Category

மூலிகைகள்

Category

அனைத்து நிலங்களிலும் சித்தரத்தை வளர்ப்பு செய்யலாம், இது ஒரு செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின்னாளில் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியது. இந்த சித்தரத்தை இஞ்சி வகையை சேர்ந்த செடியாகும். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளில் சித்தரத்தை முக்கியமானதாகும், இதனை அலோபதி மருந்துகளாக தயாரித்து நமது நாட்டிலேயே விற்பனை செய்கின்றனர்.
சித்தரத்தை வளர்ப்பு
சித்தரத்தை செடி வளர்ப்பது எப்படி, சித்தரத்தை வளரியல்பு, சித்தரத்தை எப்படி பயன்படுத்துவது மற்றும் சித்தரத்தை மருத்துவ குணங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

மண்ணின் தன்மை

சித்தரத்தை எல்லாவகை மண்ணிலும் வளரும் பண்பை பெற்றிருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் செழித்து வளர சிறந்த மண்கலவையை அதற்கு அளிக்க வேண்டியுள்ளது. சித்தரத்தை நடவு செய்வதற்கு, 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மக்கிய தொழுஉரம், 20 சதவிகிதம் மணல் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் சித்தரத்தை வளர்ப்பு சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சித்தரத்தை நடவு

சித்தரத்தை செடி
தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். மாடித்தோட்டத்தில் நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடமாக பார்த்து தேர்வு செய்து தொட்டியை அங்கு வைக்கவும், பின்பு அதில் பள்ளம் பறித்து சித்தரத்தை அதில் நடவு செய்யவும். ஒரு வருடம் வரை பலனை தரக்கூடியது இந்த சித்தரத்தை மூலிகை.

சித்தரத்தை வளரியல்பு

சித்தரத்தை
சித்தரத்தை சுமார் ஐந்து அடி உயரம் வளரக்கூடியதாகும். இதன் இலைகள் பசுமையாக நீண்டு வளரும் குணத்தைக்கொண்டிருக்கும். கொத்து கொத்ததாக பக்கக்கிளைகள் படர்ந்து வளரும். இதன் வேர் பகுதியில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும், இதனால் புதிய செடிகள் பக்க வாட்டில் வளர்ந்தபடியே இருக்கும்.

இதன் வேரில் விளைகின்ற கிழங்கில் மருத்துவ குணம் மிகுதியாக உள்ளது. இந்தக் கிழங்கு மிகவும் உறுதியாக இருக்கும், குறுமிளகின் வாசத்தை கொண்டிருக்கும், இதில் வரும் பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலமாக சித்தரத்தை இன விருத்தி செய்யப்படுகின்றன.

சித்தரத்தை அறுவடை

சித்தரத்தை கிழங்கு
நடவு செய்த நாளிலிருந்து சுமார் 200 நாட்களில் சித்தரத்தை அறுவடை செய்யலாம். கிழங்குக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் அறுவடை செய்திட வேண்டும். நெகிழிப்பையில் உள்ள மண் கடினமாக இருக்கும் பொழுது கிழங்கை வெளியே எடுக்க முயற்சித்தால் கிழங்கு காயம்பட வாய்ப்புள்ளது எனவே அந்த மண்ணை இலகுவாக்கி பிறகு கிழங்கை வெளியே எடுத்து விட்டு மீண்டும் செடி நடவு செய்யலாம் செடி மீண்டும் வளர்ந்து வந்துவிடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

