Category

தோட்டம்

Category

ஸ்ட்ராபெர்ரி வளர்ப்பு மற்றும் சாகுபடி தற்பொழுது நம் நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஸ்ட்ராபெர்ரியின் தாயகம் ஐரோப்பா ஆகும். ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. விதையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்பது எப்படி, வீட்டுத்தோட்டத்தில் மற்றும் மாடி தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி வளர்ப்பு செய்வது எப்படி, ஸ்ட்ராபெர்ரி நன்மைகள் போன்றவற்றைப்ப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஸ்ட்ராபெர்ரி

விதையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்பு

விதை
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள விதைகள் மூலமாகவும் ஸ்ட்ராபெர்ரி செடி வளர்க்கலாம். பொதுவாகவே பழங்களில் உள்ள விதைகள் பழத்தின் உள்ளே இருக்கும், ஆனால் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மட்டும் விதைகள் வெளியே இருக்கும்.

விதை நடவுமுறை-1

நன்கு முதிர்ந்த பழங்களில் உள்ள விதைகளே செடியாக வளரும், எனவே முதிர்ந்த பழங்களில் கருப்பு நிறத்தில் உள்ள விதைகளை எடுத்து கொள்ள வேண்டும். பழத்தைத் தண்ணீரில் அலசி விதைகளை சுலபமாக தனியே பிரித்து எடுத்துக் கொள்ளலாம், தனியாக எடுத்த விதைகளை மெல்லிழைக் காகிதத்தில் வைத்து மடித்து பின்பு அதை ஒரு நெகிழி பையில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் முளைப்பு விடத்தொடங்கும். பின் அதை மண் மற்றும் கோகோ பீட் கலந்த மண்கலவைக்கு மாற்ற நன்கு வளரத்தொடங்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை நடவுமுறை-2

தயார்செய்து வைத்த மண்கலவையில் ஸ்ட்ராபெர்ரி விதைகளை நேரடியாக தூவி விட வேண்டும் அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மண்கலவையில் வைத்துக் கொள்ளலாம். இதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து விட வேண்டும். மண் ஈரப்பதத்தில் இருக்க வேண்டும் என்பதால் கட்டாயம் ஒரு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து விட வேண்டும். விதைகள் சிறியதாக இருப்பதால் தண்ணீரை ஊற்றாமல் தெளிப்பது நல்லது.

15 லிருந்து 30 நாளுக்குள் செடி முளைத்து வர தொடங்கி விடும். மண் மற்றும் விதையின் தன்மையைப் பொறுத்து செடி வளரும் காலம் மாறும். இதன் இலைகள் வட்ட வடிவில் காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி சாகுபடி

ஸ்ட்ராபெர்ரி நடவு
10 சென்ட் இடத்தில் இரண்டடி அகலத்துக்கு மண்ணை வரப்பு போல் வெட்டி கொள்ள வேண்டும். நர்சரி பாய் அல்லது மல்சிங் ஷீட்டை வரப்பின் மேல் போட்டு மூடி விட வேண்டும். 10 சென்டில் 42 வரப்பு வரை வெட்டலாம். ஒரு வரப்பில் 40 முதல் 44 துளைகள் வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு துளையிலும் ஒரு நாற்று நட்டு வைக்க வேண்டும். இதற்கு உரம், ரசாயன மருந்து என்று எதுவும் தெளிக்க கூடாது. வரப்பிலுள்ள துளைகளில் சிறிதளவு சாணம் இட்டால் போதுமானது. தவறாமல் அவ்வப்பொழுது களைகளை அகற்றி விட வேண்டும்.

இவை குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய செடி வகை என்பதால் தண்ணீர்த்தேவை மிகக்குறைவு, எனவே மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

மாடி தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்பது எப்படி?

பழங்கள்
சரியான அளவுடைய ஒரு ஸ்ட்ராபெர்ரி செடியைத் தேர்ந்தெடுக்கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரிகள் ஆழமற்ற வேர் அமைப்புப்பை கொண்டுள்ளது, எனவே ஸ்ட்ராபெர்ரி செழிக்க ஆழமான தொட்டிகள் அவசியமில்லை, இருபது செ.மீ ஆழம் கொண்ட ஒரு தொட்டி போதுமானது.

ஸ்ட்ராபெர்ரிகளுக்கு எவ்வளவு அகலமுடைய தொட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இன்னொரு தேர்வாகும், நீங்கள் எத்தனை ஸ்ட்ராபெரி செடிகளை சேர்ந்தாற்போல் நடவு செய்ய விரும்புகிறீர்களோ அதற்கேற்றாற்போல் அகலமான தொட்டிகளை பயன்படுத்தவும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

முப்பது செ.மீ விட்டம் கொண்ட ஒரு தொட்டியில், மூன்று முதல் நான்கு ஸ்ட்ராபெர்ரி செடிகளை எளிதில் நடவு செய்ய முடியும், நிறைய ஸ்ட்ராபெர்ரி செடிகளை நடவு செய்ய விரும்பினால், நீங்கள் தொட்டியின் அளவை அதிகரிக்க வேண்டும்.

மகசூல்

ஸ்ட்ராபெர்ரி செடி நடவு செய்து 60 நாளில் பூ வைத்துவிடும். 90 நாளில் பழங்களை அறுவடை செய்து விட முடியும். 10 சென்ட்டில் தினமும் 50 கிலோ பழம் வரை எடுக்க முடியும். ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை பழங்களை அறுவடை செய்ய முடியும்.

ஸ்ட்ராபெர்ரியை பொறுத்தவரை 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன, ஆனால் இந்தியாவில் 15 ரகங்கள் தான் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றன. ஸ்டராபெர்ரி குளிர்ப் பிரதேசங்களில்தான் நன்றாக வளரும் என்பதால் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் பயிர் செய்ய முடியும்.

ஸ்ட்ராபெர்ரி நன்மைகள்

பயன்கள்

  • உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது.
  • தோலின் வறட்சியைப் போக்குகிறது.
  • சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
  • பற்களில் உள்ள கறைகளை நீக்குகிறது.
  • தலைமுடி கொட்டுதல்,இளநரை,பொடுகுத் தொல்லை போன்றவற்றைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள சத்துக்கள்

ஸ்ட்ராபெர்ரியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, ஐயோடின், பொஸ்போருஸ் போன்ற சத்துக்களும், உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளது.

ஸ்ட்ராபெர்ரியின் வகைகள்

இலை
பிலமென்க்கோ, பிளாரென்ஸ், ஸ்நொவ் வைட், எலெகான்ஸ், மால்வினா, வைப்ரன்ட், ஸ்வீட் ஹார்ட் போன்றவையாகும்.

மேலும் பச்சை நிற ஸ்ட்ராபெர்ரி, வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரி, கருப்பு நிற ஸ்ட்ராபெர்ரி, ஜெயண்ட் ஸ்ட்ராபெர்ரி, பொன்சாய் ரெட் ஸ்ட்ராபெர்ரி, ஆப்ரிக்கன் ப்ளூ ஸ்ட்ராபெர்ரி என்று நிறங்கள் கொண்டும் வேறுபடுகிறது. வகைகளுக்கு ஏற்றவாறு சுவையும் ஸ்டராபெர்ரியின் தோற்றமும் வேறுபடுகிறது.

மேலும் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் ஸ்வீட் சார்லி, ஹேம்ரோஸ், வின்டெர்டோன் போன்ற ரகங்கள் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது.

மேற்கண்ட முறையில் ஸ்ட்ராபெர்ரி நடவுசெய்து, இயற்கை முறையில் விளைந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு அதன் முழு பயன்களையும் பெற்றுமகிழ வாழ்த்துகிறோம்.

