பீன்ஸ் பொதுவாக கொடிகளில் வளர்வதை பார்த்திருப்போம், அதே போல செடிகளிலும் நன்கு செழித்து வளரும். கொடிவகையாக வளர்க்கும் பொழுது அதிகமான இடவசதி தேவைப்படும், போதிய இடவசதி இல்லாதவர்கள் இந்த செடி பீன்ஸ் வளர்ப்பு செய்தால் சிறிய இடத்திலும் கூட நல்ல விளைச்சலை காண முடியும்.
செடி பீன்ஸ் விதைப்பு முதல் அறுவடை வரை , மாடியில் செடி பீன்ஸ் வளர்ப்பது எப்படி, செடி பீன்ஸ் பயன்கள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
விதை நேர்த்தி
தேவைக்கு ஏற்ப விதைகளை எடுத்து கொண்டு அதை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வைக்கவேண்டும். அடுத்த நாள் ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சிக்கொண்டு விதைகள் சற்று பெரிதாகி இருக்கும், இந்த ஈரப்பதமானது செடி நன்கு வளர உதவும்.
மண்கலவை தயார் செய்தல்
செடி பீன்ஸ் வளர்ப்பு தனில் மண்கலவை முக்கிய வகிக்கிறது. நல்ல வளர்ச்சியை பெற செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபங்கு கலந்து பயன்படுத்தலாம். மண்புழு உரம் இருக்குமேயானால், செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மண்புழு உரம் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் கலந்து மண்கலவையை தயார் செய்யலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவைமாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!! |
நடவு மற்றும் வளர்ச்சி
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையில், ஊறவைத்து எடுத்து வைத்துள்ள விதைகளை நடவுசெய்ய வேண்டும். இது ஒரு அடி வரை மட்டுமே உயரம் வளரும் என்பதால், ஒரு நெகிழி பையில் 4 முதல் 6 செடிகள் வரை நடவு செய்யலாம்.
நடவு செய்த 7 முதல் 10 நாட்களில் செடி பீன்ஸின் வளர்ச்சியை கண்கூடாக காண முடியும், மேலும் 30 நாட்களில் செடி பீன்ஸ் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கும்.
செடி பீன்ஸ் சாகுபடி
செடி பீன்ஸ் 45 நாட்களில் பூ வைக்க தொடங்கிவிடும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும், ஒவ்வொன்றும் தனி தனியே காணப்படும், அதேபோல காய்களும் தனித்தனியே தன் காய்க்கும். 55 நாட்களுக்கு மேல் அறுவடை நிலையை அடைந்து விடும், அப்போது தாராளமாக அறுவடை செய்யலாம். ஒரு வேலை செடி பீன்ஸின் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் உன்ன நினைத்தால், 90 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்தால் உள்ளே இருக்கும் விதை நன்கு முற்றி, அதிக சுவை கொடுக்க கூடியதாகி இருக்கும்.
பூச்சி தாக்குதல்
செடி பீன்ஸை அஸ்வினி பூச்சிகள் அதிக அளவில் தாக்கக்கூடும், செடியின் ஆரம்ப கால வளர்ச்சியை இது பெரிதும் பாதிக்கும். இந்த அஸ்வினி பூச்சி தொல்லையில் இருந்து செடி பீன்ஸை பாதுகாக்க விட்டால் செடி முழுவதுமாக வீணாகிவிடும். வேப்பெண்ணெய் கரைசலை தெளிப்பதன் மூலமாக இந்த அஸ்வினி பூச்சியை முற்றிலுமாக அகற்றலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்! |
செடி பீன்ஸ் பயன்கள்
- செடி பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால், அதிலிருக்கும் ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சி தனை தடுத்து நிறுத்தி, புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைகிறது.
- பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்தத்தை உறையாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த செடி பீன்ஸை தினசரி உணவில் சேர்த்து கொண்டார்களேயானால் அந்த நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
- செடி பீன்ஸில் நார்ச்சத்து, மாங்கனீஷ் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து அதை ஊட்ட சத்தாக மாற்றுகிறது.
- இரும்புச்சத்தைக் கிரகித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது இந்த செடி பீன்ஸ், மேலும் செரிமான சக்தியை அதிகரித்து, வாயுத் தொல்லையயையும் நீக்குகிறது.
- இரைப்பையில் ஏற்படும் பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவதுண்டு, அவர்காலம் இந்த செடி பீன்ஸை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பீன்ஸ் வகைகள் பல உண்டு அதில் செடி பீன்ஸ் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் செடி பீன்ஸ் வளர்த்து, அந்த பச்சை பீன்ஸ் போல உங்கள் வாழ்க்கையும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.
Comments are closed.