Tag

ஆரஞ்சு செடிகளை

Browsing

ஆரஞ்சு செடி எலுமிச்சை (சிட்ரஸ்) குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது தோடம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டிலேயே ஆரஞ்சு செடி வளர்ப்பு செய்வதன் மூலம், அதிகமான சத்துகள் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தில் விஷத்தன்மை உள்ள வேதிப்பொருட்கள் சேராமல் அதன் பலன்களை நாம் பெறமுடியும் மேலும் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற ஆரஞ்சு பழத்தை கொடுக்கலாம்.
ஆரஞ்சு செடி வளர்ப்பு
இந்தியாவில் தமிழ்நாடு, மகராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு பழமானது பெருமளவில் விளைகிறது. நம் தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு பரியிடப்படுகிறது. ஆரஞ்சு பழம் பயிரிடும் முறை, ஆரஞ்சு பயன்கள், மாடி தோட்டத்தில் ஆரஞ்சு செடி வளர்ப்பு மற்றும் ஆரஞ்சு பழம் சாகுபடி முறைகள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தேர்வு

ஆரஞ்சு விதை
ஆரஞ்சு பழத்திருந்து எடுத்த விதைகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது பழத்தை வெட்டிய பிறகு விதைகளை நீண்டநேரம் வைத்திருக்க கூடாது, உடனே அதை நாற்றுகள் தயார் செய்யும் குழித்தட்டுகளில் மண்கலவையுடன் சேர்த்து விதைப்பு செய்திட வேண்டும். நாற்றுகள் முளைத்து வந்தவுடன் அதை தனியே எடுத்து நடவு செய்யவேண்டும். இது ஆரஞ்சு பழத்தில் இருந்து செடி வளர்க்கும் முறை ஆகும்.

விதைகளில் இருந்து ஆரஞ்சு செடி வளர்ப்பது போல, ஓட்டுக்கட்டிய நாற்றுகளில் இருந்தும் கூட ஆரஞ்சு செடி வளர்க்கலாம் ஆனால் விதையில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடித்து வளரும், இந்த ஆணி வேர் தான் மரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். எனவே விதைகளில் இருந்து செய்யும் ஆரஞ்சு செடி வளர்ப்பு முறையே சிறந்தது.

மண்கலவை மற்றும் நடவு செய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மண்புழு உரம் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பிறகு குழித்தட்டுகளில் இருக்கும் நாற்றுகளை எடுத்து இந்த மண்கலவையில் நடவு செய்யவும். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆரஞ்சு செடி நடவு செய்யலாம்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆரஞ்சு செடி வளர்ச்சி

ஆரஞ்சு மரம்
ஆரஞ்சு செடி வளர்ப்பு வீட்டுத்தோட்டம்தனை மிக அழகாக்கும். ஆரஞ்சு செடி நன்கு வளரும் வரை பராமரிப்பு மிக அவசியமாகும். களைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், காய்ந்து போன கிளைகள், பக்க கிளைகள் ஆகிவற்றை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். இயற்கை உரங்களை அளிப்பதே சிறந்தது. ஆரஞ்சு மரம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை கொடுக்கத்தொடங்கும். ஆரஞ்சு மரம் வளர்ப்பு செய்வதன் மூலம் 50 ஆண்டுகள் வரை அதன் பழங்களை பெற முடியும்.

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

ஆரஞ்சு செடி வளர்ப்பு

  • ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது நமது இரத்தத்தில் இருக்கும் அவசியமற்ற சர்க்கரையின் அளவை குறைக்க உதவிபுரிகிறது. ஆகையால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினசரி ஒரு ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும், குறிப்பாக இருதய கோளாறு மற்றும் இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாகும். ஆரஞ்சு பழத்தை உண்டுவந்தால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கிவிடும்.
  • ஆரஞ்சு பழம்தனில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளதால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும், மேலும் இது நோய் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
  • தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறவர்கள் இரவு உறங்கசெல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றுடன் தேன் கலந்து உண்டுவந்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
  • ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதன் பயனாக மேனி எப்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்கும்.


ஆரஞ்சு செடிகளை வீட்டில் முளைக்க வைக்க உதவும் வழிமுறைகளை கண்டோம். நீங்களும் மேற்கண்ட முறையில் ஆரஞ்சு வளர்த்து, அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It