மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். பரங்கிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்கா ஆகும். பூசணி தமிழர்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றாகும் இந்த பரங்கிக்காய். பரங்கிக்காய் வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு, பரங்கிக்காய் சாகுபடி, வீட்டில் பரங்கிக்காய் வளர்ப்பது எப்படி, பரங்கிக்காய் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
விதையை தேர்ந்தெடுத்தல்
நன்கு நேர்த்தியான பரங்கிக்காய் விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். நீரில் போட்டவுடன் விதைகள் மிதந்து கொண்டிருக்கும், அடுத்த நாள் பார்க்கும்பொழுது நீரின் அடியில் காணப்படும், இந்த நிலை விதைகள் விதைக்க தயாரானதை குறிக்கும்.
மண்கலவை தயார் செய்தல் மற்றும் விதைத்தல்
மஞ்சள் பரங்கிக்காயை நடவு செய்ய ஏற்ற மாதம் ஜீன் – ஜீலை மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் ஆகும், இந்த மாதத்தில் நடவுசெய்தல் நல்ல சாகுபடி செய்யலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவைமாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!! |
பரங்கிக்காய்க்கு மண்கலவை தயார் செய்யும் போது, களிமண் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இம்மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்ய வேண்டும். பிறகு தயார் நிலையில் இருக்கும் விதைகளை விதைப்பு செய்யலாம்.
பரங்கிக்காய் வளர்ச்சி
மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் விதைத்த ஏழாம் நாளில் இருந்து ஒன்பது நாற்களுக்குள் விதையானது முளைத்து, இலைகள் துளிர் விட தொடங்கி விடும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்தே தண்ணீர் விட வேண்டும். கோடைகாலங்களில் வாரத்திற்கு இருமுறையும், மற்ற நேரங்களில் வாரம் ஒரு முறையும் நீரை விட வேண்டும். இந்த நீர் மேலாண்மையே பரங்கிக்காய் செடி வளர்ப்பு முறை தனை மேம்படுத்தும்.
பரங்கிக்காய் வளர்ப்பு மற்றும் சாகுபடி
பரங்கிக்காய் செடி விதைத்த 45 நாளில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும்.
முதலில் ஆண் மொட்டுகள் அதிகம் வைக்கும், பின்பு பெண் மொட்டுக்கள் வரத்தொடங்கும். 60 நாட்களுக்கு பிறகு அடர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். பூக்கள் பூத்த உடனே தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளின் வரவு அதிகரிக்கும், மகரந்த சேர்க்கையும் துரிதமாக நடைபெறும். 70 நாட்களுக்கு பிறகு காய்கள் தோன்றும். 110 முதல் 115 நாளில் காய் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்கும், அப்போது அதை அறுவடை செய்து கொள்ளலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
பரங்கிக்காய் நன்மைகள்
- பரங்கிக்காய் உடலுக்கு அதிக அளவில் குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது, மேலும் சிறுநீர் நன்கு பிரிவதற்கு உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.
- திடீரென்று தோன்றும் வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்யும் வல்லமை கொண்டுள்ளது.
- பரங்கிக்காய் சாப்பிடுவதால் மழைக்கால் ஏற்படும் சளி மற்றும் தொடர் இருமலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது. பரங்கிக்காயில் உள்ள ஜீயாக்சாண்டின், வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் ஆகியவை நோய்த்தொற்றை எதிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்திதனை அதிகரிக்க மற்றும் விரைவில் குணமடையவும் வழிவகை செய்கிறது.
- இதயம் பலகீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்த சோகை நோய் உள்ளவர்கள் இந்த பரங்கிக்காயை தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்து கொண்டால் சிறந்த பலன் வாய்க்கும்.
- பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது, இது நம் கண்களுக்கு பெருமளவில் பயனுள்ளதாக விளங்குகிறது, மேலும் ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளதால், அவை நம் கண்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
- தசை மண்டல பகுதிகளின் தளர்ச்சியை போக்கி, அதற்கு உறுதியை சேர்க்க வல்லது.
நாட்டு பரங்கிக்காய் விதைப்பு முதல் அறுவடை எப்படி செய்வது என்பதை பற்றி பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பரங்கிக்காய் வளர்ப்பு செய்து பலன்கள் அனைத்தையும் பெற்று, அதன் பூ போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.
Comments are closed.