கிவி பழம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் அதிகளவில் நியூசிலாந்தில் பின்பற்றப்பட்டாலும் இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும். சீனாவின் அதிசயப்பழம், சீன நெல்லி என்று அழைக்கப்படும் இப்பழம் நியூசீலாந்தின் தேசியச் சின்னமாக விளங்குகிறது. பழுப்பு நிறத் தூவியைப் போன்ற மேற்பரப்புடன் பார்ப்பதற்கு கிவி பறவையைப் போல இருப்பதால் இது கிவி பழம் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் பசலிப்பழம் என்று அழைக்கப்படுகிறது.
கிவி பழம் வளர்ப்பு
கிவி பழம் செடி வளர்ப்பு, விதையில் இருந்து கிவி பழம் செடி வளர்ப்பு, வீட்டுத்தோட்டத்தில் மற்றும் மாடித்தோட்டத்தில் கிவி பழம் செடி வளர்ப்பது எப்படி, கிவி பழம் நன்மைகள் போன்றவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    கிவி பழம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்

கிவி கொடி
திராட்சைக் கொடியைப் போல இதுவும் கொடியாக வளரக்கூடியதாகும். வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான வளமான மண் தேவை. மண்ணின் காரா அமிலத்தன்மை 6.௦ க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

கிவிக்கொடியை விதை மற்றும் விதையில்லா முறையில் நடவு செய்யலாம். விதையில்லா முறையில் வேர்விட்ட குச்சிகள், ஓட்டுக்கட்டுதல், மொட்டுக்கட்டுதல் முறையில் உற்பத்தி செய்யலாம்.

சற்றே முற்றிய மற்றும் இளந்தளிர்க் குச்சிகளை வேர்விட செய்து நடலாம். இதற்கு ௦.5 – 1 செ.மீ விட்டம், 10 – 15 செ.மீ நீளம், 4 – 5 மொட்டுக்கள் உள்ள குச்சிகள் நடவுக்கு ஏற்றவை. ஓராண்டு முற்றிய குச்சியில் இருந்து எடுக்கப்படும் குச்சிகள் ஜனவரி,பிப்ரவரியில் நன்கு வேர்விடும். நடவுக்கு வடிகால் வசதியுள்ள நிலமும், முன்பனி குறைந்த தட்பவெப்ப நிலையும் தேவை. இருபாலினத் தன்மையுள்ள தாவரம் என்பதால் 9 பெண் கொடிக்கு 1 ஆண் கொடி வீதம் நட வேண்டும்.

பந்தல் முறையில் நடவு செய்யும் போது செலவு சற்று அதிகம் என்றாலும் அதிக மகசூல் கிடைக்கும். கொடி பந்தல் உயரத்தைத் தொட்டதும் நான்கு புறமும் நன்கு கிளைகளை படரவிட்டுப் பராமரிக்கவேண்டும்.

கவாத்து செய்தல்

கிவி kaavathu
தரமான அதிக எடையுள்ள பழங்கள் கிடைக்க கவாத்து செய்தல் அவசியம். முதலாமாண்டில் அடர்ந்துள்ள பக்கக் கிளைகளை வெட்டிவிட வேண்டும். ஓராண்டு கொடியின் கிளையின் அடியிலுள்ள 4-5 மொட்டுக்களே காய்க்கும். குளிர் காலத்தில் காய்த்துள்ள மொட்டுகளில் இரண்டு மொட்டுக்களைக் கவாத்து செய்தால் இரண்டாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கும்.

கோடையில் கவாத்து செய்யும் போது கடைசியாக பழம் உருவான மொட்டுக்கு மேல் 4 -5 மொட்டுக்கள் விட்டு விட வேண்டும். காய்க்காத, நோயுற்ற, பூச்சி வைத்த குச்சிகளை அகற்றி விட வேண்டும். கவாத்து செய்வதால் நல்ல காற்றோட்டம், மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். குளிர் மற்றும் கோடை காலத்திலும் கவாத்து செய்யலாம்.

நீர்ப் பாசனம்

நன்கு காய்க்கும் கொடிக்கு 5 – 6 நாட்களுக்கு ஒருமுறை நீர் அவசியம். கோடையில் 145 முதல் 180 லிட்டர் நீர் தேவைப்படும். கோடையில் பாசனக்குறைபாடு ஏற்பட்டால் மகசூல் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

    உரம்

ஓராண்டுக்கு கொடிகளுக்கு 10 கிலோ தொழுஉரம், 500 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்ச்சத்துக்கள் தேவை. முதலில் தொழுவுரத்துடன் தழைச்சத்தைக் கலந்து இட வேண்டும், மணிச்சத்தையும், சாம்பல்ச்சத்தையும் இரண்டு பாகமாகப் பிரித்து பூப்பதற்கு முன்பும், காய்கள் வந்த பின்பும் இட வேண்டும்.

    மகசூல்

கிவி பழம்
நடவு செய்த மூன்று ஆண்டுகளில் அறுவடை செய்ய முடிந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே நல்ல மகசூல் கிடைக்கும். அலிசன், புருனோ, மோண்டி போன்ற ரகங்கள் மார்ச் முதல் வாரத்தில் பூக்கத் தொடங்கி மூன்றாம் வாரம் வரை பூக்கும். ஹெவர்ட ரகம் மே முதல் வாரத்தில் தொடங்கி இரண்டாம் வாரத்தில் முடியும். ஒவ்வொரு கிளையிலும் 4 – 6 பூக்கள் இருந்தாலே போதும் நல்ல தரமான பழங்கள் கிடைக்கும்.

கிவி சாகுபடி செய்யும் நாடுகள்

ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கிவி பழ சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரியில் பயிரிடப்படுகிறது.

கிவி பழ மருத்துவ நன்மைகள்

கிவி பயன்கள்

  • ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.
  • இதயப் பிரச்சனை மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • செரிமானத் திறனை அதிகப்படுத்துகிறது.
  • ஆஸ்துமா குணமாகும் வாய்ப்பு உள்ளது.
  • உடல் எடை குறையும்.
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
  • மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் உதவுகிறது.

கிவி பழத்தில் உள்ள சத்துக்கள்

கிவி பழத்தில் குளோரைடு, தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளது.

கிவி பயன்கள்

  • கிவிப்பூ வாசனைத் திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.
  • கிவி மர இலைகள் பன்றி உணவாக பயன்படுகிறது.
  • இக்கொடியில் கிடைக்கும் பிசின், கட்டுமானத் தொழில்,மெழுகுத் தாள் போன்றவைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • கிவி பழம் கொண்டு பழச்சாறு, ஜாம், தேன்மிட்டாய் போன்றப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

பயன்கள் அதிகம் நிறைந்த கிவி வளர்ப்பில் தட்ப வெப்பநிலை மிக முக்கியமாகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் கிவி வளர்ப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடலுக்கு உறுதி வழங்கும் கிவி பழத்தினை உணவில் சேர்த்து நலத்தோடு வாழ்வோம்.

அவகோடா வளர்ப்பு வணிக ரீதியாக தற்போது அதிக பிரபலமாகி உள்ளது, இப்பழமானது தனிப்பட்ட சுவை மற்றும் மணத்தை உடையது. நம் நாட்டில் இப்பழம் வெண்ணைப்பழம் அல்லது பட்டர்ப்ரூட் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் ஆனைக்கொய்யாப்பழம் என்று அழைக்கப்படுகிறது.
வெண்ணைப்பழம்
இப்பழங்கள் தென்னாப்பிரிக்கா, பெரு, சிலி, வியட்னாம், இந்தோனேஷியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் விளைகிறது என்றாலும் இதன் தாயகம் மெக்ஸிகோ ஆகும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


இப்பழம் உருண்டையாகவோ அல்லது பேரிக்காய் வடிவத்திலோ காணப்படுகிறது. இதன் தோல் அடர் பச்சை வண்ணத்தில் தடிமனாக இருப்பதால் முதலைபெரி என்றும் அழைக்கப்படுகிறது.

