

Browsing

பருப்புக்கீரை வளர்ப்பு மிகவும் சுலபமாக செய்யலாம். மிக குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித்தர கூடிய கீரைகளில் ஒன்றாகும் இந்த பருப்புக்கீரை. இந்தக்கீரை 20 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய செடியாகும். அதிக சத்துக்கள் அடங்கிய இந்த கீரைக்கு பராமரிப்பும் மிக குறைவாக இருந்தால் கூட போதுமானது.
பருப்புக்கீரை
பருப்புடன் இந்த கீரையை சமைத்து உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருவதினால் இதனை பருப்புக் கீரை என்று அழைக்கின்றனர். மேலும் இந்த பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ எனவும் அழைக்கபடுகிறது அதற்கு காரணம் பருப்புக்கீரையானது குழந்தைகள் ஈன்ற தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை சீராக்குகிறது.

பருப்புக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் பருப்புக்கீரை வளர்ப்பு, பருப்புக்கீரை சாகுபடி மற்றும் பருப்புக்கீரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மண்கலவை தயாரித்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கொண்டு மண்கலவை தயார் செய்தால் நல்ல வளர்ச்சியை பெறலாம். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்கு கலந்து மாடித்தோட்டத்தில் நடவு செய்ய ஏதுவாக நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் அந்த மண்கலவையை நிரப்பிக்கொள்ளவும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல்

பருப்புக்கீரை வளர்ப்பு
பருப்புக்கீரை விதைகள் கருப்புநிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை மண்கலவையின் மேல் தூவ வேண்டும். முதன் முதலாக நடவு செய்பவர்களுக்கு விதை தூவல் சரியாக செய்ய முடியவில்லை என்றால் மணல் அல்லது சாம்பலுடன் பருப்புக்கீரை விதைகளை கலந்து தூவலாம். தூவிய பிறகு அதன் மீது பூவாளிக்கொண்டு கவனமாக நீர் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் அறுவடை

பருப்புக்கீரை செடி
பருப்புக்கீரை நடவு செய்த 3 மூன்று நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும். 7 நாட்களில் நல்ல வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம். சுமார் 20 நாட்களில் சாகுபடி செய்யும் அளவிற்கு வளர்ந்துவிடும். 20 நாளில் சிறிய மொட்டுக்கள் வைக்க ஆரம்பித்திருக்கும், தேவைக்கு போக மீதியை விதைக்காக விட்டுவிடலாம். அந்த மொட்டுக்கள் மஞ்சள் நிற பூக்களாக மாறி காய்வைக்கும். காய்கள் காய்ந்தபிறகு அதில் பருப்புக்கீரை விதைகள் நிறைந்திருக்கும்.

பருப்புக்கீரை பயன்கள்

கீரை பூ

  • வெய்யிலின் தாக்கத்தால் சிலருக்கு அக்கி தொல்லை ஏற்படும், பருப்புக்கீரையின் இலைகளை பறித்து தண்ணீரில் அலசி நன்கு அரைத்து அக்கி ஏற்பட்ட இடத்தின் மீது தடவி வர வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இதுபோல் செய்து வந்தால் எரிச்சல் தணிந்து அக்கி கொப்புளங்கள் குறைந்து குணமுண்டாகும்.
  • சிலருக்கு தலைவலி அடிக்கடி ஏற்படும், நாள் முழுதும் கூட அந்த வலி தொடரும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் பருப்புக்கீரையை நன்கு அரைத்து தலைக்கு பற்று போட்டுவந்தால் தலைவலி சரியாகிவிடும்.
  • பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் நுரையீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • ஒமேகா 3 உள்ள அற்புதமான கீரை இந்த பருப்புக்கீரை ஆகும், மேலும் கால்சியம் சத்து குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருப்புக்கீரையைப் பயன்படுத்தினால் மிக எளிதில் கால்சியம் சத்து பற்றாக்குறை நீங்கும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை இந்த பருப்புக்கீரை. இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து நீண்ட கால நோய்களின் பாதிப்பை குறைக்க உதவுகிறது.


