Category

தோட்டம்

Category

சோம்பு என்பது பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட ஆரோக்கியம் தர கூடிய தாவரமாகும். அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருளாக மட்டுமின்றி, அதன் சிறந்த மருத்துவ குணத்திற்காகவும் பெயர் பெற்றது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் சோம்பு செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
சோம்பு-செடி-வளர்ப்பு
சோம்பு செடி எனும் பெருஞ்சீரகம் செடி வளர்ப்பு முறை, சோம்பு பயன்கள், பராமரிப்பு முறை, மாடித்தோட்டத்தில் அழகான சோம்பு செடி வளர்ப்பது எப்படி என்பது பற்றி இந்தக்கட்டுரையில் காண்போம்.

நடவு முறை

நடவு-முறை
சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பைக்கொண்டே சோம்பு செடி நடவு செய்யலாம். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும், பிறகு சோம்பை அதன் மேற்பரப்பில் தூவி லேசாக மண்ணை போட்டு மூடினாலே போதுமானது. பின்பு அதன் மீது தண்ணீர் தெளித்து விட வேண்டும், அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சோம்பு வெளிய வர வாய்ப்புள்ளது எனவே மிதமாக தெளிக்கவும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சோம்பு செடி வளர்ச்சி

சோம்பு-பூ
நடவு செய்த 5 முதல் 10 நாளில் சோம்பின் வளர்ச்சியை நம்மால் காணமுடியும். இந்த கால அளவு தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 60 நாட்களில் இதன் இலைகள் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம். இந்த சோம்பு கீரை பார்ப்பதற்கு சிறிய அளவு கொத்தமல்லி கீரையை போலவே இருக்கும். 100 நாட்களில் செடியின் மீது ஒரு தண்டு வளர்ந்து அதன் உச்சியில் அடர் மஞ்சள் நிறத்தில் பூவானது பூத்திருக்கும். இந்த பூக்களில் தேனெடுக்க அதிக அளவில் தேனீக்கள் வருவதால் மகரந்த சேர்க்கை சிறந்த முறையில் நடக்கும்.

சோம்பு அறுவடை

சோம்பு-அறுவடை
சோம்பு செடியில் பூத்திருக்கும் பூவின் அடியிலே சோம்பு வளர்ந்திருக்கும். செடியில் கொத்து கொத்தாக சோம்பு காணப்படும். 150 நாட்களுக்கு பிறகு சோம்பு காய தொடங்கும். அனைத்து கொத்துகளுமே ஒரே நேரத்தில் காயாது. சோம்பை தனியே எடுத்து காயவைப்பதை விட செடியிலே காய விட்டு பிறகு அதை சேகரித்து வைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

சோம்பு செடியில் நோய் தாக்குதல்

சோம்பு-செடி
சோம்பு செடியில் அஸ்வினி பூச்சி மற்றும் மாவு பூச்சி தொல்லை ஏற்படும். இது சோம்பின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். வேப்பண்ணெய் கரைசலை வாரம் மூன்று முறை தெளித்து வந்தால், இரண்டு வாரங்களில் செடி பழைய நிலையை அடைந்து விடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சோம்பின் பயன்கள்

சோம்பின்-பயன்கள்

  • சோம்பு தண்ணீரை தினமும் காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலின் எடையை குறைக்கலாம். சோம்பு தண்ணீரின் பலன் சற்று தாமதமாக கிடைக்கின்ற போதிலும் நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.
    அளவுக்கு மீறி அதிகமாக பசி ஏற்படுகிறவர்களுக்கு இந்த சோம்பு தண்ணீரைக் குடிக்கவைத்தால், தேவையற்ற பசி உணர்வை குறைக்கும்.
  • சோம்பு தண்ணீர் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும், மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • நட்சத்திர சோம்பு உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.
  • ஒரு சில நபர்களுக்கு அதிக வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் காரணமாக சரியாக தூக்கம் வராமல் சிறப்படுவார்கள். இந்த தூக்க பிரச்சனையை குணவாக்குவதற்கு தினமும் இந்த சோம்பு கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அதில் மிகுந்துள்ள மெக்னீசியம் சத்தானது நரம்புகளுக்கு வலிமை கொடுத்து ஆழ்ந்த உறக்கத்தை பெற வழிவகை செய்கிறது.
  • வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஜீரணமாகாமல் சிரம படுகிறவர்கள், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கினாள் விரைவில் செரிமானத்தை சீராக்கும் சோம்பு.


சோம்பு நடவு முதல் அறுவடை வரை எப்படி செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சோம்பு செடி வளர்த்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

சப்போட்டா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில் தான் அதிகமாக காணப்படுகிறது, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவை தன் தாயகமாகக் கொண்டது. கடல்வழியே நம் இந்திய நாட்டிற்கு வருகை தந்த போர்த்துக்கீசியர்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சப்போட்டா பழம். இப்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா வளர்ப்பு அதிக அளவில் செய்யப்படுகின்றது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளான இலங்கை மற்றும் மலேசியா நாட்டிலும் சப்போட்டா அதிக அளவில் பயிரிட படுகிறது.
சப்போட்டா
விதையிலிருந்து சப்போட்டா வளர்ப்பது எப்படி, சப்போட்டா சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள், சப்போட்டா பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சப்போட்டா பயிரிட ஏற்ற மண்

ஏற்ற-மண்
சப்போட்டா பயிர் எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடிய பயிர் ஆகும். சிறந்த வடிகால் வசதியுள்ள மண்ணில் கூடுதல் வளர்ச்சியை காணலாம், மேலும் சப்போட்டா பழ மரம் ஓரளவு உப்புத் தன்மை கொண்ட நிலத்திலும் கூட உப்புத் தன்மை நீரையும் ஏற்று வளரும் திறன் கொண்டது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தையும் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சப்போட்டா நடவு முறை

சப்போட்டா-வளர்ப்பு
நன்கு கனிந்த சப்போட்டா பழத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பின்பு அதிலிருந்து விதைகளை தேர்வு செய்யவும், அடுத்து நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் அந்த விதைகளை விதைக்க வேண்டும். சப்போட்டா பழ விதையின் ஓடுகள் மிக கடினமாக இருக்கும், எனவே அது முளைத்து வர 90 முதல் 100 நாட்கள் ஆகலாம்.