அவகோடா செடி வளர்ப்பு, வெண்ணைப்பழம் மரம் வளர்ப்பது எப்படி, அவகோடா பழம் நன்மைகள், அவகோடா பழம் சாகுபடி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அவகோடா வளர்ப்பு மற்றும் சாகுபடி

வளமான மண்ணும், நல்ல நீர்ப்பாசனமும் இருந்தால் போதும் இம்மரம் நன்றாக செழித்து வளரும், அவகோடா மரம் 20 முதல் 30 அடி உயரம் வரை வளரும். குளிர் காலங்களில் பச்சை நிறப் பூக்கள் பூத்து, 8 ல் இருந்து 10 மாத கால அவகாசத்தில் பச்சை நிறக் காயாக மாறுகிறது.

நன்கு பழுத்த பின்பு பழுப்பு மற்றும் அடர் ஊதா நிறத்திற்கு மாறுகிறது, ஆனால் அவகோடா காய்கள் நன்கு விளைந்தவுடன் காயாகவே பறிக்கப்பட்டு பழுக்க வைக்கப்படுகிறது.

செடிகள் வளரும் இடத்தில் கண்டிப்பாக வெப்பநிலை 25 டிகிரிக்கு குறைவாக இருக்கக் கூடாது, நல்ல காற்று சுழற்சி கொண்ட இடமே அவகோடா வளர்வதற்கான சிறந்த இடமாகும்.
அவகோடா வளர்ப்பு
கோடை காலத்தில் செடிகளுக்கு வரம் இரு முறையும், குளிர்காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 20 நாளில் ஒரு கிலோ மண்புழு உரம் சேர்க்க வேண்டும், ஒரு மரத்திற்கு 60 கிலோ தொழு உரம் போதுமானது. அவகோடா மரத்தைப் பொறுத்தவரை விதைகள் முதல் இலைகள் வரை அனைத்தும் பயன் தரக்கூடியது.

20kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அவகோடா மகசூல்

அவகோடா வளர்ப்பு
ஒரு பழம் 500 கிராம் முதல் 1 கிலோ கிராம் வரை இருக்கும். ஒரு மரத்தில் 200 முதல் 300 காய்கள் வரை காய்க்கும், அவகோடா பழம் விலை ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை ஆகும்.

அவகோடா பயன்கள்

பழங்கள்

  • அவகோடா பழங்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • முக அழகுக்காக அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • வெளிநாடுகளில் நட்சத்திர ஓட்டல்களில் சத்து பானமாகவும், சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணைக்கு பதில் அவகோடா பழங்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் இந்த பழத்தில் அதிகளவு உள்ளது.
  • உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
  • பழங்களில் அதிகளவு கலோரி உள்ள பழம் இதுவாகும்.
  • இப்பழத்தை உண்பதால் மாரடைப்பு, இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவை சரியாகப் பப்பாளிப் பழத்துடன் இந்த பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்.
  • தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவகோடா பழத்தின் எண்ணையை உடம்பில் தேய்த்து வர நோய் சரியாகும்.
  • அவகோடா பழம் உண்பதால் குடல்கள் சுத்தப்படுத்தப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
  • வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்ப்பார்வைத் திறனை அதிகப்படுத்துகிறது.

அவகோடா பழத்தினை தேர்வு செய்யும் முறை

பட்டர்ப்ரூட்

  • நல்ல மணமுள்ள, கைகளில் வைத்து அழுத்தினால் மென்மையாகவும், வெளிப்புறத்தில் காயங்கள் இல்லாத நடுத்தர அளவுடைய பழத்தினை தேர்வு செய்யவும். தொட்டால் மிகவும் கடினமாக உள்ள பழத்தினை தேர்வு செய்ய வேண்டாம்.
  • பழுக்காத அவகோடா பழங்களை அறையின் வெப்பநிலையில் வைத்து பழுத்தப்பிறகு அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.
  • பால்பொருட்களினால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் இந்தப்பழத்தினை தவிர்க்கவும்.
  • இந்தப்பழம் ஐஸ்கிரீம், பழச்சாறு தயாரிப்பிலும் பயன்படுகிறது.


உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் அவகோடா பழத்தினை உணவில் சேர்த்து நலத்தோடு வாழ்வோம்.

சேனைக்கிழங்கு வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் பார்க்கமுடிவதில்லை, விவசாயிகள் பணப்பயிர்களை அதிகம் பயிரிட ஆரம்பித்துவிட்டதால் சேனை கிழங்கு சாகுபடி கணிசமான அளவு குறைந்துவிட்டது. அதிக சத்து கொண்ட கிழங்குகளில் முதன்மையானது சேனைக்கிழங்கு.

சேனைக்கிழங்கு தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றியதாக அறியப்படுகிறது. சேனைக்கிழங்கை பெரிய கரணை என்றும் அழைப்பர், ஏனென்றால் இதன் செடியும், இலைகளும் கருணைக்கிழங்கு செடியைப் போலவே காணப்படுவதால் இப்பெயர்க் கொண்டு அழைக்கப்படுகிறது.

மண்ணில் விளையக்கூடிய கிழங்குகளில் அளவில் பெரியது சேனைக்கிழங்கு. அதன் வளர்ப்பு முறை, உற்பத்தியை பெருக்கும் வழிமுறை மற்றும் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாடித்தோட்டத்தில் சேனைக்கிழங்கு வளர்ப்பு

வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடுவதற்கு தேவையான பொருள்கள், வளர்ப்பு பை அல்லது தொட்டி , அடியுரமாகயிட மணல், விதைக்கிழங்குகள், தென்னை நார்க்கழிவுகள், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, செம்மண், பூவாளி தெளிப்பான்.

சேனைக்கிழங்கு செடி வளர்ப்புக்கு தயார்செய்யும் உரக்கலவையானது பொல பொலப்பு தன்மையுடன் இருக்க வேண்டும். அடியுரமாக தென்னை நார்க்கழிவு, மண், இயற்கை உரம் ஆகியவற்றை சமபங்காக கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும். கிழங்கு எளிதாக வளர, மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்க தென்னை நார்க்கழிவுகளை அடி உரமாக சேர்க்க வேண்டும்.

கிழங்குகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். முளைப்புடன் கூடிய கிழங்குகளை கூட பயன்படுத்தலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைத்தவுடன் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவும், அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறுவதற்கு தொட்டியின் அடியில் இரண்டு அல்லது மூன்று துளைகள் இட வேண்டும்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சேனை கிழங்கு சாகுபடி

செடி
சேனைக்கிழங்கை ஆடி பட்டத்தில் பயிரிடுவது சிறப்பு. சேனை பத்து மாத பயிர். எட்டாம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். சேனை விதைத்து 8 வது மாதத்தில் தண்டுகள் பழுத்துத் தானாக மடங்கினால் கிழங்கு அறுவடைக்குத் தயார், தேவையைப் பொறுத்து அறுவடை செய்து கொள்ளலாம். கிழங்குகள் முதிர்ந்து அறுவடை செய்தவுடன் சுத்தப்படுத்தி காற்றோட்டமுள்ள அறைகளில் வைக்க வேண்டும். இதன் மூலம் கிழங்குகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

சேனைக்கிழங்கு வகைகள்

சாகுபடி
சேனைக்கிழங்கில் இரண்டு வகை உண்டு. மிருதுவான மற்றும் கெட்டியான கிழங்கு. இதில் மிருதுவான கிழங்கு மிகுந்த காரம் உடையது. உண்ணும் போது வாய், தொண்டை ஆகியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும், ஆனால் இந்த வகை அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. இந்த வகை கிழங்குகள் சற்று பழைய கிழங்காக மாறிய பிறகு சமைத்து உண்பதால் இந்த அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கெட்டியான கிழங்கு, இதில் காரத் தன்மை இருக்காது. கிழங்கு வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கும்.