வீட்டில் பருப்புக்கீரை செடி வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பருப்புக்கீரை வளர்ப்பு செய்து அதன் அற்புத பயன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

சிவப்பு தண்டுக்கீரையானது அதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் அந்த பெயர் பெற்றது. கீரை வகைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இந்த சிவப்பு தண்டுக்கீரையும் ஒன்று, எனவே தான் பெரும்பாலானோர் சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு செய்கின்றனர். இந்த சிவப்பு தண்டுக்கீரையின் தண்டுகள் மற்றும் இலைகள் ஆகிய அனைத்துப் பகுதிகளுமே உணவாகப் பயன்படுகிறது. நல்ல செழிப்பான இடங்களில் 6 அடி வரை உயரம் வரை வளரக் கூடியது இந்த சிவப்பு தண்டுக்கீரை.
சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்
இந்த பதிவில் சிவப்பு தண்டு கீரை வளர்ப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து விதை சேகரிப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு முறை மற்றும் பயன்கள் மற்றும் சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி காண்போம்.

மண் வளம்

மண் வளம்
செம்மண் சிவப்பு தண்டுக்கீரை செழித்து வளர ஏதுவான மண் ஆகும். நல்ல நிலையில் உள்ள செம்மண் 40 %, நன்கு மக்கிய தொழு உரம் 40 % மற்றும் மண்புழு உரம் 20 % ஆகிய மூன்றையும் சேர்த்து மண்கலவை தயார் செய்யவேண்டும். மண்புழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். தயார் செய்து வைத்துள்ள இந்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது சிறிய தொட்டியில் போட்டு நிரப்பி கொள்ளவும்.

சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்தல்

சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு
சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்ய சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசிப்பட்டங்கள் சிறந்தவையாகும். சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இதன் விதைகள் கருப்பு நிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் போட்டு மூடி, அதன் மீது பூவாளிக்கொண்டு நீர் தெளிக்க வேண்டும், அதிகமாக நீர் ஊற்றினால் விதை வெளியே வந்துவிடும் எனவே கவனமாக நீர் ஊற்றவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி

பயிர் பாதுகாப்பு
விதைத்த 2 நாளிலே சிவப்பு தண்டுக்கீரை வெளியே முளைத்து வர தொடங்கிவிடும். நாளாக நாளாக அதன் வளர்ச்சி நன்றாக அமையும். சுமார் 30 நாள் முதல் 40 நாளில் சிவப்பு தண்டுக்கீரையை அறுவடை செய்து கொள்ளலாம். சாகுபடி செய்யும் சமயத்தில் கீரையின் உச்சியில் பூவும், அதனோடு சேர்ந்து விதைகளும் இருக்கும், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு அந்த விதைகளை சேகரித்து வைக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாகவே கீரைகளில் பூச்சிகள் அதிகமாக காணப்படும். இந்த பூச்சி தாக்குதலால் சிவப்பு தண்டுக்கீரையின் வளர்ச்சி தடைபட கூடும். இந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்ய முடியும். இஞ்சி, பூண்டு கரைசலை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் படிப்படியாக குறைந்து விடும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்

  • சிகப்பு தண்டுக்கீரை கீரையை பொரியல் அல்லது கூட்டு செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாமல் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்.
  • பித்த நீரின் பாதிப்பால் உடலில் ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றை எளிமையான முறையில் இந்த சிகிப்பு தண்டுக்கீரை சரிசெய்யும் திறன்கொண்டது.
  • சிவப்பு தண்டுக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க வல்லது, உடல் உஷ்ணத்தால் சிரமப்படுகிறவர்கள் சிவப்பு தண்டுக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் பெறலாம்.
  • சிலருக்கு உடற்பருமன் அதிகமாக இருக்கும், எவ்வளவு தான் முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த சிவப்பு தண்டுக்கீரை அரும்மருந்தாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துகொண்டுவந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட இந்த சிவப்பு தண்டுக்கீரையை மாடித்தோட்டத்தில் வளர்த்து அதன் முழு பலன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது மிக எளிதாகும். கடுகு கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. குட்டிக் கடுகு குறையாத நன்மைகள் எனும் கூற்றிற்கு ஏற்ப பல நன்மைகளை உள்ளடக்கியது. உலகனைத்திலும் உள்ள மக்களால் இந்த கடுகு பயன்படுத்தப்படுகிறது,
கடுகு-இலை
இருப்பினும் இந்த கடுகு கீரையை பயன்படுத்துபவர்கள் குறைவே ஆகும். விதையிலிருந்து கடுகுக்கீரையை எவ்வாறு வளர்ப்பது, மாடித்தோட்டத்தில் கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, கடுகுக்கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

விதைக்கும் முறை

கடுகுக்-கீரை-வளர்ப்பு
விதைப்பதற்கு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகே போதுமானது. சிறிதளவு கடுகை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும், அடுத்தநாள் ஊற வைத்த கடுகு சிறிதளவு பெரிதாகி காணப்படும், இச்செயல் கடுகு செடி சீக்கிரம் வளர உதவும்.

