கொல்லங்கோவை எனப்படும் ஆகாச கருடன் கிழங்கை வளர்ப்பது மிக எளிது. இதை வளர்க்க குறைந்த பராமரிப்பே போதுமானது. மேலும் இந்த கிழங்கு பல பயன்களை தர வல்லது. இந்த ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு முறை மற்றும் ஆகாச கருடன் கிழங்கு பயன்கள், ஆகாச கருடன் கிழங்கு எடுப்பது எப்படி ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
தோற்றம்
ஆகாச கருடன் கிழங்கின் இலை கோவை பழத்தின் இலை போன்று காணப்படும். இந்த கிழங்கின் கொடி மிக மென்மையாக இருக்கும். மேலும், ஆகாச கருடன் கிழங்கு பூ அளவில் சிறிதாகவும், மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். பூ பூத்த அடுத்த நாளே உதிர்ந்து விடும். உதிர்ந்த இடத்தில் சிறியதாக காய் தோன்றும். பிறகு அது சிவப்பு நிறத்துடன் பழுத்து, அதுவும் ஓரிரு நாளில் விழுந்து விடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு பெயர் காரணம்
ஆகாச கருடன் கிழங்கை வாசலில் கட்டி தொங்க விட்டிருப்பதை பாத்திருப்பீர்கள். அப்படி கட்டி தொங்க விடும் பொழுது பார்ப்பதற்கு கருடன் போல இருப்பதால், இதை ஆகாச கருடன் கிழங்கு என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான காரணம், பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாக இந்த கிழங்கு பயன்படுவதால், பாம்பின் எதிரியாக இருக்கும் கருடனை குறிக்கும் விதமாக அவ்வாறு அழைக்கப்படுகின்றது.
ஆகாச கருடன் கிழங்கை எப்படி கண்டுபிடிப்பது
ஆகாச கருடன் கிழங்கு சமவெளிப் பகுதியிலும், வேலி ஓரங்களிலும் பூமிக்கு அடியில் கிடைப்பதாகும். இலையை கொண்டு ஆகாச கருடன் கிழங்கு செடி தனை அடையாளம் காணலாம், ஆகாச கருடன் கிழங்கின் மீது காயம் ஏதும் படாமல் தோண்டி வெளியே எடுக்க வேண்டும், ஒருவேளை காயம் பட்டால் துளிர்க்காமல் போக வாய்ப்பு உண்டு.
நடவு செய்தல்
மண் மற்றும் நன்கு மக்கிய மாட்டு எரு இரண்டையும் கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். தோண்டி எடுத்து வைத்துள்ள ஆகாச கருடன் கிழங்கை அந்த மண்கலவையில் வைத்து நடவு செய்யவும். கிழங்கு மறையும் அளவிற்கு மண்ணை கொண்டு மூடினாலே போதுமானது. சிறிது நீர் தெளித்து வெயிலில் வைக்கவேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பைஉங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு மற்றும் சாகுபடி
நடவு செய்த 45 நாளில் கொடியானது நன்கு வளர தொடங்கி இருக்கும். பின்பு 60 நாளில் பூ வைக்க தொடங்கும். ஆனால் கிழங்குகள் வேர் பகுதியில் தான் காணப்படும். சிலர் வீடு வாசலில் கட்டிருக்கும் போது காற்றின் ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு சிறிது வளரும் ஆனால் மண்ணில் வளரும் அளவுக்கு வளர்ச்சி இருக்காது.
ஆகாச கருடன் கிழங்கு நன்மைகள்
- பாம்பு கடித்துவிட்டால், இந்த ஆகாச கருடன் கிழங்கை எலுமிச்சை பழம் அளவிற்கு சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்பட்டு விஷத்தன்மையின் வீரியம் குறையும், பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றிவிடலாம்.
- பொதுவாக இதை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவார்கள், அப்படி தொங்க விட்டால் வீட்டின் வாஸ்து குறைபாடுகள் குறைந்து, தீய சக்திகளை ஈர்த்துக்கொள்ளும், கண் திருஷ்டி மற்றும் பில்லி சூன்யம் விலக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
- இளைத்துப்போன உடலைத் தேற்றவும், உடலில் உஷ்ணத்தை குறைக்கவும் உதவுகிறது, ஆனால் சித்த மருத்துவரிடத்து ஆலோசித்து பிறகு சாப்பிட வேண்டும்.
- சீதப்பேதி பிரச்சனை சரியாக, ஐந்து மில்லி ஆகாச கருடன் கிழங்கு பொடிதனை நூறு கிராம் தண்ணீரில் கலந்து அதை காய்ச்சி காலை மற்றும் மாலை இருவேளையும் குடித்துவர குணமாகும்.
- ஆகாச கருடன் கிழங்கு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. எனவே தான், சித்தர்கள் இதை மகா மூலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
- கால்நடைகளுக்கு நோய் எதிர்சக்திக்காக இந்த கிழங்கு கொடுக்கப்படுகிறது.
- ஆகாச கருடன் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை, சரும நோய்களுக்கு மேற்பூச்சாக பூசி குணப்படுத்தலாம்.
எளியமுறையில் வளர்க்க கூடிய இத்தகைய அற்புத சக்தி கொண்ட ஆகாச கருடன் கிழங்கை வளர்த்து, அதன் முழு பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.