சேனைக்கிழங்கு நன்மைகள்

சேனைக்-கிழங்கு

  • கீழ் வாதம், நீரிழிவு, தொழு நோய், உடல் வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை குணப்படுத்துகிறது.
  • உணவு செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டுகிறது.
  • இதில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் பலம் பெற உதவுகிறது.
  • பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
  • இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் நிறைய விட்டமின்களும் உள்ளது.
  • 100 கிராம் கிழங்கில் 330 கலோரிச் சத்துக்கள் உள்ளது.
  • இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது. உடல் வலுப்பெற உதவுகிறது.


இந்த கட்டுரையில் சேனைக்கிழங்கு பயிரிடும் முறை, சேனை கிழங்கு வளர்ப்பு மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் இயற்கை முறையில் சேனைக்கிழங்கு சாகுபடிசெய்து, அதன் முழு பயன்களையும் பெற்று குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

கத்தரிக்காய் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறை, மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்ப்பது எப்படி, கத்தரிக்காய் விதை விதைப்பது எப்படி, வீட்டில் கத்தரி செடி வளர்ப்பது எப்படி, பயன்கள் ஆகியவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
காய்-சாகுபடி

மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்ப்பது எப்படி?

பூ
மாடித்தோட்டம் கத்தரிக்காய் செடி வளர்ப்பு செய்வதற்கு தொட்டிகளுக்கென்று தனி அளவு, குறிப்பிட்ட வடிவம் என்று எதுவும் தேவையில்லை. எனவே பிளாஸ்டிக், மண் தொட்டி அல்லது உலோகம் என எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

கத்தரி செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் மண் நிரப்பும்போது, பையின் உடைய நீளத்தில் 1 அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்பிடவேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

7-10 தினங்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் எல்லாம் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

விதை விதைத்தல்

கத்தரி-செடி
கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு முதலில் நன்கு முற்றிய கத்தரியில் இருந்து விதைகளை தனித்தனியே பிரித்து சாம்பல்,மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். கத்திரி விதைகளை சாம்பல் கலந்து சேமித்து வைப்பது மூலம் விதைகளை உண்ணும் வண்டுகளிடமிருந்து விதைகளை பாதுகாக்கலாம்.

இவ்வாறு காய்ந்த கத்தரி விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும். கத்தரிக்காய் சாகுபடியில் விதை விதைத்த பிறகு அல்லது நாற்று நட்ட பிறகு பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்

கத்தரிக்காய்-வளர்ப்பு
மாடித்தோட்டம் கத்தரிக்காய் வளர்ப்பு முறையில் செடிகளை பாதுகாக்கும் இயற்கை பூச்சி விரட்டியான வேப்பெண்ணெய் கரைசல் மாதம் ஒரு முறை தெளிக்கவும். வேப்ப இலைகளை நன்கு காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now


இந்தப்பொடியை செடி ஒன்றுக்கு ஒரு பிடி என செடியின் வேர் பகுதியில் போட்டு கொத்திவிட வேண்டும். இதுவே செடியின் அடி உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

கத்தரிக்காய் பராமரிப்பு

கத்தரி செடிக்கு பராமரிப்பு அவசியம், கத்தரி செடி தொடர்ந்து 6 மாதம் வரை காய்க்கக்கூடிய செடியாகும், அறுவடை முடிந்த பின் தேவையற்ற இலைகள் மற்றும் கிளைகளை அகற்றி விட வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் தேமோர் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு கொடுப்பதன் மூலம் செடிகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். கடலைப் பிண்ணாக்குடன் கண்டிப்பாக வேப்பம் பிண்ணாக்கும் கலந்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எறும்புகள் மற்றும் பூச்சிகள் வந்து செடிகள் வீணாகி விடும்.

கடலைப் பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு கரைசலுடன் தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து கொடுப்பதன் மூலம் கத்தரிக்காய் செடி அதிக விளைச்சலைக் கொடுக்கும்.

20kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கத்தரிக்காய் அறுவடை மற்றும் மகசூல்

கத்தரிக்காய்-அறுவடை
கத்தரி வளர்ப்பு முறைதனில் அதிக பராமரிப்பு தேவை. சரியான பராமரிப்பு இருந்தால் அதிக அறுவடை செய்து நல்ல மகசூல் பெறலாம். கத்தரிக்காய் நடவு செய்ய குறிப்பிட்ட பட்டம் என்றும் ஏதுமில்லை ஆனாலும் ஆடி பட்டதில் விதைக்கும் பொது அதிக மகசூல் எடுக்கலாம்.

கத்தரிக்காய் காய்ப்பு குறைந்தது ஆறு மாதத்திற்க்கு குறையாமல்
இருக்கும். ஒரு ஏக்கரில் ஒரு நாளைக்கு 100 கிலோவில் இருந்து 150 கிலோ வரை அறுவடை செய்யலாம். விழாக்காலங்களில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ 80 வரை விற்பனை ஆகும். கத்தரிக்காய் ரகத்திற்கு ஏற்ப அறுவடை நாட்கள் மாறுபடும்.

கத்தரிக்காய் செடி நோய்கள்

கத்தரிக்காய் சாகுபடியில் நோய்த் தாக்குதல் சற்று அதிகமாகவே காணப்படும், முறையான பராமரிப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

ஹட்டா வண்டு, அசுவினி, தண்டு மற்றும் காய் துளைப்பான், சிகப்பு சிலந்தி, வெள்ளை ஈக்கள், சாம்பல் மூக்கு வண்டு, சிற்றிலை நோய், வேர்முடிச்சு நூற்புழு போன்ற பூச்சிகள் ஏற்படுத்தும் நோய்கள் அதிகம். வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு போன்றவற்றை சரியான அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

கத்தரிக்காய் வளர்ப்பு மற்றும் பயன்கள்

கத்தரி
1.அடர்நீலம் மற்றும் பழுப்பு நிறக் கத்தரிக்காயின் தோளில் உள்ள தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

2.முதல் கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.

3.வாதநோய், ஆஸ்துமா, சளி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

4.உடல் பருமனைக் குறைக்கிறது.

5.இதில் வைட்டமின் பி உள்ளதால் இதய நோய் வருவதைத் தடுக்கிறது.

6.மூச்சுவிடுவதில் சிரமம், தோல் மரத்துவிடுதல் போன்றப் பிரச்சனைகள் சரியாகிறது.

7.இதில் வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மன அமைதியைத் தருகிறது.

கத்தரிக்காய் செடியில் காய் பிடிக்க டிப்ஸ்

1.ஆடிப் பட்டத்தில் கத்தரி விதைப்பது நல்லது.

2.கோடைக் காலத்தில் விதைப்பதைத் தவிர்த்து மழைக் காலத்தில் விதைப்பது நல்லது.

3.விதை நேர்த்தி செய்த பின் விதைப்பது அதிக காய்கள் காய்க்க உதவுகிறது.

4.சோற்றுக் கற்றாழை நீரை கத்தரிக்காய் செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றுவதால் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி அதிக காய் பிடிக்க உதவுகிறது.

