Author

MK Pets And Gardening Tamil

Browsing

டிராகன் பழம் வளர்ப்பு மற்றும் விற்பனை போன்றவை இன்னும் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை என்பதே உண்மை. சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போல இருக்கும் இப்பழம் கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும்.

டிராகன் பழம் வளர்ப்பு

இப்பழத்தின் தாயகம் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். தற்பொழுது தமிழ்நாட்டில் சிலர் இப்பழத்தை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் டிராகன் ப்ரூட் என்று அழைக்கப்படும் இப்பழம் வெளிநாட்டுப் பழம் என்றும், சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பழம் என்றும் அறியப்படுகிறது.

டிராகன் செடி வளர்ப்பு

டிராகன் செடி கள்ளிச்செடி போன்று வளரக்கூடியது. கொடியாக படரும் தன்மை உடையது, அதற்கு ஏற்றவாறு சிமெண்ட் தூண் அல்லது கல்தூண் போல அமைத்து அதன் உச்சியில் வட்ட வடிவ மூடி போன்று அமைக்க வேண்டும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


ஒவ்வொரு தூணுக்கும் இடையில் 6×8 அளவு இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கல்தூணைச் சுற்றி நான்கு கன்றுகளை நட வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை கவாத்து செய்வது அவசியம். வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை இச்செடிக்கு உண்டு என்பதால் வாரத்திற்கு இரண்டு முறையோ அல்லது நான்கு முறையோ தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

இதற்கு பெருமளவில் பராமரிப்பு தேவை இல்லை என்பதால் தேவைக்கேற்ப இயற்கை உரங்களை இடுவது நல்லது. மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகவ்யா போன்றவற்றை உரங்களாக பயன்படுத்தலாம்.

5kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வகைகள்

டிராகன் ப்ரூட்டில் மூன்று வகைகள் உள்ளன.

டிராகன் பழ வகைகள்

  • சிவப்பு தோல் கொண்ட சிவப்பு சதை உடைய பழம்.
  • சிவப்பு தோல் கொண்ட வெள்ளை சதை உடைய பழம்.
  • மஞ்சள் தோல் கொண்ட வெள்ளை சதை உடைய பழம்.
  • டிராகன் பழம் செடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி?<

    பழத்தில் உள்ள விதையில் இருந்தும் பயிர் செய்யலாம். டிராகன் பழத்தின் விதை பார்ப்பதற்கு எள் போன்று இருக்கும். பழத்திலிருந்து விதைகளைத் தனியாக பிரித்து எடுத்து நிழலில் உலர்த்திய பின் ஒரு தொட்டியிலோ அல்லது ஜாடியிலோ விதைகளை நடலாம். விதையில் இருந்து செடி வளர்ந்து காய் வைப்பதற்கு நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். அதை விட நர்சரியில் இருந்து கன்று வாங்கி வளர்ப்பது சிறந்தது. டிராகன் பழம் நன்மைகள் பல கொண்டது.

    நன்மைகள்

    • இதில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
    • இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ சருமத்தைப் பாதுகாக்கிறது.
    • இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைய இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
    • நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல், செரிமானக்கோளாறு
      போன்றவற்றைக் குணப்படுத்தும்.
    • உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.

    டிராகன் பழத்தின் மருத்துவ குணங்கள்

    • இப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் இருப்பதால் புற்று நோய் வருவதைத் தடுக்கிறது.
    • உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
    • இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கிறது.
    • கால்சியம்,பாஸ்பரஸ் இருப்பதால் எலும்பு பலப்படுகிறது.
    • பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது.

    டிராகன் பழம் சாப்பிடும் முறை

    மற்ற பழங்களை உண்பதைப் போலவே இதையும் பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஜூஸாகஉம் குடிக்கலாம்.

    டிராகன் பழம் சாகுபடி மற்றும் அறுவடை

    கன்றுகள் வைத்து வளர்க்கும்போது இரண்டு ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 150 ல் இருந்து 200 செடிகள் வரை வைக்க முடியும். ஒரு செடிக்கு 10 முதல் 20 பழங்கள் வரை கிடைக்கும். ஒரு தூணுக்கு வருடத்திற்கு சராசரியாக 8 முதல் 10 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு பழம் 2௦௦ கிராம் முதல் 750 கிராம் வரை இருக்கும்.

    சிவப்பு நிற சதைக் கொண்ட பழங்கள் கிலோ 200 ரூபாய்க்கும், வெள்ளை நிற சதைக் கொண்ட பழங்கள் கிலோ 150 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்க முடிகிறது. வருடத்தில் 8 மாதம் வரை டிராகன் ப்ரூட் மகசூல் பெற முடியும்.

    வீட்டில் டிராகன் செடி வளர்ப்பது எப்படி?

    வீட்டில் டிராகன் செடி வளர்ப்பு

    டிராகன் பழம் வளர்ப்பு இன்று எளிதாகிவிட்டது. செடி வளர்க்கப் போகும் தொட்டியில் செம்மண், தேங்காய் நார், இயற்கை உரம், மண் ஆகியவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். டிராகன் மரம் வளர்க்க பயன்படுத்தும் தொட்டி அல்லது ஜாடி எதுவாக இருந்தாலும் 10 முதல் 12 அங்குல ஆழமும், 15 முதல் 24 அங்குல விட்டமும் இருக்க வேண்டும். செடி வளர்க்க பிளாஸ்டிக் ட்ரம், களிமண் அல்லது டெரகோட்டா பானைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    பானையில் வேர்கள் பிடித்து வளர பானை நீளமாகவும், அகலமாகவும் இருப்பது அவசியம். கிளை நன்கு உலர்ந்த பின்பு அதனை செடி வைக்கப்போகும் தொட்டியில் உள்ள மண்ணில் நட வேண்டும்.

