Category

தானியங்கள்

Category

முத்துச்சோளம் எனப்படும் மக்காச்சோளத்தின் தாயகம் நடு அமெரிக்கா என்று கூறப்படுகின்றது. மக்காச்சோளம் மிக முக்கியமான ஒரு தானியப் பயிராகும், மேலும் இது தானியப் பயிர்களின் அரசி எனவும் அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களை ஒப்பிடும்பொழுது அதிகமாக மக்காச்சோளம் வளர்ப்பு செய்ய காரணம் என்னவென்றால் இதை சாகுபடி செய்வதற்கான வேலையாட்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு மற்றும் நோய் தாக்குதல் மிகவும் குறைவு என்பதால் தான்.
மக்காச்சோளம் வளர்ப்பு
100-105 நாட்களில் நல்ல வருமானம் தரக்கூடிய பணப்பயிராகும். எல்லா சூழ்நிலையிலும், வருடம் முழுவதும் அறுவடை செய்ய ஏற்ற பயிர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் இருப்பதாலும், தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், உழவர்களைத் தேடிவந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதாலும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியுடன் மக்காச்சோளம் வளர்ப்பு செய்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க மக்காச்சோளத்தை விவசாய நிலங்களில் மட்டுமல்ல வீடு தோட்டத்திலும், மாடித்தோட்டங்களிலும் கூட வளர்க்க முடியும். மக்காசோளம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மக்காச்சோளம் செடி வளர்ப்பு, மக்காச்சோளம் மகசூல், மக்காச்சோளம் சாகுபடி மற்றும் மக்காச்சோளம் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மக்காச்சோளம் நடவு செய்ய ஏற்ற மண்

அனைத்து வகையான மண்களிலும் வளரும் தன்மை கொண்டிருந்தாலும் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மக்காச்சோளம் வளர்ப்பு செய்வதற்கு மிக ஏற்றதாகும். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

20kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி

விதை விதைத்தல்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நெகிழிப்பை அல்லது தொட்டிகளில் போட்டு நிரப்பவும், தொட்டியின் அளவிற்கு ஏற்றார் போல் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும். விதைகள் விதைத்த 5 வது நாளில் இருந்தே செடிகளில் துளிர் விட தொடங்கிவிடும். செடிகள் நன்கு வளர்ந்த பிறகு கதிர்கள் வைக்க தொடங்கும், அப்போது பூச்சிகள் கதிர்கள் மீது மொய்க்கும், அவற்றை கண்டு பயம் கொள்ள வேண்டாம். பூச்சிகள் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது.

மக்காச்சோளம் அறுவடை

மக்காச்சோளம் அறுவடை
மக்காச்சோளம் விதைத்த நாளில் இருந்து 90 நாட்களில் பிஞ்சு கருதாக இருக்கும், சிறு குழந்தைகளுக்கு இந்த நிலையில் சாப்பிட கொடுத்தால் எளிதாக இருக்கும், 100 நாட்களில் அறுவடைக்கு ஏற்ற பக்குவத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அறுவடை செய்வது சிறந்தது. சோளத்தை மாவாக அரைத்து பயன்படுத்த நினைப்பவர்கள் 115 நாட்களுக்கு பிறகு சாகுபடி செய்தால் நன்கு முற்றி மாவாக அரைக்க ஏற்ற நிலையில் இருக்கும்.

பூச்சி தாக்குதல்

மக்காச்சோள செடிகளை பொறுத்த வரைக்கும் அதிகமாக நோய்கள் தாக்குவது கிடையாது, ஒருவேளை அசுவினி பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் வேப்பிலையை நன்கு அரைத்து, அதோடு ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டு சேர்த்து அரைத்து இரண்டையும் ஒன்றாக நீரில் கலந்து பூச்சி தாக்குதல் உள்ள செடிகளின் மீது தெளித்தால் அது பூச்சி விரட்டியாக செயல்பட்டு அசுவினி பூச்சிகளை விரட்டிவிடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

மக்காச்சோளம் பயன்கள்

மக்காச்சோளம் வளர்ப்பு

  • மக்காச்சோளத்தில் இருக்கின்ற மிகுதியான நார்ச்சத்து குடல் மற்றும் வயிற்று புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பதை சீராக்கி உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆக உதவுகிறது.
  • கருவுற்ற பெண்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அவர் அறிவுறுத்திய அளவின்படி மக்காச்சோளத்தை சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
  • இரும்புச்சத்து மிகுதியாக இருக்கின்ற இந்த சோளத்தை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி மென்மேலும் அதிகரித்து, இரத்த சோகை பாதிப்பு அறவே நீங்கும்.
  • சோளத்தில் இருக்கின்ற ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கெட்ட கொழுப்புகளை குறைத்து, இதயத்தில் உள்ள இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • மக்காச்சோளத்தை மாவாக அரைத்து அந்த மாவை நீர் அல்லது சிறிது பாலுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவிவந்தால் முகப்பரு தழும்புகள் மற்றும் எண்ணெய் வடிதல் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.