சித்தரத்தை கிழங்கு

  • சித்தரத்தை கோழை மற்றும் கபத்தை அகற்றுவதில் பழங்காலம் முதலே முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது, மேலும் உடல் வெப்பத்தை நீக்கும் மற்றும் பசியை தூண்டும்.
  • சித்தரத்தை பொடி செய்து 2-4 கிராம் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேன் கலந்து தினசரி இரண்டு வேளைகள் சாப்பிட்டுவந்தால் வறட்டு இரும்பல் மற்றும் நெஞ்சு சளி எல்லாம் சரியாகிவிடும்.
  • சித்தரத்தையை நன்கு தட்டி, 350 மிலி சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி 30 மிலி – 40 மிலி தேன் சேர்த்து கலந்து சித்தரத்தை கஷாயம் செய்து குடித்துவந்தால் நுரையீரல் மற்றும் தொண்டை நோயெல்லாம் பூரண குணமாகும்.
  • ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு அடிக்கடி கால் வலி, மூட்டு வலி ஏற்பட்டு பெரும் தொந்தரவு ஏற்படும், இவற்றை குணப்படுத்த சித்தரத்தை ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, உடலினை நன்கு வலுப்படுத்தவும் மற்றும் சக்தியை கொடுக்கவும் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யவும் பயன்படுகிறது.


சித்தரத்தை வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் அதன் ஈடு இணையற்ற மருத்துவ பயன்கள் என்ன என்பதை பார்த்தோம். நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் பலன்கள் எல்லாம் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

இன்சுலின் செடியானது கோஸ்டேசி குடும்பத்தைச்சேர்ந்த செடி வகையாகும். இந்த இன்சுலின் செடி ஆசியாவை தன் பூர்வீகமாகக் கொண்டது மேலும் இரும்பு, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் செழிப்பான மூலமாகும், இந்த செடி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரையின் அளவை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பண்பிற்காகவே பல வீடுகளில் இன்சுலின் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது. இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் பண்பை கொண்டுள்ளதால் இதற்கு இன்சுலின் செடி என பெயர் பெற்றது.
இன்சுலின் செடி வளர்ப்பு
இந்த இன்சுலின் செடி மலைப்பிரதேசங்களிலும் மற்றும் காடுகளிலும் சுமார் பத்து அடி வரைக்கும் உயரம் வளரும் தன்மை கொண்டது, ஆனால் மாடித்தோட்டங்களில் தொட்டிகளில் வளர்க்கும் பொழுது சிறிய அளவுகளிலே வளர்கிறது. மிக மெல்லிய புளிப்புச்சுவையை கொண்டது இந்த இன்சுலின் செடி. இன்சுலின் செடி வளர்ப்பது எப்படி மற்றும் இன்சுலின் செடி நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நடவு செய்தல்

இன்சுலின் செடி நன்கு செழித்து வளர மற்றும் ஆரோக்கியமான இலைகளைப் பெற சூரிய ஒளி நல்ல விதத்தில் கிடைக்கும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும், அதே சமயம் நிழலும் இந்த செடிக்கு முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம். நல்ல முறையில் இன்சுலின் செடி வளர்ப்பு செய்ய செறிவுமிக்க மண்கலவையை தயார் செய்துகொள்ளவும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

இன்சுலின் செடியை மண்ணில் ஆழமாக நடவேண்டிய அவசியமில்லை. இரண்டு முதல் மூன்று அங்குல ஆழம் குழிபறித்தால் போதுமானது. இன்சுலின் வேர்த்தண்டுக்கிழங்கை இரண்டு அங்குல ஆழமான மண்கலவையில் மூடி, பக்கவாட்டில் நன்கு அழுத்திவிட்டு நீர் ஊற்றவேண்டும்.

செடியின் வளர்ச்சி

இன்சுலின் செடி
நடவு செய்த 90 நாட்களில் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம், வாழை மரத்தை போன்று இந்த இன்சுலின் செடியை சுற்றிலும் நிறைய இன்சுலின் செடிகள் தானாகவே முளைக்க தொடங்கிவிடும். 170 நாட்களுக்கு பிறகு அபரிவிதமான வளர்ச்சியை உங்களால் கண்கூட பார்க்க முடியும். சுமார் ஒரு வருடங்கள் களைத்து செடியின் உச்சியில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கத்தொடங்கும்.

