வெற்றிலை வள்ளி கிழங்கு பலரும் மறந்து போன பாரம்பரியமான கிழங்குகளில் ஒன்று. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த கிழங்கு அதிகமாக காணப்படுகிறது. காவள்ளிக் கிழங்கு மற்றும் ஏர் பொட்டேட்டோ என்றும் அழைக்கப்படுகிறது. மகத்துவம் பல நிறைந்தது இந்த கிழங்கு, இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை. வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு முறை செய்வது எப்படி, வெற்றிலை வள்ளி கிழங்கு சாகுபடி, வெற்றிலை வள்ளி கிழங்கு மருத்துவ குணம் மற்றும் அதன் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வெற்றிலை-வள்ளி-கிழங்கு-வளர்ப்பு

நடவு முறை

வெற்றிலைவள்ளிக்கிழங்கை நடவு செய்ய ஏற்ற காலம் ஆடி பட்டம் ஆகும். நடவு செய்வதற்கு மண்கலவை தயார் செய்யும் போது, செம்மண் 40 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்யவும். வெற்றிலை வள்ளி கிழங்கை வாங்கி இரண்டு வாரங்கள் வைத்திருந்தால் சிறிது முளைப்பு விட்டிருக்கும் அப்போது நாம் அதை எடுத்து மண்கலவையில் நடவு செய்யலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வளர்ச்சி

வெற்றிலை-கிழங்
நடவு செய்த 15 நாளில் வெற்றிலை வள்ளி கிழங்கின் குருத்து வளர்ந்திருப்பதை காணமுடியும். சுமார் ஒரு மாதத்தில் இந்த கொடி வகை தாவரத்தில் இலைகள் வளர ஆரம்பிக்கும், இதன் இலைகள் வெற்றிலை இலை போலவே இருக்கும் எனவே தான் இதற்கு வெற்றிலை வள்ளி கிழங்கு என்று பெயர் வந்தது. பிறகு 50 நாளில் கொடியின் வளர்ச்சி ஏழு அடி வரை இருக்கும். கொடி வளர ஏதுவாக பந்தல் அமைப்பது அவசியமாகும், இவ்வாறு செய்தால் வெற்றிலை வள்ளி கொடி வளர்ப்பு சிறக்கும்.

வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு தனில் நோய் தாக்குதல்

நோய்-தாக்குதல்-1
வெற்றிலை வள்ளி கிழங்கை இலை சுருட்டல் நோய் தாக்க கூடும். இதனால் கொடியின் இலைகள் எல்லாம் சுருள தொடங்கும், கொடியின் வளர்ச்சியையும் பாதிக்கும். இதை சரி செய்ய, மீன் அமிலம் அல்லது பழக்கரைசலை நீரில் கலந்து தெளித்து வந்தால் மூன்று வாரத்தில் இந்த நோய் சரி ஆகிவிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அறுவடை

அறுவடை-1
நடவு செய்த 130 நாளில் காய்கள் வைக்க தொடங்கும். தொடக்கத்தில் இது பச்சை நிறத்தில் இருக்கும், இந்த நிலை அறுவடைக்கு இன்னும் தயார் ஆகவில்லை என்பதை குறிக்கும். சுமார் 160 நாளில் உருளை கிழங்கின் நிறத்திற்கு மாறி இருக்கும். இப்போது நாம் இதை அறுவடை செய்யலாம். கொடியில் காய்க்கும் உருளை கிழங்கு போல் உள்ளதால் தான் இதை ஏர் பொட்டேட்டோ என்று அழைக்கின்றனர்.

வெற்றிலை வள்ளி கிழங்கின் பயன்கள்

வெற்றிலை-வள்ளி-கிழங்கு-வளர்ப்பு-1

  • வெற்றிலை கிழங்கு வள்ளி பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய பயிராகும். இது மாவுச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகிய அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது.
  • வெற்றிலை வள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சரும பிரச்சனைகள் குணமாகும்.
  • உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால், உடல் தேறி வலுப்பெறும்.
  • செரிமான கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் தன்மை கொண்டது.
  • நமது உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை ஏற்படும், வெற்றிலை வள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் இந்த தொல்லை நிவர்த்தியாகும்.


வெற்றிலை வள்ளி கிழங்கை எளிய முறையில் வளர்த்து, அடுத்த தலைமுறைக்கும் அதன் பலன்களை கொண்டு சேர்த்து தலைமுறை சிறக்க வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It