ஒட்டு கட்டிய செடிகளை கூட வாங்கி பயிரிடலாம், ஆனால் விதையிலிருந்து ஒரு மரத்தை வளர்த்தால் மட்டுமே ஆணி வேறானது தோன்றும், ஆகையால் விதையை கொண்டு பயிரிடுவதே சிறந்தது. சப்போட்டா மரம் வளர்ப்பு செய்ய ஏற்ற மாதம் ஜூலை – அக்டோபர் ஆகும்.

பராமரிப்பு

பராமரிப்பு
சப்போட்டா செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதோடு அதன் பராமரிப்பு முறைகளையும் தெரிந்து கொள்வோம். சப்போட்டா செடியை தரை மட்டத்தில் இருந்து இரண்டு அடி உயரம் வரையிலும் கிளைகள் எந்தப்பக்கமும் பிரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சப்போட்டாவிற்கு கவாத்து செய்தல் அவசியமில்லை. நீண்டு வளரும் சில தண்டுகளை மட்டும் அகற்றினால் போதுமானது, மேலும் அடர்த்திமிக்க மற்றும் நிழல் விழுகின்ற கிளைகளையும் அகற்றிவிடவேண்டும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சப்போட்டா பழம் அறுவடை

சப்போட்டா-பயன்கள்
அறுவடை பருவத்தை அடைந்த சப்போட்டா பழத்தின் நிலையை அறிவது சற்று கடினமாகும். மற்ற பழங்களைப் போல் சப்போட்டாவில் நிறமாற்றம் ஏதும் ஏற்படுவது கிடையாது. இருப்பினும் சப்போட்டா பழத்தின் தோலின் மீதுள்ள சின்ன சின்ன கருநிறத்துகள் மறைந்து, மேலும் பழமானது சிறிது பளபளவென இருக்கும். சப்போட்டாவை நகத்தை கொண்டு கீறிப்பார்த்தால், பழத்தின் உள்ளே மிதமான மஞ்சள் நிறம் தென்படவேண்டும், பாலானது வடியக் கூடாது. சப்போட்டா தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகி இருக்கும். இப்படி காணப்பட்டால் சப்போட்டா பழத்தை அறுவடை செய்யலாம்.

சப்போட்டா பழ இரகங்கள்

சப்போட்டா-பழ-இரகங்கள்
கிரிக்கெட் பால், துவாரப்புடி, பாராமசி, தகரப்புடி, காளிப்பட்டி, ஓவல், கீர்த்தபர்த்தி, பாலா, கோ 1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம் 3, பெரிய குளம் 4, பெரிய குளம் 5.

சப்போட்டா பயன்கள்

பழம்-அறுவடை

  • சப்போட்டா பழத்தை நன்கு அரைத்து அதனுடைய சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வலிகள் எல்லாம் குணமாகிவிடும்.
  • சப்போட்டா பழத்தை தினசரி சாப்பிட்டால், சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
  • சப்போட்டா பழம் ஜூஸ் உடன், எலுமிச்ச பழச்சாறையும் கலந்து உட்கொண்டால் சளி சரியாகிவிடும்.
  • சப்போட்டா பழத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புண்ணை சரிசெய்யும்.
  • இந்த பழத்தில் வைட்டமின் A உள்ளதால், கண்பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.


வறட்சியைத் தாங்கி வளரும் பழமான சப்போட்டா பழம் பயிரிடும் முறைகள் பற்றி கண்டோம். அதிக மருத்துவ பயன்கள் கொண்ட சப்போட்டா பழமரத்தை வளர்த்து, அதன் அளப்பரிய பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். பரங்கிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்கா ஆகும். பூசணி தமிழர்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றாகும் இந்த பரங்கிக்காய். பரங்கிக்காய் வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு, பரங்கிக்காய் சாகுபடி, வீட்டில் பரங்கிக்காய் வளர்ப்பது எப்படி, பரங்கிக்காய் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பரங்கிக்காய்

விதையை தேர்ந்தெடுத்தல்

பரங்கிக்காய்-விதை-1
நன்கு நேர்த்தியான பரங்கிக்காய் விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். நீரில் போட்டவுடன் விதைகள் மிதந்து கொண்டிருக்கும், அடுத்த நாள் பார்க்கும்பொழுது நீரின் அடியில் காணப்படும், இந்த நிலை விதைகள் விதைக்க தயாரானதை குறிக்கும்.

மண்கலவை தயார் செய்தல் மற்றும் விதைத்தல்

மஞ்சள் பரங்கிக்காயை நடவு செய்ய ஏற்ற மாதம் ஜீன் – ஜீலை மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் ஆகும், இந்த மாதத்தில் நடவுசெய்தல் நல்ல சாகுபடி செய்யலாம்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now


பரங்கிக்காய்க்கு மண்கலவை தயார் செய்யும் போது, களிமண் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இம்மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்ய வேண்டும். பிறகு தயார் நிலையில் இருக்கும் விதைகளை விதைப்பு செய்யலாம்.

பரங்கிக்காய் வளர்ச்சி

பரங்கிக்காய்-கொடி
மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் விதைத்த ஏழாம் நாளில் இருந்து ஒன்பது நாற்களுக்குள் விதையானது முளைத்து, இலைகள் துளிர் விட தொடங்கி விடும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்தே தண்ணீர் விட வேண்டும். கோடைகாலங்களில் வாரத்திற்கு இருமுறையும், மற்ற நேரங்களில் வாரம் ஒரு முறையும் நீரை விட வேண்டும். இந்த நீர் மேலாண்மையே பரங்கிக்காய் செடி வளர்ப்பு முறை தனை மேம்படுத்தும்.

பரங்கிக்காய் வளர்ப்பு மற்றும் சாகுபடி

நல்ல-சாகுபடி
பரங்கிக்காய் செடி விதைத்த 45 நாளில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும்.

