தாமரை வளர்ப்பு சிறக்க முக்கியமானது நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது. தாமரை விதையின் மேற்புற ஓடு கடினமாக இருப்பதினால், முளை விடுவதில் கால தாமதம் அல்லது ஒரு சில நேரங்களில் முளைக்காமலும் போகவாய்ப்புள்ளது. எனவே நல்ல விதையை தேர்ந்தெடுக்கவும்.
தாமரை வளர்ப்பு – விதையிலிருந்து வளர்க்கும் முறை
தேர்ந்தெடுத்த தாமரை விதைகளை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போடவும். தண்ணீரின் மேலே மிதந்து காணப்படும் விதைகளுக்கு முளைக்கும் தன்மை இல்லாமல் கூட இருக்கலாம், எனவே தண்ணீரில் மூழ்கி அடிப்பகுதியில் இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
அடுத்து விதையின் அடிபுறப்பகுதி அல்லது பக்கவாட்டுப்பகுதியில் உப்பு காகிதத்தை கொண்டு விதையின் ஓட்டிற்கு அடுத்து உள்ள வெண்மை நிற பருப்பு தெரியும் வரை உரைத்து பிறகு அதை எடுத்துக்கொள்ளவும்.
தயார் செய்துவைத்த தாமரை விதைகளை ஒரு பாத்திரத்தில் உள்ளே போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க வெயிலில் வைக்க வேண்டும். இந்த செயல் கடினமான தாமரை விதையுடைய ஓட்டை மென்மையானதாக ஆக்கும்.
அடுத்த தினம் அந்த நீரை வடிகட்டி விட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். 3 முதல் 6 நாட்களில் விதை முளைவிட்டிருக்கும் அப்போது நீரை மாற்றி வைக்கவேண்டும். பிறகு முதல் தாமரை இலை வளர 3 முதல் 5 வாரங்கள் ஆகும்.
தொட்டியில் தாமரை வளர்ப்பது எப்படி
தாமரை வளரும் மண், செம்மண் மற்றும் களிமண். அதை ஒரு தொட்டியில் போட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். தாமரையின் முதல் இலை வளர்ந்து விரியும் முன் அந்த தொட்டியில் முளைத்த விதையின் வேர், தண்டு அடிபடாமல் நட்டு பிறகு தொட்டி முழுவதும் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். சில வாரங்களில் செடி வளரத்தொடங்கும்.
கிழங்கிலிருந்து தாமரை வளர்ப்பு
தாமரை கிழங்கு நடவு செய்தல் மிகவும் சுலபமான ஒன்றாகும். ஒரு தொட்டியில் நன்கு மக்கிய மாட்டு எருவை போட்டுக்கொள்ளவும். பின்னர் தூளாக்கிய முட்டை ஓடுகளை போட்டுக்கொள்ளவும். பிறகு செம்மண் போட்டு மூன்றையும் நன்கு கலக்கவும். பின்னர் மெதுவாக தண்ணீர் ஊற்றவும் அப்போதுதான் எரு மேலே வராது. அதன்பிறகு ஒரு வாரம் ஊற வைத்த தாமரை கிழங்கை தொட்டியின் ஓரத்தில் வைத்து நடவு செய்யவும் . முக்கியமானது தண்ணீரை மிக மெதுவாக ஊற்ற வேண்டும். ஒரு வாரத்தில் தாமரை இலை நீரின் மேலே தெரிய ஆரம்பிக்கும்.
வீட்டில் தாமரை வளர்க்கலாமா
வீட்டில் தாமரை வளர்ப்பு தற்போதைய மாடித்தோட்ட காலத்தில் மிக பிரபலமாகிவிட்டது. முன்பெல்லாம் நாம் தாமரை பூ காணுமிடம் தாமரை குளம், ஆனால் தற்போது தாமரை வளர்க்கும் முறை சுலபமாக அனைவரும் அறிந்துக்கொள்ளலாம் என்கிற சூழ்நிலையில் தாமரை பூ வளர்ப்பு மாடித்தோட்டத்தில், வீட்டின் முகப்பு பகுதியில் காண முடிகிறது. மேலும் தாமரை செடி வளர்ப்பு நல்ல நேர்மறையான ஆற்றலை ஈர்ப்பதாக நம்பப்படுகிறது. எனவே வீட்டில் தாமரையை வளர்க்கலாம்.
தாமரை செடி டிப்ஸ்
1.தாமரை செடி அல்லது தாமரை கொடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்துக்கொண்டோம். தாமரை வளரும் தொட்டியில் உள்ள நீரில் சிறிய ரக மீன்களை வளர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியை தடுத்து தாமரையின் வளர்ச்சியை சீராக்கலாம்.
2.மீன்களின் கழிவுகளை உரமாக எடுத்துக்கொண்டு தாமரையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
3.மண்புழு உரம் அல்லது பஞ்சகாவியா போன்ற உரங்களில் ஏதேனும் ஒன்றை மாதம் ஒரு முறை தாமரை செடி இருக்கும் நீரில் கரைப்பதன் மூலம் தாமரை செடியின் வளர்ச்சி சிறக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
தாமரையின் அற்புத மருத்துவகுணங்கள்
தாமரையின் கிழங்கு மற்றும் விதை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளவை. கிழங்குதனில் நார்சத்து அதிகம் காணப்படுகிறது, மேலும் வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. தாமரை இதழ்களை நிழலில் காயவைத்து பொடியாக செய்து அதை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராக அமையும்.
தாமரை இதழோடு நெல்லிக்காய், மருதாணி இலை, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து அதனுடன் தேங்காயெண்ணை சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து அதை தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை மறையும், முடி உதிரும் பிரச்சனையும் சரியாகும்.
தாமரை தண்டுகளை வெயிலில் காயவைத்து, நார் செய்து அதை விளக்கேற்ற திரியாக பயன்படுத்தலாம். தாமரை விதையானது கருப்பு நிறத்தில் கடினமாக இருக்கும், அதை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை சாப்பிட்டால் இருதயம் வலுப்பெறும்.
இதுவரை தாமரை செடி எப்படி வளர்ப்பது என்று காண்டோம். நீங்களும் இந்த கட்டுரையின் வழிகாட்டுதலின் படி தாமரையை வளர்த்து அந்த மலர் போல உங்கள் வாழ்க்கையும் வளமாக வாழ்த்துகிறோம்.
Comments are closed.