வெட்டி வேரினை விலாமிச்சை வேர், இரு வேலி, குரு வேர், விழல் வேர் மற்றும் விரணம் என பல வித பெயர்கள் வெட்டிவேருக்கு உண்டு. இது புல் இனத்தைச் சேர்ந்தது, ஆகையால் வெட்டிவேர் செடி வளர்ப்பு செய்வது மிக எளிது. வெட்டிவேர் பெரும்பாலும் மணற்பாங்கான இடத்திலும் மற்றும் ஆற்றுப் படுகைகளிலும் மிக சிறப்பாக வளரும். இது 4 முதல் 5 அடி வரை உயரம் வளரும்.
வெட்டிவேர் செடி வளர்ப்பு
வெட்டி வேரின் வாசனைக்கு ஈடுஇணையே கிடையாது என்றும் சொல்லலாம். தோற்றத்தில் பகட்டாகத் தெரியாத போதிலும் இந்த வெட்டி வேர் அதீத நறுமணம் கொண்டது. அதுமட்டுமின்றி உடலுக்கும் பல்வகை நற்பலன்களை கொடுக்கவல்லது. எனவேதான் நம் முன்னோர்கள், வெக்கையை விரட்ட வெட்டிவேர் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடியது எனவே தான் வெட்டிவேர் விற்ற காசும் மணக்கும் என்பார்கள்.

வெட்டிவேர் செடி வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் வெட்டிவேர் செடி வளர்ப்பு மற்றும் வெட்டிவேர் நன்மைகள் ஆகியவற்றை பற்றி தெளிவாக இக்கட்டுரையில் காண்போம்.

தேவையான மண்கலவை

வெட்டிவேர் வளர்ப்பு செய்வதற்கு கரிசல் மண், செம்மண் மற்றும் களிமண் என அனைத்து வகை மண்ணும் ஏற்றது, மேலும் மணல் பாங்கான மண்கலவையாக இருந்தால் வெட்டி வேர் இன்னும் நன்கு இறங்கி வளரத்தொடங்கும், இதனால் எதிர்பார்த்தபடி நல்ல மகசூலை பெறலாம்.

பயிரிடுதல்

வெட்டிவேர் நாற்றுகள்
வெட்டிவேர் நாற்றுகள் வாங்கியும் நடவு செய்யலாம் அல்லது ஏற்கனவே வளர்ந்திருக்கும் புல்லையும் வேரையும் வெட்டி, பின்பு நடுப்பகுதியான அதன் தண்டை மட்டும் மண்கலவையில் நட்டுவைத்தலே போதுமானது, வெட்டிவேர் செடி தானாக வளர தொடங்கிவிடும். இப்படியாக வெட்டி எடுத்து நடவு செய்வதால் தான் ‘வெட்டி வேர்’ என பெயர் பெற்றது.

உரம் அவசியமில்லை

வெட்டிவேர் நன்மைகள்
வெட்டிவேர் சாகுபடிக்கு எந்த விதமான உரமும் அவசியமில்லை, மற்றும் எந்த வித நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலும் இருக்காது எனவே பூச்சி விரட்டியும் தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சி விரட்டியாக செயல்படுவதால், காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த வெட்டிவேர் செடியை வரப்புகளிலோ அல்லது ஊடுபயிராகவோ நடுவு செய்தால் இது பூச்சி விரட்டியாகவும் செயல்படும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வெட்டிவேர் சாகுபடி

வெட்டிவேர் செடி வளர்ப்பு
வெட்டிவேர் செடி நட்டு ஒரு வருடத்தில் சாகுபடி செய்யலாம். அதிகபட்சம் 14 மாதத்திற்குள் அறுவடை செய்து கொள்ளலாம். வெட்டிவேர் செடியின் வேர் சேதப்படாமல் பிடுங்கி எடுக்கவேண்டும், மேலே இருக்கின்ற பச்சை செடியை அகற்றி விட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி பயன்படுத்தலாம். மேலும் வெட்டிவேர் செடியின் பச்சை இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வெட்டிவேர் நன்மைகள்

வாசனை

  • வெட்டிவேரை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு ஊறவைத்து பிறகு, தலைமுடிகளின் வேர் பகுதியில் படும்படி தேய்த்துவந்தால் தலைமுடியின் வேர்பகுதிகள் பலப்படும். இவ்வாறு
    வாரம் ஒரு முறை செய்து கொண்டு வந்தால் தலைமுடி உதிர்வது படி படியாக குறைந்து கருமையாகவும், பளபளப்பாகவும் முடி வளரும் மற்றும் கண்களும் குளிர்ச்சியடையும்.
  • கோடைக் காலத்தில் ஏற்படும் வயிற்றுக் கடுப்பு, நீர்க் கடுப்பு மற்றும் உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சுலபமாக நம்மைத் தொற்றிக்கொள்ளும், இந்த பிரச்சனைகளை மிக எளிதாக விரட்டி அடிக்க வெட்டி வேர் நீரை அருந்தினாலே போதுமானது.
  • வெட்டி வேரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, அதனுடன் கடுக்காய் ஒன்றை ஒரு இரவு முழுவதும் சூடான நீரில் ஊற வைக்கவும். அடுத்தநாள் அதை அரைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் நீங்கி விடும்.
  • பாசிப்பயறு 50 கிராம் மற்றும் வெட்டிவேர் 50 கிராம் இரண்டையும் எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு அந்தப் பவுடரை தினசரி உடலுக்கு தேய்த்து குளித்து வர உடம்பில் ஏற்படும் சிறு உஷ்ணக் கட்டிகளும், உடல் பருப்பதால் ஏற்படும் வரிகளும் மறைந்துவிடும்.
  • உடலுக்கு நறுமணத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்க வல்லது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும் மேலும் வெட்டிவேர் சோப் தயாரிப்பிலும் பயன்படுகிறது.


எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வெட்டிவேரு வாசம். இதை வீட்டில் வளர்த்து நல்ல ஆரோக்கியம் பெற்று வெட்டிவேரை போல் நறுமணமிக்க வாழ்க்கை சூழல் அமைய வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It