முதலில் ஆண் மொட்டுகள் அதிகம் வைக்கும், பின்பு பெண் மொட்டுக்கள் வரத்தொடங்கும். 60 நாட்களுக்கு பிறகு அடர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். பூக்கள் பூத்த உடனே தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளின் வரவு அதிகரிக்கும், மகரந்த சேர்க்கையும் துரிதமாக நடைபெறும். 70 நாட்களுக்கு பிறகு காய்கள் தோன்றும். 110 முதல் 115 நாளில் காய் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்கும், அப்போது அதை அறுவடை செய்து கொள்ளலாம்.
male and female flowers

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

பரங்கிக்காய் நன்மைகள்

பரங்கிக்காய்-நன்மைகள்

  • பரங்கிக்காய் உடலுக்கு அதிக அளவில் குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது, மேலும் சிறுநீர் நன்கு பிரிவதற்கு உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.
  • திடீரென்று தோன்றும் வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்யும் வல்லமை கொண்டுள்ளது.
  • பரங்கிக்காய் சாப்பிடுவதால் மழைக்கால் ஏற்படும் சளி மற்றும் தொடர் இருமலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது. பரங்கிக்காயில் உள்ள ஜீயாக்சாண்டின், வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் ஆகியவை நோய்த்தொற்றை எதிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்திதனை அதிகரிக்க மற்றும் விரைவில் குணமடையவும் வழிவகை செய்கிறது.
  • இதயம் பலகீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்த சோகை நோய் உள்ளவர்கள் இந்த பரங்கிக்காயை தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்து கொண்டால் சிறந்த பலன் வாய்க்கும்.
  • பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது, இது நம் கண்களுக்கு பெருமளவில் பயனுள்ளதாக விளங்குகிறது, மேலும் ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளதால், அவை நம் கண்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
  • தசை மண்டல பகுதிகளின் தளர்ச்சியை போக்கி, அதற்கு உறுதியை சேர்க்க வல்லது.


நாட்டு பரங்கிக்காய் விதைப்பு முதல் அறுவடை எப்படி செய்வது என்பதை பற்றி பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பரங்கிக்காய் வளர்ப்பு செய்து பலன்கள் அனைத்தையும் பெற்று, அதன் பூ போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.

வெற்றிலை வள்ளி கிழங்கு பலரும் மறந்து போன பாரம்பரியமான கிழங்குகளில் ஒன்று. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த கிழங்கு அதிகமாக காணப்படுகிறது. காவள்ளிக் கிழங்கு மற்றும் ஏர் பொட்டேட்டோ என்றும் அழைக்கப்படுகிறது. மகத்துவம் பல நிறைந்தது இந்த கிழங்கு, இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை. வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு முறை செய்வது எப்படி, வெற்றிலை வள்ளி கிழங்கு சாகுபடி, வெற்றிலை வள்ளி கிழங்கு மருத்துவ குணம் மற்றும் அதன் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வெற்றிலை-வள்ளி-கிழங்கு-வளர்ப்பு

நடவு முறை

வெற்றிலைவள்ளிக்கிழங்கை நடவு செய்ய ஏற்ற காலம் ஆடி பட்டம் ஆகும். நடவு செய்வதற்கு மண்கலவை தயார் செய்யும் போது, செம்மண் 40 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்யவும். வெற்றிலை வள்ளி கிழங்கை வாங்கி இரண்டு வாரங்கள் வைத்திருந்தால் சிறிது முளைப்பு விட்டிருக்கும் அப்போது நாம் அதை எடுத்து மண்கலவையில் நடவு செய்யலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வளர்ச்சி

வெற்றிலை-கிழங்
நடவு செய்த 15 நாளில் வெற்றிலை வள்ளி கிழங்கின் குருத்து வளர்ந்திருப்பதை காணமுடியும். சுமார் ஒரு மாதத்தில் இந்த கொடி வகை தாவரத்தில் இலைகள் வளர ஆரம்பிக்கும், இதன் இலைகள் வெற்றிலை இலை போலவே இருக்கும் எனவே தான் இதற்கு வெற்றிலை வள்ளி கிழங்கு என்று பெயர் வந்தது. பிறகு 50 நாளில் கொடியின் வளர்ச்சி ஏழு அடி வரை இருக்கும். கொடி வளர ஏதுவாக பந்தல் அமைப்பது அவசியமாகும், இவ்வாறு செய்தால் வெற்றிலை வள்ளி கொடி வளர்ப்பு சிறக்கும்.

வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு தனில் நோய் தாக்குதல்

நோய்-தாக்குதல்-1
வெற்றிலை வள்ளி கிழங்கை இலை சுருட்டல் நோய் தாக்க கூடும். இதனால் கொடியின் இலைகள் எல்லாம் சுருள தொடங்கும், கொடியின் வளர்ச்சியையும் பாதிக்கும். இதை சரி செய்ய, மீன் அமிலம் அல்லது பழக்கரைசலை நீரில் கலந்து தெளித்து வந்தால் மூன்று வாரத்தில் இந்த நோய் சரி ஆகிவிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அறுவடை

அறுவடை-1
நடவு செய்த 130 நாளில் காய்கள் வைக்க தொடங்கும். தொடக்கத்தில் இது பச்சை நிறத்தில் இருக்கும், இந்த நிலை அறுவடைக்கு இன்னும் தயார் ஆகவில்லை என்பதை குறிக்கும். சுமார் 160 நாளில் உருளை கிழங்கின் நிறத்திற்கு மாறி இருக்கும். இப்போது நாம் இதை அறுவடை செய்யலாம். கொடியில் காய்க்கும் உருளை கிழங்கு போல் உள்ளதால் தான் இதை ஏர் பொட்டேட்டோ என்று அழைக்கின்றனர்.

வெற்றிலை வள்ளி கிழங்கின் பயன்கள்

வெற்றிலை-வள்ளி-கிழங்கு-வளர்ப்பு-1

  • வெற்றிலை கிழங்கு வள்ளி பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய பயிராகும். இது மாவுச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகிய அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது.
  • வெற்றிலை வள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சரும பிரச்சனைகள் குணமாகும்.
  • உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால், உடல் தேறி வலுப்பெறும்.
  • செரிமான கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் தன்மை கொண்டது.
  • நமது உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை ஏற்படும், வெற்றிலை வள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் இந்த தொல்லை நிவர்த்தியாகும்.