    டிராகன் செடியின் மீது கண்டிப்பாக 8 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு பானையை வைக்க வேண்டும், பானையில் 2 அல்லது 3 துளைகள் இருப்பது அவசியம். இவை வடிகால் துளைகள் ஆகும்.

    டிராகன் பழ விதைகள்

    பூச்சி தாக்குதல் என்று பார்க்கும்பொழுது அபிட்ஸ், எறும்பு போன்றவை தான் அதிகம் பாதிக்கக்கூடியது. இதற்கு இயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம். செடி வளரத் துணையாக ஒரு குச்சியை நட வேண்டும். பச்சைக்கிளையை வெட்டி பயன்படுத்துவதாக இருந்தால் அந்த கிளையை நான்கு நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.

    டிராகன் செடி வளர்ப்பைப் பொறுத்தவரை அதிக தண்ணீர் தேவை இல்லை. எனவே செடி வளர மண் வறண்டு போகாத அளவு ஈரப்பதம் இருந்தால் போதுமானது. டிராகன் பழ வளர்ப்பைப் பொறுத்தவரை அறுவடை செய்து லாபம் பெற மூன்று முதல் இந்து ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் டிராகன் ப்ரூட் சாகுபடி நல்ல லாபம் தரக்கூடிய பயிர் என்பது உண்மையே.

    திராட்சை வளர்ப்பு என்பது இன்று சாதாரணமாக வீட்டிலும் ,மொட்டை மாடியிலும் செய்யப்படுகிறது. இது மத்தியத் தரைப்பகுதி, மத்திய ஐரோப்பா, ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. திராட்சை அனைத்து இடங்களிலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

    திராட்சை வளர்ப்பு

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராட்சை அனைத்து இடங்களிலும் பரவலாக பயிரிடப்படுகிறது. திராட்சையின் பயன்கள், வகைகள், திராட்சை செடி வளர்ப்பு முறை, வீட்டில் திராட்சை செடி வளர்ப்பது எப்படி, மாடிதோட்டத்தில் திராட்சை வளர்ப்பு மற்றும் பாராமரிப்பு போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    ஆரம்ப நிலையில் திராட்சை வளர்ப்பு

    ஜூன் – ஜூலை மாதங்களில் திராட்சை செடி நடுவதற்கு ஏற்ற பருவம் ஆகும். திராட்சையை பொறுத்தவரை குளிர் காலங்களிலோ அல்லது மழை காலங்களிலோ நடக்கூடாது.

    நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமி திராட்சை சாகுபடிக்கு ஏற்ற மண் ஆகும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். மண்ணில் உப்பின் நிலை 1க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now


    தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமன்படுத்த வேண்டும். பன்னீர் திராட்சை தவிர மற்ற ரகங்களுக்கு 1x1x1 மீட்டர் அளவுள்ள குழிகள் தோண்ட வேண்டும்.

    வேர் வந்த முற்றிய குச்சிகள் நடவுக்கு ஏற்றவை, தயார் செய்து வைத்துள்ள குழிகளின் நடுவில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நட வேண்டும், மற்ற ரகங்களை 4×3 இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

    செடிகளை நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும், பின்பு 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை செய்ய இரண்டு வாரத்திற்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும்.

    செடிகள் வளரும்வரை களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடியை ஒரே தண்டாக பந்தல் உயரம் வரை கொண்டு வந்து பின் நுனியை கிள்ளி விட வேண்டும். பிறகு வளரும் பக்கக் கிளைகளை எதிரெதிர் திசையில் வளரவிட்டு மேலும் நுனிகளைக் கிள்ளி செடியை பந்தல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

    மாதம் ஒரு முறை ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுஉரம் வைத்து தண்ணீர்ப் பாய்ச்சி பராமரிப்பதன் மூலம் நல்ல விளைச்சல் பெறலாம்.

    வகைகள்

    திராட்சை வகைகள்

    பன்னீர் திராட்சை, தாம்சன் (விதையில்லாதது), அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சனா, அர்கா ஹான்ஸ், சரத் (விதையில்லாதது), அனாஃப்-சாஹி, மாணிக்சமான், சோனாகா.

    திராட்சை உண்பதால் தடுக்கப்படும் நோய்கள்

    திராட்சையில் க்ளுகோஸ் உள்ளது, இந்த க்ளுகோஸ் உயர்ந்த தரம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் திராட்சையை உண்ணும்பொழுது இது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்வு தருகிறது.

    பெண்கள் திராட்சை பழம் உண்ணும்பொழுது அவர்களுக்கு கர்ப்பப்பைக் கோளாறு மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

    திராட்சை உடலில் உள்ள கெட்ட நீர், வாயு, சளி, உப்புகள், குடல் கழிவுகள் ஆகியவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. திராட்சை புற்று நோய் செல்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.

    திராட்சை இதயத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு திராட்சை ஒரு சிறந்த பழம் ஆகும்.

    உலர்ந்த திராட்சையும் உடலுக்கு நன்மையை தரக்கூடியது. எனவே எந்த காலத்திலும் திராட்சையை அனைவரும் உண்ணலாம். திராட்சை செடி இலையும் சில மருத்துவ குணங்களை கொண்டது ஆகும்.

    திராட்சை இலை

    பயன்கள்

    • உடலில் உள்ள பித்தத்தை நீக்கும்.
    • ரத்தசோகையை சரி செய்யக்கூடியது.
    • பசியைத் தூண்டக்கூடியது.
    • ரத்தத்தைத் தூய்மை செய்யக்கூடியது.
    • தேவையற்ற கொழுப்புகளை நீக்கக்கூடியது.
    • வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்கிறது.

