ரோஜா செடி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு என்பது இன்று அனைவர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. ரோஜா செடி வகைகள், ரோஜா செடி வளர்ப்பு, ரோஜா செடி பராமரிப்பு, ரோஜா செடி பதியம் போடுவது எப்படி, பன்னீர் ரோஜா செடி வளர்ப்பது எப்படி, ரோஜா செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி, மாடித் தோட்டத்தில் ரோஜா செடி வளர்ப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு ரோஜா செடி

ரோஜா செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு – ரோஜா செடி மண் கலவை

ரோஜாச்செடி வளர்ப்புக்கு மண்கலவை மிகவும் முக்கியமானதாகும். ரோஜா செடி நன்றாக வளர்வதற்கு செடி வைக்கப்போகும் தொட்டியில் பாதி அளவிற்கு மண்ணும் மீதியில் 30% நன்கு மக்கிய தொழுஉரமும் 20% தேங்காய் நாரை நன்றாக காயவைத்து பொடி செய்து மண்ணில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மண்கலவையுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து செடியை நடலாம். ரோஜாச்செடி வளர்ப்பு அதன் பராமரிப்பு முறைகள் செடிகளின் வகைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ரோஜா செடி வகைகள்

டமாஸ்க், போர்போன், சீனா, சென்டிபோலியா, கழிக்க, டி, ஹைபிரிட் டி, மினியேசர் என்று பல வகை ரோஜாக்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு வகைக்கும் பூக்கும் காலம் மாறுபடுகிறது, எனவே நாம் செடியை நடும்போது என்ன வகையான செடியை நடுகிறோம் அதற்கான பராமரிப்பு முறைகள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு ரோஜா செடி

ரோஜா பூ செடி

நாட்டு ரோஜா செடி என்றுபார்க்கும் போது பன்னீர் ரோஸ் போன்றவை உண்டு. இவை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நாட்டு ரோஜா செடிகளை வளர்ப்பது மிகவும் சுலபமாகும்.

ரோஜா செடி நோய்

ரோஜாச்செடி நோய்

  • ரோஜாச்செடியில் சாறு உறிஞ்சும் பூச்சி, மாவு பூச்சி போன்றவற்றால் ஏற்படும் நோய்களே அதிகம் ஆகும், இதை சரி செய்ய வாரம் ஒரு முறை கற்பூரக்கரைசல் தெளிக்கலாம்.
  • ரோஜா செடியில் இலை சுருங்கல் நோய்,வேர் அழுகல், பூச்சி அரிப்பு போன்ற நோய்கள் ஏற்படும். இலைகள் மஞ்சளாக மாறும்.
  • மேலும் புதிய இலைகளும் நோய்வாய்ப்பட்ட இலைகளாக மஞ்சளாக துளிர்க்கும். அவ்வாறான இலைகளை வெட்டி விட வேண்டும்.
  • ஒரு பக்கெட் தண்ணீரில் மாட்டு சாணத்தைக் கரைத்து ஒரு கைப்பிடி அளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட செடியின் மீது தெளிக்க வேண்டும்.
  • பூச்சிகள்,எறும்புகள் போன்றவற்றைத் தடுக்க வேப்ப இலையுடன் சிறிது பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்தபிறகு இதை வடிகட்டி செடிகளுக்கு ஸ்பிரே செய்யலாம்.
  • 2 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    தட்பவெப்பநிலை

    ரோஜாச்செடி வளர்ப்புக்கு வெயில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நேரடியான சூரியஒளி மற்றும் நிழல் இரண்டுமே இருக்கும் இடமாக தேர்வு செய்யவேண்டியது அவசியம். வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது, ஆனால் தண்ணீரை மொத்தமாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். மேலும் பழுத்த இலைகளை கண்டிப்பாக வெட்டி விட வேண்டும். பொதுவாகவே வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு சற்று அதிகப்படியான பராமரிப்பு தேவைப்படுகிறது.

