எலுமிச்சை வளர்ப்பு என்பது எளிய முறையில் அனைவரும் செய்யக்கூடியது. எளிய முறையில் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்ட முடியும். எலுமிச்சை மரம் எப்படி வளர்ப்பது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
எலுமிச்சை செடி வளர்ப்பு முறை
சிட்ரஸ் அவுரான்சி போலியா என்பது எலுமிச்சை மரத்தின் தாவர பெயர் ஆகும். இது ரூட்டேசியே எனும் தாவர குடுமபத்தை சேர்ந்தது ஆகும். எலுமிச்சையை பொறுத்தவரை இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே மங்கள நிகழ்ச்சிகள், வழிபாடுகள், திருவிழாக்கள் என அனைத்து சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளிர்பானம் தயாரிக்கவும்,சமையலுக்கும் பயன்படுகிறது. இப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் இலைகள் பயன்படுகிறது.
ஆரஞ்சு, கொடி எலுமிச்சை, நார்த்தை, பப்ளிமாஸ் போன்ற எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்த இந்த பழங்கள் உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை, வேலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இப்பழங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
எலுமிச்சை வகைகள்
மஞ்சளாகவும், உருண்டையாகவும் இருப்பது சாதாரண எலுமிச்சை அல்லது செடி எலுமிச்சை எனப்படுகிறது. பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சற்று பெரியளவில் இருப்பது கொடி எலுமிச்சை அல்லது லெமன் எனப்படுகிறது. இவற்றில் சமவெளியில் பயிரிட சாதாரண செடி எலுமிச்சையே ஏற்றதாகும்.
எலுமிச்சை பயிரிடுவதற்கான தட்ப வெப்பநிலை
எலுமிச்சை வெப்ப மண்டல பயிராகும். கடல் மட்டத்திலிருந்து 3000 அடி வரையுள்ள இடங்களில் விளையக்கூடியது. கீழ்பழனிமலை, சிறுமலை, சேர்வராயன்மலை, கொல்லிமலை, பச்சைமலை மற்றும் கல்வராயன்மலை பகுதிகளில் மானாவரிப்பயிராக விளைகிறது. மிதமான குளிருள்ள ஈரப்பதம் நிறைந்த இடங்களில் நன்கு வளரக்கூடியது.
வறண்ட நிலம் மற்றும் வறண்ட கால நிலையிலும் வளரக்கூடியது. மிதமான பனிப்பொழிவு உள்ள இடங்களில் எலுமிச்சை வளராது. 16 முதல் 28 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பமுள்ள இடங்கள் எலுமிச்சை நன்கு வளர ஏற்ற சூழ்நிலையாகும்.
எலுமிச்சை பயிர் செய்ய சரியான மண்வளம்
வேர்கள் நிலத்தின் மேலாகவே இருப்பதால் நீர் தேங்கினால் அழுகி விடும். செம்மண் கலந்த மணற்பாங்கான தோட்டக்கால், வடிகால் வசதியுள்ள இருமண் நிலங்கள் ஏற்றவை. குளம் ,ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் எலுமிச்சை வளராது.
கோடையில் வெடிப்புகள் தோன்றும் களிமண் நிலம், பாறை படிவங்கள் மேலாக உள்ள நிலம், களர் உவர் நிலம் ஆகியனவும் எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றது அல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.8 வரை இருக்க வேண்டும்.
எலுமிச்சை ரகங்கள்
போனி பிரேய் என்பது நீளமான, மெல்லிய தோல் கொண்டது, ஆனால் இதில் விதை இருக்காது. இவை கலிபோர்னியாவின் சான்டியோகே மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
யுரேகா எலுமிச்சை ஆண்டு முழுவதும் வளர்கின்ற ஒரு தாவரமாகும். இது பழங்களையும், மலர்களையும் ஒன்றாக ஆண்டு முழுவதும் தரக்கூடியது. எனவே இதற்கு நான்கு பருவங்களின் தாவரம் என்ற பெயரும் உண்டு. இளஞ்சிவப்பு சதையுடன் பச்சை மற்றும் மஞ்சள் நிற வெளிப்புற தோல் கொண்ட எலுமிச்சை பழமாகும்.
இத்தாலியில் எலுமிச்சை மிகவும் பெயர் பெற்றது. மேலும் அமெரிக்காவில் மெயர் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இப்பழம் யுரேகா எலுமிச்சைகளை காட்டிலும் மெல்லிய தோல், சிறு அமிலத்தன்மை குறைவாக உள்ளது.
பயன்கள்
இந்தியாவை பொறுத்தவரை எலுமிச்சை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் ஊறுகாய்கள், மருந்துகள், மிட்டாய்கள், பழப்பாகு போன்றவை தயாரிக்கவும், நறுமண எண்ணெய்கள், சோப்புகள் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.
நாம் எந்த மரம் வளர்த்தாலும் அதற்கு எப்படி நீர், காற்று, சூரிய ஒளி தேவையோ அதே போல சரியான நேரத்தில் சரியான அளவில் உரம் இடுதல் மிகவும் முக்கியம்.