இந்த கட்டுரையில் கத்தரிக்காய் பயிரிடும் முறை மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடிசெய்து, ரசாயன கலப்பற்ற முறையில் விளைவித்து கத்தரிக்காய் அதன் முழு பயன்களையும் பெற்று குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

தாமரை வளர்ப்பு சிறக்க முக்கியமானது நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது. தாமரை விதையின் மேற்புற ஓடு கடினமாக இருப்பதினால், முளை விடுவதில் கால தாமதம் அல்லது ஒரு சில நேரங்களில் முளைக்காமலும் போகவாய்ப்புள்ளது. எனவே நல்ல விதையை தேர்ந்தெடுக்கவும்.
தாமரை வளர்ப்பு

தாமரை வளர்ப்பு – விதையிலிருந்து வளர்க்கும் முறை

தாமரை விதை
தேர்ந்தெடுத்த தாமரை விதைகளை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போடவும். தண்ணீரின் மேலே மிதந்து காணப்படும் விதைகளுக்கு முளைக்கும் தன்மை இல்லாமல் கூட இருக்கலாம், எனவே தண்ணீரில் மூழ்கி அடிப்பகுதியில் இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


அடுத்து விதையின் அடிபுறப்பகுதி அல்லது பக்கவாட்டுப்பகுதியில் உப்பு காகிதத்தை கொண்டு விதையின் ஓட்டிற்கு அடுத்து உள்ள வெண்மை நிற பருப்பு தெரியும் வரை உரைத்து பிறகு அதை எடுத்துக்கொள்ளவும்.

தயார் செய்துவைத்த தாமரை விதைகளை ஒரு பாத்திரத்தில் உள்ளே போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க வெயிலில் வைக்க வேண்டும். இந்த செயல் கடினமான தாமரை விதையுடைய ஓட்டை மென்மையானதாக ஆக்கும்.

அடுத்த தினம் அந்த நீரை வடிகட்டி விட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். 3 முதல் 6 நாட்களில் விதை முளைவிட்டிருக்கும் அப்போது நீரை மாற்றி வைக்கவேண்டும். பிறகு முதல் தாமரை இலை வளர 3 முதல் 5 வாரங்கள் ஆகும்.

தொட்டியில் தாமரை வளர்ப்பது எப்படி

தாமரை கொடி
தாமரை வளரும் மண், செம்மண் மற்றும் களிமண். அதை ஒரு தொட்டியில் போட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். தாமரையின் முதல் இலை வளர்ந்து விரியும் முன் அந்த தொட்டியில் முளைத்த விதையின் வேர், தண்டு அடிபடாமல் நட்டு பிறகு தொட்டி முழுவதும் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். சில வாரங்களில் செடி வளரத்தொடங்கும்.

கிழங்கிலிருந்து தாமரை வளர்ப்பு

தாமரைசெடி கிழங்கு
தாமரை கிழங்கு நடவு செய்தல் மிகவும் சுலபமான ஒன்றாகும். ஒரு தொட்டியில் நன்கு மக்கிய மாட்டு எருவை போட்டுக்கொள்ளவும். பின்னர் தூளாக்கிய முட்டை ஓடுகளை போட்டுக்கொள்ளவும். பிறகு செம்மண் போட்டு மூன்றையும் நன்கு கலக்கவும். பின்னர் மெதுவாக தண்ணீர் ஊற்றவும் அப்போதுதான் எரு மேலே வராது. அதன்பிறகு ஒரு வாரம் ஊற வைத்த தாமரை கிழங்கை தொட்டியின் ஓரத்தில் வைத்து நடவு செய்யவும் . முக்கியமானது தண்ணீரை மிக மெதுவாக ஊற்ற வேண்டும். ஒரு வாரத்தில் தாமரை இலை நீரின் மேலே தெரிய ஆரம்பிக்கும்.

வீட்டில் தாமரை வளர்க்கலாமா

தாமரை விதை முளைப்பு
வீட்டில் தாமரை வளர்ப்பு தற்போதைய மாடித்தோட்ட காலத்தில் மிக பிரபலமாகிவிட்டது. முன்பெல்லாம் நாம் தாமரை பூ காணுமிடம் தாமரை குளம், ஆனால் தற்போது தாமரை வளர்க்கும் முறை சுலபமாக அனைவரும் அறிந்துக்கொள்ளலாம் என்கிற சூழ்நிலையில் தாமரை பூ வளர்ப்பு மாடித்தோட்டத்தில், வீட்டின் முகப்பு பகுதியில் காண முடிகிறது. மேலும் தாமரை செடி வளர்ப்பு நல்ல நேர்மறையான ஆற்றலை ஈர்ப்பதாக நம்பப்படுகிறது. எனவே வீட்டில் தாமரையை வளர்க்கலாம்.

தாமரை செடி டிப்ஸ்

1.தாமரை செடி அல்லது தாமரை கொடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்துக்கொண்டோம். தாமரை வளரும் தொட்டியில் உள்ள நீரில் சிறிய ரக மீன்களை வளர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியை தடுத்து தாமரையின் வளர்ச்சியை சீராக்கலாம்.

2.மீன்களின் கழிவுகளை உரமாக எடுத்துக்கொண்டு தாமரையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

3.மண்புழு உரம் அல்லது பஞ்சகாவியா போன்ற உரங்களில் ஏதேனும் ஒன்றை மாதம் ஒரு முறை தாமரை செடி இருக்கும் நீரில் கரைப்பதன் மூலம் தாமரை செடியின் வளர்ச்சி சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

தாமரையின் அற்புத மருத்துவகுணங்கள்


தாமரையின் கிழங்கு மற்றும் விதை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளவை. கிழங்குதனில் நார்சத்து அதிகம் காணப்படுகிறது, மேலும் வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. தாமரை இதழ்களை நிழலில் காயவைத்து பொடியாக செய்து அதை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராக அமையும்.

தாமரை இதழோடு நெல்லிக்காய், மருதாணி இலை, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து அதனுடன் தேங்காயெண்ணை சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து அதை தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை மறையும், முடி உதிரும் பிரச்சனையும் சரியாகும்.

தாமரை தண்டுகளை வெயிலில் காயவைத்து, நார் செய்து அதை விளக்கேற்ற திரியாக பயன்படுத்தலாம். தாமரை விதையானது கருப்பு நிறத்தில் கடினமாக இருக்கும், அதை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை சாப்பிட்டால் இருதயம் வலுப்பெறும்.

இதுவரை தாமரை செடி எப்படி வளர்ப்பது என்று காண்டோம். நீங்களும் இந்த கட்டுரையின் வழிகாட்டுதலின் படி தாமரையை வளர்த்து அந்த மலர் போல உங்கள் வாழ்க்கையும் வளமாக வாழ்த்துகிறோம்.

செவ்வாழை வளர்ப்பு மற்ற வாழை மரங்களின் வளர்ப்பு முறைகளில் இருந்து சிறிது மாறுபடுகிறது. செவ்வாழை அணைத்து தட்ப வெப்ப நிலைகளையும் தாங்க கூடிய சிறப்பு கொண்டது, மேலும் அதிக சத்துக்களை உள்ளடக்கிய நமது பாரம்பரிய பயிராக விளங்குகிறது.

செவ்வாழை நடும் முறை

செவ்வாழை கட்டை
செவ்வாழை பயிரிடும் குழிகளின் உட்புறத்தில் செறிவூட்டிய மண்புழு உரம் மற்றும் சிறிது கிளிஞ்சல் அல்லது சுண்ணாம்புத்தூள் கலந்து பயிரிடும் பொழுது விரைவில் கன்று துளிர்விடும்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

செவ்வாழை வளர்ப்பு முறை

வாழை மரம்

செவ்வாழை சாகுபடி செய்யும்போது பயிரிட்ட மூன்றாவது மாதத்தின் இறுதியில் ஒரு பக்க கன்றியினையும், நான்காவது மாதத்தின் இறுதியில் இன்னொரு கன்றையும் அப்படியே விட்டுவைக்கவேண்டும். ஒன்பதாம் மாதத்தில் பூ வைக்க ஆரம்பிக்கும். 18 மாதங்களில் மூன்று செவ்வாழை தார்களையும் சாகுபடி செய்யலாம்.