    ரோஜா செடி அதிகம் பூக்க உரம்

    ரோஜா செடி அதிகம் பூக்க

  • ரோஜா செடி வளர்ப்புக்கு பெரிய அளவில் உரம் ஒன்றும் தேவை இல்லை. முட்டை ஓட்டுத்தூள், வெங்காயத்தோல், காய்கறி கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • பயன்படுத்திய தேயிலைத்தூள், பீட்ரூட் தோல், தர்பூசணி தோல் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதால் பூக்கள் அடர்த்தியாக பூக்கும் மற்றும் பூக்களின் நிறம் நல்ல அடர்த்தியாக இருக்கும்.
  • உருளைக்கிழங்கு தோல், மண்புழு உரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
  • அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து செடியை நல்ல காற்றோட்டத்துடன் வைத்து மண்ணை ஈரப்பதமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும். அதிக அளவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
  • வருடத்திற்கு ஒரு முறை ரோஜா செடியை கவாத்து செய்வது அவசியம். இதனால் செடி நன்றாக வளரும்.
  • பன்னீர் ரோஜா வளர்ப்பு

    பன்னீர் ரோஜா

    பன்னீர் ரோஸைப் பொறுத்தவரை அலங்காரப் பொருளாகவும், ஆரோக்ய பொருளாகவும் உள்ளது. பன்னீர் ரோஜாவை மாடித்தோட்டத்திலோ, வீட்டுத்தோட்டத்திலோ அல்லது பணப்பயிராக விவசாய நிலங்களிலோ வளர்க்கலாம். சாதாரண ரோஸ் செடிக்கு மண் தயாரிப்பதைப் போலவே இதற்கும் மண் கலவை தயார் செய்ய வேண்டும்.

    உரம் தயாரிப்பு

    தேவையான பொருட்கள்

  • டீத்தூள் கழிவுகள் – 50 கிராம்
  • முட்டை ஓட்டுத்தூள் – 2 ஸ்பூன்
  • வாழைப்பழத்தோல் – சிறிதளவு
  • புளித்த மோர் – 2 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • செய்முறை

    ஒரு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் பக்கெட்டில் உள்ள தண்ணீரில் நன்றாக கலந்து மூன்று நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் ரோஸ் செடி நட்டு வைத்துள்ள வேர்ப்பகுதியில் பாத்தி எடுத்து ஊற வைத்துள்ள தண்ணீரை வேர்பகுதியில் படுமாறு ஊற்றி பின் மண் அணைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது பதினைந்து நாளுக்கு ஒரு முறையோ இவ்வாறு செய்யலாம்.

    ரோஜாச்செடி வளர்த்து அதிக பூக்கள் பெறுவது எப்படி?

  • ரோஸ் செடியில் பூக்கள் பறிக்கும்போது பூக்களை மட்டும் பறிக்காமல் இரண்டு இலைகளையும் சேர்த்து பறிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் புதிய இலைகள் துளிர் விட உதவியாக இருக்கும்.
  • உரமாக டீத்தூள், வெங்காயத்தோல், முட்டை ஓடு, காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாக இடலாம்.
  • வாழைப்பழத்தோலை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றலாம்.
  • பழைய சாதத்தின் தண்ணீரை வடிகட்டி ஊற்றலாம்.
  • ரோஸ் செடிகளுக்கு உரம் வைப்பதாக இருந்தால் அன்று முழுவதும் செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.
  • ரோஜா செடியை பொறுத்தவரை உரம் வைப்பதாக இருந்தால் மாலை நேரத்தில் வைப்பது சிறந்தது.
  • எப்பொழுதும் ரோஜா செடி வளர்க்க இயற்கை உரங்கள் சிறந்தது.
  • ரோஜா செடி பதியம் போடுவது எப்படி?

    கொஞ்சம் நன்றாக வளர்ந்த தண்டாக இருப்பது பதியம் போட சிறந்தது. ரோஜா தண்டு துளிர்ப்பதற்கு காய்ந்து போகாமல் இருக்க வேண்டும், அதற்காக தண்டின் நுனியில் பசுசாணத்தை வைக்கலாம்.

    செடி துளிர்க்கும் வரை தண்ணீரை மட்டுமே தெளிக்க வேண்டும். செடி நன்றாக துளிர்த்து வளர ஆரம்பித்த பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

    ரோஜாச்செடி பதியம் போடுவது எப்படி என்று இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பார்க்கவும்.

    ரோஸ் செடி வளர்ப்பு என்பது இன்று அனைவரும் விரும்பும் ஒரு விஷயமாகும். விதவிதமான, அழகழகான ரோஜாப்பூக்கள் அனைவரையும் கவர்கின்றன. ரோஜாப்பூவின் நறுமணமும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது, இதனால் ரோஜாப்பூ அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

    Comments are closed.

    Pin It