பருப்புக்கீரை வளர்ப்பு மிகவும் சுலபமாக செய்யலாம். மிக குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித்தர கூடிய கீரைகளில் ஒன்றாகும் இந்த பருப்புக்கீரை. இந்தக்கீரை 20 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய செடியாகும். அதிக சத்துக்கள் அடங்கிய இந்த கீரைக்கு பராமரிப்பும் மிக குறைவாக இருந்தால் கூட போதுமானது.

பருப்புடன் இந்த கீரையை சமைத்து உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருவதினால் இதனை பருப்புக் கீரை என்று அழைக்கின்றனர். மேலும் இந்த பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ எனவும் அழைக்கபடுகிறது அதற்கு காரணம் பருப்புக்கீரையானது குழந்தைகள் ஈன்ற தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை சீராக்குகிறது.
பருப்புக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் பருப்புக்கீரை வளர்ப்பு, பருப்புக்கீரை சாகுபடி மற்றும் பருப்புக்கீரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
மண்கலவை தயாரித்தல்
செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கொண்டு மண்கலவை தயார் செய்தால் நல்ல வளர்ச்சியை பெறலாம். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்கு கலந்து மாடித்தோட்டத்தில் நடவு செய்ய ஏதுவாக நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் அந்த மண்கலவையை நிரப்பிக்கொள்ளவும்.
|
|
இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டைஉங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
விதை விதைத்தல்

பருப்புக்கீரை விதைகள் கருப்புநிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை மண்கலவையின் மேல் தூவ வேண்டும். முதன் முதலாக நடவு செய்பவர்களுக்கு விதை தூவல் சரியாக செய்ய முடியவில்லை என்றால் மணல் அல்லது சாம்பலுடன் பருப்புக்கீரை விதைகளை கலந்து தூவலாம். தூவிய பிறகு அதன் மீது பூவாளிக்கொண்டு கவனமாக நீர் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி மற்றும் அறுவடை

பருப்புக்கீரை நடவு செய்த 3 மூன்று நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும். 7 நாட்களில் நல்ல வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம். சுமார் 20 நாட்களில் சாகுபடி செய்யும் அளவிற்கு வளர்ந்துவிடும். 20 நாளில் சிறிய மொட்டுக்கள் வைக்க ஆரம்பித்திருக்கும், தேவைக்கு போக மீதியை விதைக்காக விட்டுவிடலாம். அந்த மொட்டுக்கள் மஞ்சள் நிற பூக்களாக மாறி காய்வைக்கும். காய்கள் காய்ந்தபிறகு அதில் பருப்புக்கீரை விதைகள் நிறைந்திருக்கும்.
பருப்புக்கீரை பயன்கள்

- வெய்யிலின் தாக்கத்தால் சிலருக்கு அக்கி தொல்லை ஏற்படும், பருப்புக்கீரையின் இலைகளை பறித்து தண்ணீரில் அலசி நன்கு அரைத்து அக்கி ஏற்பட்ட இடத்தின் மீது தடவி வர வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இதுபோல் செய்து வந்தால் எரிச்சல் தணிந்து அக்கி கொப்புளங்கள் குறைந்து குணமுண்டாகும்.
- சிலருக்கு தலைவலி அடிக்கடி ஏற்படும், நாள் முழுதும் கூட அந்த வலி தொடரும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் பருப்புக்கீரையை நன்கு அரைத்து தலைக்கு பற்று போட்டுவந்தால் தலைவலி சரியாகிவிடும்.
- பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் நுரையீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஒமேகா 3 உள்ள அற்புதமான கீரை இந்த பருப்புக்கீரை ஆகும், மேலும் கால்சியம் சத்து குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருப்புக்கீரையைப் பயன்படுத்தினால் மிக எளிதில் கால்சியம் சத்து பற்றாக்குறை நீங்கும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை இந்த பருப்புக்கீரை. இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து நீண்ட கால நோய்களின் பாதிப்பை குறைக்க உதவுகிறது.
|
|
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
வீட்டில் பருப்புக்கீரை செடி வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பருப்புக்கீரை வளர்ப்பு செய்து அதன் அற்புத பயன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.
5 Comments
Pingback: mobic medication for pain
Pingback: remeron for appetite
Pingback: augmentin for pneumonia
Pingback: lasix water pill 40 mg
Pingback: fluconazole over the counter uk