கடுகு செடிக்கென்று பிரத்தேக மண்கலவை தேவையில்லை, அனைத்து விதமான மண்ணிலும் இது வளரும் தன்மையை பெற்றது. நெகிழிப்பை அல்லது தொட்டியில் மண்ணை நிரப்பி, அதன் மீது ஊற வைத்து தயார் நிலையில் உள்ள கடுகை பரவலாக போட்டு, லேசாக மண் போட்டு மூடி சிறிதளவு நீர் தெளிக்கவேண்டும். நன்கு வெய்ல் படும் படி வைத்தால் போதும் ஓரிரு நாளில் முளைக்க தொடங்கிவிடும்.

கடுகுக்கீரை வளர்ப்பு தனில் உரமேலாண்மை

உரமேலாண்மை
நன்கு மக்கிய மாட்டு எரு நல்ல இயற்கை உரமாகும். இந்த உரத்தை கடுகுக்கீரையின் வேர் பகுதியில் படும்படி இட்டு நீர் விட வேண்டும். இதன் மூலம் கடுகு செடியின் வளர்ச்சியானது மேம்பட்டு, கடுகுக்கீரை வளர்ப்பு சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கடுகுக்கீரை சாகுபடி

கடுகு-கீரை-சாகுபடி
கடுகு செடி நீளமாக வளரும் தன்மையை பெற்றது. இதன் தண்டுகள் மிக மிருதுவானதாக இருக்கும்.மேலும் கடுகுக்கீரையில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். கடுகுக்கீரையின் வயது தொன்னூறு முதல் நூறு நாட்கள் வரை ஆகும். கடுகு செடி தனில் அதன் நுனியை கிள்ளிவிட்டால் நிறைய கிளைகள் வளர வாய்ப்பு உள்ளது, இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.

வேர்ப்பகுதியில் நீர் தேங்கி காணப்பட்டால் கடுகு செடியின் வளர்ச்சி பாதிக்கும், எனவே நீர் தேங்காமல் நல்ல முறையில் பராமரித்து வந்தால் சுமார் இருபது நாளில் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு கடுகுக்கீரை வளர்ந்துவிடும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

நோய் தாக்குதல்

கடுகுக்-கீரை-வளர்ப்பு
கடுகு இலையில் பூச்சி தாக்குதல் குறைவாகவே இருக்கிறது. கடுகு செடியை பெரும்பாலும் சாற்றை உறிஞ்சும் பூச்சிககள் மட்டுமே தாக்குகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கற்பூரகரைசலை தெளிக்கவும். மேலும் கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பூத்து, கடுகுக்கீரை வளர்ப்பு சிறப்பாக இருக்கும்.

கடுகுக்கீரை பயன்கள்

கடுகுக்-கீரை-வளர்ப்பு-1

  • கடுகுக்கீரை சுவை மிகுந்தது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களை உள்ளடக்கியது. எனவே தான் மக்கள் அதிகளவில் சமையலில் பயன்படுகின்றனர்.
  • கடுகுக்கீரையில் வைட்மின் கே உள்ளதால் இதய ஆரோக்கியம் தனில் முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
  • கடுகுக் கீரையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • காய்கறி சாலட்டுகளில் கடுகு இலையை சேர்த்துக் கொள்ளலாம், மேலும் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகுக்கீரையை சிறிதளவு சேர்த்து கொள்ளும்போது கூடுதல் சுவையை கொடுக்கிறது.
  • கடுகுக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அஜீரண கோளாறு சரியாகும்.

  • கடுகுக்கீரையில் அப்படி என்ன இருக்கு என கேட்போரும் உண்டு, அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரை நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறோம். கடுகுக்கீரை வளர்ப்பு முறை பற்றி பார்த்தோம், நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It