வெற்றிலை வள்ளி கிழங்கை எளிய முறையில் வளர்த்து, அடுத்த தலைமுறைக்கும் அதன் பலன்களை கொண்டு சேர்த்து தலைமுறை சிறக்க வாழ்த்துகிறோம்.

கொல்லங்கோவை எனப்படும் ஆகாச கருடன் கிழங்கை வளர்ப்பது மிக எளிது. இதை வளர்க்க குறைந்த பராமரிப்பே போதுமானது. மேலும் இந்த கிழங்கு பல பயன்களை தர வல்லது. இந்த ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு முறை மற்றும் ஆகாச கருடன் கிழங்கு பயன்கள், ஆகாச கருடன் கிழங்கு எடுப்பது எப்படி ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
கிழங்கு-வளர்ச்சி

தோற்றம்

ஆகாச-கருடன்-கிழங்கு-1
ஆகாச கருடன் கிழங்கின் இலை கோவை பழத்தின் இலை போன்று காணப்படும். இந்த கிழங்கின் கொடி மிக மென்மையாக இருக்கும். மேலும், ஆகாச கருடன் கிழங்கு பூ அளவில் சிறிதாகவும், மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். பூ பூத்த அடுத்த நாளே உதிர்ந்து விடும். உதிர்ந்த இடத்தில் சிறியதாக காய் தோன்றும். பிறகு அது சிவப்பு நிறத்துடன் பழுத்து, அதுவும் ஓரிரு நாளில் விழுந்து விடும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு பெயர் காரணம்

ஆகாச கருடன் கிழங்கை வாசலில் கட்டி தொங்க விட்டிருப்பதை பாத்திருப்பீர்கள். அப்படி கட்டி தொங்க விடும் பொழுது பார்ப்பதற்கு கருடன் போல இருப்பதால், இதை ஆகாச கருடன் கிழங்கு என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான காரணம், பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாக இந்த கிழங்கு பயன்படுவதால், பாம்பின் எதிரியாக இருக்கும் கருடனை குறிக்கும் விதமாக அவ்வாறு அழைக்கப்படுகின்றது.

ஆகாச கருடன் கிழங்கை எப்படி கண்டுபிடிப்பது

ஆகாச கருடன் கிழங்கு சமவெளிப் பகுதியிலும், வேலி ஓரங்களிலும் பூமிக்கு அடியில் கிடைப்பதாகும். இலையை கொண்டு ஆகாச கருடன் கிழங்கு செடி தனை அடையாளம் காணலாம், ஆகாச கருடன் கிழங்கின் மீது காயம் ஏதும் படாமல் தோண்டி வெளியே எடுக்க வேண்டும், ஒருவேளை காயம் பட்டால் துளிர்க்காமல் போக வாய்ப்பு உண்டு.

நடவு செய்தல்

ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு
மண் மற்றும் நன்கு மக்கிய மாட்டு எரு இரண்டையும் கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். தோண்டி எடுத்து வைத்துள்ள ஆகாச கருடன் கிழங்கை அந்த மண்கலவையில் வைத்து நடவு செய்யவும். கிழங்கு மறையும் அளவிற்கு மண்ணை கொண்டு மூடினாலே போதுமானது. சிறிது நீர் தெளித்து வெயிலில் வைக்கவேண்டும்.

5kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு மற்றும் சாகுபடி

நடவு செய்த 45 நாளில் கொடியானது நன்கு வளர தொடங்கி இருக்கும். பின்பு 60 நாளில் பூ வைக்க தொடங்கும். ஆனால் கிழங்குகள் வேர் பகுதியில் தான் காணப்படும். சிலர் வீடு வாசலில் கட்டிருக்கும் போது காற்றின் ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு சிறிது வளரும் ஆனால் மண்ணில் வளரும் அளவுக்கு வளர்ச்சி இருக்காது.

ஆகாச கருடன் கிழங்கு நன்மைகள்

ஆகாச-கருடன்-கிழங்கு

  • பாம்பு கடித்துவிட்டால், இந்த ஆகாச கருடன் கிழங்கை எலுமிச்சை பழம் அளவிற்கு சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்பட்டு விஷத்தன்மையின் வீரியம் குறையும், பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றிவிடலாம்.
  • பொதுவாக இதை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவார்கள், அப்படி தொங்க விட்டால் வீட்டின் வாஸ்து குறைபாடுகள் குறைந்து, தீய சக்திகளை ஈர்த்துக்கொள்ளும், கண் திருஷ்டி மற்றும் பில்லி சூன்யம் விலக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
  • இளைத்துப்போன உடலைத் தேற்றவும், உடலில் உஷ்ணத்தை குறைக்கவும் உதவுகிறது, ஆனால் சித்த மருத்துவரிடத்து ஆலோசித்து பிறகு சாப்பிட வேண்டும்.
  • சீதப்பேதி பிரச்சனை சரியாக, ஐந்து மில்லி ஆகாச கருடன் கிழங்கு பொடிதனை நூறு கிராம் தண்ணீரில் கலந்து அதை காய்ச்சி காலை மற்றும் மாலை இருவேளையும் குடித்துவர குணமாகும்.
  • ஆகாச கருடன் கிழங்கு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. எனவே தான், சித்தர்கள் இதை மகா மூலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • கால்நடைகளுக்கு நோய் எதிர்சக்திக்காக இந்த கிழங்கு கொடுக்கப்படுகிறது.
  • ஆகாச கருடன் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை, சரும நோய்களுக்கு மேற்பூச்சாக பூசி குணப்படுத்தலாம்.