செவ்வாழை சாகுபடி நன்றாக அமைய முக்கிய பங்கு வகிப்பது, இயற்கை உரத்தை பயன்படுத்துதலே ஆகும்.இதனால் அதிக மகசூல் மற்றும் செவ்வாழையின் காய் பெரிதாக வளர ஏதுவாக இருக்கும்.

செவ்வாழை உரம் வைக்கும் முறைகள்

செவ்வாழை உரம் வைக்கும் முறைகள் பல உண்டெனினும், சிறந்த முறை என்பது, 6 முதல் 7 மாதங்கள் நன்கு மக்கிய கோழி எரு, ஆட்டின் எரு, மாட்டு எரு ஆகியவற்றை நன்கு கலந்து வைக்க வேண்டும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

நோய் தாக்குதல்

செவ்வாழை வாடல் நோய்
செவ்வாழையை அதிகமாக தாக்கும் நோய் வாடல் நோய் ஆகும், தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதால் இந்த வாடல் நோய் தாக்குகிறது. தண்ணீர் பெருமளவு வேர்களில் தேங்குவதால் வேர் அழுகி மேலே உள்ள இலையை பாதிக்கிறது. எனவே ஈரப்பத்திற்கு ஏற்ப தண்ணீரை பாய்ச்சுவதால் இந்த நோய்யை தவிர்க்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சூடோமோனஸ் உயிரி உரத்தை 10 கிராம் கலந்து செவ்வாழை மரத்தின் வேர்களில் படும்படி ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் வாடல் நோய் குணமாகும்.

பூச்சி தாக்குதல்

பொதுவாகவே அனைத்து வாழை மரங்களையும் கூன் வண்டு அல்லது ஊசி வண்டு தாக்கி அழிக்க வல்லது. நன்கு வளர்ந்த வாழை மரங்களில் துளையிட்டு அதன் தண்டு பகுதிகளை அரித்து மரத்தையே சாய்த்துவிடும்.

இந்த கூன் வண்டு தாக்குதலை சமாளிக்க, 3 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்பெண்ணெயை கலந்து பாதிக்கப்பட்ட மரத்தில் தெளிப்பதன் மூலம் தாக்குதலை தடுக்கலாம்.

தார் பராமரிப்பு

வாழை தார்
செவ்வாழை காய் பெரிதாக வளர தாரில் உள்ள வாழைப்பூவை வெட்டிய உடனே ஒரு நெகிழி பையில் 10 கிராம் பஞ்சகாவியாவை கொட்டி, அந்த பையை வாழைப்பூ வெட்டிய இடத்தில கட்டிவைக்கவேண்டும். இவ்வாறு பராமரித்தால் 80 முதல் 90 காய்கள் வரை காய்க்கும்.

வீட்டில் செவ்வாழை வளர்க்கலாமா?

செவ்வாழை மரம் வளர்ப்பு எப்படி என்று தெரிந்திருந்தும் சிலர் வீட்டில் செவ்வாழை மரம் வளர்க்க விரும்புவதில்லை. செவ்வாழை maram வீட்டில் வளர்த்தால் தோஷம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இயற்கையின் படைப்பில் தோஷம் என்று ஏதுமில்லை. இத்தகைய செவ்வாழையை தாராளமாக வீட்டில் வளர்க்கலாம்.

செவ்வாழை பழத்தின் மருத்துவ பயன்கள்

செவ்வாழை பழம்

செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது, இது சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது. 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். மாலைக்கண்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை பழம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டுவர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற தோல் சார்ந்த வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக செயல் படுகிறது.

நாட்டு ரக செவ்வாழை வளர்ப்பு

திசு வளர்ப்பு முறையில் பயிரிடப்படும் செவ்வாழை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு நல்ல முறையில் அமைந்தாலும், நாட்டுரக செவ்வாழையின் மகத்துவத்துக்கு ஈடாகாது. நாட்டுரக செவ்வாழை நன்மைகள் அளப்பரியது.

இந்த கட்டுரையில் செவ்வாழையின் பயிரிடும் முறை மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் செவ்வாழையை சுவைத்து குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

ரோஜா செடி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு என்பது இன்று அனைவர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. ரோஜா செடி வகைகள், ரோஜா செடி வளர்ப்பு, ரோஜா செடி பராமரிப்பு, ரோஜா செடி பதியம் போடுவது எப்படி, பன்னீர் ரோஜா செடி வளர்ப்பது எப்படி, ரோஜா செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி, மாடித் தோட்டத்தில் ரோஜா செடி வளர்ப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு ரோஜா செடி

ரோஜா செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு – ரோஜா செடி மண் கலவை

ரோஜாச்செடி வளர்ப்புக்கு மண்கலவை மிகவும் முக்கியமானதாகும். ரோஜா செடி நன்றாக வளர்வதற்கு செடி வைக்கப்போகும் தொட்டியில் பாதி அளவிற்கு மண்ணும் மீதியில் 30% நன்கு மக்கிய தொழுஉரமும் 20% தேங்காய் நாரை நன்றாக காயவைத்து பொடி செய்து மண்ணில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மண்கலவையுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து செடியை நடலாம். ரோஜாச்செடி வளர்ப்பு அதன் பராமரிப்பு முறைகள் செடிகளின் வகைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ரோஜா செடி வகைகள்

டமாஸ்க், போர்போன், சீனா, சென்டிபோலியா, கழிக்க, டி, ஹைபிரிட் டி, மினியேசர் என்று பல வகை ரோஜாக்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு வகைக்கும் பூக்கும் காலம் மாறுபடுகிறது, எனவே நாம் செடியை நடும்போது என்ன வகையான செடியை நடுகிறோம் அதற்கான பராமரிப்பு முறைகள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு ரோஜா செடி

ரோஜா பூ செடி

நாட்டு ரோஜா செடி என்றுபார்க்கும் போது பன்னீர் ரோஸ் போன்றவை உண்டு. இவை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நாட்டு ரோஜா செடிகளை வளர்ப்பது மிகவும் சுலபமாகும்.

ரோஜா செடி நோய்

ரோஜாச்செடி நோய்

  • ரோஜாச்செடியில் சாறு உறிஞ்சும் பூச்சி, மாவு பூச்சி போன்றவற்றால் ஏற்படும் நோய்களே அதிகம் ஆகும், இதை சரி செய்ய வாரம் ஒரு முறை கற்பூரக்கரைசல் தெளிக்கலாம்.
  • ரோஜா செடியில் இலை சுருங்கல் நோய்,வேர் அழுகல், பூச்சி அரிப்பு போன்ற நோய்கள் ஏற்படும். இலைகள் மஞ்சளாக மாறும்.
  • மேலும் புதிய இலைகளும் நோய்வாய்ப்பட்ட இலைகளாக மஞ்சளாக துளிர்க்கும். அவ்வாறான இலைகளை வெட்டி விட வேண்டும்.
  • ஒரு பக்கெட் தண்ணீரில் மாட்டு சாணத்தைக் கரைத்து ஒரு கைப்பிடி அளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட செடியின் மீது தெளிக்க வேண்டும்.
  • பூச்சிகள்,எறும்புகள் போன்றவற்றைத் தடுக்க வேப்ப இலையுடன் சிறிது பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்தபிறகு இதை வடிகட்டி செடிகளுக்கு ஸ்பிரே செய்யலாம்.
  • 2 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    தட்பவெப்பநிலை

    ரோஜாச்செடி வளர்ப்புக்கு வெயில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நேரடியான சூரியஒளி மற்றும் நிழல் இரண்டுமே இருக்கும் இடமாக தேர்வு செய்யவேண்டியது அவசியம். வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது, ஆனால் தண்ணீரை மொத்தமாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். மேலும் பழுத்த இலைகளை கண்டிப்பாக வெட்டி விட வேண்டும். பொதுவாகவே வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு சற்று அதிகப்படியான பராமரிப்பு தேவைப்படுகிறது.