    திராட்சை செடி உரம்

    திராட்சை வளர்ப்புக்கு இயற்கை உரங்களே சிறந்தது. திராட்சை சாகுபடிக்கு கடலை பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரங்கள் ஆகியவற்றை அடி உரங்களாக இடவேண்டும். இந்த உரங்களை ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து கொடியின் வேர் பகுதியில் இடவேண்டும்.

    பூச்சித் தாக்குதல்களை சரி செய்ய வேப்பம் பிண்ணாக்கு அல்லது இஞ்சி பூண்டு விழுது அரைத்து தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

    1kg neem cake

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now


    பயிர்களை பாதுகாக்க மூன்று மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவை தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளித்து விட வேண்டும்.

    திராட்சை விதை

    கடைகளில் விற்கப்படும் திராட்சை பழத்தில் இருக்கும் விதைகளின் மூலமாகும் நாற்றுகள் உற்பத்தி செய்து செடி வளர்க்கலாம் அல்லது நர்சரிகளிலும் விதைகள் கிடைக்கும் அவற்றின்மூலம் செடிகளை வளர்க்கலாம்.

    பன்னீர் திராட்சை வளர்ப்பு

    பன்னீர் ரக திராட்சை செடிக்கு ௦.6 மீ அகலம், ௦.6 மீ ஆழம் மற்றும் 3 மீ இடைவெளிவிட்டு தோண்ட வேண்டும். பன்னீர் திராட்சையை 3×2 மீ இடைவெளியில் குச்சிகளை நட வேண்டும். இந்த பன்னீர் ரகங்களுக்கு நான்கு மொட்டு நிலையில் கவாத்து செய்ய வேண்டும். இதில் ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரில் 3௦ டன் வரை மகசூல் பெறமுடியும்.

    மற்ற ரகங்கள்

    பச்சை திராட்சை செடி வளர்ப்பு என்று பார்க்கும்போது இதுவும் பன்னீர் திராட்சையை போல நான்கு மொட்டு நிலையில் கவாத்து செய்ய வேண்டும். பெரும்பாலும் பன்னீர் ரக திராட்சையைப் போலவே இதற்கும் செய்ய வேண்டும்.

    கருப்பு திராட்சை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பெருமளவு பயிர் செய்யப்படும் வகை ஆகும். மற்ற திராட்சை வகைகளுக்கு செய்வதைப் போன்ற நடவு முறையையே இதற்கும் பின்பற்ற வேண்டும்.

    வீட்டில் திராட்சை வளர்ப்பு

    வீட்டில் திராட்சை வளர்ப்பு

    வீட்டில் திராட்சை செடி வைக்க பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கொடி போல் படர்ந்து வளரும், ஆனால் நடவு முறைகள் மற்றும் அனைத்து செயல்முறைகளும் ஒன்றே. வீட்டில் திராட்சை வளர்ப்பு என்பது இப்போது மிக எளிமையானதாகிவிட்டது.மாடித் தோட்டத்தில் பந்தல் போட்டு திராட்சை கொடி வைக்கலாம். நான்கு சாக்கில் மணல் நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒரு மூங்கில் காம்பை ஆழமாக ஊன்றி மூளைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலையில் வைக்க வேண்டும்.

    அடியில் சிறு கற்களை போட்டு மேடை போல் அமைத்து அதன் மீது சாக்குப் பைகளை வைக்க வேண்டும். பிறகு இதில் கயிறு அல்லது கம்பியை குறுக்கும் நெடுக்குமாக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விடலாம். பெரும்பாலும் திராட்சை வளர்ப்பு மற்றும் நடவு முறைகள் என்பது அனைத்து ரக திராட்சைகளுக்கும் ஒரே மாதிரியான நடவுமுறைகளே ஆகும். இவ்வாறு வீட்டில் எளிய முறையில் திராட்சை செடி வளர்க்கலாம்.

    எலுமிச்சை வளர்ப்பு என்பது எளிய முறையில் அனைவரும் செய்யக்கூடியது. எளிய முறையில் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்ட முடியும். எலுமிச்சை மரம் எப்படி வளர்ப்பது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

    எலுமிச்சை வளர்ப்பு

    எலுமிச்சை செடி வளர்ப்பு முறை

    சிட்ரஸ் அவுரான்சி போலியா என்பது எலுமிச்சை மரத்தின் தாவர பெயர் ஆகும். இது ரூட்டேசியே எனும் தாவர குடுமபத்தை சேர்ந்தது ஆகும். எலுமிச்சையை பொறுத்தவரை இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே மங்கள நிகழ்ச்சிகள், வழிபாடுகள், திருவிழாக்கள் என அனைத்து சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளிர்பானம் தயாரிக்கவும்,சமையலுக்கும் பயன்படுகிறது. இப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் இலைகள் பயன்படுகிறது.

    ஆரஞ்சு, கொடி எலுமிச்சை, நார்த்தை, பப்ளிமாஸ் போன்ற எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்த இந்த பழங்கள் உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை, வேலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இப்பழங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    எலுமிச்சை வகைகள்

    மஞ்சளாகவும், உருண்டையாகவும் இருப்பது சாதாரண எலுமிச்சை அல்லது செடி எலுமிச்சை எனப்படுகிறது. பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சற்று பெரியளவில் இருப்பது கொடி எலுமிச்சை அல்லது லெமன் எனப்படுகிறது. இவற்றில் சமவெளியில் பயிரிட சாதாரண செடி எலுமிச்சையே ஏற்றதாகும்.

    எலுமிச்சை பயிரிடுவதற்கான தட்ப வெப்பநிலை

    எலுமிச்சை செடி

    எலுமிச்சை வெப்ப மண்டல பயிராகும். கடல் மட்டத்திலிருந்து 3000 அடி வரையுள்ள இடங்களில் விளையக்கூடியது. கீழ்பழனிமலை, சிறுமலை, சேர்வராயன்மலை, கொல்லிமலை, பச்சைமலை மற்றும் கல்வராயன்மலை பகுதிகளில் மானாவரிப்பயிராக விளைகிறது. மிதமான குளிருள்ள ஈரப்பதம் நிறைந்த இடங்களில் நன்கு வளரக்கூடியது.