எளியமுறையில் வளர்க்க கூடிய இத்தகைய அற்புத சக்தி கொண்ட ஆகாச கருடன் கிழங்கை வளர்த்து, அதன் முழு பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

முள்சீத்தா மரம் வளர்ப்பு சுலபமான முறையில் செய்யலாம், ஏனென்றால் இது நன்கு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழ பயிர் ஆகும். முள் சீதாவின் பிறப்பிடம் அமேசான் காடுகள் ஆகும், தற்பொழுது வெகுவாக பல வெப்பமண்டல நாடுகளில் பரவலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. நம் இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் இயற்கையாகவே விளைகின்றது.
முள்சீத்தா-மரம்-வளர்ப்பு-1
வீட்டில் வளர்க்க கூடாத மரம் என்று முள் சீத்தா மரத்தை கூறுவதுண்டு, இயற்கையின் படைப்பில் வளர்க்க கூடாத மரமென்று ஏதுமில்லை. தாராளமாக இதை வீட்டில் வளர்க்கலாம். முள் சீதா மரம் வளர்ப்பது எப்படி, விதை வழி மரம் வளர்ப்பு, காய்க்காத மரம் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும், முள் சீத்தா பயன்கள், முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வளர்ச்சிக்கு ஏற்ற மண்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்ய நீர் தேங்காத எந்தவகை மண்ணையும் தேர்ந்தெடுக்கலாம். விதை மூலமாகவும் பயிர் செய்யலாம், மேலும் மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் முள் சீதாவை பயிர் செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

முள்சீத்தா மரம் வளர்ப்பு மற்றும் மகசூல்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மே மாதம் பூக்கள் பூத்து ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பழங்களை கொடுக்கும். ஒரு செடிக்கு ஏறக்குறைய நூறு பழங்கள் வரை கிடைக்கும், பழங்கள் அனைத்தையும் கனிவதற்கு முன்பாக பறித்து விற்பனை செய்துவிட வேண்டும்.

முள் சீத்தா பெரும்பாலும் இருபது அடி வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது. பசுமை மாறாத குணம் கொண்ட இம்மரம் மினுமினுப்பான இலையுடனும், பழங்களின் வெளிபுறப்பகுதியில் வளைந்த மிருதுவான முற்களோடு காணப்படும்.

முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை

மகசூல்
சீதா பழம் மரம் வளர்ப்பு முறை தனில் அடுத்து அதன் சாகுபடி முறைகளை காணப்போகிறோம். இதன் பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் இரண்டும் கலந்திருக்கும். முள் சீதா பழமானது இதய வடிவத்திலோ அல்லது நீள் முட்டை வடிவத்திலோ காணப்படும். முள் சீதா பழங்கள் தோற்றத்தில் பெரிதாக காணப்படும். ஒவ்வொரு முள் சீதா பழமும் 3 கிலோ முதல் 5 கிலோ வரையும் கூட எடை இருக்கும். முழுமையாக வளர்ந்த பழத்தின் நீளம் சுமார் 1 அடியும், அகலம் அரை அடியும் இருக்கும்.

முதலில் அடர்பச்சை நிறத்தில் காய்கள் இருக்கும், பின்பு பழுத்ததும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறிவிடும். சதைப்பகுதியானது நாட்டு சீத்தா பழத்தை போல வெண்மை நிறமாகவும், அதே சுவையும் கொண்டதாக இருக்கும், ஆனால் முள் சீத்தா நறுமணம், எலுமிச்சை, அண்ணாச்சி, முலாம்பழம், ஸ்டிராபெரி பழங்களின் நறுமணத்தை கலந்த ஒரு வித்தியாசமான வாசனையை பெற்றிருக்கும்.

பராமரிப்பு

சீதா-பழம்
முள் சீத்தாவிற்கு அதிகளவு தண்ணீர் தேவை இருக்காது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினாலே போதும். வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் தனி தனியே கலப்பு எரு வேர்ப்பகுதியில் இட்டால் போதுமானது. முள் சீத்தாவில் பூச்சி தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதற்கென்று பாதுகாப்பு முறையென்று ஏதுமில்லை. வேர் அழுகல் நோய் தோன்றினால் மட்டும் சிறிது வேப்பம்புண்ணாக்கை வேர் பகுதியில் வைத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும். இவ்வாறு செய்தால் முள்சீத்தா மரம் வளர்ப்பு சிறக்கும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

முள் சீத்தா அறுவடை

முள்சீத்தா மரம் வளர்ப்பு
தீவு பகுதிகளில் ஒரு வருடத்திற்கு மூன்று பருவங்களில் முள் சீத்தா பூ பூப்பதால், 3 முறை அறுவடை செய்யலாம். பிற பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தா மரமானது பூக்கிறது. ஜுன்-ஜுலை மாதங்களில் இதன் பழங்களை அறுவடை செய்யலாம்.

முள் சீத்தாப்பழம் நன்மைகள்

முள்சீத்தா பழம் சத்துக்கள் மற்றும் நன்மைகள்

  • முள் சீத்தாபழத்தில் நீர்சத்து மிகுந்துள்ளது , மேலும் மாவுசத்து, புரத சத்து, அத்தியாவசியமான தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து போன்ற பல சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ பன்னிரண்டு வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் காரணிகளை முள் சீத்தாப்பழம் பெற்றிருக்கிறது.
  • புற்றுநோய் பாதிப்பால் உருவாகும் கட்டிகளை கரைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
  • இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நம் செரிமான அமைப்பிற்கு நல்ல நன்மை தரக்கூடியது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
  • முள் சீத்தாப்பழம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தித்தனை அதிகரித்து உடலில் உள்ள நாற்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்குதலிருந்து பாதுகாக்கிறது.
  • இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், போன்ற பல்வேறுவகையான நோய்களை தீர்க்கவல்ல உன்னத மருந்தாகவும் முள்சீத்தாப்பழம் விளங்குகிறது.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை இந்த முள் சீதாப்பழ மரம். இதை நல்ல முறையில் வளர்த்து, அதன் பயன்களை பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

நாவல் பழம் மரம் அனைத்து மண்களிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத் தன்மை மிக்க மற்றும் நீர் தேங்கிய நிலையில் இருந்தாலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு சிறப்பாக இருக்கும், எனினும் அதிகமான உற்பத்தி மற்றும் நல்ல வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் களிமண் அல்லது செம்மண் சிறந்தது.
நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு
நாவல் பழம் மரம் மிகுந்த வறட்சியை கூட தாங்கி வளரக்கூடிய பழப்பயிர் ஆகும். நாவல் பழங்களில் இரும்புச்சத்தும், கனிமங்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது. நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி, நாவல் பழம் பயன்கள், நாவல் மரம் சாகுபடி, நாவல் பழம் வகைகள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நடவு செய்தல்

