விளா மரம் இந்தியாவை தன் தாயகமாகக்கொண்டதாகும். விளா மரமானது எங்கும் வளரக்கூடிய இயல்பை கொண்டது என்றாலும் காட்டுப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. வீடுகள், தோட்டங்கள் மற்றும் கோவில்களில் விளா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது, இந்த மரம் 30 அடி வரை உயரம் வளரக்கூடியது. இந்த மரத்தின் இலைகள் நல்ல மணம் வீசக்கூடியது, காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்றே உருண்டை வடிவத்தில் காணப்படும். பழத்தின் மேல் ஓடு அதிக கெட்டியாகவும், உள்ளிருக்கும் சதைப்பகுதி மரத்தின் நிறத்திலும், விதைகள் வெண்மை நிறத்திலும் காணப்படும்.
கடிபகை, கபித்தம், கவித்தம், தந்தசடம், பித்தம், விளவு, வெள்ளி மற்றும் வுட் ஆப்பிள் போன்ற பல பெயர்களை இந்த விளா மரம் கொண்டுள்ளது. இந்த மரத்தின் கொழுந்து, இலை, காய், பழங்கள், பிசின், ஓடு, பட்டை என எல்லாமே பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியவையாகும். இதன் பழங்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டாலும் யாரும் இந்த மரத்தை வளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அழிவின் விளிம்பில் விளா மரம் இருக்கிறது.
எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட விளா மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, விளாம்பழம் சாப்பிடும் முறை மற்றும் விளாம்பழம் நன்மைகள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
விளா மரம் விதை
நன்கு பழுத்த விளாம் பழத்தை வாங்கிக்கொள்ளவும், அதன் மேற்புற ஊடு கடினமாக இருக்கும். அதனை சுத்தியல் அல்லது கல்கொண்டு கவனமாக ஓட்டை உடைக்கவும். பிறகு உள்ளிருக்கும் சதைப்பகுதிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். விதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும், அதனை எடுத்து நீரில் அலசி நன்கு உலர வைக்கவேண்டும் அப்படி செய்வதன் மூலம் விதைப்பு செய்வதற்கு ஏதுவாக விதைகள் காய்ந்து தனி தனியே பிரிந்து வந்து விடும்.
விளா மர விதை நடவு செய்தல்
விளா மரத்திற்கு என்று பிரத்தேகமான மண்கலவை ஏதும் தேவை இல்லை அனைத்து வகை மண்ணிலும் நன்கு செழித்து வளரக்கூடியது. மரம் வளர இடவசதி உள்ள பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு, சேகரித்து வைத்துள்ள விதைகளை நடவு செய்யவும். விதைத்த 15 நாட்களுக்கு பிறகு விளா மர துளிர் முளைத்து வர தொடங்கியிருக்கும். 55 நாட்களுக்கு பிறகு 1 அடிக்கு மேல் விளா மர கன்று வளர்ந்திருக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்! |
விளா மரத்தின் சிறப்புகள்
10 ஆண்டுகள் மழை பெய்யவில்லை என்றாலும் விளாம் மரம் தாக்குப் பிடிக்கும். வேறு எந்தத் தாவரமும் வளர தகுதி இல்லையென்று கூறப்படும் மண்ணிலும் கூட இந்த விளாமரம் வளரும். இதற்கு தனிப்பட்ட முறையில் உரம் ஏதும் இட தேவையில்லை. எனவே பராமரிப்பு செலவு ஏதும் கிடையாது. மேலும், 30 அடிக்கு மேல் விளா மரம் வளரும் என்பதால் விவசாயிகள் வேலிக்கு மாற்றாக விளா மரம் வளர்ப்பு செய்கின்றனர்.
விளாம்பழம் சாப்பிடும் முறை
நடவு செய்த 5 முதல் 7 வருடங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகியிருக்கும். விளாம் பழத்தை பறித்து, அதன் மேற்பகுதியை உடைக்கவேண்டும், விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும், பழுத்தபிறகு துவர்ப்பு சுவையும், புளிப்பு சுவையும் கலந்த சுவையாக இருக்கும். நறுமணம் வீசுகின்ற இந்தப் பழத்தை பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.
விளாம்பழம் பயன்கள்
- விளா மரத்தினுடைய பட்டையை நன்கு பொடியாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க செய்து கசாயம் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர, வறட்டு இருமல், வாய் கசப்பு, மூச்சு இழுப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.
- விளாம் பழத்தை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் மேலும் விளாம் மரத்தினுடைய இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கிவிடும்.
- விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது இது நம் எலும்பு மற்றும் பற்களை வலுவடையச் செய்ய உதவுகிறது. மேலும் விளாம்பழத்துடன் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.
- விளா காயை சட்டியில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும், பின்பு வெந்ததும் அதை உடைத்து அதன் உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் அரை டம்ளர் தயிர் கலந்து தினசரி காலை வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை முழுமையாக குணமடையும்.
- விளா மரத்தினுடைய பிசினை பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
- பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு எனும் கூற்று விளாம் பழத்தின் சிறப்பை குறிக்க கூறப்பட்டதாகும், பித்தத்தை தெளிவைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்த விளாம் பழம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை. |
நற்பலன்கள் பல அள்ளித்தரும் இந்த விளா மரம் உங்கள் ஆரோக்கியத்தை கீழே விழாமல் பாதுகாக்கிறது. இத்தகைய மரத்தினை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைப்பது நம் கடமையாகும்.