பூச்சித்தொல்லை

எறும்பின் தொல்லை எப்பொழுதும் மற்றும் கம்பளிப்பூச்சியின் தொல்லை அவ்வப்போது ஏற்பட வாய்ப்புள்ளது. இது இன்சுலின் செடி வளர்ப்பு தனை பெரிதும் பாதிக்கக்கூடும். வேப்பெண்ணை கரைசலை தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளை எளிதில் விரட்டி செடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

இன்சுலின் செடியின் மருத்துவ பயன்கள்

இன்சுலின் செடி வளர்ப்பு

  • சர்க்கரை நோய்க்கு இன்சுலின் செடி ஒரு மாமருதாகும். இன்சுலின் அதிகரிக்க தினசரி ஒரு இலையை காலை வேளையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இன்சுலின் பற்றாக்குறை சரியாகும்.
  • ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த இன்சுலின் செடி மூலிகை நம்முடைய குடலில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாவான ஈகோலின் உடைய அளவை அதிகரிக்கிறது மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
  • இன்சுலின் இலையில் இருக்கின்ற சோடியம் நம்முடைய உடலுக்கு அத்தியாவசியமான நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு இதிலிருக்கும் ரைசோம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • முகத்தில் தோன்றக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு நல்ல தீர்வாக இந்த இன்சுலின் செடியின் இலைகள் பயன்படுகிறது.


அறிய பலன்கள் பல கொண்ட இன்சுலின் செடியை எப்படி வளர்ப்பது மற்றும் இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றி எல்லாம் பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் இன்சுலின் செடி வளர்ப்பு செய்து அதன் பயன்கள் எல்லாம் பெற வாழ்த்துகிறோம்.

கறிவேப்பிலை இன்றி நமது நாட்டில் சமையலே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு சமையலில் முக்கியத்துவம் பெற்றது இந்த கறிவேப்பில்லை. நாம் அன்றாடம் சந்தையில் வாங்குகின்ற கறிவேப்பில்லையானது அறுவடை காலம் வரையிலும் கூட மருந்து தெளிக்கப்பட்டு பின்பு தான் நம் கைகளுக்கு கிடைக்கிறது. இச்செயலுக்கு நிறைய காரணங்கள் கூறுகின்றனர், இருப்பினும் ரசாயனம் ரசாயனம் தானே. இந்த செயற்கை உரத்தின் பாதிப்பிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காப்பாற்றும் நோக்கில் வீட்டிலேயே கறிவேப்பிலை செடி வளர்ப்பு செய்யலாம்.
கறிவேப்பிலை செடி வளர்ப்பு
விதைகளிலிருந்து கறிவேப்பிலை செடி வளர்ப்பு செய்வது எப்படி, கறிவேப்பிலைச் செடி நடும் முறை, கறிவேப்பிலைச் செடி நன்றாக வளர என்ன செய்யவேண்டும், கறிவேப்பிலைச் செடி பராமரிப்பு மற்றும் கறிவேப்பில்லை நன்மைகள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

வளர்க்க தேவையான மண்கலவை

கறிவேப்பில்லை பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது இருப்பினும் நன்கு நீர் வடியக்கூடிய மண்ணாக இருந்தால் எந்த இடையூறும் இல்லாமல் செழித்து வளரும், அத்தகைய குணம் கொண்ட செம்மண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும், அதனுடன் செறிவூட்டப்பட்ட உரம் அதாவது மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார் செய்யவும்.

5kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கறிவேப்பிலை விதை

கறிவேப்பிலை பழம்
கறிவேப்பிலை பூக்களிலிருந்து பழங்கள் தோன்றுகின்றன, பறவைகளால் இந்த கறிவேப்பிலை பழம் உண்ணப்பட்டு விதைகளை வெளியேற்றுவதன் மூலமாகத்தான் மற்ற இடங்களில் கறிவேப்பில்லை விருத்தி ஆகின்றது. கறிவேப்பில்லை பழத்தை பிழிந்து அதனுள் இருக்கும் விதைகளை எடுக்கவேண்டும், பிறகு இந்த விதைகளை கொண்டு கறிவேப்பில்லை செடி வளர்ப்பு செய்யலாம்.