நடவு-செய்தல்
நாவல் பழம் மரம், விதை மற்றும் நாற்று முறையில் நடவு செய்யலாம். நல்ல விதைகளாக தேர்வு செய்து விதைக்கவும். விதைகள் முளைக்க சுமார் பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். நாற்றுகள் மூலம் நடவு செய்த நாவல் மரத்தில் எட்டு முதல் பத்து ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் மூலம் வளர்ந்த நாவல் மரங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலும் பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு-1
நாட்டு நாவல் மரம் நன்கு வளர்ந்த நிலையில், ஒரு மரத்திற்கு எழுபது கிலோ வரை தொழு உரத்தை அளிக்க வேண்டும், நாவல் மரம் வளரும் மண்ணில் அதிக ஊட்டசத்து காணப்பட்டால் அதன் இலைகள் அதிக அளவில் வளரும், எனவே தான் தொழு உரத்தை அளிக்கிறோம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


நாவல் செடிகள் வளர்ச்சி அடையும் காலம் வரை களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். நாவல் பழ மரத்திற்கு கவாத்து செய்யும் போது, உலர்ந்துபோன மற்றும் குறுக்கில் செல்லும் கிளைகளை நீக்கினால் போதுமானது, இவ்வாறு செய்வதால் நாவல் மரம் வளர்ப்பு சிறக்கும்.

மகசூல் மற்றும் சாகுபடி

நாவல்-பழம்
நாற்று மூலம் வளர்ந்த நாவல் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு எண்பது முதல் நூறு கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மூலம் வளர்ந்த மரத்திலிருந்து அறுபது முதல் எழுபது கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். நாவல் மரங்கள் தொடர்ந்து ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் ஒரு இலை உதிரா மரம் ஆகும். இதை பிப்ரவரி – மார்ச் மாதம் மற்றும் ஜுலை – ஆகஸ்ட் மாதம் ஆகிய இரண்டு பருவங்களிலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு செய்யலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நாவல் பழம் பயன்கள் மற்றும் மருத்துவகுணம்

நாவல் பழம் மரம் வளர்ப்பு

  • வெள்ளை நாவல் பழத்தின் சாறு மற்றும் மாம்பழத்தின் சாறை சம பங்கு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்துவந்தால் சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வரும், இதுவே வெள்ளை நாவல் மருத்துவ குணம் ஆகும்.
  • நன்கு பழுத்த நாவல் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரானது பசி தனை தூண்டும் குணம் உடையது.
  • நாவல் பழத்தை சாப்பிட்டால் குடற்புண் மற்றும் கல்லீரல் கோளாறுகள், போன்றவற்றை சரிசெய்ய வல்லது.
  • நாவல் பழத்தின் விதைதனில் மாவுச் சத்து மற்றும் புரதம் மிகுந்து உள்ளதால் கால்நடைகளுக்கு சத்துமிக்க தீவனமாகக் பயன்படுகிறது.
  • ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து அதிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மண்ணீரலில் ஏற்படும் நோய்களை தடுக்கவல்ல அரும் மருந்தாகும் இந்த நாவல் பழம்.
  • நாவல் மரத்தின் இலையை பொடி செய்து அதைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகள் வலுப்பெறும், நாவல் மர இலையின் சாம்பல் பூசிவர நாள்பட்ட தீக்காயங்கள் மற்றும் வெட்டு பட்ட காயங்கள் குணமாகும்.


நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும் என்று பார்த்தோம். நாவல் பழம் மிக சிறந்த மருத்துவ குணத்தை உடையது, பெருன்பான்மையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. நாவலின் இலை, பழம், பட்டை, விதை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அரும்மருந்தான நாவல் பழ மரத்தை வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது மிக எளிதாகும். கடுகு கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. குட்டிக் கடுகு குறையாத நன்மைகள் எனும் கூற்றிற்கு ஏற்ப பல நன்மைகளை உள்ளடக்கியது. உலகனைத்திலும் உள்ள மக்களால் இந்த கடுகு பயன்படுத்தப்படுகிறது,
கடுகு-இலை
இருப்பினும் இந்த கடுகு கீரையை பயன்படுத்துபவர்கள் குறைவே ஆகும். விதையிலிருந்து கடுகுக்கீரையை எவ்வாறு வளர்ப்பது, மாடித்தோட்டத்தில் கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, கடுகுக்கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

விதைக்கும் முறை

கடுகுக்-கீரை-வளர்ப்பு
விதைப்பதற்கு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகே போதுமானது. சிறிதளவு கடுகை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும், அடுத்தநாள் ஊற வைத்த கடுகு சிறிதளவு பெரிதாகி காணப்படும், இச்செயல் கடுகு செடி சீக்கிரம் வளர உதவும்.

கடுகு செடிக்கென்று பிரத்தேக மண்கலவை தேவையில்லை, அனைத்து விதமான மண்ணிலும் இது வளரும் தன்மையை பெற்றது. நெகிழிப்பை அல்லது தொட்டியில் மண்ணை நிரப்பி, அதன் மீது ஊற வைத்து தயார் நிலையில் உள்ள கடுகை பரவலாக போட்டு, லேசாக மண் போட்டு மூடி சிறிதளவு நீர் தெளிக்கவேண்டும். நன்கு வெய்ல் படும் படி வைத்தால் போதும் ஓரிரு நாளில் முளைக்க தொடங்கிவிடும்.