நைட்ரஜென்
சிட்ரஸ் வகை மரங்களுக்கு நைட்ரஜன் அதிகம் தேவை. இவை இயற்கை உரங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே நம் வீட்டில் தயாரிக்கும் கம்போஸ்ட்கள், மண்புழு உரங்கள், கால்நடை உரங்கள், மற்றும் இலைதழைகளில் அதிகளவில் உள்ளது.
பாஸ்பரஸ்
நைட்ரஜனுக்கு அடுத்தபடியாக எலுமிச்சைக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய சத்து பாஸ்பரஸ் ஆகும். இதேபோல பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, சாம்பல்சத்து போன்றவையும் அதிகம் தேவை.
செடிகளுக்கு மாதம் ஒருமுறை உரம் இடுவது நல்லது. அப்படி மாதம் ஒரு முறை முடியவில்லை என்றல் 3 மாதத்திற்கு ஒரு முறை உரமிடுதல் அவசியம்.
கால்நடை சாணங்கள், மண் புழு உரம், மட்கிய உரங்கள், வேப்பம்புண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, கோழி கழிவு மற்றும் பஞ்சகவ்யம் போன்றவையும் இடலாம். இவை மட்டுமின்றி புளித்த மோர் எலுமிச்சைக்கு மிகவும் ஏற்றது. எலுமிச்சைக்கு காரத்தன்மை அதிகம் தேவைப்படுவதால் புளித்த மோரை செடியின் மேலும் செடியை சுற்றிலும் தெளிக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
எலுமிச்சைக்கு நீர் தேவை அதிகம், எனவே மரத்தை சுற்றி காய்ந்த இலை தழைகள் மற்றும் வைக்கோல் போன்றவை கொண்டு மூடாக்கு இட வேண்டும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு களைகள் முளைப்பதையும் தடுக்கலாம். இந்த மூடாக்கு மட்கி உரமாக மாறி விடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவிஉங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்! |
பூச்சிகள் மற்றும் நோய்த்தடுப்பு
- எலுமிச்சை செடியில் இலைகள் அதிகமாக சுருளும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அவற்றில் சில: பூஞ்சை தொற்று, இலை துளைப்பான் பூச்சி, சரியாக நீர் ஊற்றாமலிருப்பது.
- பூச்சிகளை அழிக்க வேப்பெண்ணை கரைசல் மற்றும் 3ஜி கரைசல் நல்ல பலன் தரும்.
- பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இலைகள் மண்ணில் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
- இலைத்துளைப்பானின் புழு அதிக சேதம் எற்படுத்தும் என்பதால் அதனை வெட்டி எரித்து விடுதல் நல்லது.
- சத்து குறைபாடு காரணமாக இலைகள் மஞ்சளாகும், இதற்கு இரும்பு, மாங்கனீசு, நைட்ரஜன் சத்துக்கள் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
எலுமிச்சை கவாத்து செய்தல்
காய்கள் காய்த்தவுடன் தேவையற்ற கிளைகளை வெட்டி விட வேண்டும். அதாவது கடந்த காய்ப்பு காலத்தில் காய்த்த கிளைகள், நிலத்தை தொடும் கிளைகள் என அனைத்தையும் வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடி அடுத்த அறுவடைக்கு தயாராகும்போது தனக்கு தேவையான சக்தியை புதிய கிளைகளில் செலுத்தி அறுவடைக்கு மரம் தயாராகிவிடும்.
எலுமிச்சை விளைச்சல் மற்றும் அறுவடை
எலுமிச்சைப்பழம் முழுவதும் தயாரானதும் ஒரு மரத்தில் 20 முதல் 30 கிலோ பழங்கள் வரை கிடைக்கும், மற்றும் அடர்த்தியான தோலுடன் 30 முதல் 40 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால் இதன் விலை மிகவும் குறைவே. பண்ணையில் இருந்து வியாபாரிகள் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை வாங்கிக்கொள்வார்கள். எலுமிச்சையை சரியான காலத்தில் அறுவடை செய்வது மிக அவசியம்.
எலுமிச்சை சரியான சமயத்தில் பூ வைத்து காய் காய்க்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு தேவையானதை செய்ய வேண்டும்.
எலுமிச்சை பதியம்
பதியமிடப்பட்ட எலுமிச்சைக்கன்று காய்ப்பதற்கு 3 முதல் 5 வருடங்கள் வரை ஆகும். பதியம் போடப்பட்ட கன்று அதன் தாய் மரத்தை போலவே காய்க்கும். அதனால் தாய் மரத்தை ஆராய்ந்து பார்த்து கன்றுகளை வாங்க வேண்டும். எலுமிச்சை உரம் பொறுத்தவரை இயற்கை உரங்களாக இருப்பது நல்லது.
எலுமிச்சை கன்றுகள் கிடைக்கும் இடம்
நர்சரிகளில் எலுமிச்சை கன்றுகள் கிடைக்கும். முடிந்தவரை நாட்டு எலுமிச்சை கன்றுகள் வைப்பது நல்லது. இயற்கை உரங்களை இடுவது சிறந்தது. நிலத்தில் மட்டுமே எலுமிச்சை வளர்க்க முடியும் என்றில்லை எளிய முறையில் மாடித்தோட்டத்தில் எலுமிச்சை செடி வளர்ப்பு செய்ய முடியும்.