விதை நடவு செய்தல்

கறிவேப்பிலை செடி வளர்ப்பு
தயார் நிலையில் உள்ள மண்கலவையை நெகிழி பை அல்லது தொட்டியில் போட்டு நிரப்பி, சிறிது பள்ளம் பறித்து அதனுள் கறிவேப்பில்லை விதைகளை போட்டு மூடி விடவேண்டும், விதைத்த பிறகு பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும், மிக முக்கியமாக நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும், தேவைக்கேற்ப நீர் விட்டால் மட்டும் போதுமானது.

கருவேப்பிலை செடி வளர்ச்சி மற்றும் சாகுபடி

கறிவேப்பில்லை நன்மைகள்
கருவேப்பில்லை விதைத்ததிலிருந்து 10 நாட்களில் முளைத்து வரத்தொடங்கி விடும், 40 நாட்களில் ஓரளவுக்கு நல்லதொரு வளர்ச்சியை அடைத்திருக்கும், வீட்டுத்தேவைக்கு அவ்வப்போது பறித்து பயன்படுத்திக்கொள்ளலாம், அதிக விளைச்சலை எதிர்நோக்கும் பட்சத்தில் 2 மாதங்கள் பொறுத்து பின்பு மொத்தமாக அறுவடை செய்து கொள்ளலாம்.

பூச்சித்தாக்குதல் மற்றும் பூச்சிவிரட்டி

கறிவேப்பில்லை மிக வலுவான மணத்தை கொண்டது, இந்த மணம் பல பூச்சிகளை தானாகவே விரட்டி விடும், இருப்பினும் இதையும் மீறி சில பூச்சிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நேரங்களில் கருவேப்பில்லை இலைகள் சுருண்டு கொள்ளும் அல்லது பிசு பிசுவென மாறிவிடும், இதற்கு காரணம் மாவுபூச்சி, அசுவினி பூச்சி மற்றும் செதில் பூச்சி ஆகும்.

1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி வேப்பெண்ணெயை சேர்த்து கலந்து தினசரி தெளித்து வந்தால் அது பூச்சி விரட்டியாக செயல்பட்டு, தாக்குதலை கட்டுப்படுத்த உதவும், இதே போல பஞ்சகாவியவை தெளித்து வந்தால் பூச்சிகளை விரட்டுவதோடு, கறிவேப்பிலை செடி வளர்ப்பு செழிக்க உதவுகிறது.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கறிவேப்பில்லை நன்மைகள்

கருவேப்பிலை செடி வளர்ப்பு

  • கறிவேப்பில்லை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்கவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது, மேலும் இருதய நோய் இருப்பவர்களுக்கு கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும்.
  • நம் தலைமுடியின் கருமைநிறம் மாறுவதையும், முடியின் பொலிவு குறைதலையும் கறிவேப்பிலை தடுக்கிறது. எனவே தினசரி கறிவேப்பில்லை உட்கொண்டால் முடி நல்ல ஆரோக்கியத்தோடு கருமை நிறத்தோடு செழிப்பாக இருக்கும்.
  • இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தினமும் காலையில் 1 பேரிச்சம் பழத்துடன், சிறிதளவு கறிவேப்பிலையை உண்டு வந்தால், உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பாதிப்பு நீங்கும்.
  • சளித்தேக்கத்தில் இருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடிதனை தேன் சேர்த்து கலந்து தினசரி இரண்டு வேளை உண்டு வந்தால், நம் உடலில் தேங்கியுள்ள சளியானது முறிந்து வெளியேறிவிடும்.
  • கறிவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்பட உதவுகிறது.


மனித உடலின் உற்ற நண்பன் இந்த கறிவேப்பிலை ஆகும், இந்த அருமருந்தை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யவேண்டாம் என நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்குவது நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். கருவேப்பிலை செடி வளர்ப்பு செய்து அதன் இல்லை போல உங்கள் ஆரோக்கியம் பசுமையாக வாழ்த்துகிறோம்.