    வறண்ட நிலம் மற்றும் வறண்ட கால நிலையிலும் வளரக்கூடியது. மிதமான பனிப்பொழிவு உள்ள இடங்களில் எலுமிச்சை வளராது. 16 முதல் 28 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பமுள்ள இடங்கள் எலுமிச்சை நன்கு வளர ஏற்ற சூழ்நிலையாகும்.

    எலுமிச்சை பயிர் செய்ய சரியான மண்வளம்

    வேர்கள் நிலத்தின் மேலாகவே இருப்பதால் நீர் தேங்கினால் அழுகி விடும். செம்மண் கலந்த மணற்பாங்கான தோட்டக்கால், வடிகால் வசதியுள்ள இருமண் நிலங்கள் ஏற்றவை. குளம் ,ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் எலுமிச்சை வளராது.

    கோடையில் வெடிப்புகள் தோன்றும் களிமண் நிலம், பாறை படிவங்கள் மேலாக உள்ள நிலம், களர் உவர் நிலம் ஆகியனவும் எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றது அல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.8 வரை இருக்க வேண்டும்.

    எலுமிச்சை ரகங்கள்

    போனி பிரேய் என்பது நீளமான, மெல்லிய தோல் கொண்டது, ஆனால் இதில் விதை இருக்காது. இவை கலிபோர்னியாவின் சான்டியோகே மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    யுரேகா எலுமிச்சை ஆண்டு முழுவதும் வளர்கின்ற ஒரு தாவரமாகும். இது பழங்களையும், மலர்களையும் ஒன்றாக ஆண்டு முழுவதும் தரக்கூடியது. எனவே இதற்கு நான்கு பருவங்களின் தாவரம் என்ற பெயரும் உண்டு. இளஞ்சிவப்பு சதையுடன் பச்சை மற்றும் மஞ்சள் நிற வெளிப்புற தோல் கொண்ட எலுமிச்சை பழமாகும்.

    இத்தாலியில் எலுமிச்சை மிகவும் பெயர் பெற்றது. மேலும் அமெரிக்காவில் மெயர் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இப்பழம் யுரேகா எலுமிச்சைகளை காட்டிலும் மெல்லிய தோல், சிறு அமிலத்தன்மை குறைவாக உள்ளது.

    பயன்கள்

    எலுமிச்சைப்பூ

    இந்தியாவை பொறுத்தவரை எலுமிச்சை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் ஊறுகாய்கள், மருந்துகள், மிட்டாய்கள், பழப்பாகு போன்றவை தயாரிக்கவும், நறுமண எண்ணெய்கள், சோப்புகள் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.

    நாம் எந்த மரம் வளர்த்தாலும் அதற்கு எப்படி நீர், காற்று, சூரிய ஒளி தேவையோ அதே போல சரியான நேரத்தில் சரியான அளவில் உரம் இடுதல் மிகவும் முக்கியம்.

    நைட்ரஜென்

    சிட்ரஸ் வகை மரங்களுக்கு நைட்ரஜன் அதிகம் தேவை. இவை இயற்கை உரங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே நம் வீட்டில் தயாரிக்கும் கம்போஸ்ட்கள், மண்புழு உரங்கள், கால்நடை உரங்கள், மற்றும் இலைதழைகளில் அதிகளவில் உள்ளது.

    பாஸ்பரஸ்

    நைட்ரஜனுக்கு அடுத்தபடியாக எலுமிச்சைக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய சத்து பாஸ்பரஸ் ஆகும். இதேபோல பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, சாம்பல்சத்து போன்றவையும் அதிகம் தேவை.

    செடிகளுக்கு மாதம் ஒருமுறை உரம் இடுவது நல்லது. அப்படி மாதம் ஒரு முறை முடியவில்லை என்றல் 3 மாதத்திற்கு ஒரு முறை உரமிடுதல் அவசியம்.

    கால்நடை சாணங்கள், மண் புழு உரம், மட்கிய உரங்கள், வேப்பம்புண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, கோழி கழிவு மற்றும் பஞ்சகவ்யம் போன்றவையும் இடலாம். இவை மட்டுமின்றி புளித்த மோர் எலுமிச்சைக்கு மிகவும் ஏற்றது. எலுமிச்சைக்கு காரத்தன்மை அதிகம் தேவைப்படுவதால் புளித்த மோரை செடியின் மேலும் செடியை சுற்றிலும் தெளிக்க வேண்டும்.

    நீர் மேலாண்மை

    எலுமிச்சைக்கு நீர் தேவை அதிகம், எனவே மரத்தை சுற்றி காய்ந்த இலை தழைகள் மற்றும் வைக்கோல் போன்றவை கொண்டு மூடாக்கு இட வேண்டும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு களைகள் முளைப்பதையும் தடுக்கலாம். இந்த மூடாக்கு மட்கி உரமாக மாறி விடும்.

    Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    பூச்சிகள் மற்றும் நோய்த்தடுப்பு

    • எலுமிச்சை செடியில் இலைகள் அதிகமாக சுருளும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அவற்றில் சில: பூஞ்சை தொற்று, இலை துளைப்பான் பூச்சி, சரியாக நீர் ஊற்றாமலிருப்பது.
    • பூச்சிகளை அழிக்க வேப்பெண்ணை கரைசல் மற்றும் 3ஜி கரைசல் நல்ல பலன் தரும்.
    • பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இலைகள் மண்ணில் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
    • இலைத்துளைப்பானின் புழு அதிக சேதம் எற்படுத்தும் என்பதால் அதனை வெட்டி எரித்து விடுதல் நல்லது.
    • சத்து குறைபாடு காரணமாக இலைகள் மஞ்சளாகும், இதற்கு இரும்பு, மாங்கனீசு, நைட்ரஜன் சத்துக்கள் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • neem oil icon

      இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

      உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

       Buy Now

      எலுமிச்சை கவாத்து செய்தல்

      எலுமிச்சை விதை

      காய்கள் காய்த்தவுடன் தேவையற்ற கிளைகளை வெட்டி விட வேண்டும். அதாவது கடந்த காய்ப்பு காலத்தில் காய்த்த கிளைகள், நிலத்தை தொடும் கிளைகள் என அனைத்தையும் வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடி அடுத்த அறுவடைக்கு தயாராகும்போது தனக்கு தேவையான சக்தியை புதிய கிளைகளில் செலுத்தி அறுவடைக்கு மரம் தயாராகிவிடும்.

      எலுமிச்சை விளைச்சல் மற்றும் அறுவடை

      எலுமிச்சைப்பழம் முழுவதும் தயாரானதும் ஒரு மரத்தில் 20 முதல் 30 கிலோ பழங்கள் வரை கிடைக்கும், மற்றும் அடர்த்தியான தோலுடன் 30 முதல் 40 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால் இதன் விலை மிகவும் குறைவே. பண்ணையில் இருந்து வியாபாரிகள் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை வாங்கிக்கொள்வார்கள். எலுமிச்சையை சரியான காலத்தில் அறுவடை செய்வது மிக அவசியம்.

      எலுமிச்சை சரியான சமயத்தில் பூ வைத்து காய் காய்க்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு தேவையானதை செய்ய வேண்டும்.

      எலுமிச்சை பதியம்

      பதியமிடப்பட்ட எலுமிச்சைக்கன்று காய்ப்பதற்கு 3 முதல் 5 வருடங்கள் வரை ஆகும். பதியம் போடப்பட்ட கன்று அதன் தாய் மரத்தை போலவே காய்க்கும். அதனால் தாய் மரத்தை ஆராய்ந்து பார்த்து கன்றுகளை வாங்க வேண்டும். எலுமிச்சை உரம் பொறுத்தவரை இயற்கை உரங்களாக இருப்பது நல்லது.

      எலுமிச்சை கன்றுகள் கிடைக்கும் இடம்


      நர்சரிகளில் எலுமிச்சை கன்றுகள் கிடைக்கும். முடிந்தவரை நாட்டு எலுமிச்சை கன்றுகள் வைப்பது நல்லது. இயற்கை உரங்களை இடுவது சிறந்தது. நிலத்தில் மட்டுமே எலுமிச்சை வளர்க்க முடியும் என்றில்லை எளிய முறையில் மாடித்தோட்டத்தில் எலுமிச்சை செடி வளர்ப்பு செய்ய முடியும்.

    முலாம்பழம் வளர்ப்பு அல்லது கிர்ணி பழம் செடி வளர்ப்பு பருவ நிலைக்கேற்ப சாகுபடி செய்யப்படுவதாகும். இது முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் என்று அழைக்கப்படுகிறது. இப்பழம் கோடைகாலத்தில் அதிக அளவில பயன்படுத்தப்படுகிறது.
    முலாம்பழம் வளர்ப்பு
    முலாம்பழத்தில் வெள்ளரிவிதை போன்ற விதைகள் இருக்கும். விதைகளை நீக்கிவிட்டு வெள்ளரிப்பழம் போன்று சர்க்கரை போட்டு அப்படியே உண்ணலாம் அல்லது குளிர்பானமாக அருந்தலாம்.

    இது முதன்முதலில் இந்தியாவில் பயிரிடப்பட்டாலும் இந்தியாவைவிட சீனாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. முலாம்பழம் வளர்ப்பு மற்றும் பயன்பாடு என்பது இந்தியாவில் குறைவே. சிலவகைகள் நாட்டு முலாம்பழம் என்றும் அழைப்படுகிறது.

    விளைச்சல் பருவம்

    மானாவாரிப்பயிராக ஜூன் மாதத்திலும், மற்றும் டிசம்பர் முதல் ஜனவரியில் கோடைகால பயிராக பயிரிடலாம்.

    கோடை காலங்களில் அதிக விளைச்சலை கொடுக்க கூடிய பயிராகும். முலாம்பழம் கொடி போல படர்ந்து வளர்க்கூடியதாகும்.

    முலாம்பழத்தின் ரகங்கள்

    விதைகள்

    இப்பழத்தை பொறுத்தவரை நிறைய ரகங்கள் உள்ளது. எனினும் பஞ்சாப் ரசில்ஹெரி, அர்கா ஜூட், பூசா மதுரக்குஸ் போன்ற ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

    அர்கா ராஜ்கான்ஸ், பூசா சர்பதி, பஞ்சாப் சன், துர்காபூர் மாது ஆகிய ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவையே.

    முலாம்பழம் சாகுபடிக்கேற்ற மண் வகைகள்

    முலாம்பழம் செடி வளர்ப்புக்கு செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மணல் சாரியான அனைத்து மண் வகைகளும் ஏற்றவையே. ஆனால் மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    5kg cocopeat icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

    உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    முலாம்பழம் பயிரிடுவதற்கான நிலம் தயாரித்தல்

    நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது சாகுபடிக்கேற்றவாறு தயார் செய்ய வேண்டும். அதன் பின் 2 அடி அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். வாய்க்கால்களுக்கு பக்கவாட்டில் 45x45x45 செ.மீ அளவுக்கு குழிகளை 1 மீட்டர் இடைவெளியில் தோண்டி மண் புழு அல்லது கலப்பு உரங்களை போட்டு மண்ணுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

    பயிரிடுவதற்கான விதையளவு

    நாற்று

    பொதுவாக முலாம்பழம் விதைகள் மூலம் பயிர் செய்யப்படுகிறது, ஒரு எக்டருக்கு 3 கிலோ வரை விதைக்கலாம்.

    விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்

    விதையை 4.0 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ் அல்லது கார்பன்டிசம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவை 1 எக்டருக்கான அளவு ஆகும்.

    விதை நேர்த்தி செய்த விதைகளை குழிகளுக்கு நடுவில் 3 அல்லது 4 வீதம் 0.6 மீ இடைவெளி விட்டு ஊன்றவேண்டும்.

    முலாம்பழம் வளர்ப்பு – நீர் மேலாண்மை

    நீர் மேலாண்மையை பொறுத்தவரை விதை விதைப்பதற்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். 3 ஆம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது ஆகும்.

    உரங்கள், ஜீவாமிர்தம், பூச்சி விரட்டி

    உரங்களை அடியுரமாக 55 கிலோ மணிச்சத்து மற்றும் 55 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.

    ஒரு எக்டருக்கு தழை,மணி மற்றும் சாம்பலச்சத்துக்களை முறையே 200:100:100 என்ற விகிதத்தில் பயிர்க்காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

    பயிர்களில் பூச்சி தாக்குதலை 8 ஆம் நாளில் இருந்து காண முடியும், அப்போது ஒரு டேங்க் தண்ணீருக்கு அதாவது 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மூலிகை பூச்சி விரட்டி, 100 மில்லி மீன் அமிலம் கலந்து எக்டருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும்.

    15 முதல் 20 நாட்களுக்குள் தலா ஒரு கிலோ இஞ்சி, ஒரு கிலோ பச்சை மிளகாய், ஒரு கிலோ பூண்டு ஆகியவற்றை இடித்து 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தில் 12 மணி நேரம் ஊற வைத்து ஒரு டேங்க் தண்ணீரில் ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சி விரட்டியாக செயல்பட்டு, பூச்சி தாக்குதலை கட்டுபடுத்துகிறது.

    neem oil icon

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    களையெடுத்தல்

    முலாம்பழம் செடி

    விதை விதைத்த பின் 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும். விதை விதைத்து 15 நாட்கள் கழித்து குழியில் 2 நாற்றுகளை மட்டும் விட்டு விட்டு மீதியை நீக்கி விட வேண்டும்.

    முலாம்பழம் பயிர்களுக்கு நோய்கள் உண்டாக்கக்கூடிய பூச்சிகள் மற்றும் அவற்றை அழிக்கும் முறைகள்.

    இலை வண்டுகள்

    1 லிட்டர் தண்ணீரில் 3ஜி கரைசல் 5 மில்லி கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    வெள்ளை ஈக்கள்

    5 கிராம் வேப்பங்கொட்டையை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பதன் மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

    காய்ப்புழுக்கள்

    காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தப் பாதிக்கபட்டக் காய்களை பறித்து அழித்து விடுவது நல்லது. நிலத்தினை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் படுமாறு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.

    அறுவடைக்கான காலம்

    காய்களின் மேற்பரப்பில் உள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாக மாறுவது அறுவடைக்கான பருவம் ஆகும். அந்த சமயம் அறுவடை செய்வது சிறந்தது.

    மகசூல்

    ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும். அதிக மகசூல் கிடைப்பதால் முலாம்பழம் வளர்ப்பு மூலம் அதிக வருமானம் ஈட்டமுடியும்

    பயன்கள்

    aan pen mulampalam pookal

    • தேகத்திற்கு உறுதியையும், சருமத்திற்கு பொலிவையும் தரக்கூடிய புரதமும், கொழுப்புச்சத்தும் இதில் அதிக அளவில் உள்ளது.
    • உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய வைட்டமின் ஏ,பி,சி, போன்ற தாது பொருட்களும், மேலும் கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மையும் முலாம்பழத்திற்கு உண்டு.
    • முலாம்பழம் உண்பதால் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. மேலும், இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
    • முலாம்பழம் தேகத்திற்கு மட்டுமல்லாமல் முக அழகுக்கும் பயன்படுகிறது. அடிக்கடி வியர்ப்பவர்களுக்கு முகம் களையிழந்து காணப்படும். அவர்களுக்கு முலாம்பழம் நல்ல மருந்தாக செயல்படுகிறது. முலாம்பழ துண்டை கைகளால் மசித்து முகத்திற்கு பூசி வர முகம் பளிச்சென்று பொலிவு பெறும்.
    • இந்த பழத்துடன் தேன் கலந்து உண்டு வர வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் திறனும் இப்பழத்திற்கும் உண்டு.
    • சரியான உணவு பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்து கொள்வதால் ஏற்படும் அல்சர் நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். அதற்க்கு இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வர வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பூரண குணமாகும்.

    • மேற்கண்ட முறையில் முலாம்பழம் வளர்த்து அதன் பயன்கள் எல்லாம் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

    பலா வளர்ப்பு முதலில் எங்கு தோன்றியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியா, கென்யா, பர்மா, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது.

    gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    பலா வளர்ப்பு வரலாறு

    தென்னிந்தியாவில் மாம்பழம் மற்றும் வாழைப்பழத்திற்கு அடுத்ததாக பலாப்பழமும் அதிகளவு வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் மற்ற தோட்டங்களில் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. தாய்லாந்தில் படத்திற்காகவும்,இலங்கையில் மரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.

    பலாமரம் உலகின் சில இடங்களில் பழங்களின் அரசன் என்று அழைக்கப்பட்டாலும் சில இடங்களில் பலாப்பழங்கள் பயன்படுத்தாமல் குப்பையில் வீசப்படுகின்றன. சில இடங்களில் மட்டுமே பலா வளர்ப்பு முறையாக விவசாய முறைப்படி வளர்க்கப்படுகிறது.