மக்காச்சோளம் பயிரிடும் முறை & பயன்கள் ஆகியவற்றை பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் வளர்த்து உங்கள் மாடித்தோட்டத்தை அழகாக்கி மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த முதன்மையான பயிர் இந்த கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தான் முதன் முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகின்றது, ஆனால் தற்பொழுது உலகவில் பெரும்பாலான நாடுகளில் கோதுமை வளர்ப்பு செய்யப்படுகிறது.
கோதுமை
பெரும்பாலான விவசாயிகளால் அரிசி மற்றும் மக்காசோளத்துக்கு அடுத்ததாக அதிக அளவில் விளைவிக்கப்படும் தானியம் இந்த கோதுமை ஆகும். கோதுமை விதையில் இருந்து வளர்ப்பது எப்படி, கோதுமை புல் வளர்ப்பது எப்படி, கோதுமை சாகுபடி செய்யும் முறை மற்றும் கோதுமை நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வீட்டுத்தோட்டத்தில் பயிரிடும் முறை

கோதுமை புல்
மண்ணை பொறுத்தவரை, நல்ல வடிகால் வசதியுள்ள கொண்ட மண் உகந்தது, நன்கு பொலபொலவென்று மண் இருக்கவேண்டியது அவசியம் ஆகும். ஒவ்வொரு கோதுமை மணி விதைப்பதற்கு குறைந்தது 24 cm இடைவெளி இருக்கவேண்டும். 3 cm ஆழம் மண்ணை கீறி கோதுமை மணிகளை உள்ளே போட்டு மூடி நீர் பாய்ச்ச வேண்டும்.

பராமரிப்பு

கோதுமை
கோதுமை விதைகளை விதைத்தபிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும். அவ்வப்போது தேவையற்ற களைகளை நீக்கிவிட வேண்டும். கோதுமை பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் போது தழைசத்துக்களை இட்டு தண்ணீர் பாய்ச்சினால் கோதுமை வளர்ப்பு சிறக்கும்.

பயிர் பாதுகாப்பு

கோதுமை வளர்ப்பு செய்யும் பொழுது அவ்வளவாக பூச்சிகள் பயிர்களை தாக்குவதில்லை, இருப்பினும் பூக்கும் தருணத்தில் அசுவினி பூச்சி தாக்குதல் தென்பட்டால் வேப்பெண்ணை கரைசலை தெளிக்கலாம், அப்படி தெளிக்கும் பொழுது ஒரு சில வாரத்தில் அஸ்வினி பூச்சி தாக்குதல் முழுமையாக நீங்கிவிடும்.

கோதுமை அறுவடை

கோதுமைகள்
கோதுமை விதைத்த எழுபது நாட்கள் முதல் தொண்ணுறு நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். கோதுமை நன்கு காய்ந்த நிலைக்கு வந்த பிறகு அதன் தாள்களை சாகுபடி செய்து அதை காயவைத்து கோதுமை மணிகளை தனித்தனியே பிரித்து எடுக்கவேண்டும். கோதுமை பிரித்தெடுக்கும் முறையை கைகளிலும் செய்யலாம், இயந்திரங்களிலும் செய்யலாம்.

கோதுமை நன்மைகள்

மணிகள்

  • கோதுமை மாவு நம் உடலில் உள்ள இரத்தத்தினை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது, மேலும் இதிலுள்ள அதிக அளவு நார்ச் சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
  • வயிற்றில் புளிப்புத்தன்மை பிரச்சனை கொண்டவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வரும் தொந்தரவு கொண்டவர்கள், கோதுமையை ரவை போல அரைத்து அதில் கஞ்சி செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோதுமையில் உள்ள செலினியம் என்ற மூலப் பொருள் அதிகமாக நிறைந்துள்ளது, இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது, இது நம் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து இளமையான தோற்றத்தை வழங்குகிறது.
  • கோதுமையில் உள்ள அரிதான சத்துக்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துகிறது, இது அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • கோதுமை தவிடு அதிகப்படியான நார்சத்துக்களை கொண்டதாகும். இது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்க பயன்படுகிறது, வயிற்று பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் பண்பு இந்த கோதுமை தவிட்டில் உள்ளது.

  • இன்றியமையாத உணவுப் பயிர் கோதுமை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கோதுமை வளர்த்து அதன் அனைத்து பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

பச்சை பட்டாணி வளர்ப்பு மற்ற செடி வளர்ப்பிலிருந்து சற்று வேறுபட்டது, ஏனெனில் விரைவில் பலனை தரக்கூடியது. பொதுவாக நாம் பச்சை பட்டாணியை கடைகளில் வாங்கி தான் சமைத்து சாப்பிடுவோம், ஆனால் அதை வீட்டில் முளைக்க வைத்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி திருப்தியை தரும். அதைவிட, இயற்கை முறையில் விளைவித்து சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை நல்ககூடியது.
வளர்க்கும் முறை
மகத்துவமிக்க இந்த பச்சைபட்டாணி வளர்ப்பது எப்படி, பச்சை பட்டாணி பயன்கள்,எப்படி வீட்டிலேயே பச்சை பட்டாணி செடி வளர்க்கலாம் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மாடி தோட்டத்தில் பச்சை பட்டாணி எளிதாக வளர்க்கும் முறை

