சௌ சௌ ஒரு கொடிவகை தாவரம் ஆகும். சீமை கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் இந்த செள செளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா ஆகும், ஐரோப்பியர்கள் மூலமாக தான் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதிக வெப்பநிலை உள்ள பகுதிகள் மற்றும் குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் சௌ சௌ வளர்ப்பு செய்யப்படுகிறது. இந்த சௌ சௌ கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உயரத்தில் வளரக்கூடியது.
சௌ சௌ
செள செள என்கிற சீமை கத்திரிக்காயின் ருசி புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு என்று எந்த சுவையையும் சேராது, ஆனால் பல சத்துக்கள் நிறைந்தது. மேலும் இது பூசணியின் குடும்பத்தை சேர்ந்ததாகும் மற்றும் இது மிகுதியான ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரம்பியுள்ளது.

செள செள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். சௌ சௌ வளர்ப்பு செய்வது எப்படி, சௌ சௌ மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி, சௌசௌ சாகுபடி மற்றும் சௌ சௌ மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

சௌ சௌ விதைப்பு செய்ய சிறந்த மண்கலவை தயார் செய்வது அவசியமாகும். மக்கிய தொழு உரம் நாற்பது சதவிகிதம், செம்மண் நாற்பது சதவிகிதம் மற்றும் மணல் இருபது சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மக்கிய தொழு உரத்திற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தை கூட பயன்படுத்தலாம்.

சௌ சௌ விதைப்பு

சௌ சௌ வளர்ப்பு
சௌ சௌ விதைப்பு செய்ய அதற்கென விதைகள் சேகரிக்க தேவையில்லை, நன்கு முற்றி சௌ சௌ காய்களை கொண்டே சௌ சௌ செடி வளர்ப்பு செய்யலாம், முற்றிய சௌ சௌ காயிலிருந்து சிறிது முளைப்பு விட்டு சௌ சௌ வளர்ந்திருக்கும் அந்த நிலையில் அதை அப்படியே மண்கலவையில் விதைப்பு செய்யலாம். சௌ சௌ செடிகளுக்கென தனியே பந்தலை மாடி தோட்டத்தில் அமைத்திடவேண்டும்.

சௌ சௌ வளர்ச்சி மற்றும் சாகுபடி

சௌ சௌ வளர்ப்பு
சீமை கத்திரிக்காயை விதைப்பு செய்தது முதல் அதன் மீது தனி கவனம் தேவை, பூச்சிகள் ஏதும் தாக்காமல், வேர் பகுதிகளில் நீர் ஏதும் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்கு பராமரித்தால் சௌ சௌ விதைத்த ஐந்து மாதம் முதல் ஆறு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் காய்களை சாதாரணமான வெப்பநிலையில் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையில் கெடாமல் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

சௌ சௌ மருத்துவ பயன்கள்

சௌசௌ

  • தைராய்டு கோளாரால் பாதிக்கப்பட்டவர்கள் சௌசௌவை சாப்பிட்டால் நல்ல பயன் பெறலாம். சௌ சௌவில் உள்ள மாங்கனீசு மற்றும் காப்பர் தைராய்டு பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாக செயல் படுகிறது. இதை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.
  • ஆரோக்கியமற்ற கொழுப்புகளை குறைக்கவும் சௌசௌ பயன்படுகிறது. இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் உள்ள அதிகபடியான தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சௌசௌ காயை சூப் செய்து குடித்துவந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
  • உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இது நரம்பு தளர்ச்சியை குணமாக்கி நரம்பு மண்டலங்களை சீராக்கும் வல்லமை கொண்டது.
  • சௌ சௌவில் கால்சியம் சத்துகள் மிகுதியாக காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற உதவுகிறது, எனவே வளரும் சிறு குழந்தைகளுக்கு சௌ சௌ காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பெருங்குடல் மற்றும் சிறுகுடல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து குடல் மூலம் உருவாகக்கூடிய கோளாறுகளை சரிசெய்கிறது.


ஆரோக்கியம் பல நல்க கூடிய சௌ சௌ விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி செய்வது என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சௌ சௌ வளர்ப்பு செய்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It