    பலாவின் ரகங்கள்

    தென்னிந்தியாவில் இருவகை பலாக்கள் பயிரிடப்படுகின்றன.
    1 .கூழப்பழம்: பெரிய சுவையான விற்பனைக்கேற்ற சுளைகள் உள்ளவை.
    2 .கூழச்சக்கா: சிறிய நாறுடைய மிக இனிமையான சுளைகள் கொண்டவை.

    மேலும் தேன்பலா என்ற பெயரில் இலங்கையில் விளைவிக்கப்படுகிறது. பலாப்பழம் இலங்கையில் கூழான்பழம், வருக்கன் பழம் என்று அழைக்கப்படுகிறது.சிலோன் அல்லது சிங்கப்பூர் பலா மிக விரைவில் பழம் தரக்கூடிய வகையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்தன.

    இந்தியாவில் பல இடங்களில் ஆராய்ச்சிகள் மூலமாக பல உயர்ரக பழங்களும் ,கலப்பின ரகங்களும் பயிரிடப்படுகின்றன.

    மண் மற்றும் தட்பவெப்பம்

    பலா விதை

    நல்ல நீர் வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும். வேர் பகுதியில் நீர் தேங்காமல் இருப்பது பலா மரத்திற்கு அவசியமாகும். அவ்வாறு நீர் தேங்கினால் மரங்கள் பழம் தராமல் போகலாம் அல்லது மரங்கள் வாடி போவதற்கான வாய்ப்பு உள்ளது.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now

    பலாப்பழத்தின் பயன்பாடுகள்

    பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் b6, வைட்டமின் சி, மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் சமைக்காமல் அப்படியே உண்ணப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் பலாப்பழங்களின் மணம் விரும்பப்படுவதில்லை.

    பலா கன்றுகள்

    Jackfruit-leaves

    பலாமரம் விதைகள் மூலம் வளர்க்க முடியும். மேலும் விதைகளை நீரில் நன்கு ஊற வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை உடனடியாக நடவில்லை எனில் விதைகள் அப்படியே வேர் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    சாதாரணமாக பலா மரங்கள் 21 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. பலா மரங்களின் அனைத்து பாகங்களிலும் பிசுபிசுப்புடன் பால் போன்ற திரவம் வடியும். பலா மரங்கள் காயிப்பதற்கு 3 முதல் 7 வருடங்கள் வரை ஆகும்.

    பூ மற்றும் காய்

    பலா மரம் பூ

    பலாமரத்தில் ஆண் பூக்கள் கிளைகளின் நுனியில் பூக்கும். பெண் பூக்கள் மரங்களின் தண்டின் அடிப்பகுதியில் பூக்கும். பூக்கள் காயிப்பதற்கு 3 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். பலா மரங்கள் வருடத்திற்கு 100 முதல் 150 பழங்கள் வரை காய்க்கும்.

    பழங்கள் 35 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும். நன்கு முற்றாத காய்களை அதிக அளவில் பால் சிந்துவதன் மூலம் அறியலாம்.

    நன்கு முற்றிய பழங்கள் வெளிப்புறத்தில் தடிமனான பச்சை நிற முட்களும் உள்ளே மஞ்சள் நிற சுளைகளும் மற்றும் வெளிர் நிற கொட்டைகளை கொண்டும் இருக்கும். பலாப்பழங்கள் அறுவடை காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும்.

    இந்தியா தவிர மற்ற நாடுகளில் பலாவின் பயன்

    இந்தியா அல்லாமல் இலங்கையிலும் பலாப்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இங்கே பழமாக மட்டும் அல்லாமல் காய்கள் சமைத்தும் உண்ணப்படுகிறது. இலங்கையில் பலா பண்பாட்டுடன் தொடர்புடைய உணவுப்பொருளாக கூறுகின்றனர்.

    மேலும் பலாவை நான்கு பருவங்களாக பிரிக்கின்றனர்.

    இளம் பருவம் ( காய்)

    இதில் பலாக்காய் மிகவும் இளம் பருவமாக இருக்கும். காய்கள் 6 முதல் 8 அங்குலம் வரை இருக்கும். இலங்கையில் இதனை பொலஸ் என்று அழைக்கப்படுகிறது.மேலும் காய்கள் அசைவ உணவுக்கு இணையாக சமைத்து உண்ணப்படுகிறது.

    கொத்து எனப்படும் நடுப்பருவம்

    இது பலாக்காய் சுளைகள் உருவாவதற்கு முந்தைய நிலை, இதில் தோல் நீக்கப்பட்டு கத்தியால் கொத்தப்பட்டு பின்னர் சமைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் ஈர பலாக்காய் பொரியல் என்று அழைக்கப்படுகிறது.

    முற்றிய பருவம் எனப்படும் மூன்றாம் நிலை

    இது பழம் பழுப்பதற்கு முந்தைய நிலை, இதில் சுளைகள் பழுப்பான வெள்ளை நிறத்தில் இருக்கும். இவை சமைத்து உண்ணப்படுகிறது.

    பழம் எனப்படும் நான்காம் நிலை
    பலா பழம்

    இதில் பழம் நன்கு பழுத்த நிலையில் இருக்கும். இது சமைக்காமல் அப்படியே உண்ணப்படுகிறது. சமைத்தும் பல உணவுகள் தயாரிக்கபடுகிறது.

    இலங்கையில் பலா

    1977 ஆம் ஆண்டு இலங்கையில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்ட பொது மக்கள் பலாக்காய்கள் மற்றும் பலாப்பழங்களை உண்டு வாழ்தனர் என்று வரலாறு உள்ளதாக கூறுகின்றனர்.

