Tag

ஆளி விதைகள்

Browsing

தற்போது கிடைக்கின்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் என்கிற ஆளி விதை. இது லினன் என்கிற நூலிழையைத்தருகின்ற தாவரத்தின் விதை ஆகும். மனித இனத்தால் உண்ணப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த உணவு வகைகளில் ஆளிவிதை ஒன்றாகும். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் ஆளி விதை வளர்ப்பு செய்ததிற்கான குறிப்புகள் இருக்கிறது.
ஆளி விதை வளர்ப்பு
ஆளி விதைகள் சூரியகாந்தி விதைகள் போல பழுப்பு நிறத்தில் இருக்கின்ற விதைகள் ஆகும். கடினமாகவும், மேற்பகுதி சற்று மொறுமொறு என்றும் தோற்றமளிக்கும், மேலும் ஆளி விதைகள் கரையக்கூடிய நார்சத்துகளின் மிகச்சிறந்த மூலமாகும். ஆளி விதை வளர்ப்பு செய்வது எப்படி , ஆளி விதையை எப்படி பயன்படுத்த வேண்டும், ஆளி விதையில் உள்ள சத்துகள் மற்றும் ஆளி விதையின் அபார நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை மற்றும் விதைத்தல்

ஆளி விதைகள்
ஆளி விதைகள் பொதுவாக அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது ஆகும். இருப்பினும் அதன் வளர்ச்சியை மேம்படுத்த செம்மண் மற்றும் அதனுடன் மக்கிய தொழுஉரம் இரண்டும் சரிபாதி கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும். பிறகு ஆளி விதைகளை அந்த மண்கலவையில் பரவலாக தூவிவிட்டு லேசாக மண் போட்டு மூடி அதன் மீது நீர் தெளிக்கவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆளி விதை வளர்ச்சி மற்றும் அறுவடை

ஆளி விதை வளர்ப்பு
ஆளி விதைகளை விதைத்த 5 நாட்களில் சிறு சிறு தளிர்களாக காணப்படும், இந்த நிலையில் கூட அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். 40 நாட்களில் செடி நன்றாக வளர்ந்திருக்கும், 60 நாளில் பூ தோன்ற தொடங்கிவிடும், 65 நாளில் இருந்து காய் காய்க்க ஆரம்பிக்கும். 100 நாட்களில் அறுவடை செய்யலாம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆளி விதை பயன்கள்

விதைகள்

  • ஆளி விதை பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் தொந்தரவுகளை சமாளிக்க பெண்களுக்குக் கைக்கொடுக்கிறது, மேலும் தினமும் ஆளி விதைகளை பயன்படுத்திவந்தால் கேசப்பிரச்சனைகள் நீக்கி நீண்டு வளரச்செய்யும்.
  • ஆளி விதைகளுக்கு இன்னொரு சிறப்பு பண்பும் இருக்கிறது, அது பிசுபிசுப்பாக மாறிவிடும் குணம். திரவப் பொருளுடன் இந்த ஆளி விதை சேர்த்தால், அது ஜெல்லியைப் போல உருமாறிவிடும். இது குடலுக்கு மிகவும் நல்லது, குடலை சுத்தப்படுத்தி மலம்கழித்தலை இலகுவாகும், மேலும் நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க செய்கிறது, இதன் மூலமாக உணவுதனில் உள்ள ஊட்டச்சத்துகளை முழுமையாக கிரகிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகிறது என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரை நோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆளி விதையை தினமும் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
  • எரிச்சலை தவிர்த்து விடுதல் மற்றும் இதயத் துடிப்புதனை சீராக்குதல் போன்றவற்றை செய்கின்ற திறன் கொண்டதாக ஒமேகா-3 இருப்பதை ஆய்வுகள் கூறுகின்றன. ஒமேகா-3 அதிகம் நிரம்பியுள்ள ஆளி விதைகள் இதய தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்த்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பெரிதும் அச்சுறுத்தும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆளி விதைகள் குறைக்கிறது மற்றும் ஆளிவிதைகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


ஆளி விதைகள் வளர்ப்பது எப்படி மற்றும் ஆளி விதை செய்யும் அற்புதங்கள் ஆகியவற்றை பார்த்தோம். நீங்களும் அந்த மேற்கண்ட முறையில் ஆளி விதை வளர்ப்பு செய்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It