கத்தரிக்காய் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறை, மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்ப்பது எப்படி, கத்தரிக்காய் விதை விதைப்பது எப்படி, வீட்டில் கத்தரி செடி வளர்ப்பது எப்படி, பயன்கள் ஆகியவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்ப்பது எப்படி?
மாடித்தோட்டம் கத்தரிக்காய் செடி வளர்ப்பு செய்வதற்கு தொட்டிகளுக்கென்று தனி அளவு, குறிப்பிட்ட வடிவம் என்று எதுவும் தேவையில்லை. எனவே பிளாஸ்டிக், மண் தொட்டி அல்லது உலோகம் என எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
கத்தரி செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் மண் நிரப்பும்போது, பையின் உடைய நீளத்தில் 1 அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்பிடவேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
7-10 தினங்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் எல்லாம் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.
விதை விதைத்தல்
கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு முதலில் நன்கு முற்றிய கத்தரியில் இருந்து விதைகளை தனித்தனியே பிரித்து சாம்பல்,மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். கத்திரி விதைகளை சாம்பல் கலந்து சேமித்து வைப்பது மூலம் விதைகளை உண்ணும் வண்டுகளிடமிருந்து விதைகளை பாதுகாக்கலாம்.
இவ்வாறு காய்ந்த கத்தரி விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும். கத்தரிக்காய் சாகுபடியில் விதை விதைத்த பிறகு அல்லது நாற்று நட்ட பிறகு பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்
மாடித்தோட்டம் கத்தரிக்காய் வளர்ப்பு முறையில் செடிகளை பாதுகாக்கும் இயற்கை பூச்சி விரட்டியான வேப்பெண்ணெய் கரைசல் மாதம் ஒரு முறை தெளிக்கவும். வேப்ப இலைகளை நன்கு காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
இந்தப்பொடியை செடி ஒன்றுக்கு ஒரு பிடி என செடியின் வேர் பகுதியில் போட்டு கொத்திவிட வேண்டும். இதுவே செடியின் அடி உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.
கத்தரிக்காய் பராமரிப்பு
கத்தரி செடிக்கு பராமரிப்பு அவசியம், கத்தரி செடி தொடர்ந்து 6 மாதம் வரை காய்க்கக்கூடிய செடியாகும், அறுவடை முடிந்த பின் தேவையற்ற இலைகள் மற்றும் கிளைகளை அகற்றி விட வேண்டும்.
அதன் பிறகு மீண்டும் தேமோர் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு கொடுப்பதன் மூலம் செடிகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். கடலைப் பிண்ணாக்குடன் கண்டிப்பாக வேப்பம் பிண்ணாக்கும் கலந்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எறும்புகள் மற்றும் பூச்சிகள் வந்து செடிகள் வீணாகி விடும்.
கடலைப் பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு கரைசலுடன் தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து கொடுப்பதன் மூலம் கத்தரிக்காய் செடி அதிக விளைச்சலைக் கொடுக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
கத்தரிக்காய் அறுவடை மற்றும் மகசூல்
கத்தரி வளர்ப்பு முறைதனில் அதிக பராமரிப்பு தேவை. சரியான பராமரிப்பு இருந்தால் அதிக அறுவடை செய்து நல்ல மகசூல் பெறலாம். கத்தரிக்காய் நடவு செய்ய குறிப்பிட்ட பட்டம் என்றும் ஏதுமில்லை ஆனாலும் ஆடி பட்டதில் விதைக்கும் பொது அதிக மகசூல் எடுக்கலாம்.
கத்தரிக்காய் காய்ப்பு குறைந்தது ஆறு மாதத்திற்க்கு குறையாமல்
இருக்கும். ஒரு ஏக்கரில் ஒரு நாளைக்கு 100 கிலோவில் இருந்து 150 கிலோ வரை அறுவடை செய்யலாம். விழாக்காலங்களில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ 80 வரை விற்பனை ஆகும். கத்தரிக்காய் ரகத்திற்கு ஏற்ப அறுவடை நாட்கள் மாறுபடும்.
கத்தரிக்காய் செடி நோய்கள்
கத்தரிக்காய் சாகுபடியில் நோய்த் தாக்குதல் சற்று அதிகமாகவே காணப்படும், முறையான பராமரிப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
ஹட்டா வண்டு, அசுவினி, தண்டு மற்றும் காய் துளைப்பான், சிகப்பு சிலந்தி, வெள்ளை ஈக்கள், சாம்பல் மூக்கு வண்டு, சிற்றிலை நோய், வேர்முடிச்சு நூற்புழு போன்ற பூச்சிகள் ஏற்படுத்தும் நோய்கள் அதிகம். வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு போன்றவற்றை சரியான அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
கத்தரிக்காய் வளர்ப்பு மற்றும் பயன்கள்
1.அடர்நீலம் மற்றும் பழுப்பு நிறக் கத்தரிக்காயின் தோளில் உள்ள தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
2.முதல் கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.
3.வாதநோய், ஆஸ்துமா, சளி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
4.உடல் பருமனைக் குறைக்கிறது.
5.இதில் வைட்டமின் பி உள்ளதால் இதய நோய் வருவதைத் தடுக்கிறது.
6.மூச்சுவிடுவதில் சிரமம், தோல் மரத்துவிடுதல் போன்றப் பிரச்சனைகள் சரியாகிறது.
7.இதில் வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மன அமைதியைத் தருகிறது.
கத்தரிக்காய் செடியில் காய் பிடிக்க டிப்ஸ்
1.ஆடிப் பட்டத்தில் கத்தரி விதைப்பது நல்லது.
2.கோடைக் காலத்தில் விதைப்பதைத் தவிர்த்து மழைக் காலத்தில் விதைப்பது நல்லது.
3.விதை நேர்த்தி செய்த பின் விதைப்பது அதிக காய்கள் காய்க்க உதவுகிறது.
4.சோற்றுக் கற்றாழை நீரை கத்தரிக்காய் செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றுவதால் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி அதிக காய் பிடிக்க உதவுகிறது.
இந்த கட்டுரையில் கத்தரிக்காய் பயிரிடும் முறை மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடிசெய்து, ரசாயன கலப்பற்ற முறையில் விளைவித்து கத்தரிக்காய் அதன் முழு பயன்களையும் பெற்று குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.