அறுவடை 1
பச்சை பட்டாணியை விதைப்பதற்கு முன்பு, அதற்கு தொட்டி தயார் செய்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் உங்களிடம் நெகிழிப்பை அல்லது அகலமான தொட்டி இருக்குமேயானால் அதை எடுத்துக்கொள்ளவும். பட்டாணியின் வேர்கள் அதிகம் ஆழமாக போகாது, எனவே நீங்கள் தொட்டியில் அதிகமாக மண் நிரப்ப தேவையில்லை. ஒரு நெகிழிப்பையை எடுத்து அதில் பாதி மண்கலவை சேர்த்தால் போதும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

பச்சைபட்டாணி விதைப்பு முறை

பச்சை-பட்டாணி-வளர்ப்பு
பச்சை பட்டாணியை பயிரிட, உங்களுக்கு பச்சை பட்டாணி தேவைப்படும், அது உலர்ந்த பச்சை பட்டாணியாக இருந்தாலும் கூட அதையும் பயன்படுத்தலாம். அந்த பட்டாணியை ஒரு இரவு முழுதும் தண்ணீரில் ஊறவைக்கவும், பிறகு அந்த பச்சை பட்டாணியை நீரில் இருந்து வடிக்கட்டி எடுத்துக்கொண்டு, ஒரு காட்டன் துணியின் உள்ளே முடிந்து வைத்திருக்கவேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு பார்த்தால் அவை முளைப்பு விட்டு வளர்ந்திருக்கும்.

முளைகட்டிய பச்சை பட்டாணிதனை, நீங்கள் தயார் நிலையில் வைத்திருந்த அந்த தொட்டியில் பட்டாணியை விதைப்பு செய்ய வேண்டியது தான், ஒவ்வொரு பட்டாணிக்கும் நான்கு அல்லது ஐந்து இன்ச் இடைவெளி விட்டு அடுத்த பட்டாணிதனை விதைக்கவும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது பட்டாணியை விதைக்கும்பொழுது முளைப்பு கீழிருக்கும்படி விதைக்க வேண்டும், விதைத்த பிறகு மண்ணை சற்று லேசாக வைத்து மூடினாலே போதுமானது. பிறகு அதன் மீது சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் உரமேலாண்மை

பச்சை பட்டாணி பூச்சி விரட்டி
பட்டாணிச்செடி வளர்ப்பு முறையில், பச்சை பட்டாணி ஆரோக்கியமாக வளர எந்தவித பூச்சி தொல்லையும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். பூச்சிகள் வராமல் தடுக்க, வேப்பம்புண்ணாக்கை அந்த தொட்டியில் உள்ள மண் கலவையின் மேல் சிறிது சேர்த்து கிளறிவிட்டால் போதுமானது, பட்டாணிச்செடி நல்ல முறையில் வளரும். மேலும் வீட்டில் மீதமாகும் காய்கறி கழிவுகள் மற்றும் அரிசி, பருப்பு கழுவிய நீரை அதில் தினமும் சேர்ப்பதன் மூலமாக சிறந்த முறையில் வளரும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

அறுவடை

உலர்ந்த பச்சை பட்டாணி
899789720

பட்டாணி செடிகள் பொதுவாகவே 35 நாட்கள் அல்லது 40 நாட்களில் பூ வைக்கத்தொடங்கி விடும். பட்டாணி செடியானது 60 அல்லது 70 நாட்களில் பெருன்பான்மை வளர்ச்சியை அடைந்து விடும். இந்த செடிகள் முழுதும் வளர்ந்த பின்பு 80 ஆவது நாட்களில் பச்சை பட்டாணியை நீங்கள் அறுவடை செய்யலாம். கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி நீங்கள் பட்டாணி சாகுபடி செய்யலாம்.

பச்சை பட்டாணி மருத்துவ குணங்கள்

பச்சை பட்டாணி பயன்கள்
Green peas
  • வளரும் குழந்தைகள், தினசரி மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் மூளை பலம் பெறும், நியாபக சக்தி மேம்படும். வெண்டைக்காயை விட மூன்று மடங்கு அதிகப்படியான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருக்கிறது, இது குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு உயர்த்தும்.
  • உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொண்டால் போதும், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிமையையும் பெறுவர். மேலும் உடலுக்குச் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். பச்சை பட்டாணி சூப் செய்து கூட குடிக்கலாம்.
  • நுரையீரலுக்கும், இதயத்திற்கும் தேவையான பலத்தைக் கொடுக்கவல்லது பச்சைப் பட்டாணி. எனவே, தினந்தோறும் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது.
  • ஆண்களுக்கு மலட்டுத் தன்மை பாதிப்பிலிருந்து தப்பிக்க பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் சேர்த்து கொள்ளலாம்.
  • மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிடவைத்தால், அவர்கள் விரைவில் குணமடைய வாய்ப்புகள் அதிகம்.

நீங்களும் வீட்டில் பச்சை பட்டாணி செடி வளர்ப்பு செய்து , அதன் எல்லா நன்மைகளையும் பெற்று, அந்த செடி போல் போல் உங்கள் ஆரோக்கியமும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

Pin It