    பலா மரத்தின் பயன்கள்

    பலாமரங்கள் வீட்டு உபயோக பொருட்கள் செய்ய பயன்படுகின்றன, மேஜை, கதவு போன்றவை செய்யப்பயன்படுகின்றன. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா அதிகம் பயிர் செய்யப்படுகிறது இங்கிருந்து சேலம், சென்னை போன்ற மாவட்டங்களுக்கு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளாவிலும் பலா அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.

    பலா பழத்தின் தீமைகள்

    எதிலும் நன்மை உள்ளதை போலவே தீமைகளும் இருக்கும், அதே போல இதிலும் தீமைகள் உள்ளன. பலாப்பழத்தின் எந்த பகுதியாக இருந்தாலும் அளவுடன் உண்பது நல்லது. இல்லையென்றால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற தொல்லைகளை ஏற்படுத்திவிடும்.

    தர்பூசணி வளர்ப்பு என்பது மிகவும் சுலபமான அதேசமயம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். இந்த பதிவில் நாம் நஞ்சு கலக்காத ஆரோக்கியமான தர்பூசணி பழத்தை எப்படி நமது வீட்டிலேயே வளர்ப்பது என்று பார்க்கலாம்.

    தர்பூசணி வளர்ப்பு

    கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை போக்கி நீர்ச்சத்தை தருவது முதல் பங்கு தர்பூசணி அல்லது கோசாப்பழத்திற்கு உண்டு.

    தர்பூசணி ரகங்கள்

    இந்த தர்பூசணி பழத்தில் பல வகைகள் உண்டு அவற்றில் சிலவை இங்கே டிராகன் கிங், அர்காமானிக், அர்கா ஜோதி,சுகர்பேபி, அர்கா ஐஸ்வர்யா, பூசா பொடானா, அம்ருத் அபூர்வா, மைதிலா (மஞ்சள்), புக்கிசா, தேவயானி (ஆரஞ்சு).

    மேற்கண்ட ரகங்கள் பெரும்பாலும் ரசாயன முறையில் விவசாயம் செய்ய உகந்தவை ஆனாலும் இவற்றை சிறிய அளவில் வளர்ப்பவர்கள் தாராளமாக இயற்கை முறையில் வளர்க்கலாம்.

    தர்பூசணி பழத்தின் பயன்கள்

    தர்பூசணி விதைகள்

    தர்பூசணி பழத்தில் 90 சதவிகிதம் நீர்சத்து இருப்பதால் சாப்பிட்டவுடனே நமது உடலுக்கு தேவையான நீர்த்தேவையை பூர்த்திசெய்கிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகிறது.

    இந்த தர்பூசணி பழத்தில் வைட்டமின் A , வைட்டமின் C மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது.

    கர்பமாக இருக்கும் பெண்கள் அதிகமாக தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவந்தால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்தஅழுத்தத்தை தவிர்க்கலாம்.

    சாகுபடி முறைகள்

    தர்பூசணிக்கொடிகள் பொதுவாக விதைகள் மூலமாகவே நாற்று உற்பத்திசெய்து வளர்க்கப்படுகின்றன. விவசாயம் செய்யும் நண்பர்கள் பெரும்பாலும் தர்பூசணி வளர்ப்பில் பெரும் நிலப்பரப்பில் நடத்தவே ஆசைப்படுகிறார்கள் அதுவும் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் செய்யும்பொழுது நமக்கு செலவுகளும் குறைகிறது.

    சரியான பட்டம்

    எந்த ஒரு பயிராக இருந்தாலும் அதை சரியான பட்டம் அதாவது காலம் பார்த்து நடவுசெய்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் பொதுவாக தர்பூசணி ஒரு 3 மாதத்தில் பலன்தரக்கூடிய செடியாகும் மேலும் அதற்கான அதிக தேவை இருப்பது வெய்யில் காலத்தில், ஆகவே கோடைக்கு 3 மாதங்கள் முன்பாக தைமாதத்தில் பயிரிட்டால் சரியாக சித்திரையில் அறுவடை செய்யலாம்.

    என்ன உரம் தரலாம்

    நாம் இங்கே பார்க்கப்போவது முற்றிலும் இயற்கை உரங்கள் மட்டுமே ஆகவே அடியுரமாக நன்கு மக்கிய தொழுஉரம் மற்றும் கடலைப்புண்ணாக்கு கொடுக்கலாம்.

    20kg  Vermi Compost icon

    இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

    இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

     Buy Now


    நாற்றுகள் நடவு செய்து ஒரு மதத்திற்கு பிறகு பயிர் வளரும் காலத்தில் மாதம் ஒருமுறை பஞ்சகாவியா மற்றும் மீன் அமிலம் போன்ற பயிர் ஊக்கிகள் தரலாம்.

    ஆண் மற்றும் பெண் பூக்கள்

    gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now


    பொதுவாக தர்பூசணியில் மட்டும் இல்லாமல் அணைத்து கொடிவகைகளிலும் ஆன் மற்றும் பெண் பூக்கள் என்று இருந்து இருக்கும். ஆன் பூவில் இருக்கும் மகரந்தம் பெண் பூவில் இருக்கும் சூலகத்தை அடைந்தால்தான் மகரந்தசேர்க்கை நடைபெற்று காய்கள் உருவாகும். தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் இதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

    பூச்சி விரட்டிகள்

    தர்பூசணி வளர்ப்பில் ஏற்படும் பூச்சி தாக்குதல்களை பெரும்பாலும் அக்னி அஸ்திரம் மற்றும் வேப்பெண்ணை கரைசல் போன்றவற்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் பழ ஈக்களை இனக்கவர்ச்சி பொறிகள் மற்றும் மஞ்சள் அட்டைகள் வைத்து கட்டுப்படுத்தலாம்.

    இந்த பதிவில் நாம் தர்பூசணி வளர்ப்பு பற்றி பார்த்தோம், மீண்டும் அடுத்த பதிவில் வேறு ஒரு நல்ல படைப்புடன் சந்திப்போம்.

    Pin It