செவ்வாழை வளர்ப்பு மற்ற வாழை மரங்களின் வளர்ப்பு முறைகளில் இருந்து சிறிது மாறுபடுகிறது. செவ்வாழை அணைத்து தட்ப வெப்ப நிலைகளையும் தாங்க கூடிய சிறப்பு கொண்டது, மேலும் அதிக சத்துக்களை உள்ளடக்கிய நமது பாரம்பரிய பயிராக விளங்குகிறது.
செவ்வாழை நடும் முறை
செவ்வாழை பயிரிடும் குழிகளின் உட்புறத்தில் செறிவூட்டிய மண்புழு உரம் மற்றும் சிறிது கிளிஞ்சல் அல்லது சுண்ணாம்புத்தூள் கலந்து பயிரிடும் பொழுது விரைவில் கன்று துளிர்விடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை. |
செவ்வாழை வளர்ப்பு முறை
செவ்வாழை சாகுபடி செய்யும்போது பயிரிட்ட மூன்றாவது மாதத்தின் இறுதியில் ஒரு பக்க கன்றியினையும், நான்காவது மாதத்தின் இறுதியில் இன்னொரு கன்றையும் அப்படியே விட்டுவைக்கவேண்டும். ஒன்பதாம் மாதத்தில் பூ வைக்க ஆரம்பிக்கும். 18 மாதங்களில் மூன்று செவ்வாழை தார்களையும் சாகுபடி செய்யலாம்.
செவ்வாழை சாகுபடி நன்றாக அமைய முக்கிய பங்கு வகிப்பது, இயற்கை உரத்தை பயன்படுத்துதலே ஆகும்.இதனால் அதிக மகசூல் மற்றும் செவ்வாழையின் காய் பெரிதாக வளர ஏதுவாக இருக்கும்.
செவ்வாழை உரம் வைக்கும் முறைகள்
செவ்வாழை உரம் வைக்கும் முறைகள் பல உண்டெனினும், சிறந்த முறை என்பது, 6 முதல் 7 மாதங்கள் நன்கு மக்கிய கோழி எரு, ஆட்டின் எரு, மாட்டு எரு ஆகியவற்றை நன்கு கலந்து வைக்க வேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டிஉங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
நோய் தாக்குதல்
செவ்வாழையை அதிகமாக தாக்கும் நோய் வாடல் நோய் ஆகும், தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதால் இந்த வாடல் நோய் தாக்குகிறது. தண்ணீர் பெருமளவு வேர்களில் தேங்குவதால் வேர் அழுகி மேலே உள்ள இலையை பாதிக்கிறது. எனவே ஈரப்பத்திற்கு ஏற்ப தண்ணீரை பாய்ச்சுவதால் இந்த நோய்யை தவிர்க்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் சூடோமோனஸ் உயிரி உரத்தை 10 கிராம் கலந்து செவ்வாழை மரத்தின் வேர்களில் படும்படி ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் வாடல் நோய் குணமாகும்.
பூச்சி தாக்குதல்
பொதுவாகவே அனைத்து வாழை மரங்களையும் கூன் வண்டு அல்லது ஊசி வண்டு தாக்கி அழிக்க வல்லது. நன்கு வளர்ந்த வாழை மரங்களில் துளையிட்டு அதன் தண்டு பகுதிகளை அரித்து மரத்தையே சாய்த்துவிடும்.
இந்த கூன் வண்டு தாக்குதலை சமாளிக்க, 3 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்பெண்ணெயை கலந்து பாதிக்கப்பட்ட மரத்தில் தெளிப்பதன் மூலம் தாக்குதலை தடுக்கலாம்.
தார் பராமரிப்பு
செவ்வாழை காய் பெரிதாக வளர தாரில் உள்ள வாழைப்பூவை வெட்டிய உடனே ஒரு நெகிழி பையில் 10 கிராம் பஞ்சகாவியாவை கொட்டி, அந்த பையை வாழைப்பூ வெட்டிய இடத்தில கட்டிவைக்கவேண்டும். இவ்வாறு பராமரித்தால் 80 முதல் 90 காய்கள் வரை காய்க்கும்.
வீட்டில் செவ்வாழை வளர்க்கலாமா?
செவ்வாழை மரம் வளர்ப்பு எப்படி என்று தெரிந்திருந்தும் சிலர் வீட்டில் செவ்வாழை மரம் வளர்க்க விரும்புவதில்லை. செவ்வாழை maram வீட்டில் வளர்த்தால் தோஷம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இயற்கையின் படைப்பில் தோஷம் என்று ஏதுமில்லை. இத்தகைய செவ்வாழையை தாராளமாக வீட்டில் வளர்க்கலாம்.
செவ்வாழை பழத்தின் மருத்துவ பயன்கள்
செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது, இது சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது. 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். மாலைக்கண்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை பழம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டுவர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற தோல் சார்ந்த வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக செயல் படுகிறது.
நாட்டு ரக செவ்வாழை வளர்ப்பு
திசு வளர்ப்பு முறையில் பயிரிடப்படும் செவ்வாழை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு நல்ல முறையில் அமைந்தாலும், நாட்டுரக செவ்வாழையின் மகத்துவத்துக்கு ஈடாகாது. நாட்டுரக செவ்வாழை நன்மைகள் அளப்பரியது.
இந்த கட்டுரையில் செவ்வாழையின் பயிரிடும் முறை மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் செவ்வாழையை சுவைத்து குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
Comments are closed.