Tag

எளிய முறையில் பலா வளர்ப்பு

Browsing

பலா வளர்ப்பு முதலில் எங்கு தோன்றியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியா, கென்யா, பர்மா, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

பலா வளர்ப்பு வரலாறு

தென்னிந்தியாவில் மாம்பழம் மற்றும் வாழைப்பழத்திற்கு அடுத்ததாக பலாப்பழமும் அதிகளவு வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் மற்ற தோட்டங்களில் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. தாய்லாந்தில் படத்திற்காகவும்,இலங்கையில் மரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.

பலாமரம் உலகின் சில இடங்களில் பழங்களின் அரசன் என்று அழைக்கப்பட்டாலும் சில இடங்களில் பலாப்பழங்கள் பயன்படுத்தாமல் குப்பையில் வீசப்படுகின்றன. சில இடங்களில் மட்டுமே பலா வளர்ப்பு முறையாக விவசாய முறைப்படி வளர்க்கப்படுகிறது.

பலாவின் ரகங்கள்

தென்னிந்தியாவில் இருவகை பலாக்கள் பயிரிடப்படுகின்றன.
1 .கூழப்பழம்: பெரிய சுவையான விற்பனைக்கேற்ற சுளைகள் உள்ளவை.
2 .கூழச்சக்கா: சிறிய நாறுடைய மிக இனிமையான சுளைகள் கொண்டவை.

மேலும் தேன்பலா என்ற பெயரில் இலங்கையில் விளைவிக்கப்படுகிறது. பலாப்பழம் இலங்கையில் கூழான்பழம், வருக்கன் பழம் என்று அழைக்கப்படுகிறது.சிலோன் அல்லது சிங்கப்பூர் பலா மிக விரைவில் பழம் தரக்கூடிய வகையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்தன.

இந்தியாவில் பல இடங்களில் ஆராய்ச்சிகள் மூலமாக பல உயர்ரக பழங்களும் ,கலப்பின ரகங்களும் பயிரிடப்படுகின்றன.

மண் மற்றும் தட்பவெப்பம்

பலா விதை

நல்ல நீர் வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும். வேர் பகுதியில் நீர் தேங்காமல் இருப்பது பலா மரத்திற்கு அவசியமாகும். அவ்வாறு நீர் தேங்கினால் மரங்கள் பழம் தராமல் போகலாம் அல்லது மரங்கள் வாடி போவதற்கான வாய்ப்பு உள்ளது.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

பலாப்பழத்தின் பயன்பாடுகள்

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் b6, வைட்டமின் சி, மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் சமைக்காமல் அப்படியே உண்ணப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் பலாப்பழங்களின் மணம் விரும்பப்படுவதில்லை.

பலா கன்றுகள்

Jackfruit-leaves

பலாமரம் விதைகள் மூலம் வளர்க்க முடியும். மேலும் விதைகளை நீரில் நன்கு ஊற வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை உடனடியாக நடவில்லை எனில் விதைகள் அப்படியே வேர் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக பலா மரங்கள் 21 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. பலா மரங்களின் அனைத்து பாகங்களிலும் பிசுபிசுப்புடன் பால் போன்ற திரவம் வடியும். பலா மரங்கள் காயிப்பதற்கு 3 முதல் 7 வருடங்கள் வரை ஆகும்.

பூ மற்றும் காய்

பலா மரம் பூ

பலாமரத்தில் ஆண் பூக்கள் கிளைகளின் நுனியில் பூக்கும். பெண் பூக்கள் மரங்களின் தண்டின் அடிப்பகுதியில் பூக்கும். பூக்கள் காயிப்பதற்கு 3 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். பலா மரங்கள் வருடத்திற்கு 100 முதல் 150 பழங்கள் வரை காய்க்கும்.

பழங்கள் 35 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும். நன்கு முற்றாத காய்களை அதிக அளவில் பால் சிந்துவதன் மூலம் அறியலாம்.

நன்கு முற்றிய பழங்கள் வெளிப்புறத்தில் தடிமனான பச்சை நிற முட்களும் உள்ளே மஞ்சள் நிற சுளைகளும் மற்றும் வெளிர் நிற கொட்டைகளை கொண்டும் இருக்கும். பலாப்பழங்கள் அறுவடை காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும்.

இந்தியா தவிர மற்ற நாடுகளில் பலாவின் பயன்

இந்தியா அல்லாமல் இலங்கையிலும் பலாப்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இங்கே பழமாக மட்டும் அல்லாமல் காய்கள் சமைத்தும் உண்ணப்படுகிறது. இலங்கையில் பலா பண்பாட்டுடன் தொடர்புடைய உணவுப்பொருளாக கூறுகின்றனர்.

மேலும் பலாவை நான்கு பருவங்களாக பிரிக்கின்றனர்.

இளம் பருவம் ( காய்)

இதில் பலாக்காய் மிகவும் இளம் பருவமாக இருக்கும். காய்கள் 6 முதல் 8 அங்குலம் வரை இருக்கும். இலங்கையில் இதனை பொலஸ் என்று அழைக்கப்படுகிறது.மேலும் காய்கள் அசைவ உணவுக்கு இணையாக சமைத்து உண்ணப்படுகிறது.

கொத்து எனப்படும் நடுப்பருவம்

இது பலாக்காய் சுளைகள் உருவாவதற்கு முந்தைய நிலை, இதில் தோல் நீக்கப்பட்டு கத்தியால் கொத்தப்பட்டு பின்னர் சமைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் ஈர பலாக்காய் பொரியல் என்று அழைக்கப்படுகிறது.

முற்றிய பருவம் எனப்படும் மூன்றாம் நிலை

இது பழம் பழுப்பதற்கு முந்தைய நிலை, இதில் சுளைகள் பழுப்பான வெள்ளை நிறத்தில் இருக்கும். இவை சமைத்து உண்ணப்படுகிறது.

பழம் எனப்படும் நான்காம் நிலை
பலா பழம்

இதில் பழம் நன்கு பழுத்த நிலையில் இருக்கும். இது சமைக்காமல் அப்படியே உண்ணப்படுகிறது. சமைத்தும் பல உணவுகள் தயாரிக்கபடுகிறது.

இலங்கையில் பலா

1977 ஆம் ஆண்டு இலங்கையில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்ட பொது மக்கள் பலாக்காய்கள் மற்றும் பலாப்பழங்களை உண்டு வாழ்தனர் என்று வரலாறு உள்ளதாக கூறுகின்றனர்.

பலா மரத்தின் பயன்கள்

பலாமரங்கள் வீட்டு உபயோக பொருட்கள் செய்ய பயன்படுகின்றன, மேஜை, கதவு போன்றவை செய்யப்பயன்படுகின்றன. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா அதிகம் பயிர் செய்யப்படுகிறது இங்கிருந்து சேலம், சென்னை போன்ற மாவட்டங்களுக்கு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளாவிலும் பலா அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.

பலா பழத்தின் தீமைகள்

எதிலும் நன்மை உள்ளதை போலவே தீமைகளும் இருக்கும், அதே போல இதிலும் தீமைகள் உள்ளன. பலாப்பழத்தின் எந்த பகுதியாக இருந்தாலும் அளவுடன் உண்பது நல்லது. இல்லையென்றால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற தொல்லைகளை ஏற்படுத்திவிடும்.

Pin It