கிவி பழம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் அதிகளவில் நியூசிலாந்தில் பின்பற்றப்பட்டாலும் இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும். சீனாவின் அதிசயப்பழம், சீன நெல்லி என்று அழைக்கப்படும் இப்பழம் நியூசீலாந்தின் தேசியச் சின்னமாக விளங்குகிறது. பழுப்பு நிறத் தூவியைப் போன்ற மேற்பரப்புடன் பார்ப்பதற்கு கிவி பறவையைப் போல இருப்பதால் இது கிவி பழம் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் பசலிப்பழம் என்று அழைக்கப்படுகிறது.
கிவி பழம் செடி வளர்ப்பு, விதையில் இருந்து கிவி பழம் செடி வளர்ப்பு, வீட்டுத்தோட்டத்தில் மற்றும் மாடித்தோட்டத்தில் கிவி பழம் செடி வளர்ப்பது எப்படி, கிவி பழம் நன்மைகள் போன்றவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கிவி பழம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்
திராட்சைக் கொடியைப் போல இதுவும் கொடியாக வளரக்கூடியதாகும். வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான வளமான மண் தேவை. மண்ணின் காரா அமிலத்தன்மை 6.௦ க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவைமாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!! |
கிவிக்கொடியை விதை மற்றும் விதையில்லா முறையில் நடவு செய்யலாம். விதையில்லா முறையில் வேர்விட்ட குச்சிகள், ஓட்டுக்கட்டுதல், மொட்டுக்கட்டுதல் முறையில் உற்பத்தி செய்யலாம்.
சற்றே முற்றிய மற்றும் இளந்தளிர்க் குச்சிகளை வேர்விட செய்து நடலாம். இதற்கு ௦.5 – 1 செ.மீ விட்டம், 10 – 15 செ.மீ நீளம், 4 – 5 மொட்டுக்கள் உள்ள குச்சிகள் நடவுக்கு ஏற்றவை. ஓராண்டு முற்றிய குச்சியில் இருந்து எடுக்கப்படும் குச்சிகள் ஜனவரி,பிப்ரவரியில் நன்கு வேர்விடும். நடவுக்கு வடிகால் வசதியுள்ள நிலமும், முன்பனி குறைந்த தட்பவெப்ப நிலையும் தேவை. இருபாலினத் தன்மையுள்ள தாவரம் என்பதால் 9 பெண் கொடிக்கு 1 ஆண் கொடி வீதம் நட வேண்டும்.
பந்தல் முறையில் நடவு செய்யும் போது செலவு சற்று அதிகம் என்றாலும் அதிக மகசூல் கிடைக்கும். கொடி பந்தல் உயரத்தைத் தொட்டதும் நான்கு புறமும் நன்கு கிளைகளை படரவிட்டுப் பராமரிக்கவேண்டும்.
கவாத்து செய்தல்
தரமான அதிக எடையுள்ள பழங்கள் கிடைக்க கவாத்து செய்தல் அவசியம். முதலாமாண்டில் அடர்ந்துள்ள பக்கக் கிளைகளை வெட்டிவிட வேண்டும். ஓராண்டு கொடியின் கிளையின் அடியிலுள்ள 4-5 மொட்டுக்களே காய்க்கும். குளிர் காலத்தில் காய்த்துள்ள மொட்டுகளில் இரண்டு மொட்டுக்களைக் கவாத்து செய்தால் இரண்டாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கும்.
கோடையில் கவாத்து செய்யும் போது கடைசியாக பழம் உருவான மொட்டுக்கு மேல் 4 -5 மொட்டுக்கள் விட்டு விட வேண்டும். காய்க்காத, நோயுற்ற, பூச்சி வைத்த குச்சிகளை அகற்றி விட வேண்டும். கவாத்து செய்வதால் நல்ல காற்றோட்டம், மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். குளிர் மற்றும் கோடை காலத்திலும் கவாத்து செய்யலாம்.
நீர்ப் பாசனம்
நன்கு காய்க்கும் கொடிக்கு 5 – 6 நாட்களுக்கு ஒருமுறை நீர் அவசியம். கோடையில் 145 முதல் 180 லிட்டர் நீர் தேவைப்படும். கோடையில் பாசனக்குறைபாடு ஏற்பட்டால் மகசூல் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவிஉங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்! |
உரம்
ஓராண்டுக்கு கொடிகளுக்கு 10 கிலோ தொழுஉரம், 500 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்ச்சத்துக்கள் தேவை. முதலில் தொழுவுரத்துடன் தழைச்சத்தைக் கலந்து இட வேண்டும், மணிச்சத்தையும், சாம்பல்ச்சத்தையும் இரண்டு பாகமாகப் பிரித்து பூப்பதற்கு முன்பும், காய்கள் வந்த பின்பும் இட வேண்டும்.
மகசூல்
நடவு செய்த மூன்று ஆண்டுகளில் அறுவடை செய்ய முடிந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே நல்ல மகசூல் கிடைக்கும். அலிசன், புருனோ, மோண்டி போன்ற ரகங்கள் மார்ச் முதல் வாரத்தில் பூக்கத் தொடங்கி மூன்றாம் வாரம் வரை பூக்கும். ஹெவர்ட ரகம் மே முதல் வாரத்தில் தொடங்கி இரண்டாம் வாரத்தில் முடியும். ஒவ்வொரு கிளையிலும் 4 – 6 பூக்கள் இருந்தாலே போதும் நல்ல தரமான பழங்கள் கிடைக்கும்.
கிவி சாகுபடி செய்யும் நாடுகள்
ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கிவி பழ சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரியில் பயிரிடப்படுகிறது.
கிவி பழ மருத்துவ நன்மைகள்
- ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.
- இதயப் பிரச்சனை மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
- செரிமானத் திறனை அதிகப்படுத்துகிறது.
- ஆஸ்துமா குணமாகும் வாய்ப்பு உள்ளது.
- உடல் எடை குறையும்.
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
- மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் உதவுகிறது.
கிவி பழத்தில் உள்ள சத்துக்கள்
கிவி பழத்தில் குளோரைடு, தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளது.
கிவி பயன்கள்
- கிவிப்பூ வாசனைத் திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.
- கிவி மர இலைகள் பன்றி உணவாக பயன்படுகிறது.
- இக்கொடியில் கிடைக்கும் பிசின், கட்டுமானத் தொழில்,மெழுகுத் தாள் போன்றவைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
- கிவி பழம் கொண்டு பழச்சாறு, ஜாம், தேன்மிட்டாய் போன்றப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
பயன்கள் அதிகம் நிறைந்த கிவி வளர்ப்பில் தட்ப வெப்பநிலை மிக முக்கியமாகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் கிவி வளர்ப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடலுக்கு உறுதி வழங்கும் கிவி பழத்தினை உணவில் சேர்த்து நலத்தோடு வாழ்வோம்.