கடுகுக்கீரை வளர்ப்பு தனில் உரமேலாண்மை

உரமேலாண்மை
நன்கு மக்கிய மாட்டு எரு நல்ல இயற்கை உரமாகும். இந்த உரத்தை கடுகுக்கீரையின் வேர் பகுதியில் படும்படி இட்டு நீர் விட வேண்டும். இதன் மூலம் கடுகு செடியின் வளர்ச்சியானது மேம்பட்டு, கடுகுக்கீரை வளர்ப்பு சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கடுகுக்கீரை சாகுபடி

கடுகு-கீரை-சாகுபடி
கடுகு செடி நீளமாக வளரும் தன்மையை பெற்றது. இதன் தண்டுகள் மிக மிருதுவானதாக இருக்கும்.மேலும் கடுகுக்கீரையில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். கடுகுக்கீரையின் வயது தொன்னூறு முதல் நூறு நாட்கள் வரை ஆகும். கடுகு செடி தனில் அதன் நுனியை கிள்ளிவிட்டால் நிறைய கிளைகள் வளர வாய்ப்பு உள்ளது, இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.

வேர்ப்பகுதியில் நீர் தேங்கி காணப்பட்டால் கடுகு செடியின் வளர்ச்சி பாதிக்கும், எனவே நீர் தேங்காமல் நல்ல முறையில் பராமரித்து வந்தால் சுமார் இருபது நாளில் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு கடுகுக்கீரை வளர்ந்துவிடும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

நோய் தாக்குதல்

கடுகுக்-கீரை-வளர்ப்பு
கடுகு இலையில் பூச்சி தாக்குதல் குறைவாகவே இருக்கிறது. கடுகு செடியை பெரும்பாலும் சாற்றை உறிஞ்சும் பூச்சிககள் மட்டுமே தாக்குகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கற்பூரகரைசலை தெளிக்கவும். மேலும் கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பூத்து, கடுகுக்கீரை வளர்ப்பு சிறப்பாக இருக்கும்.

கடுகுக்கீரை பயன்கள்

கடுகுக்-கீரை-வளர்ப்பு-1

  • கடுகுக்கீரை சுவை மிகுந்தது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களை உள்ளடக்கியது. எனவே தான் மக்கள் அதிகளவில் சமையலில் பயன்படுகின்றனர்.
  • கடுகுக்கீரையில் வைட்மின் கே உள்ளதால் இதய ஆரோக்கியம் தனில் முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
  • கடுகுக் கீரையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • காய்கறி சாலட்டுகளில் கடுகு இலையை சேர்த்துக் கொள்ளலாம், மேலும் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகுக்கீரையை சிறிதளவு சேர்த்து கொள்ளும்போது கூடுதல் சுவையை கொடுக்கிறது.
  • கடுகுக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அஜீரண கோளாறு சரியாகும்.

  • கடுகுக்கீரையில் அப்படி என்ன இருக்கு என கேட்போரும் உண்டு, அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரை நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறோம். கடுகுக்கீரை வளர்ப்பு முறை பற்றி பார்த்தோம், நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.

மூலிகை செடி என்று சொன்னதுமே நம் நினைவில் முதலில் வருவது பிரண்டை செடி தான். பிரண்டை செடியில் அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்த அறிய மூலிகை செடியை வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவோரும் உண்டு, பிரண்டை செடி வீட்டில் வளர்க்கலாமா வேண்டாமா, பிரண்டை செடி வளர்ப்பு செய்வது எப்படி, பிரண்டை சாகுபடி, பிரண்டையை எளிய முறையில் மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பிரண்டை செடி வளர்ப்பு

பிரண்டையின் வளரும் தன்மை

பயன்கள்
அடுக்கு மாடி குடியிருப்புகளிலும், சிறிதான ஃப்ளாட் உள்ள இடத்திலும் தொட்டிகளிலேயே இந்த பிரண்டை வளர்ப்பு செய்யலாம். மருந்துக்கு மாற்றாக இந்த ரக மூலிகைகளே பயன்படுத்தலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


சதைப்பற்று மிக்க நாற்கோண வடிவத்தண்டுகளை உடைய கொடி வகையை சார்ந்ததாகும், இதன் சாறு நம் உடலில் பட்டால் சிறிது அரிக்கும். சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவிலான சிறிய சதை பகுதியை உடைய கனியே விதையாக பயன்படுகிறது, மேலும் கொடிகளை பதியம் போட்டும் வளர்க்கலாம்.

பிரண்டை நடவு

பிரண்டை செடி வளர்ப்பு
பிரண்டை செடி வளர்ப்பு முறை மிகவும் எளிது. பிரண்டை அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் நன்கு மக்கிய மாட்டு எருவை கலந்து மண்கலவையை தயார்செய்து கொள்ளவும். ஏற்கனவே வளர்ந்துள்ள பிரண்டையை சிறிது வெட்டி இரண்டு கணு மண்ணின் உள்ளே இருக்கும் படி நடவு செய்யவும். ஒரு கணுவில் வேர் பிடிக்கவில்லை என்றாலும் மற்றோரு கணுவில் வேர் பிடித்து பிரண்டை கொடி வளர்ந்துவிடும். நடவு செய்த 20 முதல் 25 நாளில் தளிர் பிடிக்க தொடங்கிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

பிரண்டை வகைகள்

பிரண்டை-செடி-வளர்ப்பு
பிரண்டையில் பல வகைகள் உண்டு. சாதாரண பிரண்டை, தீம்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, இலை பிரண்டை, புளிப்பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை என பல வகைகளாக இருக்கிறது. மேலும், `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு.

பிரண்டையின் பயன்கள்

பிரண்டை

  • வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் எனும் கூற்றுக்கு ஏற்றாற்போல் எப்பேர்ப்பட்ட மூட்டு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரிசெய்யும் மேலும் கால்சியம் சம்பந்தப்பட்ட குறைப்பாட்டிற்கும் மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது இந்த பிரண்டை.
  • எலும்பு முறிவை சரிசெய்யவும் பிரண்டை பயன்படுகிறது. பிரண்டை தண்டுடன் சிறிது புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, பிறகு அதை காய்ச்சி பிரண்டை எண்ணெய் தயாரிப்பு செய்து மிதமான சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமின்றி, அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் சுளுக்கு உள்ள இடத்தில இதைப் பூசினால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
  • இரண்டு முதல் மூன்று கிராம் பிரண்டை உப்பை பாலில் கலந்து சாப்பிட இரண்டு மாதத்திற்குள் உடல்பருமன் மற்றும் ஊளைச் சதையை குறைக்கும்.
  • இளம் பிரண்டை கொடியின் இலையை பறித்து நன்கு அரைத்து நார் இல்லாத பிரண்டை துவையல் உண்டால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், குடல் புண், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
  • பசியின்மை மற்றும் நாக்குச் சுவையின்மை போன்ற பிரச்சனை குணமாக, நன்கு முற்றிய பிரண்டை தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மோரில் போட்டு விட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஊறவைத்து பிறகு உலர்த்தி வற்றல் தயார் செய்து அதை எண்ணையில் பொரித்து உண்ண வேண்டும்.


