முத்துச்சோளம் எனப்படும் மக்காச்சோளத்தின் தாயகம் நடு அமெரிக்கா என்று கூறப்படுகின்றது. மக்காச்சோளம் மிக முக்கியமான ஒரு தானியப் பயிராகும், மேலும் இது தானியப் பயிர்களின் அரசி எனவும் அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களை ஒப்பிடும்பொழுது அதிகமாக மக்காச்சோளம் வளர்ப்பு செய்ய காரணம் என்னவென்றால் இதை சாகுபடி செய்வதற்கான வேலையாட்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு மற்றும் நோய் தாக்குதல் மிகவும் குறைவு என்பதால் தான்.
100-105 நாட்களில் நல்ல வருமானம் தரக்கூடிய பணப்பயிராகும். எல்லா சூழ்நிலையிலும், வருடம் முழுவதும் அறுவடை செய்ய ஏற்ற பயிர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் இருப்பதாலும், தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், உழவர்களைத் தேடிவந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதாலும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியுடன் மக்காச்சோளம் வளர்ப்பு செய்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க மக்காச்சோளத்தை விவசாய நிலங்களில் மட்டுமல்ல வீடு தோட்டத்திலும், மாடித்தோட்டங்களிலும் கூட வளர்க்க முடியும். மக்காசோளம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மக்காச்சோளம் செடி வளர்ப்பு, மக்காச்சோளம் மகசூல், மக்காச்சோளம் சாகுபடி மற்றும் மக்காச்சோளம் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
மக்காச்சோளம் நடவு செய்ய ஏற்ற மண்
அனைத்து வகையான மண்களிலும் வளரும் தன்மை கொண்டிருந்தாலும் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மக்காச்சோளம் வளர்ப்பு செய்வதற்கு மிக ஏற்றதாகும். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நெகிழிப்பை அல்லது தொட்டிகளில் போட்டு நிரப்பவும், தொட்டியின் அளவிற்கு ஏற்றார் போல் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும். விதைகள் விதைத்த 5 வது நாளில் இருந்தே செடிகளில் துளிர் விட தொடங்கிவிடும். செடிகள் நன்கு வளர்ந்த பிறகு கதிர்கள் வைக்க தொடங்கும், அப்போது பூச்சிகள் கதிர்கள் மீது மொய்க்கும், அவற்றை கண்டு பயம் கொள்ள வேண்டாம். பூச்சிகள் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது.
மக்காச்சோளம் அறுவடை
மக்காச்சோளம் விதைத்த நாளில் இருந்து 90 நாட்களில் பிஞ்சு கருதாக இருக்கும், சிறு குழந்தைகளுக்கு இந்த நிலையில் சாப்பிட கொடுத்தால் எளிதாக இருக்கும், 100 நாட்களில் அறுவடைக்கு ஏற்ற பக்குவத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அறுவடை செய்வது சிறந்தது. சோளத்தை மாவாக அரைத்து பயன்படுத்த நினைப்பவர்கள் 115 நாட்களுக்கு பிறகு சாகுபடி செய்தால் நன்கு முற்றி மாவாக அரைக்க ஏற்ற நிலையில் இருக்கும்.
பூச்சி தாக்குதல்
மக்காச்சோள செடிகளை பொறுத்த வரைக்கும் அதிகமாக நோய்கள் தாக்குவது கிடையாது, ஒருவேளை அசுவினி பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் வேப்பிலையை நன்கு அரைத்து, அதோடு ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டு சேர்த்து அரைத்து இரண்டையும் ஒன்றாக நீரில் கலந்து பூச்சி தாக்குதல் உள்ள செடிகளின் மீது தெளித்தால் அது பூச்சி விரட்டியாக செயல்பட்டு அசுவினி பூச்சிகளை விரட்டிவிடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டிஉங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
மக்காச்சோளம் பயன்கள்
- மக்காச்சோளத்தில் இருக்கின்ற மிகுதியான நார்ச்சத்து குடல் மற்றும் வயிற்று புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பதை சீராக்கி உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆக உதவுகிறது.
- கருவுற்ற பெண்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அவர் அறிவுறுத்திய அளவின்படி மக்காச்சோளத்தை சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
- இரும்புச்சத்து மிகுதியாக இருக்கின்ற இந்த சோளத்தை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி மென்மேலும் அதிகரித்து, இரத்த சோகை பாதிப்பு அறவே நீங்கும்.
- சோளத்தில் இருக்கின்ற ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கெட்ட கொழுப்புகளை குறைத்து, இதயத்தில் உள்ள இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- மக்காச்சோளத்தை மாவாக அரைத்து அந்த மாவை நீர் அல்லது சிறிது பாலுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவிவந்தால் முகப்பரு தழும்புகள் மற்றும் எண்ணெய் வடிதல் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.
மக்காச்சோளம் பயிரிடும் முறை & பயன்கள் ஆகியவற்றை பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் வளர்த்து உங்கள் மாடித்தோட்டத்தை அழகாக்கி மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
11 Comments
Pingback: rizatriptan benzoate sandoz
Pingback: tpmt test azathioprine
Pingback: how long does it take mobic to kick in
Pingback: pancreatitis due to imuran
Pingback: sumatriptan vs butalbital
Pingback: does imdur cause bradycardia
Pingback: cost of tizanidine without insurance
Pingback: pronicy cyproheptadine hcl
Pingback: how to get cheap toradol without a prescription
Pingback: periactin buy no prescription
Pingback: artane triexifenidil