    ரோஜா செடி அதிகம் பூக்க உரம்

    ரோஜா செடி அதிகம் பூக்க

  • ரோஜா செடி வளர்ப்புக்கு பெரிய அளவில் உரம் ஒன்றும் தேவை இல்லை. முட்டை ஓட்டுத்தூள், வெங்காயத்தோல், காய்கறி கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • பயன்படுத்திய தேயிலைத்தூள், பீட்ரூட் தோல், தர்பூசணி தோல் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதால் பூக்கள் அடர்த்தியாக பூக்கும் மற்றும் பூக்களின் நிறம் நல்ல அடர்த்தியாக இருக்கும்.
  • உருளைக்கிழங்கு தோல், மண்புழு உரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
  • அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து செடியை நல்ல காற்றோட்டத்துடன் வைத்து மண்ணை ஈரப்பதமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும். அதிக அளவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
  • வருடத்திற்கு ஒரு முறை ரோஜா செடியை கவாத்து செய்வது அவசியம். இதனால் செடி நன்றாக வளரும்.
  • பன்னீர் ரோஜா வளர்ப்பு

    பன்னீர் ரோஜா

    பன்னீர் ரோஸைப் பொறுத்தவரை அலங்காரப் பொருளாகவும், ஆரோக்ய பொருளாகவும் உள்ளது. பன்னீர் ரோஜாவை மாடித்தோட்டத்திலோ, வீட்டுத்தோட்டத்திலோ அல்லது பணப்பயிராக விவசாய நிலங்களிலோ வளர்க்கலாம். சாதாரண ரோஸ் செடிக்கு மண் தயாரிப்பதைப் போலவே இதற்கும் மண் கலவை தயார் செய்ய வேண்டும்.

    உரம் தயாரிப்பு

    தேவையான பொருட்கள்

  • டீத்தூள் கழிவுகள் – 50 கிராம்
  • முட்டை ஓட்டுத்தூள் – 2 ஸ்பூன்
  • வாழைப்பழத்தோல் – சிறிதளவு
  • புளித்த மோர் – 2 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • செய்முறை

    ஒரு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் பக்கெட்டில் உள்ள தண்ணீரில் நன்றாக கலந்து மூன்று நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் ரோஸ் செடி நட்டு வைத்துள்ள வேர்ப்பகுதியில் பாத்தி எடுத்து ஊற வைத்துள்ள தண்ணீரை வேர்பகுதியில் படுமாறு ஊற்றி பின் மண் அணைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது பதினைந்து நாளுக்கு ஒரு முறையோ இவ்வாறு செய்யலாம்.

    ரோஜாச்செடி வளர்த்து அதிக பூக்கள் பெறுவது எப்படி?

  • ரோஸ் செடியில் பூக்கள் பறிக்கும்போது பூக்களை மட்டும் பறிக்காமல் இரண்டு இலைகளையும் சேர்த்து பறிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் புதிய இலைகள் துளிர் விட உதவியாக இருக்கும்.
  • உரமாக டீத்தூள், வெங்காயத்தோல், முட்டை ஓடு, காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாக இடலாம்.
  • வாழைப்பழத்தோலை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றலாம்.
  • பழைய சாதத்தின் தண்ணீரை வடிகட்டி ஊற்றலாம்.
  • ரோஸ் செடிகளுக்கு உரம் வைப்பதாக இருந்தால் அன்று முழுவதும் செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.
  • ரோஜா செடியை பொறுத்தவரை உரம் வைப்பதாக இருந்தால் மாலை நேரத்தில் வைப்பது சிறந்தது.
  • எப்பொழுதும் ரோஜா செடி வளர்க்க இயற்கை உரங்கள் சிறந்தது.
  • ரோஜா செடி பதியம் போடுவது எப்படி?

    கொஞ்சம் நன்றாக வளர்ந்த தண்டாக இருப்பது பதியம் போட சிறந்தது. ரோஜா தண்டு துளிர்ப்பதற்கு காய்ந்து போகாமல் இருக்க வேண்டும், அதற்காக தண்டின் நுனியில் பசுசாணத்தை வைக்கலாம்.

    செடி துளிர்க்கும் வரை தண்ணீரை மட்டுமே தெளிக்க வேண்டும். செடி நன்றாக துளிர்த்து வளர ஆரம்பித்த பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

    ரோஜாச்செடி பதியம் போடுவது எப்படி என்று இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பார்க்கவும்.

    ரோஸ் செடி வளர்ப்பு என்பது இன்று அனைவரும் விரும்பும் ஒரு விஷயமாகும். விதவிதமான, அழகழகான ரோஜாப்பூக்கள் அனைவரையும் கவர்கின்றன. ரோஜாப்பூவின் நறுமணமும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது, இதனால் ரோஜாப்பூ அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

    முட்டைக்கோஸ் வளர்ப்பு எளிது மட்டுமல்ல அதன் பயன்களும் அதிகம் ஆகும். முட்டைக்கோஸ் விளைச்சல், முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி, அறுவடை போன்றவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். முட்டைக்கோஸ் இலைகளால் ஆன ஒரு காயாகும். சீனா மற்றும் போலந்து நாடுகளில் பயன்படுத்தபட்ட முட்டைகோஸ் 1794 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு அறிமுகமானது.

    விதைகளிலிருந்து முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி

    உலகளவில் முட்டைக்கோஸ் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    நாற்றுகள் மூலம் முட்டைக்கோஸ் வளர்ப்பு

    முட்டைக்கோஸ் நாற்று

    முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு நாற்றுகள் போடுவதற்கு 100 ச.அடி நிலம் போதுமானது. 15 செ.மீ உயரம், 1 மீ அகலம், மற்றும் தேவையான அளவு நீளம் விட்டு விதைப்படுக்கையை தயார் செய்ய வேண்டும்.

    2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 1 ச.அடிக்கு அளிக்க வேண்டும். விதைப்படுக்கையில் 10 செ.மீ இடைவெளிவிட்டு விதைகளை விதைக்க வேண்டும்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now

    விதைப்பு முறை

    முட்டைக்கோஸ் வளர்ப்பு செய்வதற்கான நிலத்தை நன்றாக உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ இடைவெளிவிட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

    மலைப்பகுதியாக இருந்தால் 40×40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதியாக இருந்தால் 45×30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவேண்டும்.

    நீர் மேலாண்மையை பொறுத்தவரை தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருந்தால் போதுமானது.

    Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    உரம்

    மலைப்பகுதியில் முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு அடியுரமாக 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்ச்சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்ச்சத்து ஆகிய உரங்களை அளிக்க வேண்டும்.

    சமவெளிப்பயிர்களுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 கிலோ சாம்பல்சத்துக்களை இட வேண்டும். மேலுரமாக பயிர் செய்த 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

    பஞ்சகவ்யாவை பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத்தெளிப்பாக தெளிக்க வேண்டும். பயிர் செய்த ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 10 % வெர்மிவாஷ் தெளிக்க வேண்டும்.

    அசுவினிகள்

    ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 1௦% வேப்ப இலைச் சாற்றை 45,60,75 வது நாளில் தெளிக்க வேண்டும். வயலில் ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறியை பொருத்த வேண்டும்.

    வெட்டுப்புழுக்கள்

    கோடைக்காலத்தில் விளக்குப்பொறியை வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத்தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

    இலைப்புள்ளி நோய்

    பயிர் செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 5% மஞ்சூரியன் தேயிலைச்சாற்றை ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்.

    பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 3 % பஞ்சகவ்யாவை 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

    வேர்முடிச்சு நோய்

    நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும், மற்றும் மண்ணின் கார அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் வேர்முடிச்சு நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

    சரியான பராமரிப்பின் மூலம் இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும்.