பிரண்டை செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொண்டோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பிரண்டை வளர்த்து அதன் அளப்பரிய பயன்களை பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த புங்கன் மரம் வளர்ப்பு பரவலாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புங்கை மரம் காணப்படுகின்றது. நாட்டு வகையை சேர்ந்த புங்கை மரம், வாய்க்கால், வரப்பு, சாலையோரங்களிலும், பொது நிலங்கள் என புங்கை மரம் வளர்ந்து இருப்பதை காண முடியும்.
புங்கன்-மரம்-வளர்ப்பு
காற்றில் இருக்கும் நைட்ரஜனை மண்ணிலே நிலை பெற செய்யும் வகையிலான வேர் முடிச்சுகளை உடைய ஒரு சில மரங்களில் இந்த புங்கை மரமும் ஒன்று. கோடை காலத்தில் சிறிதளவே மட்டுமே இலையுதிரும், பசுமை மாறா தன்மை கொண்டது இந்த புங்கைமரம்.

இந்த புங்கன் மரம் வளர்ப்பது எப்படி, புங்க மரம் பொதுப்பண்புகள், புங்கன் மரம் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

புங்கன் நாற்று தயார் செய்தல்

புங்கன்-மரம்-வளர்ப்பு
நேர்த்தியான புங்கன் விதைகளை தேர்வு செய்யவும், சேகரித்து வைத்துள்ள புங்கன் விதைகளை நெகிழி பை அல்லது சிறிய தொட்டியில் மண் மற்றும் நன்கு மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சரிபங்கு கலந்து அந்த பையில் நிரப்பி அதில் விதைக்கவும். பத்து முதல் பதினைந்து நாளில் புங்கன் விதைகள் முளைத்து வந்துவிடும்.

மண் வகை மற்றும் நடவு செய்தல்

புங்கன்-மரம்-வளர்ப்பு-2
பல விதமான மண் வகைகளில் வளரக்கூடியது இந்த புங்கன் மரம், கரடு முரடான மணல் முதல் களிமண், செம்மண் வரையிலும் வளரக்கூடியது. உவர் மண்ணை கூட தாங்கி வளரும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் உடைய நாற்றுகளை போதிய இடைவெளியில் நடவு செய்யவும். நடுவு செய்யும் பொழுது தொழு உரத்தை குழியில் இட்டு நடுவது புங்கன் மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மகசூல்

புங்கன்-நாற்று
காய்களுக்காகவே பெரும்பாலும் புங்கன் மரம் வளர்க்கப்படுகிறது. இதில் இருபது முதல் இருபத்தைந்து சதவிகிதம் வரை எண்ணெய் இருக்கும். நன்கு வளர்ந்த மரத்தில் பத்து கிலோ வரை புங்கன் காய்கள் கிடைக்கும்.

புங்கன் மரம் தன்னுடைய வளர்ச்சி முறையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழ்நிலைகளில் பசுமை மாறாது, நேர்மாறான சூழ்நிலைகளில் இலைகள் பெருபாலும் உதிர்ந்தாலும் புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக மரத்தில் தோன்றிவிடும். ஏப்ரல் மாதம் முதல் ஜீலை மாதம் வரையில் புங்கன் மரத்தில் பூக்கள் தோன்றும். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் காய்கள் காய்க்கும். நான்கு ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கிவிடும்.

நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் முறை

வேப்பங்கொட்டை-கரைசல்
புங்கன் மரத்தில் முடிச்சு நோய்கள் பெரும்பாலும் காணப்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுகிறது, இந்த செயலினால் ஒளிச்சேர்க்கை மந்தமாகிறது, புங்கன் மரம் வளர்ப்பு பாதிக்க படுகிறது. பூச்சிகளினால் இந்த நோய் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது. இந்த இலை முடிச்சு நோயை சரிசெய்ய வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து இலைகள் மீது தெளிக்கவும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

புங்கன் மரத்தின் பயன்கள்

புங்கன்-மரம்-வளர்ப்பு

  • புங்கமரமானது வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள், வேளாண்மை கருவிகள் ஆகியவற்றை செய்வதற்கு பயன்படுகிறது.
  • புங்கன் இலைகளில் புரதம் நிறைந்துள்ளது, எனவே இவை கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகின்றது.
  • புங்க மர விதையிலிருந்து பயோடீசல் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் விளைவிக்காத பசுமை எரிப்பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • புங்கை மரத்தின் முக்கியமான பயன், மழையை ஈர்க்கும் திறனை அதிகம் கொண்டது.
  • புங்கமர இலைக்கு அல்சர் என்றழைக்கபடும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை உண்டு. இந்த இலையை அரைத்து சிறிதளவு அதன் சாற்றை தினமும் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வயிற்று வலி குணமாகிவிடும்.
  • புங்கன் இலையை காயவைத்து தூளாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும் புங்கன் தைலம் தனை தடவினால் காயம் குணமாகும்.
  • இதன் வித்துகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வாத வியாதி, மூட்டு வலி ஆகியவற்றை சரி செய்யும் மருத்துவ முறைகளில் பயன்படுத்த படுகிறது.


மகத்துவமிக்க இந்த புங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா என்று பலரும் ஐயம் கொண்டுள்ளனர், தாராளமாக இந்த மரத்தை வீட்டின் முன்பு வளர்த்து அதிக அளவு தூய பிராணவாயுவை பெறலாம். இயற்கையின் பரிசான இந்த புங்கன் மரத்தை வளர்த்து புகழோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It