தற்போது கிடைக்கின்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் என்கிற ஆளி விதை. இது லினன் என்கிற நூலிழையைத்தருகின்ற தாவரத்தின் விதை ஆகும். மனித இனத்தால் உண்ணப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த உணவு வகைகளில் ஆளிவிதை ஒன்றாகும். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் ஆளி விதை வளர்ப்பு செய்ததிற்கான குறிப்புகள் இருக்கிறது.
ஆளி விதை வளர்ப்பு
ஆளி விதைகள் சூரியகாந்தி விதைகள் போல பழுப்பு நிறத்தில் இருக்கின்ற விதைகள் ஆகும். கடினமாகவும், மேற்பகுதி சற்று மொறுமொறு என்றும் தோற்றமளிக்கும், மேலும் ஆளி விதைகள் கரையக்கூடிய நார்சத்துகளின் மிகச்சிறந்த மூலமாகும். ஆளி விதை வளர்ப்பு செய்வது எப்படி , ஆளி விதையை எப்படி பயன்படுத்த வேண்டும், ஆளி விதையில் உள்ள சத்துகள் மற்றும் ஆளி விதையின் அபார நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை மற்றும் விதைத்தல்

ஆளி விதைகள்
ஆளி விதைகள் பொதுவாக அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது ஆகும். இருப்பினும் அதன் வளர்ச்சியை மேம்படுத்த செம்மண் மற்றும் அதனுடன் மக்கிய தொழுஉரம் இரண்டும் சரிபாதி கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும். பிறகு ஆளி விதைகளை அந்த மண்கலவையில் பரவலாக தூவிவிட்டு லேசாக மண் போட்டு மூடி அதன் மீது நீர் தெளிக்கவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆளி விதை வளர்ச்சி மற்றும் அறுவடை

ஆளி விதை வளர்ப்பு
ஆளி விதைகளை விதைத்த 5 நாட்களில் சிறு சிறு தளிர்களாக காணப்படும், இந்த நிலையில் கூட அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். 40 நாட்களில் செடி நன்றாக வளர்ந்திருக்கும், 60 நாளில் பூ தோன்ற தொடங்கிவிடும், 65 நாளில் இருந்து காய் காய்க்க ஆரம்பிக்கும். 100 நாட்களில் அறுவடை செய்யலாம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆளி விதை பயன்கள்

விதைகள்

  • ஆளி விதை பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் தொந்தரவுகளை சமாளிக்க பெண்களுக்குக் கைக்கொடுக்கிறது, மேலும் தினமும் ஆளி விதைகளை பயன்படுத்திவந்தால் கேசப்பிரச்சனைகள் நீக்கி நீண்டு வளரச்செய்யும்.
  • ஆளி விதைகளுக்கு இன்னொரு சிறப்பு பண்பும் இருக்கிறது, அது பிசுபிசுப்பாக மாறிவிடும் குணம். திரவப் பொருளுடன் இந்த ஆளி விதை சேர்த்தால், அது ஜெல்லியைப் போல உருமாறிவிடும். இது குடலுக்கு மிகவும் நல்லது, குடலை சுத்தப்படுத்தி மலம்கழித்தலை இலகுவாகும், மேலும் நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க செய்கிறது, இதன் மூலமாக உணவுதனில் உள்ள ஊட்டச்சத்துகளை முழுமையாக கிரகிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகிறது என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரை நோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆளி விதையை தினமும் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
  • எரிச்சலை தவிர்த்து விடுதல் மற்றும் இதயத் துடிப்புதனை சீராக்குதல் போன்றவற்றை செய்கின்ற திறன் கொண்டதாக ஒமேகா-3 இருப்பதை ஆய்வுகள் கூறுகின்றன. ஒமேகா-3 அதிகம் நிரம்பியுள்ள ஆளி விதைகள் இதய தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்த்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பெரிதும் அச்சுறுத்தும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆளி விதைகள் குறைக்கிறது மற்றும் ஆளிவிதைகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


ஆளி விதைகள் வளர்ப்பது எப்படி மற்றும் ஆளி விதை செய்யும் அற்புதங்கள் ஆகியவற்றை பார்த்தோம். நீங்களும் அந்த மேற்கண்ட முறையில் ஆளி விதை வளர்ப்பு செய்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It