    விளைச்சல் மற்றும் அறுவடை

    முட்டைக்கோஸ் செடி

    மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70 முதல் 80 டன்கள் வரை கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25 முதல் 35 டன்கள் வரை கிடைக்கும்.

    பயிர் செய்த 75 வது நாளில் காய்கள் அறுவடைக்கு தயார் ஆகி விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

    120 நாட்களில் சுமார் 8 முறை முட்டைகோஸுகளை அறுவடை செய்யலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று ஆனால் முற்றாமல் இருக்கும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

    பயன்கள்

  • இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது.
  • கண் நரம்புகளை சீராக இயங்கச்செய்யக்கூடியது.
  • அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யக்கூடியது.
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கக்கூடியது.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளும்,பற்களும் உறுதியாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நரம்புகளுக்கு வலிமை கொடுத்து நரம்புத்தளர்ச்சியை சரி செய்யக்கூடியது.
  • சருமத்திற்கு பொலிவைக்கொடுத்து சரும வறட்சியை போக்க க்கூடியது.
  • சிறுநீரைப் பிரித்து வெளியேற்றும் தன்மை உடையது.
  • முட்டைக்கோஸ் உண்ணும் முறை

    முட்டைக்கோஸ் பச்சையாக சாப்பிடலாமா என்று சிலருக்கு சந்தேகம் வருவதுண்டு. முட்டைகோஸை பச்சையாக ஜூஸ் போன்றும் குடிக்கலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். இதில் நிறைய சத்துக்கள் இருப்பதால் எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையே, ஆனால் நன்றாக சுத்தம் செய்தபின் உண்பது அவசியம் .

    தமிழில் முட்டைக்கோஸ் வளர்ப்பு வழிகாட்டி


    முட்டைக்கோஸ் வளர்ப்பு மற்றும் பயன்கள் பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டியாக நிறைய வலைத்தளங்கள் மற்றும் முகநூல் போன்றவைகள் உள்ளது. மேலும் முட்டைக்கோஸ் செடி வளர்ப்பது எப்படி, எளிய முறையில் வீட்டில் முட்டைகோஸ் பயிர் வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் வலைத்தளங்களில் அறிய முடியும்.

    பப்பாளி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு முறைகள் பற்றி இன்று பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.பப்பாளி வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், வகைகள், பராமரிப்பு, பப்பாளி செடி வளர்ப்பது எப்படி ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    பப்பாளி வளர்ப்பு

    பப்பாளி விலை மலிவானது ஆகும், அனைத்து காலத்திலும் விளையக்கூடியது என்பதால் பப்பாளி ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.

    பப்பாளி வளர்ப்பு மற்றும் சாகுபடி முறைகள்

    பப்பாளி களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய ஒரு மரம் ஆகும். ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம், எனினும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பப்பாளி பயிர் செய்ய ஏற்ற காலம் ஆகும். நடவு சமயத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

    நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் படுத்த வேண்டும். அதன் பின்னர் 1.8 மீ இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டும். பின்னர் குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் நடுவில் நட வேண்டும்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now

    விதைகள்மூலம் பப்பாளி வளர்ப்பு

    பப்பாளி வளர்ப்பிற்கு ஒரு எக்டருக்கு 500 கிராம் விதைகள் வரை விதைக்கலாம். விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலீதீன் பைகளில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

    ஒரு பாலிதீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும். பின்னர் பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் விட வேண்டும்.

    Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now


    60 நாட்களில் நாற்றுகள் நடவுக்கு தயாராகி விடும். வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. ஆனால் செடிகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பப்பாளி மரத்தின் வகைகள்

    பப்பாளி மரத்தின் வகைகள்

    பப்பாளியில் ஆண் பப்பாளி மரம், பெண் பப்பாளி மரம் என இரண்டு வகை உண்டு. ஆண் மரத்தில் சரம் சரமாக பூக்கும் ஆனால் காய்க்காது, பெண் பப்பாளி மரத்தில் ஒற்றை பூவாகத்தான் பூத்து காய்கள் காய்க்கும்.

    பப்பாளி நோய்கள் என்று பார்க்கும்பொழுது நூற்புழு தாக்குதல், வேர் அழுகல் நோய் போன்றவையே பெருமளவு தாக்கும் நோய்கள் ஆகும். பப்பாளி வளர்ப்புக்கு முடிந்தவரை இயற்கை உரங்களை பயன்படுத்துவது சிறந்தது.

    பப்பாளி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு

    செடி ஒன்றுக்கு 50 கிராம் தழை,மணி மற்றும் சாம்பல்ச் சத்துக்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இட வேண்டும். மகசூல் அதிகரிக்க 4 வது மற்றும் 8 வது மாதத்தில் சில இயற்கை உரங்களை தெளிக்க வேண்டும்.

    செடிகள் பூக்கத் தொடங்கும்பொழுது 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விட வேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு மற்ற ஆண்,பெண் செடிகளை நீக்கி விட வேண்டும். இந்த முறை ஒவ்வொரு ரகங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

    செடியின் அடி பாகத்தைச் சுற்றித் தண்ணீர் தேங்கி நின்றால் தண்டு அழுகல் நோய் ஏற்படும், இந்நோய் தாக்கிய செடிகள் அழுகி வாடி இறந்து விடும். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

    பயன்கள்

    பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

    • பப்பாளி விதைகள் ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது.
    • வயிற்றில் பூச்சிகள், புழுக்கள் ஏற்படாது.
    • கான்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
    • கை, கால், மூட்டு வலி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து வலியைப் போக்குகிறது.
    • பப்பாளி சிறுநீரக செயல்பாட்டினைத் தூண்டக்கூடியது.
    • டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.

    பப்பாளி நாற்று

    பப்பாளி பயிர் செய்ய நினைப்பவர்கள் பப்பாளி நாற்று எங்கு கிடைக்கும் என்று அலைய வேண்டியதில்லை. நல்ல தரமான விதைகள் நர்சரிகளில் கிடைக்கும், மற்றும் பப்பாளி பழத்தில் உள்ள விதைகளில் இருந்தும் பயிர் செய்யலாம்.

    பப்பாளி காயாக இருக்கும்போது பச்சையாகவும், பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். நன்கு பழுத்த பழம் மிக சுவையாக இருக்கும். இதன் விதை கசப்பானதாக இருக்கும், பார்ப்பதற்கு குறுமிளகு போல இருக்கும். ரெட் லேடி பப்பாளி என்பதும் ஒரு வகை பப்பாளி ஆகும், இந்த பழம் சற்றே சிவந்த நிறத்தில் இருக்கும் விதைகள் இருக்காது.

    மேலும் பப்பாளி காய்களில் பால் எடுத்து பின்னர் டூட்டி ப்ரூட்டி தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    பப்பாளி நாற்று

    பப்பாளி மரங்களின் வயது என்று பார்த்தால் 24 முதல் 30 மாதங்கள் வரை. அனைத்து ரகங்களிலும் குறைந்தது ஒரு எக்டருக்கு 100 டன்களுக்கு குறையாமல் மகசூல் பெற முடியும்.

    நாட்டு பப்பாளி மரம் வளர்ப்பு எளிதானதே. நாட்டு பப்பாளி விதைகளும் நர்சரிகளில் கிடைக்கும்.

    இயற்கை முறையில் பப்பாளி வளர்ப்பு என்பது இன்று அரிதாகி விட்டது. ஆனால் இயற்கை முறையில் பயிர் செய்வதே சிறந்தது.

    பப்பாளி மரம் வீட்டில் வளர்க்கலாமா என்று நிறைய பேர் யோசிக்கின்றனர், ஆனால் பப்பாளி மரம் தாராளமாக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கலாம். பப்பாளியைப் பொறுத்தவரை காய், பழம், இலைகள், பப்பாளி மரப்பால் என அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகும்.

    Pin It