சோம்பு என்பது பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட ஆரோக்கியம் தர கூடிய தாவரமாகும். அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருளாக மட்டுமின்றி, அதன் சிறந்த மருத்துவ குணத்திற்காகவும் பெயர் பெற்றது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் சோம்பு செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
சோம்பு-செடி-வளர்ப்பு
சோம்பு செடி எனும் பெருஞ்சீரகம் செடி வளர்ப்பு முறை, சோம்பு பயன்கள், பராமரிப்பு முறை, மாடித்தோட்டத்தில் அழகான சோம்பு செடி வளர்ப்பது எப்படி என்பது பற்றி இந்தக்கட்டுரையில் காண்போம்.

நடவு முறை

நடவு-முறை
சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பைக்கொண்டே சோம்பு செடி நடவு செய்யலாம். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும், பிறகு சோம்பை அதன் மேற்பரப்பில் தூவி லேசாக மண்ணை போட்டு மூடினாலே போதுமானது. பின்பு அதன் மீது தண்ணீர் தெளித்து விட வேண்டும், அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சோம்பு வெளிய வர வாய்ப்புள்ளது எனவே மிதமாக தெளிக்கவும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சோம்பு செடி வளர்ச்சி

சோம்பு-பூ
நடவு செய்த 5 முதல் 10 நாளில் சோம்பின் வளர்ச்சியை நம்மால் காணமுடியும். இந்த கால அளவு தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 60 நாட்களில் இதன் இலைகள் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம். இந்த சோம்பு கீரை பார்ப்பதற்கு சிறிய அளவு கொத்தமல்லி கீரையை போலவே இருக்கும். 100 நாட்களில் செடியின் மீது ஒரு தண்டு வளர்ந்து அதன் உச்சியில் அடர் மஞ்சள் நிறத்தில் பூவானது பூத்திருக்கும். இந்த பூக்களில் தேனெடுக்க அதிக அளவில் தேனீக்கள் வருவதால் மகரந்த சேர்க்கை சிறந்த முறையில் நடக்கும்.

சோம்பு அறுவடை

சோம்பு-அறுவடை
சோம்பு செடியில் பூத்திருக்கும் பூவின் அடியிலே சோம்பு வளர்ந்திருக்கும். செடியில் கொத்து கொத்தாக சோம்பு காணப்படும். 150 நாட்களுக்கு பிறகு சோம்பு காய தொடங்கும். அனைத்து கொத்துகளுமே ஒரே நேரத்தில் காயாது. சோம்பை தனியே எடுத்து காயவைப்பதை விட செடியிலே காய விட்டு பிறகு அதை சேகரித்து வைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

சோம்பு செடியில் நோய் தாக்குதல்

சோம்பு-செடி
சோம்பு செடியில் அஸ்வினி பூச்சி மற்றும் மாவு பூச்சி தொல்லை ஏற்படும். இது சோம்பின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். வேப்பண்ணெய் கரைசலை வாரம் மூன்று முறை தெளித்து வந்தால், இரண்டு வாரங்களில் செடி பழைய நிலையை அடைந்து விடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சோம்பின் பயன்கள்

சோம்பின்-பயன்கள்

  • சோம்பு தண்ணீரை தினமும் காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலின் எடையை குறைக்கலாம். சோம்பு தண்ணீரின் பலன் சற்று தாமதமாக கிடைக்கின்ற போதிலும் நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.
    அளவுக்கு மீறி அதிகமாக பசி ஏற்படுகிறவர்களுக்கு இந்த சோம்பு தண்ணீரைக் குடிக்கவைத்தால், தேவையற்ற பசி உணர்வை குறைக்கும்.
  • சோம்பு தண்ணீர் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும், மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • நட்சத்திர சோம்பு உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.
  • ஒரு சில நபர்களுக்கு அதிக வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் காரணமாக சரியாக தூக்கம் வராமல் சிறப்படுவார்கள். இந்த தூக்க பிரச்சனையை குணவாக்குவதற்கு தினமும் இந்த சோம்பு கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அதில் மிகுந்துள்ள மெக்னீசியம் சத்தானது நரம்புகளுக்கு வலிமை கொடுத்து ஆழ்ந்த உறக்கத்தை பெற வழிவகை செய்கிறது.
  • வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஜீரணமாகாமல் சிரம படுகிறவர்கள், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கினாள் விரைவில் செரிமானத்தை சீராக்கும் சோம்பு.


சோம்பு நடவு முதல் அறுவடை வரை எப்படி செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சோம்பு செடி வளர்த்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It