சொடக்கு தக்காளி என்ற பெயரே ஏதோ வினோதமாக இருக்கிறதே என்று நினைக்கீர்களா? இன்றைய கால கட்டத்தில் நாம் மறந்த போன சத்துநிறைந்த பழவகைகளுள் இதுவும் ஒன்றாகும். அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியே இந்த சொடக்குதக்காளியின் தாயகமாகும். விவசாயிகள் பெருமளவில் சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது கிடையாது, எனவே இது கடைகளில் மற்ற பழங்கள் போல கிடைப்பதில்லை, இவை சாதாரணமாக சாலை ஓரத்திலும், குப்பைகளிலும் மற்றும் காலி நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதை காணலாம்.
இந்தப்பழமானது பலூன் போன்ற அமைப்புடைய உறையின் உள்ளே இருக்கும். கிராமங்களில் உள்ள சிறுவர்கள் முதிர்ந்த சொடக்கு தக்காளி பழத்தின் பலூன் போன்ற உறையினை வாயினால் அதை ஊதி தலையில் உடைத்து விளையாடுவார்கள், அப்படி தலையில் உடைக்கும்போது சொடக்கு போட்டதை போன்ற ஓலியை ஏற்படுத்தும், மேலும் இந்தப்பழம் பார்ப்பதற்கு தக்காளி பழத்தை போல இருக்கும். எனவே தான் இதை சொடக்கு தக்காளி என்று அழைக்கின்றனர்.
நமது நாட்டில் இந்தப்பழம் சந்தைப்படுத்த படவில்லை. எனவே இதை நகர்புறங்களில் வசிப்பவர்கள் மிகக்குறைந்தளவே அறிந்திருப்பார்கள். விதையிலிருந்து சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
வளரும் தன்மை
சொடக்கு தக்காளி ஓராண்டுத் தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் தண்டுப்பகுதியானது கிளைத்துக் காணப்படுகின்றது. இந்தச்செடியானது பெரும்பாலும் களைச் செடியாகவே கருதுகின்றனர். மழைகாலங்களில் இந்த செடி தன்னிச்சையாக அதிகம் வளர்ந்திருப்பதை காணலாம். இந்தப்பழம் வெப்ப மண்டல பகுதி மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
சொடக்கு தக்காளியின் அமைப்பு
சொடக்கு தக்காளி செடியானது 90 செமீ வரை உயரம் வளரக்கூடியது, சொடக்கு தக்காளி கீரை ஒவ்வொன்றும் 10 செமீ நீளம் வளரக்கூடியது. பூக்களிலிருந்து உறையை போன்ற பைக்குள் பச்சை நிறக்காய்கள் தோன்றுகிறது. இந்த உறைகள் பார்ப்பதற்கு பலூன் போல காட்சியளிக்கிறது. இந்தக்காய்கள் முற்றி பழமாகும் தருணத்தில் உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.
உறையினுள் உள்ளே இருக்கும் காயானது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். பழம் பழுத்தவுடன் மேல் உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறி விடும் மேலும் ஓரிரு நாளில் பழமானது உறையுடன் சேர்ந்து உதிர்ந்து விடும். இந்த சொடக்கு தக்காளி பழமானது 1.5 செமீ அளவில் இருக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டைஉங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
சொடக்கு தக்காளி பயன்கள்
- சொடக்கு தக்காளி விதையில் விட்டமின் பி1 மிகுதியாக இருப்பதனால் தினமும் காலை எழுதவுடன் உட்கொண்டுவந்தால் இதயத் தமனியில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புதனை கரைக்கின்ற சக்தி இதற்கு இருக்கிறது. மேலும் கீழ் வாத கோளாறுகளை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
- இந்தப்பழத்தை சாப்பிடும் பொழுது உங்களுடைய வயிறு விரைவில் திருப்தியான உணர்வை பெறும், இதன் காரணமாக நீங்கள் மேற்கொண்டு எதையும் சாப்பிட தோணாது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பர்களுக்கு இது பெரிதும் உதவும்.
- நாம் உண்ணும் உணவுகள் சில சமயங்களில் கடினமானதாக இருக்கக்கூடும், அப்படி பட்ட கடினமான உணவுகள் கூட சுலபமாக ஜீரணம் ஆக இந்தப்பழத்தை சாப்பிட்டால் போதும், இந்த பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்தானது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய புண்கள் மற்றும் பிற ஆறாத புண்களுக்கு சொடக்கு தக்காளி இலைகள் மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதன் இலைகளை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்காய்ச்சி பின்பு புண்களின்மீது தடவினால் விரைவில் புண் ஆறும்.
அற்புத மருத்துவ பயன்களால் நம்மை சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம். இயற்கையின் அருட்கொடையாக சொடக்கு தக்காளியின் பயனை நீங்களும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.
Comments are closed.