Tag

அகத்தி

Browsing

நமது மாடி தோட்டங்களில் வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளில் அகத்திக்கீரை வளர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது, எனவே தான் இது அகத்திக்கீரை எனும் பெயர் பெற்றது. அதனால் தான் கால்நடைகளுக்கு தீவனத்தில் அகத்திக்கீரையை கலந்து கொடுக்கின்றார்கள். நாமும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு இருமுறையோ அகத்திக்கீரையை சாப்பிடுவது நமது உடல்நலத்தை சீராக்க உதவும்.
அகத்திக்கீரை-வளர்ச்சி
அகத்தைக் காக்கும் அகத்திக்கீரை விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் அகத்திக்கீரை வளர்ப்பு முறை, அகத்திக்கீரை பயன்கள் மற்றும் அகத்தி கீரை சாகுபடி ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

அகத்திக்கீரை பயிரிடும் முறை

மாடி தோட்டத்தில் அகத்திக்கீரை பயிரிட முற்படும் போது சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அகத்திக்கீரை 20 முதல் 25 அடி உயரம் வரை வளரும் என்பதால் சிறிய அளவிலான நெகிழி பையை விடுத்து பெரிய நெகிழிப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அதில் மண்கலவையை நிரப்பி விதைகளை நடவு செய்ய வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

அகத்திக்கீரை வளர்ச்சி

தீவனம்
அகத்திக்கீரை விதைத்த 4 முதல் 7 நாட்களுக்குள் முளைத்து வர தொடங்கிவிடும். 50 நாட்களில் நல்ல வளர்ச்சியை அடைத்திருக்கும், அப்போது செடியின் நுனியை கிள்ளி விடவும். கிள்ளி விட்டபிறகு மேல் நோக்கி வளர்வது நின்று பக்க கிளைகள் வளர்ந்து அடர்த்தியாக காணப்படும், இவ்வாறு செய்வதால் மாடி தோட்டத்தில் பராமரிக்க வசதியாக இருக்கும்.

இந்த அகத்தி செடியிலிருந்து கிடைக்கும் அகத்தி கீரை மற்றும் அகத்திப் பூ மிகச் சிறந்த உணவாகும், அதிக சத்துக்கள் இதில் உள்ளது மேலும் அகத்தி பலதரப்பட்ட மண்ணிலும் வளரும் திறன் கொண்டது.

கால்நடை தீவனம்

அகத்திக்கீரை-பயன்கள்
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் என்று பலருக்கும் எண்ணம் இருக்கும், பசு மாட்டிற்கு மட்டுமல்ல அனைத்து கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக அகத்தி கீரை இருக்கிறது. இந்த அகத்தியை ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பன்றி பண்ணை போன்ற பண்ணை விலங்குகளுக்கும் அகத்தியை கொடுக்கலாம்.

நோய் தாக்குதல்

அகத்தி கீரையில் சொல்லுமளவில் பெரிதாக எந்த நோய் தாக்குதலும் ஏற்படாது, அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் நடைபெறக்கூடும். அசுவினி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை நீரில் கரைத்து தினசரி தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் சரியாகி விடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

அகத்திக்கீரை பயன்கள்

அகத்திக்கீரை-வளர்ப்பு-1

  • அகத்தி கீரையை பற்றி சித்த மருத்துவம் கூறுகையில், அகத்திக் கீரையில் 63 வகையான சத்துகள் இருப்பதாக கூறுகின்றது. அகத்தி செடியின் அனைத்து பகுதிகளும் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் 8.4 சதவிகிதம் புரதமும், 3.1 சதவிகிதம் தாது உப்புகளும் மற்றும் 1.4 சதவிகிதம் கொழுப்பும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
  • அகத்திக் கீரையின் சாறுடன் சிறிதளவு தேன் சேர்ந்து கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள சிறு குழந்தைகளின் உச்சித் தலையில் தடவினால் நீர்க்கோவை பிரச்சனை குணமாகும். அடிபட்ட காயங்களுக்கு அகத்தியை அரைத்துப் பூச புண்கள் ஆறிவிடும்.
  • அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பித்த தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதுடன் உணவு சீக்கிரத்தில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு ஒருமுறையேனும் அகத்திக் கீரை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
  • இதில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக இருக்கிறது, இது எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அகத்தி இலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் பாலில் அரைக் கரண்டி அளவு கலந்து குடித்தால் வயிற்றுவலி சரியாகும்.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அகத்தி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.


அகத்திக்கீரை பயிர் செய்யும் முறை தனை பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் பயிர் செய்து அற்புதம் நிறைந்த அகத்திக்கீரை சாகுபடி செய்து மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It