அவகோடா வளர்ப்பு வணிக ரீதியாக தற்போது அதிக பிரபலமாகி உள்ளது, இப்பழமானது தனிப்பட்ட சுவை மற்றும் மணத்தை உடையது. நம் நாட்டில் இப்பழம் வெண்ணைப்பழம் அல்லது பட்டர்ப்ரூட் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் ஆனைக்கொய்யாப்பழம் என்று அழைக்கப்படுகிறது.
இப்பழங்கள் தென்னாப்பிரிக்கா, பெரு, சிலி, வியட்னாம், இந்தோனேஷியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் விளைகிறது என்றாலும் இதன் தாயகம் மெக்ஸிகோ ஆகும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
இப்பழம் உருண்டையாகவோ அல்லது பேரிக்காய் வடிவத்திலோ காணப்படுகிறது. இதன் தோல் அடர் பச்சை வண்ணத்தில் தடிமனாக இருப்பதால் முதலைபெரி என்றும் அழைக்கப்படுகிறது.
அவகோடா செடி வளர்ப்பு, வெண்ணைப்பழம் மரம் வளர்ப்பது எப்படி, அவகோடா பழம் நன்மைகள், அவகோடா பழம் சாகுபடி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அவகோடா வளர்ப்பு மற்றும் சாகுபடி
வளமான மண்ணும், நல்ல நீர்ப்பாசனமும் இருந்தால் போதும் இம்மரம் நன்றாக செழித்து வளரும், அவகோடா மரம் 20 முதல் 30 அடி உயரம் வரை வளரும். குளிர் காலங்களில் பச்சை நிறப் பூக்கள் பூத்து, 8 ல் இருந்து 10 மாத கால அவகாசத்தில் பச்சை நிறக் காயாக மாறுகிறது.
நன்கு பழுத்த பின்பு பழுப்பு மற்றும் அடர் ஊதா நிறத்திற்கு மாறுகிறது, ஆனால் அவகோடா காய்கள் நன்கு விளைந்தவுடன் காயாகவே பறிக்கப்பட்டு பழுக்க வைக்கப்படுகிறது.
செடிகள் வளரும் இடத்தில் கண்டிப்பாக வெப்பநிலை 25 டிகிரிக்கு குறைவாக இருக்கக் கூடாது, நல்ல காற்று சுழற்சி கொண்ட இடமே அவகோடா வளர்வதற்கான சிறந்த இடமாகும்.
கோடை காலத்தில் செடிகளுக்கு வரம் இரு முறையும், குளிர்காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 20 நாளில் ஒரு கிலோ மண்புழு உரம் சேர்க்க வேண்டும், ஒரு மரத்திற்கு 60 கிலோ தொழு உரம் போதுமானது. அவகோடா மரத்தைப் பொறுத்தவரை விதைகள் முதல் இலைகள் வரை அனைத்தும் பயன் தரக்கூடியது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
அவகோடா மகசூல்
ஒரு பழம் 500 கிராம் முதல் 1 கிலோ கிராம் வரை இருக்கும். ஒரு மரத்தில் 200 முதல் 300 காய்கள் வரை காய்க்கும், அவகோடா பழம் விலை ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை ஆகும்.
அவகோடா பயன்கள்
- அவகோடா பழங்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
- முக அழகுக்காக அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.
- வெளிநாடுகளில் நட்சத்திர ஓட்டல்களில் சத்து பானமாகவும், சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணைக்கு பதில் அவகோடா பழங்கள் பயன்படுத்தப்படுகிறது.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் இந்த பழத்தில் அதிகளவு உள்ளது.
- உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
- பழங்களில் அதிகளவு கலோரி உள்ள பழம் இதுவாகும்.
- இப்பழத்தை உண்பதால் மாரடைப்பு, இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
- சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவை சரியாகப் பப்பாளிப் பழத்துடன் இந்த பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்.
- தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவகோடா பழத்தின் எண்ணையை உடம்பில் தேய்த்து வர நோய் சரியாகும்.
- அவகோடா பழம் உண்பதால் குடல்கள் சுத்தப்படுத்தப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
- வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்ப்பார்வைத் திறனை அதிகப்படுத்துகிறது.
அவகோடா பழத்தினை தேர்வு செய்யும் முறை
- நல்ல மணமுள்ள, கைகளில் வைத்து அழுத்தினால் மென்மையாகவும், வெளிப்புறத்தில் காயங்கள் இல்லாத நடுத்தர அளவுடைய பழத்தினை தேர்வு செய்யவும். தொட்டால் மிகவும் கடினமாக உள்ள பழத்தினை தேர்வு செய்ய வேண்டாம்.
- பழுக்காத அவகோடா பழங்களை அறையின் வெப்பநிலையில் வைத்து பழுத்தப்பிறகு அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.
- பால்பொருட்களினால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் இந்தப்பழத்தினை தவிர்க்கவும்.
- இந்தப்பழம் ஐஸ்கிரீம், பழச்சாறு தயாரிப்பிலும் பயன்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் அவகோடா பழத்தினை உணவில் சேர்த்து நலத்தோடு வாழ்வோம்.